Showing posts with label குழந்தைகளின் ஆன்மீக குட்டிக் கதைகள் / Children’s Theologies Short Stories. Show all posts
Showing posts with label குழந்தைகளின் ஆன்மீக குட்டிக் கதைகள் / Children’s Theologies Short Stories. Show all posts

Tuesday, December 2, 2008

பகவானே தோழன்


பகவானை எந்த பாவனையில் வேண்டுமானாலும் அணுகலாம். ஆனால், அதில் முழுவதுமாக லயிக்க வேண்டும். மீராவும் ஆண்டாளும் பிரேம பாவனையில் 'இ'லயித்தார்கள். குசேலனும் அர்ஜீனனும் கண்ணனை நண்பனாக வரித்தார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் இறைவனோடு, ஒவ்வொரு பாவனையில் உறவு. இராமவதாரம் முடிந்த பின் ஆஞ்சநேயன் கண்ணனை குருவாக வரித்து யுத்தத்தில் அர்ஜீனனின் தேர்க்கொடியில் உட்காந்தார். எனவே, நாமெல்லாம்கூட கண்ணனை நமக்குப் பிடித்திருக்கும் எந்தவுருவிலும் வரித்துவிடலாம். ஏனென்றால் பண்பிலே தெய்வம், நல்லாவிரியன், தோழன், மந்திரி, தாய், தந்தை என்ற எல்லா உவவுகளும் கண்ணன் ஒருவனே!

கடைசி உபதேசம்


அன்னை சாரதா தேவி, இராமகிருஷ்ணரின் மனைவி. இருவரும் துறவறம் பூண்டு நல்லறம் நடத்தினர்.இராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின், விதவைக் கோலம் ஏற்க அன்னை முற்ப்பட்டார். அப்போது காட்சி தந்த இராமகிருஷ்ணர், "ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குத்தான் சென்றுள்ளேன்" என்று கூறினார். சாரதாதேவி மன ஆறுதல் அடைந்தார். தவிர, கடைசிவரை விதவைக் கோலத்தைத் தவிர்த்தார். அன்னையின் இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்ருந்த வேளை, காய்ச்சல் வந்து உடல்நிலை மோசமானது. அப்போதும்கூட தன்னைப் பார்க்க வந்த ஒரு பக்தைக்கு, " உனக்கு அமைதி வேண்டுமென்றால், மற்றவர்களின் குறைகளைப் பார்க்காதே. அதற்கு பதிலாக, உன்னிடம் இருக்கும் குற்றங்களைப் பார். இந்த உலகம் முழுவதும் உன்னுடைய சொத்தாக ஆக்கிக்கொள்ளக் கற்றுக்கொள். மகளே, இந்த உலகில் யாரும் அந்நியர் இல்லை. உலகம் முழுவதும் உன் சொத்துக்ள்!", என்று கூறி ஆசி வழங்கினார். இதுதான் அன்னை சொன்ன கடைசி உபதேசம்.

கிரியும் சந்தனமும்

ஒரு சமயம் துரியோதனையும் தர்மனையும் பார்தது பீஷ்மர், " உலகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்களா என்று பார்தது வாருங்கள்" என்று சொன்னார்.

துரியோதனன் உலகத்தைச் சுற்றிப் பார்தது வந்து "தாத்தா, இந்த உலகத்தில் நல்லவர்களே இல்லை. அனைவரும் பொல்லாதவர்கள்" என்றார்.

தன் முகத்தில் கரி பூசிக்கொண்டு கண்ணாடியில் பார்க்கின்றவனுக்கு எல்லாமே கரியாகத்தான் தெரியும். தருமனோ, " தாத்தா, உலகத்தில் அனைவருமே நல்லவர்கள்தான், சூழ்நிலையினால்தான் பொல்லாதர்களாக மாறிவிடுகின்றனர்!" என்றார்.

இது, ஒருவர் முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டு கண்ணாடியைப் பார்ப்பது போன்றது.

என்போதுமே ஒவ்வொருவரின் எண்ணப்படிதான் அவர்களின் பார்வையும் இருக்கும்.

- வாரியார் சொன்னது -