* இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமை உடையவர்கள் ஆக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த வளர்ச்சிக்காக தானே வேலை செய்தாக வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை. தனி மனிதனுக்குப் பொருந்தும் இந்த உண்மை நாடுகளுக்கும் பொருந்தும். தனி மனிதர்களின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்.த அற்ப இதயமுடைய மனிதர் களிடமிருந்து எந்த உருப்படியான வேலையை நீ எதிர்பார்க்க முடியும்? நீ கடலைக் கடக்க விரும்பினால் இரும்பைப் போன்ற மனவுறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும். மலைகளைத் துளைத்துச் செல்வதற்கு போதுமான வலிமை உனக்கு இருக்க வேண்டும்.
* சிந்தனையின் 90 சதவீத ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும்தவறு செய்வதில்லை.
* எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத் தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருகசக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய்ய வேண்டும்.
* ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை
மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தையே நிரப்பு. அந்த நிலையில் மற்ற எல்லா கருத்துக்களையும் தவிர்த்துவிடு. வெற்றிக்கு இது தான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவானாக விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்து சென்றாக வேண்டும்.
* இவனை நம்பு. அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன்- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. <உன்னைப் பற்றி முதலில் அறிந்து கொள். எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீஅந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ சாதிக்கப் பிறந்திருக்கிறாய். உறுதியுடன் எதையும் பொருட்படுத்தாமல் போராடினால், பாம்பின் விஷம் கூட சக்தி அற்றதாகிவிடும்.
* உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே! உன் மனமே உனக்கு நீதிபதி. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உன் காலடியில் பணிந்து கிடக்கும்.
* நம்பிக்கையை இழந்து விடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பது போல மிகவும் கடின மானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனதுலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.
* எதிலும் கவனம் வேண்டும்
பேச்சு பேச்சாக இருந்தாலும், நாம் செய்து கொண்டிருக்கும் பணியில் இருந்து கவனம் சிதறிவிடக்கூடாது என்று பெரியவர்கள் சிறுவர்களுக்கு அறிவுரை சொல்வது வழக்கம். இது விவேகானந்தரின் விஷயத்தில் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அவரது நிஜப்பெயர் நரேந்திரன் என்னும் நரேன். இவரது தாயார் புவனேஸ்வரி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து கதைகளையும், நீதிகளையும் மகனுக்கு எடுத்துச் சொல்வது வழக்கம். இதனால் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதில் சிறுவனாக இருந்தபோதே நரேன் உறுதியாக இருந்தார். ஒருநாள் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் ஆர்வத்துடன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு பாடத்தைக் கவனிக்கவில்லை. கோபம் கொண்ட ஆசிரியர் நரேனை எழுப்பி, நடத்திய பாடத்திலிருந்து கேள்விக்கணைகளைத் தொடுத்தார். ஆனால், சற்றும் தயங்காமல் அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தான் சிறுவன் நரேன்.
""நீ பேசிக் கொண்டிருந்தாய் என்று தவறாக எண்ணி விட்டேனே! உண்மையில் இவ்வளவு நேரம் வகுப்பில் பேசிக் கொண்டிருந்தது யார்?'' என்று கேட்டு மற்ற மாணவர்களைப் பார்த்தார் ஆசிரியர்.
நரேன் ஆசிரியரிடம், ""ஐயா! இவ்வளவு நேரம் பேசியது நான் தான்! இருப்பினும், பாடத்தில் இருந்தும் என் கவனம் விலகவில்லை'' என்று உண்மையைச் சொன்னார். ஒரு பணியில் கவனம் செலுத்தும்போது, மற்றொன்றைக் கேட்கும் நிலை வந்தால், அதிலும் கவனம் இருக்க வேண்டும், புரிகிறதா?
* துணிச்சலும் வேண்டும் கருணையும் வேண்டும்
விவேகானந்தரின் வீடு அருகில் உடற் பயிற்சிக் கூடம் ஒன்று இருந்தது. அங்கே நண்பர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கிருந்த பெரிய கனமான மரக்கட்டையை சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து உயரமான இடத்தில் இருந்து எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களால் அக்கட்டையை அசைக்கக் கூட முடியவில்லை. இதைக் கவனித்த மாலுமி ஒருவர் சிறுவர்களுக்கு உதவ முன்வந்தார். ஆனால், மரக்கட்டை நழுவி மாலுமியின் தலையில் விழுந்து விட்டது. ரத்தம் அதிகமாக வெளியேறியதால் அவர் மயக்கமடைந்தார். அவர் இறந்து விட்டதாக கருதி சிறுவர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். விவேகானந்தர் தன்னுடைய வேட்டியைக் கிழித்து காயத்தில் கட்டுப் போட்டதோடு அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து தெளிய வைத்தார். பெரியவர்களை உதவிக்கு அழைத்து மருத்துவரிடம் காண்பிக்க ஏற்பாடு செய்தார். ஆபத்தான நேரத்தில் துணிவோடும், கருணையோடும் செயல்படவேண்டும் என்பது நரேனின் இயல்பான சுபாவமாக இருந்தது
* வெளிநாட்டு சகோதரன்
பேராசிரியர் ரைட் என்பவர் சுவாமி விவேகானந்தருக்காக, சிகாகோவில் நடந்த சர்வ மத மகாசபை மாநாட்டில் பேச அனுமதிக்கும் சிபாரிசு கடிதம் ஒன்றினைக் கொடுத்திருந்தார். சிகாகோவுக்குச் சென்றதும், தன்னிடம் இருந்த சிபாரிசு கடிதம், சர்வமத மகாசபை இருக்குமிடம், செலவுக்கு இருந்த பணம் உட்பட அனைத்தையும் விவேகானந்தர் தொலைத்து விட்டார். குளிரும் பசியும் விவேகானந்தரை வாட்டியது. எங்கு செல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். செல்வந்தர்கள் வாழும் சிகாகோவில் ரோட்டோரத்தில் அமர்ந்து விட்டார். அவரைக் கண்ட ஆங்கிலேயப் பெண்மணி மிசஸ் ஹேல் விவேகானந்தரிடம் வந்து விஷயங்களை அறிந்து கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
தன் கணவர் ஜார்ஜ் ஹேல் உதவியுடன் சர்வ மத மகாசபையில் பேசும் சொற்பொழிவாளர்கள் பட்டியலில் இடம் பெறச் செய்தார். ஜார்ஜ் ஹேல் குடும்பம், தனக்கு ஒரு சகோதரனைப்போல அன்பு பாராட்டி உதவி செய்ததாக விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.
Showing posts with label ஆன்மீகம் / Theology. Show all posts
Showing posts with label ஆன்மீகம் / Theology. Show all posts
Tuesday, September 7, 2010
Tuesday, August 24, 2010
கண்ணனைத் தேடி புத்தகம்

டி.கே.வி.ராஜன் அவர்களின் கண்ணனைத் தேடி என்ற ஆய்வு நூலின் கட்டுரைகள், ஆசிரியர் விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரனின் ஆவிகள் உலகம் என்ற அமானுஷ்ய ஆன்மீக மாத இதழில் தொடர் கட்டுரையாக பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளை இங்கே PDF முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1. ஜனவரி 2010
2. பிப்ரவரி 2010
3. மார்ச் 2010
Sunday, February 7, 2010
அசுரனுக்கும் ஓர் ஆலயம்

பெரும்பாலான புராணங்களில் அசுரர்களின் அட்டகாசத்தால் தேவர்கள் இன்னலுறுவதும் இறை அவதாரங்களால் அசுரர்கள் அழிக்கப்படுவதுமாக இருக்கும். தேவர்கள் இறைவனின் திருவடி பரவி, தோத்திரங்களால் அர்ச்சித்து வழிபடுவர். அவ்வாறு தேவர்கள் வழிபட்ட தலம் யாவும் கோயில்களாக மலர்ந்திருக்கும். இதற்கு மாறாக கந்தனிடம் போரிட்ட ஒரு அசுரனுக்கும் கோயில் உள்ளது. ஆம், அந்த ஆலயம் இருப்பது பழநியில்தான். எப்படி உருவாயிற்று இந்த ஆலயம்?
அந்த அசுரனின் பெயர் இடும்பாசுரன். பண்டைய காலத்தில் அகத்திய மாமுனிவரின் கட்டளைக்கு அசுரர்கள் செவிசாய்ப்பார்கள். அப்படி சக்திகிரி, சிவகிரி என்ற இரண்டு பிரமாண்டமான மலைகளை தமிழகத்தின் தென்பகுதியில் அமைக்க இடும்பாசுரனை பணித்தார் அகத்தியர். இரண்டு மலைகளின் உச்சிகளையும் கயிற்றில் கட்டி, அவற்றினூடே ஒரு நீண்ட கழியைப் பொருத்தி காவடி தூக்குவதுபோல அநாயசமாகத் தூக்கிவந்தான் அசுரன். பழநிக்கு அருகில் அவற்றை வைத்தான். அதே தலத்தில் எதிரே குமரனும் மலைமீது நின்றிருப்பதை கவனித்தான். இதென்ன எங்கு போனாலும் தேவர்களின் தொல்லை அதிகமாக இருக்கிறதே என சீற்றம் கொண்டான். குழந்தை குமரனை சிறிய பாலகன்தானே என அலட்சியத்தோடு பார்த்தான். அடேய்... பாலகா என பாலமுருகனை விளித்தான். போருக்கு வருகிறாயா, அல்லது இப்பொழுதே பணிந்து விடுகிறாயா? என கேட்டான்.
போரிட்டுதான் பார்க்கிறேனே என்று பாலமுருகனும் போருக்கு நின்றான். தொடக்கத்திலிருந்தே சிறுவன் மிகப்பெரிய வீரனாக விஸ்வரூபம் எடுத்ததைப் பார்த்து இடும்பன் மிரண்டான். ஈசனின் ஞானாக்னியிலிருந்து உதித்தவன் எரிமலையாக வெடித்தது கண்டு தலைதெறிக்க ஓடினான். ஆஹா... இது இறையாயிற்றே தவறாக உரசிப் பார்த்து சூடு போட்டுக் கொண்டோமே என பயந்தான். பாலமுருகன் விடாது தொடர்ந்தான். இடும்பனின் மனைவி இடும்பி கந்தா... என் கணவனை மன்னித்து ஏற்றுக் கொள் என பாதம் பணிந்து கதறினாள். இடும்பனும் ஞானமே உருவான பாலமுருகனின் திருவடி பரவினான். தான் எப்போதும் உங்களை தரிசித்தபடியே இங்கேயே இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டான். முருகனும் அப்படியே ஆகட்டும் என அருளினார்.இன்றும் ஒரு மலையில் இடும்பன் தங்கி இருக்க, மற்றொரு மலையில் முருகன் அருள்புரிகிறார். பழநி மலைப்படி பாதையில் இடும்பனின் சந்நிதானம் உள்ளது. பழநி மலைக்கு அருகில் உள்ள மலை இடும்பன்மலை என்று அழைக்கப்படுகிறது. ஏதோ தியானத்தில் இருக்கும் யோகி போல தோற்றமளிக்கிறது இடும்பன் மலை. திடப்பட்ட பக்தியை மலைபோல் இருந்து உணர்த்துவது போல் உள்ளது. இந்த மலையின் 13 அடி உயரத்தில் இடும்பனுக்கு சிலை உள்ளது. இரு மலைகளையும் காவடிபோல் தூக்கிக் கொண்டிருக்கும் சிலை அற்புதம். அதிலும் அபிஷேகத்தின் போது பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இறைவனுக்கு தேவர்கள், அசுரர்கள் என்ற பாரபட்சம் எப்போதும் இல்லை. அதர்மம் தர்மத்தை உரசும்போது அழியும். அசுரர்கள் தர்மம் என தெளிந்தால் இறைவனோடு கலப்பர். அப்படி ஞானக்குழந்தை தன்னுடனே வைத்துக் கொண்ட அசுரக் குழந்தையில் இடும்பனும் ஒருவன்.
பழநி முருகன் மலைக்கு இணையாக உள்ள இடும்பன் மலைக்குச் செல்ல 570 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இடும்பன் மலைக்கு கிழக்குப்பகுதியில் மிக அழகான இடும்பன் குளம் பக்தர்கள் நீராட வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்காலங்களில் இக்குளத்தில் பக்தர்கள் நீராடி இடும்பனை வழிபடுகின்றனர். இதுதவிர இடும்பனை வழிபடவென்றே பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து பழநிக்கு வருகின்றனர். அசுரர் கோலத்தில் பக்தர்கள் வேடமிட்டு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். கடவுளுக்கு இணையாக அசுரனுக்கு கோயில் அமைந்திருப்பது பழநியில் மட்டும்தான் என்றே சொல்லலாம்.
இடும்பன் கோயிலுக்கு செல்ல பழநி பஸ் நிலையத்தில் இருந்து மினி பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படுகின்ற
Sunday, January 17, 2010
பலிக்கொடுத்து, இறைவன் மேல் பழிப்போடும் கலாச்சாரமா?
பலிக்கொடுக்கும் கலாச்சாரம் நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதியா?
அன்பர்களின் கருத்துகளை நான் வரவேற்கின்றேன்.
நன்றி.
தமி்ழ் மருதம்
Find more videos like this on My Journeys Videos
அன்பர்களின் கருத்துகளை நான் வரவேற்கின்றேன்.
நன்றி.
தமி்ழ் மருதம்
Find more videos like this on My Journeys Videos
Monday, October 26, 2009
ஜோதிடம் பயில்
ஜோதிடம் என்பது வான் வெளியில் உள்ள கோள்களின் நகர்வுகளும் அவைகளின் கதிவீச்சுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் பல விழைவுகளை உண்டு பண்ணி பலன்களை பிரதிபலிக்கின்றன. இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்
ஜோதிடம்
அண்டத்தில் உள்ள கோள்களின் இயக்கத்தை ஞான அறிவால் உணர்ந்த ஞானிகள் அந்தந்த கோள்களின் கதிர்வீச்சுகளின் பலம், நகர்வுகளின் வேகம் அடிப்படையில் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் பலாபலன்களை கணித முறையில் கணக்கிட்டு ஜோதிட சாஸ்திர மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றை கற்று பலன் பெறுவதே எமது நோக்கம்.
ஜோதிடத்துக்கான வானியல் அடிப்படை:
அண்டவெளியில் பல ஆயிரகணக்கான விண்மீன் குடும்பங்கள் உள்ளன. அவற்றுள் எம்மைச் சூழ்ந்துள்ள சூரிய குடும்பமும் ஒன்றாகும். நமது சூரிய குடும்பத்தில் பல கிரகங்கள் உள்ளன. அவை யாவும் சூரியனை மையமாக கொண்டு சுற்றி வருகின்றன. அவற்றுள் நாம் இருக்கும் பூமியும் ஒன்றாகும். சந்திரன்; பூமியின் உப-கிரகமாகும். இவையாவும் தம்மிடையே உள்ள ஈர்ற்ப்பு விசையால் இணைக்கப்பட்டு ஒரு குடும்பம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
விண்மீன்கள் தானாகவே (மின்னி மின்னி) மிளிர்வன. ஆனால் கிரகங்கள் தானாக ஒளிர்வதில்லை. கிரகங்களும், உப-கிரகங்களும் விண்மீன்களின் ஒளியைப் பெற்று பிரகாசிக்கின்றன.
நாம் ஆலயத்தை சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போல் பூமியும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வலம் வருகின்றது. பூமியின் உப-கிரகமான சந்திரனும் பூமியைச் சுற்றி வலம் வருவதுடன் (பூமியை ஒரேபக்கப் பார்வையுடன் இணைந்து) சூரியனையும் சுற்றி வருகின்றது.
அத்துடன் பூமியின் உடன் பிறப்புகளான மற்றைய 8-கிரகங்களும, சூரியனை மையமாக கொண்டு பூமி சுற்றும் அதே சுற்றுப் பாதையில் வித்தியாசமான வேகத்துடன் சூரியனை சுற்றி வருகின்றன என்பதுவும் விஞ்ஞானிகளின் முடிபு.
இதன் அடிப்படையில் புவியில் ஏற்படும் எல்லா (நிகழ்வுகளையும்) மாற்றங்களையும் உணர்ந்து கொள்வதற்கும், சோதிடப்படி கணக்கிடுவதற்கும், கோள்களின் நிலைகளையும், நகர்வுகளையும் பூமிக்கு சார்பாக கணித்துக் கொள்வதற்கும் சோதிட சாஸ்திரம் புவியை மையமாகக் கொண்ட ஒரு முறைமையை பயன்படுத்துகின்றது.
விளக்கமாக கூறுவதாயின் சூரியனும் மற்றைய 8-கிரகங்களும் பூமியை மையமாக வைத்து சுற்றி வருவதாக சோதிட சாஸ்திரம் கணிக்கின்றது. இம் முறை மூலம் கிரகங்களும், நட்சத்திரங்களும் பூமியில் வாழும் உயிரினங்களிற்க்கு ஏற்படுத்தும் பலாபலன்களை (நன்மை, தீமைகளை) கணிக்க முடிகின்றது.
பூமியை மையமாக கொண்டு கணிக்கப்படும் இராசிச் சக்கரம் Zodiac என்றழைக்கப்படும். இது கண்ணிற்கு புலப்படாத ஒரு கற்பனை வடிவமாகும். Zodiac எனப்படும் இராசிச் சக்கரம்; சூரியனை மையமாக கொண்டுள்ள Ecliptic எனப்படும் ஞாயிற்றின் தோற்றுப் பாதைக்கு இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும்.
பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றுவதற்கு 24 மனித்தியாலங்கள் (1-நாள்) எடுக்கின்றது. ஆனால் சூரியனை (சூரியன் பூமியச் சுற்றி வருவதாக சோதிடம் கணிக்கிறது.) பூமி (Zodiac எனப்படும் இராசிச் சக்கரம்) ஒருமுறை சுற்றிவர ஒரு ஆண்டு 365 1/4 நாட்கள் ஆகின்றன. பூமி தன்னைத் தானே சுற்றுவதால் பகல், இரவு தோன்றுகின்றது. பூமி சூரியனைச் சுற்றுவதால் பருவ காலங்கள் பூமியில் தோன்றுகின்றன.
சந்திரன் பூமியைச் சுற்றுவதற்கு 27.32 நாட்கள் எடுக்கின்றது. அதன் பயனாக பூமியில் பூரணை, அமாவாசை, போன்ற 30 திதிதிகள் பூமியில் உண்டாகின்றன (விபரமாக பஞ்சாங்கம் பகுதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது).
சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. இந்த 9 கிரஹங்களில் சந்திரனுக்கு ஜோதிட உலகம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தினத்தன்று எந்த நட்சத்திரத்தின் மேல் சந்திரன் சஞ்சாரம் செய்கிறாரோ அதுவே அன்றைய நட்சத்திரம் ஆகும்
சூரியன் சித்திரை மாதத்தில் மேஷத்தில் உதயமாவர். வைகாசி மாதத்தில் ரிஷபத்தில் உதயமாவர். இப்படியே மாதம் ஒரு ராசியில் சஞ்சரித்து திரும்பத் திரும்ப 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார் (சூரியன் சுற்றுவதில்லை ராசிகள் தான் சூரியனை சுற்றி வருகின்றன எனக்கொள்க). இவ்வாறாக சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் உதயம் ஆகிறார்
ஒவ்வொரு மனிதனின் ஜாதக-குறிப்பும் அவன் பிறந்த நேரத்தின் கோள் அமைப்பை 360 பாகை கொண்ட (Zodiac எனப்படும் இராசிச் சக்கரம்) நீள் வட்டத்தின் அமைப்பை குறிப்பதாகும். (நீள்வட்டம் வரைதல் காலப்போக்கில் திரிபுற்று நீள் சதுரமாக தற்போது வரையப்படுகிறது.) இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டங்கள் பன்னிரண்டும்; பன்னிரண்டு இராசிகள் எனப்படும்.

இராசிச்-சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இராசிகள் 12:
1. மேடம் (மேஷம்)
2. இடபம் (ரிஷபம்)
3. மிதுனம்
4. கர்க்கடகம் (கடகம்)
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனு (தனுசு)
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்
ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் உதய-லக்கினம் என்பது பிறந்தோரின் அண்ட இருப்பு நிலையைக் குறிக்கும். அதாவது இந்தப் பேரண்டம் 360 பாகைகளில் பிரிக்கப் படும் போது இந்த உயிர் பிறந்த இடம் மற்றும் கோள அமைவு அமைந்த இடம் எத்தனையாவது பாகையில் அமைந்தது என்பதைக் குறிக்கும்.
மேலும் பார்க்கையில், ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறம், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களுண்டு. ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும் ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும்.
சனிக் கோள் கருநீல நிறத்துக்கும், செவ்வாய்க் கோள் செந்துவர் நிறத்துக்கும் உரியன ஆகுதல் இதற்கு உதாரணங்களாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை உமிழ்ந்து (வெளிப்படுத்திக்) கொண்ட வண்ணம் உள்ளன. அவை முறையே அமைந்த இடத்தால் பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.
பண்டைக்காலச் சோதிட நூல்கள் பூமியில் ஆதிக்கம் செலுத்தும் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக் கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன.
அக்கோள்கள் பின்வருமாறு:
1. சூரியன் (ஞாயிறு Sun)
2. சந்திரன் (திங்கள் Moon)
3. செவ்வாய் (Mars)
4. புதன் (Mercury)
5. குரு (வியாழன் Jupiter)
6. சுக்கிரன் (வெள்ளி Venus)
7. சனி (Saturn)
8. இராகு (நிழற்கோள்)
9. கேது (நிழற்கோள்)
மேலும், கோள்களின் அளவு, அவற்றின் தட்ப-வெட்பநிலை, அவற்றில் அடங்கியுள்ள தாதுக்களின் அடைப்படையில் தான் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படும். அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுக்கள் அந்த கதிர்வீச்சை எந்த அளவு கிரகிக்கிறதோ அதற்கேற்றாற்போல் நன்மை, தீமைகளை அடையும் நிலை உள்ளதாக ஜோதிடம் பொதுவாகக் கூறுகிறது.
இக் குறைகளைப் போக்குவதற்காக "அதிஸ்டக் கற்களை" பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். இவற்றின் மூலம் நன்மை தரக்க்கூடிய கதிர்களை உள்கிரகிக்க முடியும். அதன் பயனாக வாழ்க்கையில் நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதிஸ்டக்கற்களை பாவிப்பதில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். தவறான கற்களை பாவித்தால் தீமைகள் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. (நன்மை தரக்கூடிய அதிஸ்டக் கற்கள் பற்றிய விபரங்கள் இவ் இணையத் தளத்தில் "அதிஸ்டக் கற்கள்" என்னும் பகுதியில் பதியப்பட்டுள்ளன.)
பல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் தொகு பயனாகப் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் உச்சம் பெற்றதாக உரைக்கப்படும். இதைத்தான் "கிரக வலிமை" என்பர்.
ஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.
இனி சோதிடம் என்பது எவ்வாறு ஒரு மனிதனை ஆட்சி செய்யும் எனக் காண்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் தலை வட துருவமாகவும், கால்கள் தென் துருவமாகவும் அமைகின்றன. (எனவேதான் தலையை வடக்குப் பக்கம் வைத்துப் படுக்கக் கூடாதெனப் பெரியோர் கூறுவர். ஏனெனில், ஒத்த தன்மையுடைய காந்தத் துருவங்கள் விலகும். இதனால் ஏற்படும் விலக்கு விசை மூளையில் மென்மையான அழற்சி மற்றும் தகைவின்மையை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு நிலைப் படுத்தப்படுகிறது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. நாம் பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீசல்கள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து என்ன வலிமையுடன் பெறப் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.
வேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் போழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது என்று கூறலாம்.
எவ்வாறெனில் ஒரு புகைப்பட வீழ்த்தியில் (காமிரா) படச்சுருளில் பதியும் முதல் ஒளி (எக்ஸ்போசிங்) யின் வடிவமே அதில் நிலைப்படுத்தப்படுதல் போல் நாம் பிறந்த வேளையின் கோளமைப்பு, அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள் நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மந்தமாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நமது பிறக்கும் காலத்தின் உயிர்க் காந்தப் புலமும் கோள் நிலைகளால் அமைக்கப்படுவது இதனால் தெளிவாகும்.
இனி வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.
அது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனைக் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.
இலக்கினம்
புவி தன்னைத்தானே ஒரு நாளில் சுற்றுவதால், அதன் பரப்பிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாளில் அதனைச் சுற்றியுள்ள 12 இராசிகளையும் கடந்து செல்கின்றது. ஜோதிடம் சார்பாகப் பார்க்கும் போது இந்த இராசி மண்டலம் ஒரு நாளில் ஒரு முறை பூமியை முழுவதுமாகச் சுற்றிவருகிறது எனலாம்.
எனவே குறிப்பிட்ட ஒரு நேரத்தில், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே, அக் குறிப்பிட்ட இடத்திற்கு அந் நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப் படுகின்றது.
மனிதர்களின் பிறந்த நேரத்துக்குக் கணிக்கப்படும் சாதகக் குறிப்பில், அப் பிறந்த நேரத்தில் அடி வானத்தில் தோன்றிய இராசியின் புள்ளி அச் சாதகத்துக்குரிய இலக்கினமாக "//ல" குறிக்கப்பட்டிருக்கும். பொதுவாக இலக்கினம் என்னும் போது அப் புள்ளி இருக்கும் இராசியின் பெயரையே கூறுவது வழக்கம். சோதிடத்தில் அச்சொட்டான கணிப்புகள் தேவைப்படும்போது, இலக்கினத்தைக் குறிக்கும் துல்லியமான கோண அளவு பயன்படுகின்றது.
இராசிச் சக்கரத்தின் அமைப்பைப் பற்றி அறிவோம்.
சூரியனினின் தோற்றப்பாதை (முழுவதுமாக 360 பாகை ) ஒவ்வொன்றும் 30 பாகைகள் கொண்ட பன்னிரண்டு இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும் அவற்றுள் சிலவே பூமியின் சுற்றுப்பாதைக்குள் அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன.
அவைகள் 27 நட்சத்திரங்கள்(கூட்டங்கள்) என கணக்கிடப்பட்டு ஒவ்வொன்றும் 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. எனவே 27 நட்சத்திரங்களும் 108 பாதங்களை கொண்டன எனலாம். ஒவ்வொரு இராசியும் நட்சத்திரங்களின் ஒன்பது பாதங்களை கொண்டனவாக கணிக்கப்படுகின்றது.
இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வித்தியாசமான வேகத்தினைக் கொண்டன. சந்திரன் பூமியைச் சுற்றி வர 27.32 நாட்கள் ஆகின்றது. சூரியனுக்கு ஒரு வருடம் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள்; ராகு, கேதுவிற்கு 18 ஆண்டுகள்; சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.
"அசுவினி" நட்சத்திரம் ஞாயிற்றின் தோற்றப் பாதையில் முதற் இராசியிலும் "ரேவதி" நட்சத்திரம் கடைசி இராசியிலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். "மேடம்" இராசி சக்கரத்தில் முதற் கூறு ஆகும், "மீனம்" கடைசிக் கூறு ஆகும்.
ஒரு ஆண்டு என்பது 365 1/4 நாட்கள் கொண்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது பூமி இந்த வான மண்டலத்தை (சூரியனை) ஒருமுறை சுற்றி வரும் காலம் ஆகும். பூமி ஒருமுறை வானமண்டலத்தைச் சுற்றிவிட்டால் ஒர் ஆண்டு முடிந்து விடுகிறது. இந்த வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது எனக் கூறுகின்றோம். அதாவது வான மண்டலத்தின் ராசிச்சக்கரத்தில் உள்ள மேஷ ராசியில் சூரிய பகவான் மீண்டும் உதயமாகும் காலமே தமிழ் புத்தாண்டு தினமாகும்.
மேட ராசியில் இருந்துதான் சூரியன் சுற்ற ஆரம்பிக்கின்றது என ஜோதிடம் கணிக்கின்றது. (சூரியன் ராசி சக்கரத்தைச் சுற்றுவதில்லை; ராசிச் சக்கரம் தான் சூரியனை சுற்றுவதாக கொள்வோம்). இந்த ஏப்ரல் 14ம் தேதி ஆரம்பித்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி முடிய ஒரு சுற்று முடியும். இந்த காலம் தான் ஒராண்டாகும்.
இந்த ஆண்டுக்கும் பெயர் வைத்து இருக்கிறோம். வருகின்ற ஆண்டின் பெயர் "சர்வதாரி" ஆண்டாகும். இது தமிழ் ஆண்டு. இதே போன்று ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயர் உண்டு. 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்கின்றன.
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகங்கள் அதிபதிகளாக இருக்கிறார்கள். சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒவ்வொரு ராசிக்குதான் அதிபதி (உரிமைக்காரன்). ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.
சூரியன் விண்மீன்: சிங்க-ராசிக்கும் அதிபதியாவார்.
சதிரன் கிரகம்: கடகம்-ராசிக்கும் அதிபதியாவார்.
செவ்வாய் கிரகம்: மேஷ-ராசிக்கும், விருட்சிக-ராசிக்கும் அதிபதியாவார்.
புதன் கிரகம்: மிதுன-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.
குரு கிரகம்: மீன-ராசிக்கும், தன-ராசிக்கும் அதிபதியாவார்.
சுக்கிரன் கிரகம்: இடப-ரசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.
சனி கிரகம்: மகர-ராசிக்கும், கும்ப-ராசிக்கும் அதிபதியாவார்.
ஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றதோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள் அசைவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.
பஞ்சாங்க விளக்கம்:
பஞ்ச அங்கங்களைப் (ஐந்து-அங்கங்களைப்) பற்றிய விபரங்களை கூறுவது பங்சாங்கம். ஐந்து அங்கங்களாவன: 1. திதி, 2.வாரம், 3.நக்ஷ்த்திரம், 4.யோகம், 5.கரணம் என்பனவாம்.
தற்பொழுது இரு வகையான பஞ்சாங்கங்கள் பாவனையில் உள்ளன. ஒன்று திருகணித பஞ்சாங்கம், மற்றையது வாக்கிய பஞ்சாங்கம்.
கி.மு. 1200 முதல் கி.மு.400 முடிய உள்ள காலத்தை "சித்தாந்த ஜோதிஷ காலம்" என அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் 18 விதமான சித்தாந்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 18 வகையான சித்தாந்தங்களை ஆதாரமாக வைத்தே பஞ்சாங்கங்கள் கணிக்கப் பட்டன.
கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ஒரு முறையைக் கண்டு பிடித்தனர். இது "வாக்கிய முறை" எனப்பட்டது. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் "வாக்கிய பஞ்சங்கம்" எனப்படும்.
காலப்போக்கில் வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் சில பிழைகளைக் கண்டறிந்தனர். அதனால் அவைகளை திருத்திப் புதிய முறையில் கணித்துக் கொண்டனர். திருத்திய திருகணித முறையை ஒட்டிய பஞ்சாங்கங்கள் "திருகணித பஞ்சாங்கம்" எனப்படும்.
இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களைப் பார்ப்பதற்கு "ரெலஸ் கோப்புகள்" வந்துவிட்டன. இக்காலத்தில் கிரகங்களின் வேகம், அவற்றின் பாதையைக் கண்டறியும் அளவிற்குக் விஞ்ஞானம்-கணிதம் வளர்ந்து விட்டது. தற்போதுள்ள விஞ்ஞான-கணித முறையும், திருகணித-பஞ்சாங்க முறையும் எந்த வித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதனால் திருகணித முறை தான் சரியான முறை என முடிவுக்கு வந்துள்ளார்கள். ஆனாலும் சிலர் வாக்கிய முறைதான் பழமை வாய்ந்தது என்று கருதுவோரும் உளர்.
காளிதாஸனுடைய "உத்திர காலாம்ருது" மந்த்ரேஸ்வருடைய "பல தீபிகை" என்னும் சோதிட நூல்கள் திருகணித முறைதான் சரியான முறை எனக் கூறுகிறது.
திதி:
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்படுகின்ற விரிசலினால் சந்திரனில் விழும் சூரிய கதிர்களின் பிரதிபலிப்பு சந்திரனின் தோற்றத்தில் உண்டாகும் மாற்றங்களாகும். அமாவாசை தினம் சூரியனும் சந்திரனும் "0" டிகிரியில் காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் சுமார் 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். 15 ஆவது தினமான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார்.அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருப்பார்.
அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார் அன்றைக்குப் பெயர் பிரதமை. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார் அன்றைக்குப் பெயர் துதியை. மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் ஆகும். இந்தப் 15 நாட்களை சுக்கில பக்ஷ்க்ஷம் என்பார்கள்.
அதே போல் பெர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்கிறார் அல்லவா? முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி,பஞ்சமி,சஷ்டி, .........அம்மாவாசை
முடிய வரும். இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இதை கிருஷ்ணபக்ஷ்ம் என்பார்கள். தமிழில்கூறினால் தேய்பிறைத் திதிகள் எனக் கூறுவார்கள். இவைகள் எல்லாம் நாள் பார்க்க உதவும். பொதுவாக அஷ்டமி, நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர் (அட்டமி, நவமி தொட்டது நாசம் - என்பது பழமொழி).
வாரம்:
வாரத்தைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டியது இல்லை. திங்கள், செவ்வாய், புதன் என்கிற கிழமைகள்தான் வாரம் என்பது. இன்றைக்கு என்ன கிழமை என்கிற விபரமும் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். பஞ்சாங்கத்தைப் பார்க்காமலேயே எல்லோருக்கும் என்ன கிழமை என்று தெரியும்.
நக்ஷ்த்திரம்:
1. அஸ்வினி, 2. பரணி,
3. கார்த்திகை, 4. ரோகினி,
5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,
7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,
10. மகம், 11. பூரம்,
12. உத்திரம், 13. ஹஸ்தம்,
14. சித்திரை, 15. ஸ்வாதி,
16. விசாகம், 17. அனுஷம்,
18. கேட்டை, 19. மூலம்,
20. பூராடம், 21. உத்திராடம்,
22. திருவோணம், 23. அவிட்டம்,
24. சதயம், 25. பூரட்டாதி,
26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.
கரணம்:
கரணம் என்பது திதியில் பாதியாகம். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ, 2. பாலவ, 3. கெலவ, 4. தைதூலை, 5. கரசை, 6. வணிசை, 7. பத்தரை, 8. சகுனி, 9. சதுஷ்பாதம், 10. நாகவம், 11. கிம்ஸ்துக்னம்.
இன்றைக்கு என்ன திதி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். அதை எப்படிக் கணக்கிடுவது, அதன் உபயோகம் என்ன என்பது பற்றியும் அறிய வேண்டிய காலம் வரும் போது எழுதுகிறோம்.
யோகம்:
இதில் இரண்டு வகைப்படும். முதலாவது சூரியனும், சந்திரனும் சம்பந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் சூரியன், சந்திரனின் ஸ்புடங்களையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை " நாம யோகம்" என்பார்கள். அவையாவன:
1.விஷ்கம்பம், 2.ப்ரீதி,
3.ஆயுஷ்மான், 4.சௌபாக்யம்,
5.சோபனம், 6.அதிகண்டம்,
7. சுகர்மம், 8. திருதி,
9.சூலம், 10.கண்டம்,
11.விருதி, 12.துருவம்,
13. வியாகாதம், 14. ஹர்ஷணம்,
15. வஜ்ரம், 16. சித்தி,
17.வியதிபாதம், 18. வரீயான்,
19.பரீகம், 20. சிவம்,
21. சித்தம், 22. சாத்தீயம்,
23. சுபம், 24.சுப்ரம்,
25.பிராம்யம், 26.ஐந்திரம், 27. வைதிருதி.
மற்றொறு யோகம் தினமும், சந்திரனும் சம்மந்தப்பட்டது. நக்ஷ்த்திராத்தையும், கிழமையையும் வைத்தே யோகம் கணக்கிடப்படுகிறது. இன்ன இன்ன கிழமைகளில் இந்த இந்த நக்ஷ்த்திரங்கள் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்த்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும்.
ரோகிணி மிருகசீரிஷம்,புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்த்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும்.
மீதியுள்ள நக்ஷ்த்திரங்களான கார்த்திகை, சித்திரை, மகம், விசாகம்,
பூராடம், உத்திராடம், பூரட்டாட்தி ஆகிய 7 நக்ஷ்க்ஷத்திரகள் வந்தால் மரணயோகம் ஆகும்.
சித்தயோகத்திலும், அமிர்தயோகத்திலும் நல்ல காரியங்கள் எல்லாம் செய்யலாம்.
மரண யோகத்தில் எல்லா நற்காரியங்களும் விலக்கப்படவேண்டும்.
பஞ்ச அங்கங்களான திதி,வாரம்,நக்ஷ்த்திரம், யோகம், கரணம் ஆகியவைகளைத் தெரிந்து கொண்டீர்கள்.
ஜோதிட காலவாய்பாடு
60 தற்பரை = 1 வினாடி
60 வினாடி = 1 நாளிகை
60 நாளிகை = 1 நாள்
365 நாள் + 15 நாளிகை + 31 விநாடி + 15 தற்பரை = 1 சௌர வருஷம்
60 வினாழிகை = 1 நாழிகை
60 நாழிகை = 1 நாள்
2 1/2 நாழிகை = 1 மணி
2 1/2 வினாழிகை 1 நிமிஷம்
நாள் என்றால் என்ன?
இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரவு 12.01 மணியில் இருந்து மறுநாள் இரவு 12.00 மணி முடிய ஒரு நாள் என்பது ஆங்கிலேயரின் முறை. நமது பண்டைய (சோதிட) முறை சூரியோதயம் முதல் மறு நாள் சூரியோதயம் வரை ஒரு நாள். உதாரணமாக இன்றைக்கு காலை 6.40க்கு சூரியோதயம் எனக் கொள்ளுங்கள். நாளைக் காலை 6.39க்கு சூரியோதயம் எனவும் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் எனப்படும். அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.
ஜோதிடத்தில் விண்மீன் குழுக்கள்:
"அசுவினி" ஞாயிற்றின் தோற்றப்பாதையில் முதற் இராசியிலும் "ரேவதி" கடைசி இராசியிலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். "மேடம்" இராசி சக்கரத்தில் முதற் கூறு ஆகும், "மீனம்" கடைசிக் கூறு ஆகும்.
இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்து பட்டியலிடலாம்:
இராசிகளும் அவற்றிற்குரிய நட்சத்திரங்களும்:
மேக்ஷம்: (0 பாகை தொடக்கம் - 30 பாகை வரை)
அஸ்வனி 1, 2, 3, 4 பாதங்கள்; பரணி 1, 2, 3, 4 பாதங்கள்; கார்த்திகை 1ம் பாதம்.
ரிஷபம்: (30 பாகை தொடக்கம் - 60 பாகை வரை)
கார்த்திகை 2, 3, 4, பாதங்கள்; ரோகிணி 1, 2, 3, 4 பாதங்கள்; மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்.
மிதுனம்: (60 பாகை தொடக்கம் - 90 பாகை வரை)
மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்; திருவாதிரை 1, 2, 3, 4 பாதங்கள்; புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்.
கடகம்: (90 பாகை தொடக்கம் - 120 பாகை வரை)
புனர்ப்பூசம் 4ம் பாதம்; பூசம் 1, 2, 3, 4 பாதங்கள்; ஆயில்யம் 1, 2, 3, 4 பாதங்கள்
சிம்மம்: (120 பாகை தொடக்கம் - 150 பாகை வரை)
மகம் 1, 2, 3, 4 பாதங்கள்; பூரம் 1, 2, 3, 4 பாதங்கள்; உத்திரம் 1ம் பாதம்.
கன்னி: (150 பாகை தொடக்கம் - 180பாகை வரை)
உத்திரம் 2, 3 ,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்
துலாம்: (180 பாகை தொடக்கம் - 210 பாகை வரை)
சித்திரை 2, 3 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3, பாதங்கள்
விருச்சிகம்: (210 பாகை தொடக்கம் - 240 பாகை வரை)
விசாகம் 4-ம் பாதம், அனுஷம் 1, 2, 3, 4 பாதங்கள்; கேட்டை 1, 2, 3, 4 பாதங்கள்
தனுசு: (240 பாகை தொடக்கம் - 270 பாகை வரை)
மூலம் 1, 2, 3, 4 பாதங்கள்; பூராடம் 1, 2, 3, 4 பாதங்கள்; உத்திராட்டம் 1-ம் பாதம்.
மகரம்: (270 பாகை தொடக்கம் - 300 பாகை வரை)
உத்திராடம் - 2, 3, 4 பாதங்கள், திருவோணம் - 1, 2, 3, 4 பாதங்கள்; அவிட்டம் - 1, 2 பாதங்கள்
கும்பம்: (300 பாகை தொடக்கம் - 330 பாகை வரை)
அவிட்டம் - 3, 4 பாதங்கள்; சதயம்- 1, 2, 3, 4 பாதங்கள்; பூரட்டதி- 1, 2, 3 பாதங்கள்
மீனம்: (330 தொடக்கம் - 360 பாகை வரை)
பூரட்டாதி- 4 ம் பாதம், உத்திரட்டாதி- 1, 2, 3, 4 பாதங்கள்; ரேவதி- 1, 2, 3, 4 பாதங்கள்
Tuesday, July 28, 2009
நெல் நாகரிகம்
‘உலகின் நாகரிகங்களை வகைப்படுத்தும் போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நாகரிகத்தை “நெல் நாகரிகம் (சுiஉந ஊரடவரசந)” என்று கூறுகிறார்கள். இந்த நெல் நாகரிகம் தோன்றியது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்திலே தான். தமிழகத்தில் இந்த நாகரிகம் மள்ளர் நாகரிகம் எனப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இந்த நாகரிகத்தின் தோற்றத்தையும் இந்த நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் பற்றியும் அதன் “பண்பாடுத் தலைவர்கள் (ஊரடவரசயட ர்நசழ)” பற்றியும் அந்தப் பண்பாடு பற்றியும் விரிவாகவும் பெருமையுடன் கூறுகின்றன.
நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல் – திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு விசுவாவசு வரு~ம் வைகாசி மாதம் 14 நாள் திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள் தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன் துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும் சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம் மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும் வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து. தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல் விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும் பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும் ஒரு சாவியும் கொண்டு éமியில் வந்தான். நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப் பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன், அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப் பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும் வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம் பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக் கொடுக்கும் நன்மைக்கு
16 பந்தக்காலும் துன்மைக்கு 2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .
18 மேளமும் கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . .
- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803
துவாபர யுகம் என்பது கி.மு. 3102 க்கு முற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளைக் கொண்ட ஊழி. நெல், கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த பாண்டிய வேந்தர் வம்சத்தைச் சேர்ந்த மள்ளர், குடும்பர் எனும் தேவேந்திர குலத் தமிழர்கள் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.
தமிழ் நில வகைகள் – தமிழர்கள் மக்களின் வாழ்விடங்களை ஐந்து வகைகளாகப் (திணை) பிரித்தனர். இவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை எனப்பட்டது. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த நிலமும் ஆகும். முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலமும் ஆகும். மருத நிலம் என்பது நீர் வேளாண்மை செய்யப்படும் வயலும் வயல் சார்ந்த நீர் வளம் மிகுந்த நிலம் ஆகும். நெய்தல் என்பது கடலை ஒட்ழய மணல் பரந்த நிலம் ஆகும். பாலை நிலம் என்பது குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் மழையின்மையாலும் கதிரவனின் வெப்பத்தாலும் காய்ந்து வரண்டு திரிந்த நிலம் ஆகும்.
உலக நாகரிகஙகள் – ஆற்றுப் பள்ளதாக்குகள் மற்றும் ஆறு பாயும் சமவெளிகள் மருதநிலப் பகுதிகள் ஆகும். உலகின் பல நாடுகளிலும் நீர் வளம் மிகுந்த நதிக் கரைகளில் அமைந்த இந்த மருத நிலப் பகுதிகளிலெயெ நாகரிகங்கள் தோன்றியுள்ளன. கி.மு. 3400 வாக்கில் தோன்றிய எகிப்திய நாகிகம் நைல் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும்.கி.மு. 3500 வாக்கில் தோன்றிய சுமேரிய நாகரிகம் ய+ப்ரட்டீஸ். டைகீரீஸ் நதி சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 3000 வாக்கில் தோன்றியது சிந்து நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1600 வாக்கில் தோன்றியது சீன மஞ்சள் நதிச் சமடிவளி நாகரிகம் ஆகும். கி.மு. 2500 வாக்கில் தோன்றிய கிரேக்க நாகரிகமும் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1000 வாக்கில் தோன்றியது கங்கை நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். இப்படிப் பல நாடுகளிலும் நாகரிகங்கள் தோன்றியது ஆற்றுச் சமவெளிப் பகுதிகளான மருத நிலங்களில் தான்.
தமிழர் நாகரிகம் – காவிரி, தென்பெண்ணை, பாலாறு, பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி பொருணை மற்றும் கடல் கொண்ட பஃறுளி ஆற்றுச் சமவெளிகளான மருத நிலத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம் “நெல் நாகரிகம்” எனப்படும்;. இந்த நெல் நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழர் மள்ளர் எனப்பட்டனர். இந்த நெல் நாகரிகம் தமிழகத்தில் தோன்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது.
தொல்காப்பிய வேந்தன் – தமிழகத்தில் மருத நிலத்தில் முதன் முதலில் மள்ளர்களால் நெல் கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காலத்தில் குடும்பம், ஊர். பேரூர், நகரம், நாடு, அரசுகள் தோன்றின. நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவன் இந்தப் பண்பாட்டினை உடைய மக்களுக்குத் தலைவனானான். தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்ககூடிய மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் இந்தப் பண்பாட்டுத் தலைவனை வேந்தன் எனக் கூறுகிறது. இந்நூலில் இந்தப் பண்பாட்டுத் தலைவனான வேந்தன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையைக் கூறுகிறது.
வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் – தொல்காப்பியம் – பொருளதிகாரம்
நெல் நாகரிகம் தோன்றிய மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனக் கூறுகிறது. தொல்காப்பிம் தோன்றியது கி.மு. 500 என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த நெல் நாகரிகம் அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே தோன்றி இந்நிலைக்கு முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பின்பு நெல் நாகரிகத்தைதத் நமது பண்பாடாகக் கொண்ட மருத நில மள்ளர்களின் பண்பாட்டுத் தலைவர்கள் பலரும் வேந்தன்-வேந்தர் எனப்பட்டனர். இப்பண்பாட்டுத் தலைவர்களான தமிழக அரசர்கள் தமிழ் மூவேந்தர் சேர வேந்தன், சோழ வேந்தன், பாண்டிய வேந்தன் எனப்பட்டனர். மருத நில இறைவனானா (அரசனான) வேந்தனின் வழித் தோன்றல்கள் தாம் மள்ளர் குல சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள்.
பாண்டியன் வேந்தன் – பாண்டியன் நெடுஞ்செழிய மள்ளரை வேந்தன் என்றதும் அவனுடைய நீண்ட மதில் கொண்ட மதுரையை மல்லன் மூதூர் என்றதும் அவன் நெல்லின் மக்களின் குலத்தைச் சார்ந்தவன் என்பதும் பின்வரும் பாடல்களால் அறியலாம்.
வானுட்கும் வழ நீண்டமதில்
மல்லன் மூதூர் வய வேந்தெ.
- புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது.
சீர் சான்ற உயர் நெல்லின் ஊர்
கொண்ட உயர் கொற்றவ
- மதுரைக் காஞ்சி வரி 87 – 88, மாங்குழ மருதனார்.- (பாண்டிய வேந்தர் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்ழயன் நெடுஞ் செழிய மள்ளரைப் புகழ்ந்து பாடியது.
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீன்குடைக் கொடித் தேர்ச் செழிய
- புறநானூறு 24 மாங்குடி மருதனார் தலையாலாங்காத்துச் செருவென்ற நெடுஞ்செழிய மல்லரைப் பாடியது.
சோழ வேந்தன் – சோழன் குளமுற்றுத் துஞ்சிய கிள்ளி வளவன் மள்ளரை வெள்ளைக்குடீ நாகனார் தமிழ் மூவெந்தருள்ளும் சிறந்த வேந்தர் எனப் பாடியது.
மண்திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்
முரசு முழ ங்கு தானை மூவருள்ளும்
அரசெனப்படுவது நினதே பெரும
ஆடுகட் கரும்பின் வெண்ப+ நுடங்கும்;
நாடெனப்படுவது நினதே யத்தை, ஆங்க
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தெ.
- புறநானூறு 35, வெள்ளைக் குழ நாகனார்
கிள்ளி வளவன் மள்ளரைப் பாடியது.
சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக
காவிரி புரக்கும் நாடு கிழவோனே.
- பொருநர் ஆற்றுப் படை வரி 246 – 248 – கரிகாற் பெருவளவந்தான் மள்ளரைப் புகழ்ந்து பாழயது.
சேர வேந்தன் – சேரன் வேந்தன் பாலை பாழய இளங்கோ மள்ளரை ஏருடைய வேந்தன் என்றது.
விண்பொருபுகழ் விறல் வஞ்சிப்
பாடல் சான்ற விறல் வேந்தனும்மெ
வெப்புடைய வரண் கடந்து
தும்புறுவர் புறம் பெற்றிசினே
புறம் பெற்ற வயவேந்தன்
மறம் பாழய பாடினியும்மே
ஏருடைய விழுக் கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
-புறநானூறு 11, பேய்மகள் இளவெயினி பாடியது.
உழுபடையல்லது வேறு படையில்லை
திருவில் அல்லது கொலை வில் அறியார்
நாஞ்சில் அல்லது படையும் அறியார்.
(நாஞ்சில் – கலப்பை) – புறநானூறு 20,
குறுங்கோழிய+ர் கிழார் பாடியது.
(சேர வேந்தர் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை மள்ளர் பற்றி).
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் 2000 ஆண்டு பழமையான எடக்கல் குகைக் கல்வெட்டு சேரவேந்தன் வி~;ணுவர்மன் குடும்;பர் குலத்தினன் எனக் கூறுகிறது. “வி~;ணுவர்மம் குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித”.
இதன் பொருள் – வி~;ணுவர்மனின் குடும்பம்; குலம் வளர எழுதியது என்பதாகும். குடும்பன் என்பது மள்ளர்களில் பட்டப் பெயர்களில் ஒன்றாகும்.
வேந்திர குலத்தினரின் உயர்வு (வேந்தன் குலத்தினர்) இந்த வேந்தர்கள் மள்ளர் குலத்தினர் என்பது சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் கூறப்படுகின்றன. வேந்தன் பின் நாளில் இந்திரன், தேவேந்திரன் எனப்பட்டதால் இவர்களும் – இவர்களின் வழித்தோன்றல்களும் தேவேந்திர குலத்தினர் என்றும் கூறப்படுகின்றனர்.
சேர, சோழ, பாண்டியர்கள் வேந்தர்கள் என்பதையும் அவர்கள் நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவர்கள் என்பதையும் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நெல் நாகரிகத்தின் தலைமக்களாகிய உழவர்களும்,
மல்லர் குலத்தினரும் – தேவேந்திர குலத்தினரும் இருந்த சிறப்பை, முதன்மையை கீழ்வரும் பாடல்கள் காட்டுகின்றன:
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுதோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
- புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது.
சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவெ தலை
- குறள் 1031
உழதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.
- குறள் 1033
மருத நில மக்கள் மள்ளர், உழவர். களமர். கடைஞர். வினைஞர், களைஞர், கம்பளர், தொழுவர். கடைசியர், ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். மன்னர்களும் வேந்தர்களும் மள்ளர் என்றும் உழவர் என்றும் பெருமைப் படக் குறிப்பிடப்பட்டனர். பிற தொழில்களில் உள்ள சாதனையாளர்களும் உழவர்களாக மேன்மையடைந்ததாகக் கூறப்பட்டனர். அதனாலேயே ஏருழவர், சொல்லெருழவர், வாளெருழவர், வில்லேருழவர் என்ற சொற்றொடர்கள் இலக்கியங்களில் ஆளப்பட்டன. உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக
அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்
- என்று திவாகர நிகண்டும்.
செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப
- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.
நெல் நாகரிகத்தில் பண்பாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களின் சுற்றுத்தார் தமது செல்வ வளத்தாலும் படை வலிமையாலும் பிற நில மக்களுக்கும் தலைவர்களாக (இறைவனாக) இருந்தார்க்ள. இதனைத் தொல்காப்பியம்.
மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும்
சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும்
வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும்
வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்
தொல்காப்பியம் என திருமால், முருகன், தேவேந்திரர், வருணன் ஆகியோர் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்கு இறைவர்கள் எனக்கூறும். பாலை நில இறைவி கொற்றவை ஆகும்.
இலக்கியங்கள், புராணங்கள் இந்தப் பண்பாட்டுத் தலைவர்களின் உறவு முறைகள் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. சிவன் மள்ளர். கொற்றவை எனப்படுகிற பார்வதி ஆகியோரின் குமரன் சேயோன் என்படுகிற முருகன் ஆகும். தேவேந்திரர் எனப்படுகிற வேந்தனின் மகள் தெய்வயானையின் கணவர் சேயோன் பார்வதியின் சகோதரர் மாயோன் எனப்படுகிற திருமால் மள்ளர் ஆகும். வருணன் மள்ளர் வேந்தன் எனப்படுகிற தேவேந்திரருக்குக் கீழ்பட்ட ஒரு தலைவன்.
மள்ளர் குலத்தினரின், தேவேந்திர குலத்தினரின், தமிழரின் இந்த நெல் நாகரிகம் தான் பல கலைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் தோற்றுவித்து ஆதரித்து வளர்த்து மக்களிடையே பரப்பியுள்ளது. மனித குலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், வளத்திற்கும் பண்பாட்டு மேலாண்மைக்கும் காரணமாக அமைந்துள்ளது.
மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.
பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட
வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி.
- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22.
இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.
கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால்
மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு
- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25
“குன்றுடைக் குலமள்ளர்” என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின்
- கம்பராமாயணம், வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21)
இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்ப+மியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.
தெய்வேந்திரர் வரலாறு:
சிவனுயுமையும் மதிறுக் காஞ்சி தன்னில்
ஏகாம்பரரா இருந்தருள் புரிந்து
மதுரையை நோக்கி வரும் வழியதனில்
உலகலாமீன்ற உமையவள் மனதில்
திருவருள் தோன்றி சிவனிடத்துரைக்க
அரன்மன மகிழ்ந்து முகமது வேர்க்க
கரமதில் வாங்கி வரமதுக்கியந்து
வைகையில் விடுக்க
வருணன் பொழிந் துருழிக் காத்தடித்து
குளக் கரையதனில் கொடி வள்ளல் தாங்க
ஓமம் வளர்ந்து உற்ப்பணமாக
ஈ~;வரி தேடி யிருளில் நடக்க
கூவிய சத்தம் குமரனை நோக்கி
வாரிடியடுத்து வள்ளலை வலபுறம் வைத்து
வலமார் பிய்ந்து அமுர்தம்
பொழிந்து அ~;த்தம் கொடுக்க
பாலன் நரிவு பணிவிடைக்காக
புரந்தரன் மகிழ்ந்து ப+ரித்தெடுக்க
தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் :
கன்னல் சென்னல் கதழி பிலாவுடன்
தென்னை கமுகு செறந்த வெள்ளிலை
அன்ன மிளகு மாந்துளிற் மஞ்சள்
மல்லிகை முல்லை மகழி நுவர்ச்சி
பரிமள சுகந்தம் பாங்குடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசிக்க வென்று
காராவின் பாலை கரகத்திலேந்தி
சீறாக அன்னம் சிறப்பித்த போது
தெய்வேந்திரன் விருதுகள் :
ஈ~;வரன் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து அதிசயத் திவாகும்
விமரிசையாக விருது கொடுக்க
மாலயன் ருத்திரன் மகே~;பரன் மகிழ்ந்து
பொன்முடி யதனில் ப+சன மணிய
வாடாத மாலை மார்பினி லிலங்க
வெட்டுப் பாவாடைகள் வீணைகள் முழங்க
செந்நெல் சேறாடி சிறப்புடன் சூழ
வெள்ளைக் குடையும் வெங்களிறுடனே
டாலுடம்மான சத்தம் அதறிட
மத்தாளம் கைத்தாமம் மகெ~;பரத் துடனெ
எல்லா விருதும் இயல்புடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசனம் செய்து
பதினெட் டாயுதம் பாங்குட னெடுத்து
புரவியிலேறி ப+லோக மதனில்
சென்னலா யெங்கும் சிற்ப்பிக்கும் போது
விசுவ கண்ணாளர் மேழியும் கொடுக்க
மூவராசாக்கள் முடிமணம் சூட்ட
செந்நெல்லை படைத்தோர்
குகவேலருளால் குடும்பன் தழைக்க
சிவனரளாலே திருநீறணிந்து
யெ;லலா வுலகும் யிறவியுள் ளளவும்
தௌ;ளிமை யாத செந்நெலை படைத்தோர்
சேத்துக்கால்ச் செல்வரான
செந் நெல் முடி காவரலான
முத்தளக்கும் கையாதிபரான
பாண்டியன் பண்டான பாறதகதபரான
அளவு கையிட்டவரான
மூன்று கைக்குடையாதிபரான
பஞ்ச கலசம் பாங்குடன் வயித்து
அஞ்சலித் தேவர்கும் அன்னம் படைத்தவரான
மண்ணை வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான
கடல் கலங்கினும் மனங் கலங்காத வல்லபரான
மாடக் குளத்தில் வந்துதித்தவறான
பரமசிவனுக்கு பாத பணிவிடை செய்கின்றவரான
தெய்வலோகத்தில் தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய
பழனித் தலத்தில் காணியாளனாகிய
கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி – பழனிப் பட்டயம், வரி 195 – 217
நெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும் அவர்களுடைய பண்பாட்டுத் தலைவர்களுமாகிய (வேந்தன்) தேவேந்திரர், முருகன், மள்ளர், திருமால் மள்ளர், சிவன் மள்ளர், பார்வதி, சேர வேந்தர், சோழ வேந்தர், பாண்டிய வேந்தரும் அனைத்துக் தமிழ் இலக்கியங்களிலும் பலவாறு புகழ்ந்து பேசப்படுவார்கள். சங்க காலத் தழிழ் இலக்கியங்கியங்கள் தொடங்கி இன்று வரை இலக்கியங்களில் பேசப்படும் நெல்லின் மக்களாகிய மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களின் பண்பாட்டு மேலாண்மை, தமிர்; வளர்ச்சிக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முழுமையானது.
சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட அனைத்துத் தமிழ் இலக்கியங்களும் இந்த தேவேந்திர மள்ளர்களின் புகழ் பாடும். இலக்கியங்களில் நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிற்பபையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும். அரசர்களின் இந்நெல் நாகரிகத்தின் தலைவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்நெல் நாகரிகத்தினைத் தோற்றுவித்த மக்களின் தற்போதைய பெயர்களான மள்ளர், பள்ளர், தேவேந்திரர், தேவேந்திர குலத்தார், தேவேந்திர குல வேளாளர், பண்ணாடி, காலாடி, குடும்பன், குடையர், அதிகாரி, குடும்பனார், மூப்பனார், பணிக்கர், வாய்;காரர் (வாய் – நீர்வரும் வாய், மதகு), குளத்து மள்ளர் முதலிய பெயர்களுக்கும் தற்போதும் இம்மக்களுடைய முதன்மைத் தொழில் நஞ்செய் விவசாயம் என்பதுவும் நெல் நாகரிகத்தின் தொன்மையும் தொடர்ச்சியையும் இந்நாகரிகத்தின் பங்களிப்பையும் உணர முடியும்.
தமிழ் மள்ளர்களின் இந்நெல் நாகரிகம் இந்தியா முழுவதிலும் இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் (பர்மா), பாகிஸ்தான், சீனா, சப்பான், இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, பங்காள தேசம், பிலிப்பைன்ஸ் முதலிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் பரவியுள்ளது, இதன் சிறப்பையும் இன்றியமையாமையையும் உணர்த்துகின்றது.
- முனைவர் குருசாமி சித்தன், B.E.M.Sc (Engg.) Ph.D (Uconn-USA)
- தலைவர், தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றம்

Wednesday, May 27, 2009
பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!
இப்போ நாம் முதலில் பிள்ளையாரைப் பத்தித் தெரிஞ்சுக்கலாமா? நாம எழுதறப்போ கூட பிள்ளையார் சுழின்னு போட்டுத் தான் எழுதுவோம், இல்லையா? பிள்ளையார் சுழி எப்படிப் போடணும்னு தெரியும் இல்லையா? 2 மாதிரிப் போட்டுக் கீழே 2 கோடு போடணும். இது "ஓம்" என்னும் எழுத்தின் சுருக்கம்னு சொல்லுவாங்க. நாம எந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிச்சாலும் முதலில் பிள்ளையாரை வணங்கிட்டுத் தான் ஆரம்பிக்கணும். அப்படித்தான் ஆரம்பிப்போம். பிள்ளையாரைக் கும்பிட்டு ஆரம்பிக்கிற வேலையில் தடங்கல் வராமல் இருக்கும்னு ஒரு நம்பிக்கை. அதனால் தான். நாம செய்யற காரியத்தில் தடங்கல் ஏற்படுவது நம்மளோட துரதிருஷ்டம்னு நினைப்போம் இல்லையா? அதனாலே தான் முதலில் பிள்ளையாரை நினைச்சுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அது எப்படி வேணாலும் இருக்கலாம்."விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் -- விநாயகனேவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் படுமின் பணிந்து.!"
என்று ஒரு தமிழ்ப் பாடல் இருக்கிறது. இதன் அர்த்தம் என்னன்னா, நம்மளோட வினை எல்லாத்தையும், அதாவது நாம் செய்யற, செய்யப் போற பாவங்கள் எல்லாத்தையும் வேரோடு அறுத்து விடுவான் விநாயகன் என்று முதல் வரிக்கு அர்த்தம். 2வது வரிக்கு விநாயகன் நம்முடைய வேட்கை தணிவிப்பான் என்றால் நம்முடைய நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பான் என்று பொருள் கொள்ள வேண்டும். அடுத்து என்ன சொல்றாங்கன்னா, "விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்" இந்த உலகமே அவருடைய தொந்திக்குள் அடங்கி இருக்கிறதுன்னு அர்த்தம். அதான் விநாயகர் தொந்தி பெரிசா இருக்கு பார்த்தீங்களா? இந்த மாதிரியான பெரிய தொந்திக்குள் உலகே அடக்கி இருக்கும். இந்த விநாயகர் தான் இந்த மண்ணால் ஆகிய பூமிக்கும், சுடர் விட்டுப் பிரகாசிக்கும் விண்ணான ஆகாயத்துக்கும், சகலத்துக்கும் நாயகன், அதாவது தலைவன் ஆகிறான். அடுத்து என்ன சொல்றாங்க? ஆகையால் அந்த விநாயகனை வணங்கிக் கும்பிடு, உன்னோட எல்லா வேலையும் நல்லா நடக்கும். அதான் "தன்மையிலே கண்ணிற்படுமின் கனிந்து!"ன்னு சொல்றாங்க. "கனிந்து"ங்கிற வார்த்தையோட முழு அர்த்தம் விநாயகனின் சக்தியை நாம் நல்லாத் தெரிந்து கொண்டு, மனம் கனிந்துன்னு இந்த இடத்திலே அர்த்தம் பண்ணிக்கணும்.
அடுத்து இன்னொரு முறையிலே ஸ்லோகம் சொல்லிக் கூட விநாயகரை வழிபடலாம்.
"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உப சாந்தயே!"
மஹாவிஷ்ணுவிற்கு நிகரானவரும், வெள்ளை உடை அணிந்தவரும், ரொம்பவே மகிழ்ச்சியான முகத்தைக் கொண்டவருமான அந்த விநாயகரைக் கும்பிடுகிறேன். என்னுடைய காரியங்களில் உள்ள விக்னங்களை நிவர்த்தி செய்து வேலைகளை முடித்துக் கொடுக்கட்டும்." என்று வேண்டிக் கொண்டு தான் பெரியவங்க எல்லாம் அவங்க ஜபம், தபம், பூஜை, புனஸ்காரம் எல்லாம் செய்வாங்க இல்லையா? அதான் மேற்படி ஸ்லோகத்தின் கருத்து.
பிள்ளையார் தோற்றம்
பிள்ளையார் எப்படித் தோன்றினார்ன்னு இப்போப் பார்ப்போமா? ரொம்ப நாளைக்கு முன்னே, அதாவது ரிஷிகள், முனிவர்கள்னு எல்லாருமா நிறைய இருந்தப்போ மரகத முனிவர்னு ஒரு முனிவர் இருந்தாராம். அவர் தவம் செய்வதற்குப் போன இடத்தில் விபுதைன்னு ஒரு அசுரப் பெண்மணி அவரைக் கல்யாணம் செய்துக்க ஆசைப் பட, முனிவர் மறுத்தும், பிடிவாதமாய்க் கல்யாணம் செய்து கொள்கிறாள். அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, என்னதான் முனிவரோட புத்திரனா இருந்தாலும், அவங்க அம்மாவோட வளர்ப்பினாலே அவன் ஒரு அசுரனாத் தான் வளர்ந்து வந்தான். அவன் பேர் கஜமுகாசுரன். இந்த அசுரன் தேவர்களுக்குப் பலவகையில் தொந்திரவு கொடுத்து வந்தான்.

(பொதுவாகவே நமக்குள்ளேயே ஒரு மனசு நல்லது நினைக்கும். ஒரு மனசு பொல்லாத விஷயத்தை யோசிக்கும். இப்போப் பக்கத்துப் பையனோ, பொண்ணோ தப்பு செய்தால் உடனே நாம டீச்சர் கிட்டே சொன்னா அது நல்ல மனசு. அப்படி இல்லாமல் நாமளே அவனை அடிச்சோ, கடிச்சோ தண்டிச்சோம்னா அது கெட்ட மனசு, இல்லையா? டீச்சர்னு ஒருத்தங்க பெரியவங்களா இருக்கும்போது, எதுவா இருந்தாலும் அவங்க கிட்டேத் தான் சொல்லணும், சொல்லுவோம். இந்த அசுரங்க அப்படி இல்லை, எதுவா இருந்தாலும் அவங்களே முடிவு எடுப்பாங்க. கடவுள்களையும் வேண்டிக்கிட மாட்டாங்க, அவங்க குருவும் சரியானபடி வழிகாட்ட மாட்டார். அப்படி அமைந்து போச்சு. இதுகூட ஏன் ஏற்பட்டதுன்னு கேட்டா, எல்லாருக்குமே வாழ்வோ, தாழ்வோ எல்லாமே ஏற்படும். கஷ்டமோ, சுகமோ எது வேணாலும் கிடைக்கும். எல்லாத்தையும் சமாளிச்சு வரணும்னு நமக்கு எல்லாம் மறைமுகமாத் தெரிவிக்கிறதுக்காக நடக்குது.)
அப்படித்தான் இந்த கஜமுகாசுரனும் இருந்தான். அவனாலே தேவர்களுக்கு ரொம்பவே தொல்லை ஏற்பட்டது. அவன் ஈஸ்வரனை நோக்கிக் கடும் தவம் செய்து பலவிதமான வரங்களை வாங்கி வந்தான். அதிலே ஒண்ணுதான் தன்னைக் கொல்பவன் மனிதனாயும் இருக்கக் கூடாது, மிருகமாயும் இருக்கக் கூடாது, ஒருவர் உருவாக்கிய ஆயுதத்தில் தோன்றக் கூடாது, ஒருவர் உருவாக்கின ஆயுதத்தில் என்னைக் கொல்லக் கூடாது என்று ஏகப்பட்ட வரங்கள். சாமிதான் நமக்கு வரம் கொடுத்து விட்டதே, இனிமேல் நம்ம பாடு ஜாலிதான்னு அவன் நினைச்சான். சாமி வரம் கொடுத்தாலும் அதை நாம ஒழுங்கா வச்சிருக்கோமான்னு அவர் பார்க்க மாட்டாரா என்ன? அதை அந்த அசுரன் மறந்தே போனான். அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்குத் தேவர்களை அடிக்கிறதும், கொல்றதுமா இருக்கான். தேவர்கள் எல்லாம் என்ன செய்யறதுன்னு ரொம்பவே யோசிச்சாங்க. தேவர்கள் நல்லா வாழ்ந்தாத் தான் மழை பொழியும், தண்ணீர், காற்று, உணவு உற்பத்தி எல்லாம் ஏற்படும். அவங்களோட வேலைக்கு இடையூறு வந்தால் யாருமே நிம்மதியா வாழ முடியாது. ஆகையால் தேவர்கள் எல்லாரும் மஹாவிஷ்ணுவிடமும், பிரம்மாவிடமும் போய் முறையிட்டாங்க. பிரம்மாவும், விஷ்ணுவும் எல்லாத் தேவர்கள் கூடவும் திருக்கைலை போய்ப் பரமசிவனைத் தரிசனம் செய்தார்கள். பரமசிவனிடம் தங்களோட கோரிக்கையைத் தெரிவித்தார்கள். தேவர்கள் செய்யும் காரியங்கள் எந்த விதமான தடங்கலும் இல்லாமல் நடக்கறதுக்காக வேண்டி ஒரு கடவுளை எங்களுக்கு உருவாக்கித் தரவும்னு கேட்டாங்க. விக்கினங்களைப் போக்க வல்ல விக்கின ராஜன் வேண்டும்னு தேவர்கள் விடுத்த கோரிக்கைக்கு சிவன் செவி சாய்த்தார்.
திருக்கைலாயமலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபம் இருந்தது. அதில் பார்வதியும், பரமேஸ்வரனும் போய் அங்கே எழுந்தருளினார்கள். "பள பள" வென்று ஜொலித்துக் கொண்டிருக்கும் இரண்டு ஒளிவடிவங்கள் அந்த ஏழு கோடி மந்திரங்களுக்கு நடுவில் பிரகாசமிட்டுத் தெரிந்தன. அவை இரண்டும் "சமஷ்டிப் பிரணவம்", "வியஷ்டிப் பிரணவம்" என்ற பெயர்களில் உள்ள இரண்டு பிரணவங்கள். அந்த இரண்டு பிரணவங்களையும் பரமசிவனும், பார்வதியும் கருணையுடன் நோக்க, அவை இரண்டும் இணைந்து, அந்தப் பிரணவங்களில் இருந்து பிரணவ சொரூபமான பிள்ளையார் யானை முகத்துடன் தோன்றினார்.
பிற கதைகள்
விநாயகர் பற்றி இன்னும் சில கதைகள் இருக்கின்றன. முதலில் நாம் பார்த்தது ஒரு புராணத்தில் உள்ளது என்றால் "பார்கவ புராணத்தில்" வேறு விதமாய்ச் சொல்கிறார்கள். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மாதிரியாக விநாயகர் பற்றிக் கூறப் படுகிறது. பார்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தின் படி விநாயகரே முழு முதல் கடவுள். இந்த உலகை மட்டுமல்லாது மும்மூர்த்திகளையும் படைத்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களைச் செய்யுமாறு கட்டளை இட்டவரும் விநாயகரே ஆவார். ஒவ்வொரு கல்பத்திலும் இவ்வுலகம் அழிந்து மறுமுறை சிருஷ்டி ஆரம்பிக்கும் முன் அண்ட சராசரங்களிலும் உள்ள எல்லா ஜீவன்களும் விநாயகருக்குள்ளேயே ஒடுங்கும் என்று பார்கவ புராணம் சொல்லுகிறது. பிரளயத்துக்குப் பின் விநாயகர் வக்ரதுண்ட விநாயகராக அவதரித்து மும்மூர்த்திகளையும் படைத்தார். பின் அவர்களைத் தம் தொழில்களைச் செய்யுமாறு கூறி மறைந்தார். இந்த பார்கவ புராணத்தின்படி ஒரு முறை என்ன நடந்தது என்றால்:
பிரம்மா ஒரு சமயம் கொட்டாவி விடவே, அதிலிருந்து ஓர் அரக்கன் தோன்றினான். அவன் பெயர் சிந்தூரானனன் ஆகும். ஏனெனில் அவன் சிந்தூர வண்ணத்தில் இருந்தான். அவனுடைய செக்கச் சிவந்த நிறத்தால் பயந்துபோன பிரம்மா அவன் கேட்காமலேயே அவனுக்குச் சில வரங்களைத் தந்தார். சும்மாவே அரக்கன். அவனுக்கு வரம் வேறே இலவசமாய் வந்தால் கேட்க வேணுமா? மூவுலகையும் ஆட்டிப் படைத்தான். யாவரும் செய்வதறியாமல் திகைக்க, மும்மூர்த்திகளும் கணபதியைப் பணிந்தனர். விநாயகர் உடனே தோன்றி, "கவலை வேண்டாம். நான் உமா தேவியாரின் திரு வயிற்றில் அவதரிப்பேன்." எனக் கூறி மறைந்தார். அது போலவே கருவுற்ற சமயம், உமாதேவியாரின் திருவயிற்றில் காற்று வடிவில் நுழைந்த சிந்தூரானன் குழந்தையின் தலையைத் திருகி எடுத்துக் கொண்டு போய் விட்டான். குழந்தை பிறந்தது தலையே இல்லாமல். அதுகண்டு அனைவரும் பதறவே, கலங்காதீர்கள் என்று சொன்ன சிவபெருமான் முன்பொரு சமயம் கஜமுகாசுரன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய தலையைத் தன் குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் பொருத்தினார். அன்று முதல் அந்தத் தெய்வக் குழந்தை "கஜானனன்" என்ற பெயர் பெற்றான்.
உமா தேவியாரிடம் வளர்ந்து வந்த கஜானனன் உரிய காலம் வந்ததும் சிந்தூரனனை அழிக்கப் புறப்பட்டார். சிந்தூரானனைத் தூக்கி எடுத்துத் தன் துதிக்கையால் ஓங்கி அடித்து அவன் ரத்தத்தைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார். செந்நிறமான விநாயகர் அன்று முதல் "சிந்தூர விநாயகர்" என்ற பெயரும் பெற்றார்.
விநாயகர் உருவ ரஹஸ்யம்
சரி, விநாயகர் பிறந்தாச்சு, அவர் எப்படி இருந்தார்னு பார்ப்போமா? யானை முகம், ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறு எழுத்துக்கள் உள்ளவர். விநாயகர் என்பது ஆறு எழுத்து இல்லையா? இவரை வழிபடுவோர் ஏழு பிறவிகளில் இருந்தும் விடுபட்டு, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று சம்"பத்து"க்களுடன் வாழ்வார்கள். இவருடைய திருமேனி மூன்று வகையில் ஆனது. இடைக்குக் கீழே பூத உடம்பு, இடைக்கு மேல் கழுத்து வரை தேவ உடம்பு, தலை மிருகத் தலை, ஒரு கொம்பு ஆண் தன்மை, கொம்பில்லாத பகுதி பெண் தன்மை, யானைத் தலை அஃறிணை, தெய்வ சரீரம் உயர்திணை. இந்த மாதிரித் தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அஃறிணையாய் எல்லாமுமாய் விளங்குபவர் விநாயகர். "தத்துவ மசி" என்ற ஆறு எழுத்தின் வடிவமே விநாயகர்.
பிரணவ வடிவினரான விநாயகரின் காது, அகன்ற யானைத் தலை, வளைந்த துதிக்கை ஆகியவை "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தின் வடிவத்தைக் குறிக்கும். இவரது திருவடிகள் ஞான சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும். இவருடைய பேழை வயிற்றில் உலகெல்லாம் அடங்கும். ஐந்து கரங்களும் ஐந்து தொழிலகளைச் செய்யும். எழுத்தாணி பிடித்த கரம் படைப்பையும், அங்குசம் கொண்ட கை அழித்தலையும், பாசம் வைத்திருக்கும் கை மறைத்தலையும், அமுத கலசம் ஏந்திய துதிக்கை அருளையும் குறிக்கும். மூன்று கண்களோ என்றால் முறையே சூரிய, சந்திர, அக்னியாகும். இவரின் உருவ அமைப்பில் எல்லா உருவங்களும் இருப்பதாய்க் கூறுகிறது "பார்கவ புராணம்" என்னும் விநாயக புராணம். இவருடைய நாடி பிரம்மா, முகம் வி்ஷ்ணு, கண் சிவன், இடப்பாகம் சக்தி, வலப்பாகம் சூரியன் என்று அமைந்திருப்பதாய்க் கூறுகிறார்கள்.
சிவ பெருமானுனம், உமை அம்மையும் விநாயகரை ஆசீர்வதித்தனர். "யாராக இருந்தாலும் ஒரு செயலைத் துவங்குமுன் முதலின் உன்னை வணங்கி விட்டு ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் பூர்த்தி ஆகும். அவ்வாறன்றி உன்னை வணங்காமல் ஆரம்பிக்கும் செயல் முற்றுப் பெறாது." என்று அருளினார்கள். தீச் செயல்கள் புரிபவர்கள் யாரும் விநாயகரை வணங்கி விட்டு ஆரம்பிக்க மாட்டார்கள். அப்படியே ஆரம்பித்தாலும் ஏதேனும் இடையூறு வரும். இந்த வரம் கடவுளருக்கும் பொருந்தும் என்று அருளியதால் சிவபெருமான் ஒருமுறை திரிபுர அசுரர்களை வெல்லப் புறப்பட்ட சமயம் விநாயகரை வழிபடாமல் கிளம்பிச் சென்றதால் அவர் தேரின் அச்சு முறிந்தது என்று புராணம் கூறுகிறது. இதே போல் அகந்தையால் பிரம்மா விநாயகரை வழிபடாமல் சிரு்ஷ்டி செய்ய அவர் படைத்த மனிதர்கல், மிருகங்கள், பறவைகள் எல்லாம் பேய், பிசாசுகளாய் மாறிவிட்டன. பின்னர் கணபதியை ஆராதனை செய்து வழிபட்டபின் சரியான கோணத்தில் சிருஷ்டி ஆரம்பித்தது.
இப்போ மாம்பழக் கதையாகச் செவிவழியாக நாம் கூறுவது உண்மையில் அமிர்தத்தால் ஆன மோதகம் என்றும், அதை உலகைச் சுற்றிப் புண்ணியம் சேர்த்துக் கொண்டு வருபவருக்குத் தருவதாயும் சிவன் சொல்ல, விநாயகர் தாய், தந்தையை விடச் சிறந்த உலகம் இல்லை எனச் சொல்லி அவர்களைப் பணிந்து நிற்க, மோதகம் அவருக்குக் கிடைத்தது. அன்றில் இருந்து மோதகம் விநாயகருக்குப் படைக்கப் படும் பொருள் ஆனது என்கிறது புராணம். ஆனானப் பட்ட விநாயகரே தாய், தந்தையருக்கு மரியாதை கொடுக்கும்போது நாம் எப்படி நடக்க வேண்டும்? குழந்தைகளே! தெரிந்து கொள்ளுங்கள். விநாயகர் என்ற பெருக்கு அர்த்தம் என்ன தெரிய்மா? "வி" என்றால் தன்னிகரற்ற என்று பொருள் படும். நாயகர் என்றால் தலைவர். தன்னிகரற்ற தலைவரான இந்த விநாயகருக்குக் குரு யார் தெரியுமா? சூரியன் தான் விநாயகரின் குரு. அது போல் இன்னொருவருக்கும் சூரியன் தான் குரு. அவர் யார் தெரியுமா? நம் வாயு புத்திரன், வானர வீரன், அஞ்சனை புத்திரன் அனுமந்தனுக்கும் சூரியன் தான் குரு. இருவரும் சூரியனிடம் தான் வேத சாஸ்திரங்களைப் பயின்றார்கள். அதுவும் எப்படி? நம்ம வகுப்பில் உட்கார்ந்து கேட்பதைப் போல் எல்லாம் இல்லை.

சூரியனோ தாங்க முடியாத சூடு உள்ளவன். அவனிடம் பாடம் கேட்பது என்றால் லேசா? நம்மால் முடியத் தான் முடியுமா? விநாயகரையும், அனுமனையும் போல் சக்தி வாய்ந்தவர்களால் தான் முடியும். தினம் தினம் உலகை வலம் வருகிறான் சூரியன். ஒரு நிமி்ஷம் கூடச் சும்மா இருப்பதில்லை. இதிலே அவன் செய்யும் வழிபாடு வேறு. அப்போ என்ன செய்யலாம்? சூரியன் தினமும் ஸ்ரீமன்நாராயணனை வழிபடும் நேரம் அவனை வலம் வந்து பாடம் கேட்டு சாஸ்திரங்களைப் பயின்றவர் விநாயகர். எவ்வளவு கஷ்டம் இது? இப்படி எல்லாம் க்ஷ்டப்பட்டுப் பாடம் பயின்றார் விநாயகர். அனுமன் எப்படிப் பாடம் பயின்றார் தெரியுமா? வாயுவேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் சூரியனின் ரத்ததிற்கு முன்னால் கை கூப்பி நின்று ரதம் எந்த வேகத்தில் போகிறதோ அதே வேகத்தில் பின்புறமாய் நடந்து பாடம் கேட்டானாம் அனுமன். இரண்டு பேரும் ஒரே குருவின் மாணாக்கர்கள் என்பதால் தான் நாம் எந்தக் காரியத்தையும் பிள்ளையாரில் தொடங்கி அனுமனில் முடிக்கிறோம். இன்றைய நாளில் "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது" என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு தப்பு தெரியுமா?
நாம் பூஜையோ பஜனையோ செய்யும் போது எப்போதும் பிள்ளையார் பூஜையில் ஆரம்பித்து, அனுமன் பூஜையில் முடிக்க வேண்டும். அது தான் முறை. இதைத் தான் யாரோ பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது எனச் சொல்லி வைக்க, சம்பிரதாயமான பூஜை முறைகளின் அர்த்தமே மாறி விட்டது. இப்போ நாம் செய்யும் தெய்வ வழிபாடு எல்லாமே ஆவணி மாதம் சுக்கிலச் சதுர்த்தியில் வரும் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிக்கும். அதுக்கு அப்புறம் ஸ்ரீராமநவமிக்குப் பின் வரும் அனுமத் ஜெயந்தியில் முடியும் நம்முடைய பூஜை புனஸ்காரங்கள். ஆனால் இன்றோ மாறிச் செய்து வருகிறோம். அனுமத் ஜெயந்திக்கு அப்புறம் சில மாதங்களுக்கு ஒன்றுமே இருக்காது. திரும்ப அடுத்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிக்க வேண்டும்.
Friday, May 22, 2009
தமிழகமும் தெய்வத் தத்துவமும்-தமிழும் தமிழகமும் ஐந்தின் தத்துவம்.(4)
தமிழகமும் தெய்வ தத்துவமும்.
சுவாமி சரவணானந்தா.
தமிழும் தமிழகமும்
ஐந்தின் தத்துவம்.
“தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவமாமே” எனத் திருமூலர் ஓதியுள்ளார். மேலும் அவர்
‘ஐந்தின் பெருமையே அகலிடமாவதும்
ஐந்தின் பெருமையே ஆலயமாவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெய்யப் பாலனு மாமே”
என்கின்றார்.
இத் தமிழ் என்ற சொல் த்+அ, ம்+இ, ழ் என வல்லின, மெல்லின இடையின மெய்யெழுத்து மூன்றும், மூலாங்கப் பிரணவமாகிய அகரம், அருட் பிரணவமாகிய இகரம் ஆகிய உயிரெழுத்து இரண்டும் சேர்ந்து ஐந்தெழுத்தாகி, கடவுள் தத்துவத்தை யுணர்த்துவதாம்.
நம் பிரபஞ்சத்தில் நிலமும் நீரும் கீழே தங்கியிருப்ப, தீயும் காற்றும் வானும் மேலோங்கியுள்ளன. இவ்வுண்மை ஐங்கோணத்தால் குறிக்கப்படது.
“நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
உவமையிரண்டு ஒன்று விண்” (ஒளவை குறள்)
என்றதனால் தெளியலாகும்.
மேலும் இத் தமிழகம் பாண்டிய மண்டலம், சோழமண்டலம், சேர மண்டலம், கொங்கு மண்டலம், தொண்ட மண்டலம் என ஐந்தாகப் பிரித்துக் கூறப்படும். பழம் பதியாகிய பாண்டிய மண்டலத்தில் அடங்குவது ஈழ மண்டலம். இவற்றில் நம் தமிழும் தமிழ்த் தெய்வமும் தழைத்து ஓங்கியுள்ளன.
உள்ளத்தறிவில் ஒளிவிடும் கடவுளை அகப்பொருள் இலக்கணத்தால், புனைந்து புனைந்து கூறி புறத்தேயும் இலக்கியக் கோயில்களையும் சிற்ப ஆலயங்களையும் ஆக்கியுள்ளனர் நம்மனோர். அன்பின் ஐந்திணையாக உரைக்கப்படுவது அகப்பொருள்.
ஐந்திணையாவன: குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ப. ஆன்ம விசாரத்தில் கடவுள் அணுவடிவே நமது ஆன்மாவாய் உள்ள உண்மை குறிஞ்சி நிலத்தின் கருப்பொருளாய்க் குறிப்பர். அவ்வக நிலையை மறந்து மாயா பிரபஞ்சத்தில் அல்லல் பட்டலைதல், தலைவன் பிரிவால் ஏற்படும் பாலை நில அனுபவமாம். பக்குவ காலம் வரும் வரை பிறந்து பிறந்து உழன்றுகொண்டிருத்தல் முல்லைப் பொருளாகவும், பந்தங்களால் ஏற்பட்ட தொல்லையால், உலகோடு ஊடி, உலகைத் துறந்து செல்லல் மருதநிலப் பொருளாயும், அப்புறத் துறவாலும் பயனில்லாது வருந்தி ஆண்டவன் அருளை அடைய இரங்குதல், அன்பு மயமாகுதல் நெய்தல் திணையின் கருவாகவும் கொண்டார்கள்.
இப்படியுள்ள அகப் பொருள் உண்மையால், கடவுளோடு இரண்டறக் கலந்த அனுபவத்தை வழங்கவே தமிழ்த் தெய்வ வழிபாடு தோன்றியது. உண்மையை உள்ளபடி அறிந்து கொள்ளாததினால், இலக்கண இலக்கியங்களும், தெய்வ ஆலயங்களும், கொள்கை கோட்பாடுகளும், விழா வைபவங்களும் பலவாகப் பெருகியும், குறிக்கோளை வழங்கத் தவறின.

தமிழகமும் தெய்வ தத்துவமும். (3)
மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப் பெற்றது.
(4.1.1981).
சுவாமி சரவணானந்தா.
கந்தழி நிலை கற்பனை நிலையாய் மாறியது.
ஆதித் தமிழகத்தில் தோன்றிய மக்கட் கூட்டம் பெருகிப் பல்கி நெடுந்தூரம் பிரிந்து சென்று வாழலானார்கள். இப்பொழுதுள்ள ஆஸ்திரேலியா முதல் மேற்கே தென் அமெரிக்காவரை நிலப்பகுதியாயிருந்ததால், அது வரை சென்று வாழ்ந்து வந்தார்கள். பின்னர் பழந் தமிழகமும் அதைச் சேர்ந்த பல பகுதிகளும் மறைந்து விட்டதாலும், வேறு பல புதிய நிலப்பகுதிகள் தோன்றியதாலும் அங்கங்கு தங்கி வந்த அவர்களின் பிற் சந்ததியார்க்கு, சீதோஷ்ணத்தாலும், மற்ற சூழ்நிலையாலும் தேக கருவிகரண வேறுபாடும், பழக்க வழக்க வேறுபாடும் ஏற்பட்டன. நெற்றிக்கண் தோற்றமே மறைந்து விட்டது. அதனால் அக உண்மை உள்ளவாறு காண முடியாது, சிரநடு ஆன்ம பீடத்தை மன ஒருமையிற் கண்டு பலப்பலவாக தெய்வ நிலையைக் கற்பனை செய்யலாயினர். அந்தக் கற்பனையில் கண்டது, முதலாவது லிங்க வடிவம்.இது நம் ஆன்ம அணு விளங்கும் தலை நடு இடத் தோற்றமாம். இந்த லிங்க நிலை அகத்தில் கண்டு புறத்தில் ஞாயிறு வழிபாடு செய்யப்பட்டது. இதனால் ஒரு காலம் லிங்க வழிபாடும், ஞாயிறு வழிபாடும் உலகெல்லாம் பரவியிருந்தன, அவற்றின் சின்னம் இன்றும் உலகில் பல்வேறிடத்தில் காணப்படுகின்றன.
பின்னர், பொறிபுலன் விரிவால் புற வாழ்வு பெருகப்பெருக, புற வழிபாடு, கலை நோக்கோடு பற்பல சின்னங்களாகவும், சித்திர, சிற்ப விக்கிரகங்களாகவும், தத்துவ கற்பனா ஆலயங்களாகவும் வளர்ந்தன.
இப்பொழுதுள்ள நம் தமிழகத்தில் வந்து தங்கியிருந்த பழந்தமிழரின் கூட்டம் மலைகளிலிருந்து அக ஜோதியை வேலாகக் கொண்டு வேலன் வழிபாடாக முருகன் வழிபாடாகச் செய்து வந்தனர். லிங்க வழிபாடு சிவ வழிபாடாய்விரிந்திட, தமிழ் மொழியொடு வளர்க்கப்பட்டது தலை, இடை, கடையாய தமிழ்ச் சங்கங்களில், இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிய மேல் நாட்டவர்களின் கப்பல் வாணிப உறவாலும், வட நாட்டவர்களின் தலையீட்டாலும் நம் தமிழின் சிறப்பும் தத்துவமும் எங்கும் பரவின. திரைகடல் வழியாய் வந்து புகுந்தவர்கள் தமிழர்களுடன் கலந்து ஒன்று பட்டு தமிழையும், கடவுள் தத்துவத்தையும் வளர்க்கலாயினர். தமிழ்ப் பெருஞ் சித்தர்களின் சேர்ப்பினால், தென்னாடு முற்றும் தமிழ் நாடாக விளங்கியது. “தென்னாடுடைய சிவனே பொற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று துதிக்கலாயினர். இச் சமயம் வடவர்கள் வந்து நுழைந்து, தமிழரொடு கலவாது, தம் மொழி, கருத்து, வாழ்க்கை முறை முதலியவற்றை தமிழினத்தில் புகுத்த பலவாறாக முயன்றனர். அதன் பயனாக தமிழகத்தின் வட எல்லையிலும், மேற்கெல்லையிலும் வாழ்ந்தவர்களின் மொழி, பழக்க வழக்கம் முதலியன மாற்றமடைந்தன. இப்படியாக வடக்கில் தெலுங்கும், மேற்கில், மலையாளம், கன்னடம், துளுவமும் தோன்றின. எஞ்சிய தமிழகப் பகுதியில் வடமொழி எட்டி முட்டிப் பார்த்தும், மூர்த்தி, தல, தீர்த்தங்களோடும் பிறப் பிறப்புச் சடங்கோடும், பூஜை, அருச்சனை கிரியைகளோடும் நின்று விட்டன. இப்பொழுது தமிழகம் மறுமலர்ச்சி பெற்று ஓங்கத் தொடங்கியுள்ளதால் தடையானவை யாவும் ஒழிந்து தமிழனது உண்மைக் கடவுள் வழிபாடு எங்கும் விளங்கும். இனி திரை கடல் வழி வந்து தமிழர் ஆனவர்கள், யாவரும், திராவிடர்கள் என வழங்கப்படுகின்றனர். ஆதலின் இத் தென்னாட்டினர் திராவிட நாட்டினரே என்றும், இந் நாடு திராவிட நாடு என்றும் கொள்ள வேண்டும். நம் தென்னாட்டுக் கோயில்கள் யாவும் திராவிட சிற்ப தத்துவத்தைக் கொண்டுள்ளனவாம்.
ஜோதி ஞாயிற்றின் தத்துவ சின்னங்கள் சிவலிங்கம் முதலாக வந்தன. அக அனுபவத்தில் நிற்கும்போது ஆத்மலிங்க நிலையை சூழ்ந்து தோற்றிய ஜோதி நிலையே அதன் பீடமாக ஆவிடையாகவுள்ளது. அந்த ஆவிடையே, ஆ = பசு, விடை = நந்தி. இதுவே சிவன் ஏறும் இடபமாகக் கூறப்படுகிறது, ஆவினிடத்து பெறும் பஞ்சகவ்யம் (பால், தயிர், நெய், கோசலம், கோமயம்) சிவபெருமானின் அபிஷேகப் பொருளாம். இவை ஐந்தும் நன் ஆன்மாவைச் சூழ்ந்த ஐம்பூத தேகத்தை விளக்கப் படுத்துபவை. ஆதலில், இவ் ஆவிடை சிவனது அருட் சக்தியாகவும், அவர் தம் வடிவு, பஞ்ச லிங்கமாகவும் ஐந்தெழுத்தே பெயராகவும், ஆக்கலாதி ஐந்தொழிலே செயலாகவும் கூறப்படும். ஐந்தொழில் நடனம் விளக்க நடராஜ வடிவத்தை ஆக்கினர். இது போல சில சில கருத்தை விளக்கவே, விநாயகர், சுப்பிரமணியர், திருமாலின் பல்வேறு வடிவங்கள், பல் வேறு சக்திகளின் உருவங்கள் ஆக்கி, சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட யோக ஞான தபோ சக்தியால், இயற்கைச் சூழ்நிலை, கால தேசத்திற்கும் பொருந்த வழிபாடு செய்யவும், அதனால் பல பல நன்மைகள் பெறவும் ஏற்படுத்தியுள்ளனர். மனித வர்க்கம் விழிப்புற்ற இக்காலம் மேற்படி தெய்வத்துவ உண்மையை உள்ளவாறு அறிந்து அன்பும், அறிவும் ஓங்கி, அருள் வண்ண வழிபாடு எங்குஞ் செய்து பெரு நன்மை அடைய வேண்டியதாகும்.
அகஜோதி லிங்கத்தையும் அதன் பீடமாகிய ஆவிடையையும் புறவானில் திகழும் ஜோதி ஞாயிறும் அதனைச் சூழ்ந்து கறங்கும் கோள்களின் விருத்தமாகவும் கண்டனர். கடவுள் ஒளி ஐந்தின் தத்துவமாகப் பொருந்துயுள்ளதால் நம் ஐம்பூத தேகமும் இதன் கை, கால்களில் ஐந்தைந்து விரல்கள் இருப்பதும், மலர்களில் பல சாதாரணமாக ஐந்திகழ் கொண்டு மலர்வதும் அகவுண்மையைத் தெரிவிப்பனவே. நடராஜ வடிவில் ஆக்கலாதி ஐந் தொழிலும், நான்கு கரங்களாலும் தூக்கிய திருவடி ஒன்றாலும் சுட்டப்படுகின்றன. இதுபோல் விநாயக வடிவில் ஐங்கரமும், விஷ்ணுவடிவில் பஞ்சாயுதமும் விளங்குவன.
வான ஜோதியைச் சூழ்ந்து ஐம்பூதக் கோட்கள், குஜாதி (செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய) பஞ்ச கிரகங்கள் சுழன்று கொண்டுள்ளன. இத் தத்துவத்தைக் கொண்டு ஞாயிறு சின்னத்தை சுவஸ்திகம் என்று உருவாக்கினர். இதன் நாற்கரமும் சுழற்சி வேகத்தைக் குறிப்பன. இச் சின்னத்தைக் கொண்டோர் பஞ்ச சீலத்தை மேற்கொண்டவராயினர். இச் சுவஸ்திகத்தின் சுழற்சி நிலையைக் கொள்ளாது நிற்கும் நிலையைச் சிலுவையுருவாகக் கொண்டவர்கள், அதில் அன்புருவத் தேக ஒளியை ஐந்தாணிகளால் அறையப் பட்ட ஏசு கிருஸ்துவாகக் கொண்டார்கள். நமது ஞாயிறு போன்றனவே ஒவ்வொரு நட்சத்திரமும், ஆதலின் இவற்றைக் குறிக்க ஐந்திதழ் கோணவடிவம் கொடுக்கப் படுகின்றன. எனவே, ஆன்ம பீடமும் ஒளியும், பிறையும் இதன் மேல் ஒரு ஐந்திதழ் நட்சத்திரமும் மகமதியச் சின்னமாயின. பிரம்மம்என்றால் ஜோதியே. இது ஆன்ம அக ஜோதியே. உலக வாழ்க்கைக்குப் பிரபஞ்ச விளக்கம் தருவதற்கு பஞ்ச பிரம்ம வடிவாக, மனு, மயன், துவஷ்டா, சிற்பி, விஸ்வஞ்ஞன் என்ற பெயரோடு ஐந்தொழிலாளர் குறிக்கப்படுகின்றனர்.

தமிழகமும் தெய்வத் தத்துவமும் - கந்தழி வழிபாடு. (2)
சுவாமி சரவணானந்தா
தெய்வ தத்துவத்தை அடிநிலையாகக் கொண்டு வாழ்க்கை முறை வகுத்து வழங்கப்பட்டது, ஆதித் தமிழகத்தில். அத் தமிழகம் இப்போது காண்டற்கில்லை. அது நம் நாட்டின் தென்பெருங் கடலில், முன்பு, பல்லாயிரம் மைல் தூரம் பரவிக் கிடந்தது, நீரில் மூழ்கி மறைந்து விட்டது. அப்பகுதிதான். உயிர்களின் தோற்றத்திற்கு முதலிடமாகவும், ஆதி மனித இனத்திற்கு பிறப்பிடமாகவும் கூறப்படும். அவ் ஆதிமக்கள், கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த பழங்குடிகளாக மொழியப்படுகின்றனர்.
அவர்களுக்கு ஒரு அதிசயமான உறுப்பு நெற்றி நடுவில் பாதம் பருப்பளவு புடைத்து நின்றது. அதில் தோன்றிய உணர்ச்சி கொண்டு அறிதற்கும், காண்டற்கும் அரிய காட்சிகளைக் கண்டு வெளியிட்டனர். அதுவே ஞானக் கண்ணாக வழங்கப்பட்டது. இந்தக் கண்ணால் தான் ஆதிமனிதன் - கடவுள் ஞானத்தை, தெய்வ உண்மையை உள்ளவாறு கண்டறிந்தான்.
கந்தழி வழிபாடு.
ஆதித் தமிழன். கடவுள் ஞானத்தை அறிய தன் நெற்றிக் கண்ணால், புற நாட்டத்தை விட்டு, அக நோக்கினான். சிரநடு ஆன்ம அணுவில் ஒன்றி நின்றான். உலகை மறந்து உடலை மறந்து உயிரை மறந்து நிலைத்து நின்றபோது, அணுத்துவமாகயிருந்த ஆன்மா, விளக்கெனத் தோன்றி, சுடரெனப் பெருகி, அகண்ட ஜோதியாய் நிறைந்தது கண்டான். இவ், அகண்ட ஜோதி நிலையே கடவுள் நிலயாகக் கொண்டான். இந்த அடி தோற்றா அழலொளியே கந்தழியாகக் கூறிக் கொண்டான். அகத்தே ஆன்ம அணுவில் இக் கந்தழிக் கடவுட் ஜோதி ஒடுங்கி நிற்பது போல், புறத்தே ஜோதி வெளியினின்று உருவாகியுள்ளது ஞாயிறு என்னும் சூரியன். இந்த ஞாயிற்றைக் கொடிநிலை என்றும், இதன் ஆற்றல் கொண்டு, ஜீவதேக தோற்ற ஒடுக்க காரணமாய் விளங்கும் திங்களை, வள்ளி, என்றும் கொண்டு வணங்கினான். எனவே, இந்தக் கந்தழி வழிபாட்டில்,. கொடிநிலை என்னும் ஞாயிறு வணக்கத்தால், அண்ட தத்துவ விளக்கமும். வள்ளி என்னும் திங்கள் வணக்கத்தால் பிண்ட தத்துவ விளக்கமும் பெற்று, நிரம்பிய வாழ்வு நடத்தினான் தமிழன்.
தொடரும்...

தமிழகமும் தெய்வ தத்துவமும் - முன்னுரை (1)
மதுரையில் நடைபெற்ற 5-வது உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப் பெற்றது.
தயா நேயன் சரவணானந்தா
சத்திய ஞானக் கோட்டம், திண்டுக்கல்.
வெளியிடுவோர்.
தயவு ஆலய அன்பர்கள், சின்மயபுரம் (சின்னாளப்பட்டி).
நாள் 4.1.1981.
தயவு
முன்னுரை
காண்பரிய மெய்ப்பொருளைக் காணத் தமிழ்மொழியே
மாண்புடையார் வாய்மலர்ந்த வாக்கு.
கற்பனையின் வெற்றி கடவுள் தயவுகாண்
தற்போதம் நீக்கும் தமிழ். .. .. .. (தயவுக் குறள்)
எல்லாம் வல்ல ஒன்றாகிய நித்திய பரம்பொருள்தானே, ஐஞ்சக்திச் செயலால் இந்த மாபிரபஞ்சத்து அனைத்துமாய் விளங்குகின்றார். இந்தப் பேருண்மையை மனித வடிவில் வெளிப்படுத்தி, மக்கள் சமுதாயத்தை நித்தியானந்த வாழ்வில் தழைக்கச் செய்ய வேண்டியே, திருவருளின் பெருஞ்செயலால் நம் தமிழ் அரும்பி மலர்ந்து விரிந்து அருள் மணம் பரப்பிக் கொண்டுள்ளதாம்.
உலகெலாம் அருள் தமிழ்மணம் நுகர்ந்து ஆனந்தமுற இந்த ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு (மதுரையில் 1981ஆம் ஆண்டில் நடைபெற்றது) திருவுளப்படி இத் தருணம் நேர்ந்துள்ளது. இங்கு வெளியிடப்பெறுகின்ற. இத் “தமிழகமும் தெய்வ தத்துவமும்” என்ற கட்டுரை மிகப் பொருத்தமாக விளங்கக் காண்கின்றோம். பதினைந்து எழுத்துக்கள் கொண்ட இத் தலைப்புடைச் சிற்றுரை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன். 1956-ஆல் எழுதப் பெற்றது. இதுவரை இது உலகிடை வெளிவரவில்லை. ஐயைந்து ஆண்டுகள் கழித்து இது சமயம் வெளியுறுகின்றது. ஏன் ? திருவருட் சம்மதம் போலும்.
தமிழ்: ஈர் உயிரும் மும்மெய்யும் ஆக ஐந்து எழுத்து கொண்டு, இறை இயலை வெளிப்படுத்த, இந்த ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் ஒளி பெறுகின்றது. ஆண்டவர் அருட்சோதி வடிவம், இருபத்தைந்து (தமிழ் எண்ணில் “உரு”) ஆகி, இருபத்தைந்து அசை (Syllables) கொண்ட மகாமந்திர உருவாய் வள்ளலாரால் வெளியிடப் பெற்றுள்ளது .. ? இவ்வுண்மை கண்டு வாழ்வில் எல்லோரும் நற்பயன் அடைய, அருட்பெருஞ்சோதிக் கடவுளே, நம்மில் தயவு வண்ணமாய், அறிவு, உயிர், உடலில் நிரம்பி உயர் இன்ப வாழ்வு பெற உதவுகின்றார்.
உலகில் இத் தயவுப் பெருநெறி மூலம் பெரு நன்மை விளைய இருக்கின்றது. இதற்காகவே இந்த மதுரை மாவட்டத்து, காந்திக் கிராமம் அடுத்து சின்மயபுரத்தில் (சின்னாளப்பட்டியில்) ஒரு தயவு ஆலயம் தோற்றுவிக்கப் பட்டு, நன்முறையில் வழிபாடு ஆற்றப் பெற்று வருகின்றது. இப் பகுதி பிற் சேர்க்கையாகும். இவை யாவும் இச் சிறு நூலில் கண்டு யாவரும் இன்பெய்துவார்களாக.

Sunday, May 17, 2009
வெற்றி பெற வேண்டுமா? - சுவாமி விவேகானந்தர்

வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள்.
அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.
அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
webdunia photo WD
வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா...
அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.
அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.
பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.
சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.
சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.
உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.
எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.
பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
Sunday, February 22, 2009
உலகியலும் அருளியலும்-III
ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் எனில் அது மக்கள் வாழ்க்கை நலத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும். வள்ளலார் மக்கள் வாழ்க்கை நலத்துடன் மட்டும் இல்லாமல் எல்லா உயிர்களிடத்தும் அன்பு பூண்டார். எல்லா உயிர்களிடத்தும் இறையை கண்டார். தயவு என்ற தவம் வள்ளலாரை பெரிய நிலைக்கு ஏற்றிவிட்டது. ஆனால் இன்றோ நாகரீகம் மற்றும் கல்வி வளர்ச்சியில் பெரிதும் வளர்ச்சி அடைந்தாலும் மக்கள் புற பூஜை களில் தான் அதிகம் திருப்தி அடைகின்றனர்.
தன்னுடைய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய மறுக்கும் முதலாளி வர்க்கத்தினர் பிரபல கோயில்களில் கோடி கணக்கில் தங்கம் மற்றும் வைரத்தில் வித விதமான பொருட்களை வாங்கி தருவதும் நடைமுறையில் யாவரும் அறிந்ததே.
மற்றும் சிலபேர் போலி சாமியார்களிடம் ஏமாறுகின்றனர். தெருவிற்கு தெரு இப்பொழுது உள்ள தியான மையங்களையும் கூறலாம்.அன்றே காக புஜண்டர் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்.
பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
பணம்பறிக்க உபதேசம் பகர்வோ என்பான்
பிரமநிலை காட்டா மற்றான்
காசப் பொய்களையும் அன்றோ சொல்வான்
நேரப்பா சீடனுக்குப் பாவமாச்சு
நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோடமாச்சு
வீரப்பா அடக்குகின்ற இடத்தைப் பாரான்
விதிபோல முடிந்ததென்று விளம்புவானே....
சித்தர் ஞானக்கோவை : காகசுண்டர் பாடல் :35.
மேலும் சிலர் தயவு மற்றும் கருணையைப்பற்றி மிக அதிக அளவில் விளக்கம் அளித்துக் கொண்டிருப்பார்கள், ஆனால் நிஜ வாழ்வில் யாருக்கும் உதவி செய்ய முன் வரமாட்டார்கள்.
ஜாதி, மதத்தைப் பற்றி மேடையில் வாதிடுவோர், நிஜ வாழ்க்கையில் தங்களுடைய மகன்/மகளுக்கு அதே இனத்தில் வரன்களை பார்ப்பவர்களாக இருக்கின்றனர்.
ஜீவகாருண்யத்தை நினைப்பவர்கள் வேறு-பிற இனத்தவர்கள் சாப்பிட அழைத்தால் செல்வதில்லை.
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு பிற மதங்களை இழி வாக பேசுவதும் , அடுத்தவர்களின் மனதை புண் படுத்துவதும் எவ்வாறு சன்மார்க்கத்திற்கும் பொருந்தும்.
எல்லாருடைய மனமும் இன்புற்றிருக்க வேண்டும் அல்லவா! அதுவும் செய்வதில்லை.
ஒரு சில தியான மையத்தில் இருக்கும் மூல விளக்கங்களைப் பார்க்கும் போது வள்ளலாருடைய கருத்துகள் தான் வியாபித்துருக்கின்றன. ஆனால் அவர்கள் அதை வெளிப்படையாக யாருக்கும் கூறுவதில்லை. (இங்கு மற்றவர்களை விமர்சனம் செய்வதற்காகவோ, அவதூறு செய்வதற்காகவோ எழுத வில்லை) பலரும் வியாபர ரீதியில் வள்ளாருடைய கருத்துகளை வேறு விதமாக மாற்றி தங்களுக்கு புகழை தேடுகின்றனர்.
அக பூஜையும் ஜீவகாருண்யமும் தான் இறை நிலையை உணர்த்தும் என்பதை பல சித்தர்கள் கூறியுள்ளனர்.
நட்ட க்கல் பேசுமோ நாதன் உள்ளிருக்கை யில்- ………
மற்றும்
"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே."
பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே! -சிவ வாக்கியர்
தவளையைப்போல வேதமெல்லாம் சாற்றுகின்றீர்
வந்தவழி அறியார்க்கு மந்தரமேது........ - ஞானவெட்டியான் 1500
உங்கள் தெய்வ உண்டெனவும் வேறு செய்து
அங்கங்கள் வேறுளதா யாகமங்களுற் பவித்தார்
பங்கமதாய் வேறு செய்யும் பாதகரே அங்குமிங்கும்
எங்கெங்குமாய் நிறைந்த ஈசனென்றறிகிலீரே "
- ஞானவெட்டியான் பாடல் 616
ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள்தாம் பூரணமே "
- பட்டினத்தார் பாடல் :30
நஞ்சுண்ண வேண்டாமே –அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்ச மலையாதே அகப்பேய்
நீ ஒன்றும் சொல்லாதே -------
-அகப்பேய் சித்தர்
தாம்திமித் திமி தந்தகோனாரே
தீந் திமித்திமி திந்த கோனாரே
ஆனந்த க்கோனாரே- அருள்
ஆனந்தக்கோனாரே!
ஆயிரதெட்டு வட்டமுங்கண்டேன்
அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்
மாயிறு ஞாலத்து நூற்றெட்டும் பாத்தேன்
மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் (தாந்)
மெய்வாய்கண் மூக்குசெவியெனும் ஐந்தாட்டை
வீறுஞ் சுவையொளி ஊரோசையாம் காட்டை
எய்யாமல் ஒட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே
மேலும்,
மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவகோனே-முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவகோனே
சினமெனும் பாம்பிறந்தால் தாண்டவகோனே-யாவும்
சித்தி யென்றே நினையேடா தாண்டவகோனே............ - இடைக்காடர்
ஆசை என்னும் பசுவையும் , சினம் என்னும் விஷ பாம்பையும் அடக்கினால் இறை வனை உணர முடியும், இவர் பாடல்கள் பெரும்பாலும் தாண்டவகோனே என்றும் கோனாரே என்றும் முடிகிறது.
திருமூலர்,
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே
-திருமந்திரம்
கொல்லா விரதம் குளிர்பசி நீக்குதல்
நல்ல விரதமடி-குதம்பாய்
நல்ல விரதமடி................
என்று ஜீவகாருண்யம் மற்றும் உயிர்ப்பலியைத் தடுக்கும் இவரின் பாடல்கள் எல்லாமே, குதம்பாய் என்று தன்னை அழைத்துக் கொண்டே முடிகிறது.
இதுபோல் நிறைய பாடல்கள் உள்ளன. விரிவஞ்சி ஒரு சில பாடல்கள் மட்டுமே இங்கு தரப்படுகின்றன.
மேலே குறிப்பிட்ட பாடல்கள் மற்றும் பல்வேறு சித்தர் பாடல்களில் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கங்கள் பற்றி மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் திருவருட்பாவில் வள்ளலார் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
இதுவும் ஆண்டவன் திருவிளையாடல் போலும் இல்லையெனில் வள்ளலாருடைய பொக்கிஷம் நமக்கு கிடைத்திருக்காது அல்லவா! வள்ளலாரும் யார் என்றும் நமக்கு தெரிந்திருக்காது.
ஒரு கடை நிலை பாமர மக்களும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் மிக தெளிவாக மிக நுட்பமாக வள்ளலார் திருவருட்பா-பாடத்தை வடிவமைத்துள்ளார்கள். எனவே இதில் ஒப்பீடு என்பது தேவையில்லை. அனைவரும் சமுதாயத்தை செம்மைப்படுத்த ஆண்டவனாலே உருவாக்கப்பட்டவர்கள். அல்லது நெற்றிக்கண் திறக்கப்பட்டவர்கள். நாமும் ஆண்டவனால் ஆட்கொள்ளபட வேண்டுமெனில் - நம்முள் இருக்கும் இறைவனை காண வேண்டுமெனில் வள்ளலார் கூறிய அனைத்து ஒழுக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கங்கள் இறையைப்பற்றி தெரிந்துக்கொள்ள உறுதுணை புரியும்.
இதெல்லாம் கடைப்பிடிக்காமல் நம்முள் கடவுள் உள்ளார் என்று சொல்வது வெளிப்படையான வார்த்தைக்கு மட்டுமே உதவுமே தவிர கடவுளை நம்மால் உணர முடியாது.
சாதனம், சாதனை, மற்றும் சாக்கியம் திருவருட்பாவில் கூறப்பட்டுள்ளது. சாதனம்: எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம்.
சாதனை: நான்கு வித ஒழுக்கங்களை கடைப்பிடித்தல் . இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கம்
சாக்கியம்: புருஷார்த்தகங்களான ஏம சித்தி , சாகாக்கல்வி, தத்துவநிக்கிரம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்.
சாதனமும், சாதனையும் உலகியியலில் ஜீவகாருண்யம் மூலமும் பெரு நெறி ஒழுக்கங்கள் மூலமும் நிறைவேற்றினால் சாக்கியம் கூடும் - இறை நிலை வெளிப்படும் . எனவே எல்லாம் வல்ல ஸ்ரீ ராமலிங்க அடிகளை ஞான குருவாக ஏற்றுக்கொண்டு அருளியியல் உண்மையை உணருவோமாக.
முற்றிற்று.
நன்றி :
K.KUMARESAN
2/134, Middle Street
58,Alathur Post, Neravy via
Karaikal
Karaikal, Puducherry, India - 609604
Phone.9952327314

உலகியலும் அருளியலும்-II
ஜீவகாருண்யத்தை கடைபிடித்து மக்கள் உயர்நிலையை அடைய முடியும் என்பதை வள்ளலார் மட்டுமேஎளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தெரிவித்திருக்கிறார். மனித உடலை பிரணவ தேக மாக மாற்றி செய்து நிருபித்தார். பிரவண தேகம் பின் ஞான தேக மாகியது. தியானத்தையும் , யோக முறையும் ஒருவர் கற்றுக்கொண்டு ஒரு குகையிலோ அல்லது தனிமையாகவோ வாழ்ந்தால் அதனால் சமுதாயத்திற்கு ஒரு பயனும் இல்லை என்பதை வள்ளலார் தீவிர மாக கடைப்பிடித்தார்.
கீதையிலே பரமாத்மா கிருஷ்ணன் சொல்கிறார் :(இந்து தர்மத்தின் முக்கிய நூலாக போற்றப்படுவது பகவத்கீதை. இந்த கீதையை உபதேசித்தவனும் கேட்டவனும் சந்நியாசிகள் அல்லர். குடும்பவாழ்விலிருந்தோர்,
மற்றும் மன்னாண்ட மன்னர்கள். வரலாற்று அறிஞர்கள் 5000 வருடத்திற்கு முன் மகா பாரதம் நடந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இங்கு மதத்தை ப் பற்றி குறிப்பிடுவதை பொறுத்தருளவும்.)
"அர்ச்சுனா, மூன்று உலகங்களிலும் இனி மிஞ்சிற்கும் செயல்,செய்கை ஒன்றும் எனக்குக் கிடையாது. அடையத்தக்கது, அடையப்படாது என ஒரு பேறுமில்லை.எனினும் நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் தொழில் செய்யாது வாளாவிருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும், என் வழியையே பின் பற்றும்.
அதனால் இந்த உலகம் அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாகாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஓயாமல் தொழில் செய்பவன் சிறந்த கர்மயோகி. அவன் ஜீவாத்மாவை இடைவிடாது துதிக்கிறான். சம்சாரத்தை நேசிக்கிறான். குடும்பத்தை காக்கிறான். மனைவி, மக்களை காக்கிறான்.
சுற்றத்தாரை, அயலவரை போற்றுகிறான். எல்லாவற்றையும் துறந்து சென்றால் அவன் முத்திக்கு தகுதியுடைவனாக மாட்டான். எல்லாவற்றையும் துறந்து செல்கிறவன் கடவுளுடைய இயற்கை விதிகளை துறந்து செல்பவனாகிறான்...
இவ்வாறு நாம் பார்க்கும் போது இல்வாழ்க்கையில் முற்று முழுதாக
விடின் இறைவனை அடையலாமா? என்ற கேள்வி எழும். வாழ்வில் பற்றை விலக்க
வேண்டுமே தவிர ஒழிக்க வேண்டியதில்லை.
'படகு தண்ணீரில் இருக்கலாம். தண்ணீர் படகினுள் இருக்ககூடாது'என்று அருமையாக வழிகாட்டுகிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.
இல்லறத்துறவை காட்டிலும், உள்ளத்துறவு சதகோடி மடங்கு மேலானதாகும்.
இல்லாள் அகத்திருக்க இல்லாததது ஒன்றில்லை. கற்புடைய மனைவியை
காதலுற்று, அறம்பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையாகும்.
கடவுள் அனைத்து உயிர்களிலும் இருக்கிறார். இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு உற்றார்,உறவினர், உலகத்தாருக்கும் உபசாரம் செய்து கொண்டு அறவழியில் இன்பங்களை அனுபவித்து ஆண்டவனை தொழுது அதனால் மனிதத் துன்பங்களில் இருந்து விடுபட்டு மேன்மையான வாழ்க்கை வாழ்வது மேலான வழியாகும்.
இதனை வள்ளுவப் பெருந்தகை அன்புடைமை, வாழ்க்கை துணைநலம், புதல்வரைப் பெறுதல், விருந்தோம்பல், மற்றும் இனியவை கூறல் என்ற அதிகாரங்களில் மிக சிறப்பாக கூறியுள்ளார்.
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போ ஓய்ப் பெறுவது எவன் "
இல்லறத்தினை ஒழுங்காக நடத்துபவன் துறவறத்திற்கு போய் பயன் ஒன்றுமில்லை.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை"
இல்லறத்தை சரியாக நடத்துகிறவன் புலன்களை அடக்கி முயல்கிற எல்லாரினும் தலை சிறந்தவன்.
"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து"
சரியான முறையில் இல்லறம் நடத்துகிறவன் , துறவறத்தானை விட பொறுப்புகளும் சகிப்புகளும் உள்ளவன். இல்லறத்தான் பிறருக்குக்குற்ற துன்பங்களையும் தனக்கு வந்தது போல் எண்ணி அதை நோக்கும் பொறுப்புடையவனாகிறான்.
"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்ப தில்லாயின் நன்று"
மனிதனுக்கு அறம் என்று நூல்களால் தீர்மானிக்கப்பட்டதே இல்லறம்
ஆகவே, இல்லறத்தை சரியாக நடத்துகிறவன் வானுறையும் தெய்வதுள்
வைக்கப்படுவான்.
எதனைப் பற்றியும் ஆராய்ச்சி இல்லாமலே கர்ம ஒழுக்கங்களினால்
இல்லறத்தில் நின்று வீடுபேறு அடைய முடியும். இல்லறம் என்பது பொறுப்புகளும்,சகிப்புத் தன்மையும் உடையது. இல்லறத்தை நாம் கர்மயோகமாக கருதினால் அதுவே சமுதாயத்துக்கு பயனுள்ளது.
பெரியபுராண வரலாறு மூலம் "அடியார்கள் இல்லறத்தை நடத்தி இறைவனை அடைந்ததைக் காணலாம். இதை கதையாக கொண்டாலும் இதனுடைய கருத்து இல்லறத்தை வலியுறுத்துவதே யாகும்.
"இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணக் கடை"
என்பதற்கேற்ப இளையான் குடிமாற நாயனாரும், காரைக்காலம்மையாரும் இல்லறத்தில் நின்று கொண்டே ஆன்மீகத்தில் உயர்ந்து பேரின்ப பெருவாழ்வு பெற்றதை அறியலாம்.
இல்லற வாழ்விலே தர்மத் தளத்தில் நின்று செய்யும் கடமைகள்தான் ஆன்மீக உணர்விற்கும் ஆன்மீக தேடலுக்கும் வழிவகுக்கும் என்பதை அடுத்த பகுதியில் பல்வேறு சன்மார்க்கிகள் கூறும் கருத்துகளுடன் வள்ளலார் கூறுகிற முடிவுரையையும் காண்போம்.

உலகியலும்- அருளியலும்
உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது இறைவனுக்கு ஆற்றும் தொண்டிற்கு சமமாகும். உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும். அருள் நெறி என்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமய வாழ்வு வாழ்கிறோம் எனில் அது சமுதாய வாழ்வுடன் இணைந்ததாக அமையவேண்டும். இந்த வகையில் இல்லறத்தில் இருந்து கொண்டே இறைவனை அடையலாம் என்பதை வள்ளுவரும் வள்ளலாரும்கூறுகின்றனர்.
இல்வாழ்கையைநடத்துபவர்களுக்கும், ஆன்மீகவாழ்க்கையை மேற்கொள்பவர்களுக்கும் முறையே உலகியல் மற்றும் அருளியல் என்று திருவருட்பாவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால் சில பேர் மேம்போக்காக சில பாடல்களையும் , பேருபதேசத்தையும் படித்து விட்டு வள்ளலார் எல்லாவற்றையும் விட்ட விட சொல்லுகிறார் என்றும் மதத்தை வெறுக்க சொன்னார் என்றும் பல வழிகளில் மக்களின் மனதை புண்படுத்துகின்றனர்.திசை திருப்புகின்றனர்.
இல்லறத்தை நல்லறமாக மாற்றி வாழ வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை- என்கிறார் வள்ளுவர்.
இல்வாழ்க்கையின் பண்பு அன்புடமை. பயன் அறனுடையமையாகும். மனைவி சுற்றம் என்று விரியும் அன்பிலே வாழும் ஒருவன் உலகனைத்தின் பாலும் விரிந்த அன்பு பூணும் மனப்பக்குவம் அடைகிறான். மனைவியும் அதே அன்புசால் மனப்பக்குவம் அடைகிறாள்.
உலகனைத்தையும் அன்புக்கண்களிலே காணும் இந்த விரிந்த மனோபக்குவம் அடைய இல்லறம் வழிகாட்டுகிறது. அன்பும், அறனும் இல்வாழ்க்கையினை சிறப்பாக்குகிறது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேராதார் -வள்ளுவர்
மற்றுமொரு இடத்தில் இல்லறத்தை வலியுறுத்தி கீழ் காணும் தேவர் குறளை எடுத்து மேற்கோளிடுகிறார்.
தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
இல்லறம் நடத்தியே இறைவனை அடைந்தாகச் சொல்லப்படும் நாயன்மார்களுடைய கதைகளும், ஆழ்வார் கதைகளும் இதனை தான் சொல்கிறது.
"காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன?
கந்தை சுற்றி ஓடே எடுத்தென்ன?
உள்ளன்பில்லாதவர் ஓங்கு செல்லநாடேயிடை
மருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர்
பால் வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுமே"
இங்கு இல்லறத்தானும் வீடுபேறு பெறமுடியுமென கூறப்படுகிறது
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
இதைதான் வள்ளலார் செய்து காண்பித்தார். மலைக்கும் ,குகைக்கும் செல்ல வில்லை.மனித சமுதாயத்தில் கடமைகளையும் ஜீவகாருண்யத்தையும் கடைபிடித்து மக்கள் உயர்நிலையை அடைய முடியும் என்றும் போதித்தார். மனித உடலை பிரணவ தேக மாக மாற்றி செய்து நிருபித்தார்.

Subscribe to:
Posts (Atom)