வன்னியில் உள்ள மக்களை இலக்கு வைத்து சிறீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற் கொண்டு வருகின்றது. வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ள மக்களை தெரிவு செய்து இளம் பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் குழந்தைகள் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் பெருமளவானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெருமளவு ஆண்களும் இளம் பெண்களும் விசாரணைகளுக்காக என படையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு கதறியழுதபடி உள்ளனர்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ள பெண்கள் மீதான கொடுமைகள் ஒரு புறம் வேகமாக நடபெற்றுக் கொண்டிருக்க மறுபுறத்தில் வன்னியிலுள்ள மக்களை இலக்கு வைத்து பெருமளவு தினமும் படுகொலைகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்தவாரம் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் உளரீதியாக சோர்வடைந்துள்ள படையினரை உச்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில்
"இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும் அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்''
என்றும் கூறி படையினரை உசுப்பேத்தியுள்ளார்.
இதனைக் கேள்வியுற்று வவுனியா முகாமுக்குள் அடைபட்டுள்ள மக்கள் பதறிப் போயிருப்பதாக வவுனியாவில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு கொண்டபோது அவர் இதனை எம்மிடம் தெரிவித்தார்.
நன்றி : மருதன்
No comments:
Post a Comment