Thursday, November 26, 2009

உணவு விரயம் செய்வோருக்கு தண்டனை வழங்க வேண்டும்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

மலேசியர்கள் எவ்வளவு கழிவுகளை உற்பத்தி செய்கின்றார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? 42 பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களை நிரப்பும் அளவுக்கு நாம் கழிவுகளை உற்பத்தி செய்கின்றோம்!

2005ல் மலேசியர்கள் 7.34 மில்லியன் டன் திட கழிவுகளை உற்பத்தி செய்திருக்கின்றார்கள். இந்த திடக் கழிவு 2020ல் நாள் ஒன்றுக்கு 30,000 டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திடப்பொருள் கழிவுகளில்இ 45% உணவு கழிவுகளாகும். (ஆதாரம்: வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சு)


இந்த புள்ளி விவரம் ஒன்றும் நம்மை ஆச்சிரியப்படுத்தும் விஷயம் இல்லை. உணவுக் கடைகளிலும்,ரெஸ்டாரண்டுகளிலும், காப்பி கடைகளிலும், வீடுகளிலும் கூட சாப்பிடாமல் மீந்து போகும் உணவுகளைக் சர்வ சாதாரணமாக குப்பை தொட்டிகளில் கொட்டுவதை நாம் கண்கூடாக காணலாம். பிறந்தநாள், திருமண வைபவங்களிலும் சாப்பிட்டு முடிக்கப்படாத உணவுகள் குப்பை தொட்டிகளில்தான் தஞ்சம் புகுகின்றன.

சமூகம் வசதியாகி கொண்டு வரும் போது கூடவே உணவு விரய கலாச்சாரமும் சேர்ந்தே வருகிறது. சிங்கப்பூரில் 2008ல் 558,900 டன் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2002ல் இருந்த அளவைவிட 6.2 மடங்கு அதிகமாகும். ஜப்பானியர்கள் தங்கள் உணவுகளில் நான்கில் ஒரு பங்கை வீசி எறிகின்றனர். பிரிட்டிஷ்காரர்கள் 4.1 மில்லியன் உணவுகளை வீசுகின்றார்கள். அமெரிக்காவில் வருடத்தில் 30 விழுக்காடு உணவு அதாவது 38.3 பில்லியன் உணவுகளை வீசுகின்றார்கள். ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொரு வருடமும் 6 பில்லியன் வெள்ளிக்கு சமமான உணவுகளை வீசுகின்றனர். இது ஆஸ்திரேலிய முழுவதிலும் உள்ள மக்களுக்கு 3 வாரங்களுக்கு உணவு கொடுப்பதற்கு போதுமானதாக இருக்கும்.

நாம் ஏன் உணவுகளை விரயம் செய்யக்கூடாது:

உணவுகளை விரயம் செய்வது அதர்மமான ஒரு செயலாகும். உலகில் பலர் உணவு இல்லாத காரணத்தினாலும், பசியினாலும், பட்டினியாலும் செத்து மடிகின்றார்கள். ஐக்கிய நாட்டு உணவு நிறுவனத்தின் கூற்றுப்படி உலகெங்கிலும் 920 மில்லியன் மக்கள் பசியினால் மரிக்கின்றார்கள்.

அமெரிக்காவில் சாப்பிடாமல் வீணாக்கப்படும் உணவுகள் ஒரு நாளைக்கு 4 மில்லியன் மக்களுக்கு உணவாக கொடுக்கப்படலாம்.

நீங்கள் சாப்பிடாத உணவுக்கு காசு கொடுப்பாது அநியாயமான ஒரு செயலாகும்.

நீங்கள் சாப்பிடாத உணவுகளை வாங்குவதுஇ உணவுக்கு போலியான ஒரு தேவையை ஏற்படுத்தி விடும். வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிடாமல் வீசப்படும் உணவினால் அந்த உணவு தேவை அதிகரிப்பதோடு அதன் விலையும் ஏற்றமடைகிறது. இதனால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அல்லலுறுகின்றன.

உணவு உற்பத்திக்காக நிறைய தண்ணீரும், எரிசக்தியும் பயன்படுத்தப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கும் கேடாக அமைகிறது.

குப்பை கொட்டும் இடத்தில் கொட்டப்படும் மக்கும் குப்பைகள் உற்பத்தி செய்யும் மெத்தீன் வாயு சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வாயுவாகும்.

உணவு விரயத்துக்கு எதிராக நாம் ஒரு பிரச்சாரம் நடத்தியாக வேண்டும். (பிரிட்டன் உணவை விரும்பு, விரயத்தை வெறு என்ற பிரச்சாரத்தை 2007ல் நடத்தியது) இந்த இயக்கம் உணவுகளை முறையாக திட்டமிடுதல், மீந்த உணவுகளை மிச்சப்படுத்துதல், தேவையான உணவுகளுக்கு மட்டுமே ஆர்டர் செய்வது, கையுடன் ஒரு பையைக் கொண்டு சென்று மிச்ச உணவுகளை வீட்டு நாய்களுக்கு கொண்டு வருவது போன்றவற்றை செய்யலாம். விழக்காலங்கள், பிறந்தநாள், திருமணங்களின் போது விரயத்தைத் தடுப்பதற்கு பயனீட்டாளர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் உணவு விரயத்தைத் தடுக்கும் எளிமையான நடவடிக்கைகளாகும்.

கழிவுகளை மக்க வைத்து உரமாக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளவேண்டும். இல்லை என்றால் இந்த வீட்டுக் கழிவுகளும் கூட குப்பை தொட்டியில் போய் சேரும்.

அரசாங்கங்களும், நிறுவனங்களும் தங்கள் நிகழ்ச்சிகளில் கண்மூடித்தனமாக உணவுகளை பரிமாறக்கூடாது. உணவு விடுதிகள் தட்டுக்களில் மீதம் வைக்கும் உணவுகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். உணவு விடுதிகள், ரொட்டி கடைகள், பேராங்காடிகள் விற்கமுடியாது ஆனால் சாப்பிடும் நிலையில் உள்ள உணவுகளை அனாதை இல்லாங்கள் போன்ற இடங்களுக்கு அனுப்பலாம். பெரிய அளவில் உணவு விரயம் செய்யும் ஓட்டல்கள், சொகுசு உணவு விடுதிகள், தொழிற்சாலை சிற்றுண்டிச்சாலைகளைத் தண்டிக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் 5 நட்சத்திர ஓட்டல்களாக இருந்தாலும் கூட அடுத்தவர்களுக்கு பாடமாக அமையும் வகையில் அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்.

மற்றவர்கள் பசித்திருக்கும் போது உணவுகளைக் கீழே கொட்டுவது ஒரு இழிவான செயல், பணத்திற்குக் கேடு, சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துகிறது. நாம் வீசி எறியும் உணவுகள் இன்னொருவரின் பசியை ஆற்றும். ஒருவரின் தட்டுக்கு செல்ல வேண்டிய உணவை வீசி எறிவதற்கு நமக்கு உரிமை கிடையாது. உணவுக்கு மரியாதை கொடுக்கும் கலாச்சாரத்திற்கு உரியவர்கள் நாம். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த நாம் உணவு விரயத்தை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.

உணவு விரயத்துக்கு எதிரான போரை இப்பொழுதே தொடங்குவோம்.

எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்இ ஜேபி.
தலைவர்

Monday, November 23, 2009

மலேசிய இந்திய இளைஞர்களின் அவல நிலை!

இந்த வீடியோவை பாருங்கள். நமது இந்திய இளைஞர்களின் திறமைகள் இப்படிப்பட்ட செயல்களில்தான் சிறந்து விளங்குகின்றன.


Find more videos like this on My Journeys Videos

Thursday, November 5, 2009

பாட்டில் நீர் உபயோகத்தைத் தடை செய்யுங்கள் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரிய கேடு!

நம் நாட்டில் பாட்டில் நீர் உபயோகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளில் எல்லா விதமான நிகழ்வுகளிலும் வைபவங்களிலும் பாட்டில் நீரின் உபயோகம் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதற்கு முன்பு எல்லா வித நிகழ்வுகளிலும் கூஜாவில் தண்ணீர் வைக்கப்பட்டு குவளையில் பரிமாறப்பட்டது. அது ஒரு காலம்

குழாயைத் திறந்தால் எளிதில் கொட்டும் நீரை உதாசீனம் செய்துவிட்டு மலேசியர்கள் வெறும் தண்ணீருக்காக பெரிய தொகையைக் கொடுக்க முன் வருவது ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது. மலேசியர்கள் ஒவ்வொரு வருடமும் 100 மில்லியன் பாட்டில் நீர் அருந்துகிறார்கள். பேரங்காடிகளில் பெரிய எண்ணிக்கையில் வாங்கும்பொழுது 40 சென்னிலிருந்து அதே நீரை விடுதிகளால் வாங்கிக் குடிக்கும்பொழுது மவெ. 5.00 வரைக்கும் ஒரு பாட்டில் நீரின் விலை வேறுபடுகிறது.

பாட்டிலின் மூடி வர்ணத்தில் இருந்தால் அது இயற்கையான நீருக்கும்இ வெள்ளை மூடி என்றால் அது கிருமி நாசினி செய்யப்பட்ட நீர் என்று பெரும்பாலான பயனீட்டாளர்களுக்குத் தெரியாது என்றார் இத்ரிஸ்.

குழாய் நீரில் குளோரின் சேர்த்திருப்பதற்கான வாடை இருக்கும். ஆனால் பாட்டில் நீரில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குழாய் நீருக்கும் பாட்டில் நீருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

பாட்டில் நீர் குடிப்பவர்கள் நவீனமாகவும்இ கவர்ச்சியாகவும்இ வசதி படைத்தவர்களாகவும்இ ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருப்பவர்களாகவும் விளம்பரங்கள் பறை சாற்றுவதால் பயனீட்டாளர்கள் பாட்டில் நீரை வாங்கிக் குடிக்கிறார்கள். பாட்டில் நீர் குடிப்பதால் உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் கிடைப்பதாக இன்னும் சில பயனீட்டாளர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உடலுக்குத் தேவையான மெக்னீஸியம்இ பொட்டேஸியம்இ துத்தநாகம் போன்றவை தண்ணீரில் மிக மிக சொற்ப அளவில் இருக்கிறது. இவை உணவில் பன்மடங்கு அதிகமாக இருப்பதால் உணவின் மூலமே இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார் இத்ரிஸ்.

பாட்டில் நீர் தயாரிப்பு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேட்டைக் கொண்டு வருவதாக இருக்கிறது. பெரும்பாலான பாட்டில்கள் இறுதியில் குப்பை கொட்டும் இடங்களில் தஞ்சமடைகின்றன. உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் கொள்கலன் கச்சா எண்ணெய்இ பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பெரிய தொகையில் நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது.

கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பை விட பிளாஸ்டிக் தயாரிப்புக்கள் 100 மடங்கு அதிகமான நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடம் 2.7 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள்இ பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பாட்டில் நீரை வாங்கிக் குடித்த பிறகு பாட்டிலைத் தூக்கி எறிகிறோம். இவை குப்பை மேடுகளை நிறைக்கின்றன. இவற்றை எரிக்கும்பொழுது மிகவும் மோசமான நச்சு வாயுக்கள் வெளிப்படுகின்றன. இவை மனித மற்றும் பிராணிகள் இனத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிய அச்சுறுத்தலாகும். இதே பாட்டில்கள் மண்ணில் புதையுறும் பட்சத்தில் மக்கிப்போவதற்கு குறைந்தது 1000 வருடங்களாவது பிடிக்கும் என்றார் இத்ரிஸ்.

பெரும்பாலான நீர் பாட்டில்கள் எண் 1இ Pநுவுஇ Pநுவுநு ரகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த குறியீடுகள் பாட்டிலின் அடிப்பாகத்தில் அச்சிடப்பட்டிருக்கும். இந்தப் பாட்டில் சூடாகும்பொழுது இந்த இரசாயனங்கள் தண்ணீருக்குள் கரைகின்றன. நம் நாட்டில் பாட்டில் நீர்கள் லாரிகளின் மூலம்தான் விநியோகிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இப்படி ஏற்றிச் செல்லப்படும் பாட்டில்கள் 30ழுஊ சூட்டுக்கு உள்ளாகின்றன. பிறகு கிடங்குகளில் வைக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகுதான் விற்பனைக்காகக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

வெப்ப நாடுகளில் பாட்டில் நீர்களை கார்களில் விட்டுச் செல்லும்பொழுது அவை சூடாகிப் பாட்டிலின் பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனம் நீரில் கரைகிறது என்று அமெரிக்க இரசாயனக் கழகப் பிரிவின் டாக்டர் கென் ஸ்மித் கூறுகிறார். ஆனால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் நீரில் இந்த இரசாயனங்கள் கரையத்தான் செய்யும் என்றார் இத்ரிஸ்.

Pநுவு உபயோகத்தில் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்கள் தண்ணீரில் உடனடியாகக் கரையக்கூடியவை என்று 2006ல் ஜெர்மனி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. பாட்டில் நீர் எவ்வளவு காலத்திற்கு கிடத்தி வைக்கப்படுகிறதோ அவ்வளவு நாட்களுக்கு அது நச்சுத்தன்மை உடையதாக ஆகிறது.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எவ்வளவு காலத்திற்கு உபயோகிக்கிறோமோ அந்த அளவுக்கு நீரில் கலக்கும் நச்சு இரசாயனங்களின் அளவும் அதிகமாகும்.

பாட்டில் நீர் பயனீட்டாளர்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கப்போவதில்லை. மாறாக ஆரோக்கியக் கோளாறுகளையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் உண்டாக்கும். பாட்டில் நீர் அருந்துவதை படிப்படியாகக் குறைத்துக்கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல. அது கடந்த 20 வருடங்களாகத்தான் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. ஆகையால் பாட்டில் நீர் தடை செய்யப்பட வேண்டும். மாறாக எல்லா நிகழ்வுகளிலும் குவளைகளில் தண்ணீர் பரிமாறப்பட வேண்டும். சாதாரண குடிநீரில் சில சிறிது எலுமிச்ச்சையைக் கலந்து குடித்தாலே புத்துணர்வு கிட்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்