Tuesday, May 5, 2009

இஞ்சி

இஞ்சி உணவில் வாசனைக்காகவும் காரத்திற்காகவும் பயன்படுகிறது. விஷ முறிவுக்கு இதைப் பயன்படுத்தலாம். பசியைத் தூண்டும் ஆற்றல் இதற்கு உள்ளது. மேலும் இது உமிழ்நீரைப் பெருக்கும்.

இதனை உணவுடன் உட்கொள்ளுவதால் உடலுக்கு உஷ்ணத்தை அளித்து அகட்டிலுள்ள (அகடு-வயிறு) வாயுவை நீக்கி பசியையும் நல்ல செரிப்பையும் உண்டாக்கும்

இஞ்சியை உபயோகித்தால் காசம், கபம், வெள்ளோக்காளம், பித்ததோடம், சந்நிபாதசுரம், வாதாதிசுரம், வாதசூலை, வாதகோபம் ஆகிய பிணிகள் நீங்கும். பசி உண்டாகும்.

இஞ்சியை வாயில் மென்று உமிழ்நீரைத் துப்பினால் தொண்டைப்புண், குரல் கம்மல் ஆகியவை குணமாகும். இஞ்சிச் சாறும் வெங்காயச்சாறும் வகைக்கு ஒரு கிராம் வீதம் எடுத்துக் கலந்துகொடுத்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்திற்கு இஞ்சிச் சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம். இஞ்சிச் சாற்றில் கற்கண்டு போட்டுக் குடித்தால் நீரிழிவு நோய் குணமாகும்.

இஞ்சியை வெல்லப்பாகு அல்லது பழச்சாற்றில் ஊற வைத்து உண்பது உடலுக்கு நலம் பயக்கும். இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கி நன்கு வெயிலில் உலர்த்தியதே சுக்கு எனப்படுகிறது. இஞ்சியின் எல்லா குணங்களும் இதற்கும் உண்டு.

No comments:

Post a Comment