பினாங்கில் இப்பொழுது தலைகாட்டியிருக்கும் காற்று தூய்மைக்கேடு பிரச்னைக்கு, மலேசிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்கள் சுமத்திராவில் எரிக்கப்படுவது காரணமா என்பதை அரசாங்கம் உடனடியாக சோதனை செய்து கண்டறிய வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டு கொண்டார்.
23.1.2009 அன்று வெளியான ஜாகார்த்தா போஸ்ட் பத்திரிகையில் சுமாத்திராவில் உள்ள ரியாவ் பகுதி தூய்மைக்கேட்டு பகுதியாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சுமத்திரா காடுகள் மற்றும் தோட்டங்கள் எரியும் போது இந்நிலை அங்கு தலைதூக்கும். இப்பொழுது இங்கு ஏற்பட்டிருக்கும் காற்று தூய்மைக்கேடு சுமத்திராவிலிருந்து காற்று வீசும் திரைசயால் இங்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்தத் தோட்டங்களை எரிக்கும் நிறுவனங்களின் பெயர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மலேசியா மற்றும் இந்தோனிசியா அரசாங்கத்தை இத்ரிஸ் கேட்டு கொண்டார். பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் இந்நிறுவனங்கள் அதற்குரிய நஷ்ஈட்டையும் வழங்க வேண்டும்.
பினாங்கில் ஏற்பட்டிருக்கும் தூய்மைகேட்டுக்கு உள்ளூர் சம்பவங்களும் காரணமாக இருக்கலாம். நம்முடைய பழைய அனுபவங்களை வைத்து பார்க்கும் போதுஇ காற்று தூய்மைக்கேட்டுக்கு காரணமாக இருப்பவர்கள் மீது போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது புலப்படுகிறது. காற்று தூய்மைக்கேட்டுக்கு பொறுப்பாக இருக்கும் உள்ளூர்வாசிகள் மீதி ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக இத்ரிஸ் கூறினார்.
தூய்மைக்கேட்டு பிரச்னையைச் சமாளிப்பதற்தகாக அரசாங்கத்தால் வரையப்பட்டிருக்கும் காற்று தூய்மைக்கேடு நடவடிக்கை திட்டம் அமுலாக்காம் தற்போதைய தூய்மைக்கேட்டு பிரச்னையை சமாளிக்க உதவும். இது தவிர தூய்மைக்கேடு மற்றும் காற்று மாசுபாடு பிரச்னைகளைக் களைவதற்குரிய ஏனைய நடவடிக்கைகளும் அரசாங்கம் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என இத்ரிஸ் அரசாங்கத்தை கேட்டு கொண்டார்.
தமிழ் சமையல்
ReplyDeleteProfiles Planet
Residence Collection
Dotnet Best
Chronicle Time
Cingara Chennai
Free Crackers