Friday, February 20, 2009

தடை செய்யப்பட்ட உணவு வர்ணம் பரவலாக விற்கப்படுகின்றது! பயன்படுத்த வேண்டாம் என பி.ப.சங்கம் அறிவுரை

ஆறு வகையான வர்ணங்கள் உணவில் பயன்படுத்துவதற்காக தாராளமாக விற்கப்படுவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வுப்படி இந்த வர்ணங்கள், தொழிற்துறைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படிப் பார்த்தால் நமக்கும் பாதுகாப்பில்லை என்பதை அது அதிக அளவு உறுதிப்படுத்துகிறது என்றார் அவர்.

ஆபத்தானது என மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட ஏறக்குறைய இந்த வர்ணங்களில் பெரும்பாலானவை உணவில் சேர்த்துக்கொள்ள முடியாதவையாகும். ஆனால் மனசாட்சியற்ற சில கடைக்கார்கள், இவை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய வர்ணங்கள் என “பொய் மூட்டைகளை” அவிழ்த்துவிட்டு வியாபார வேட்டையாடுகின்றனர்ள என்றார் இத்ரிஸ்.

சிறிய பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பாட்டில்களில் அடைக்கப்பட்ட இந்த வர்ணங்கள் பெரும்பாலான மளிகைக் கடைகளில் விற்கப்படுகின்றன. சில பிரண்டுகளில் இவை “உணவு வர்ணம் அல்ல” என்று எழுதப்பட்டிருந்தாலும் அவை உணவு வர்ணத்தோடு சேர்த்துதான் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

சில தயாரிப்பாளர்கள் “இந்த வர்ணங்கள் பொருளுக்கான வர்ணம்” என்று தங்கள் லேபலில் குறிப்பிட்டுள்ளார்கள். எந்த மாதிரியான பொருட்கள் என்றும் குறிப்பிடுவதில்லை என்றார் இத்ரிஸ்.

இந்தப் பொருள், சிறிய அளவிலும், மற்ற உணவுப் பொருட்களுடனும் சேர்த்து விற்கப்படுவதால், இந்த நச்சுத்தன்மை கொண்ட வர்ணம் உணவில் சேர்க்கக்கூடிய வர்ணம் என்ற தவறான அபிப்பிராயத்தை பயனீட்டாளர்களிடையே ஏற்படுத்திவிட்டது என்று இத்ரிஸ் கூறினார்.


தடை செய்யப்பட்ட வர்ணங்கள் அமாரான்த், இது 1982லிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரசாயனம் பாலியல் உறுப்புக்கள், நுரையீரல் மற்றும் அங்கவீன தொடர்பான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று மெத்தானில் - யெல்லோவ் . இது புற்றுநோயை ஏற்படுத்தும். ஆண்களிடையே மலட்டுத்தன்மையை உண்டாக்கும். உணவில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ள இந்த வர்ணம், துடைப்பம், துணிமணிகள், சவர்க்காரம் போன்றவற்றுக்கு வர்ணத்தைக் கொடுப்பதற்கும், சாக்குகளில் எழுதப்படும் மைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

உணவில் சேர்க்கக்கூடாத வர்ணங்களில் நச்சுத்தன்மை கொண்ட இரசாயனங்கள் அதிகமாக இருக்கின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள ஏற்றவை அல்ல. மாறாக சுவர் வர்ணங்கள், வர்ணம் தீட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் வர்ணங்கள், துடைப்பம், பிளாஸ்டிக் மற்றும் துணிமணிகளில் பயன்படுத்தக்கூடிய வர்ணமாகும்.

பெரும்பாலான கடைகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் உணவில் சேர்க்கக்கூடாத இந்த வர்ணங்களை சட்டவிரோதமாக சில்லறைக் கடைக்காரர்களிடம் விற்றுவிடுகின்றார்கள். ஒன்றும் அறியாத பயனீட்டாளர்களும் இவற்றை வாங்கி தங்கள் உணவில் சேர்த்து தங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் பயனீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

1 comment:

  1. உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
    சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

    கேள்வி. நெட்

    ReplyDelete