சகுந்தலா தேவி என்ற பெயரைச் சொன்னாலே மரியாதையோடு பார்க்கும் பலருக்கு, அவரது ஜாதகம் வழங்கும் விளம்பரம் மனவருத்தத்தைத் தருவதாக பல பயனீட்டாளர்கள் பினாங்கு பயனீ்ட்டாளர் சங்கத்திடம் புகார் கூறியிருப்பதாக அதன் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.
திருமதி சகுந்தலா தேவி தன்னிடமிருக்கும் கணிதம் தொடர்பான திறமைகளையும், அதனை அடைவதற்குரிய வெற்றிகளையும் மலேசியாவிலுள்ள மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயார் என நேர்காணலில் பத்திரிகைகளிடம் தெரிவித்து வி்ட்டு இப்பொழுது, என் கணிதம், ஜாதகம் மற்றும் ஞாபக சக்தியை வலுப்படுத்த வேண்டுமா என அறிக்கை விட்டு அதற்கு பணம் வசூலிக்க தொடங்கியிருப்பது வருத்தத்தைத் தந்திருக்கின்றது.
கணித்தில் சகுந்தலா தேவிக்கு இருக்கும் திறமையை யாரும் மறுப்பதற்கில்லை. அவருக்குள்ள அந்த ஆற்றலை நாம் மிகவும் மதிக்கின்றோம்.
ஆனால், கணிதம் தொடர்பான தனக்கு தெரிந்த சில நுட்பங்களை மலேசிய மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்து விட்டு இப்பொழுது, என் கணிதம் மற்றும் ஜாதகத்தை துல்லியமாகக் கணித்துத் தருகின்றேன் என விளம்பரம் செய்து, அதற்காக வெ.151 செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதே வருத்தத்தை அளிக்கும் விஷயமாக இருக்கிறது என்றார் சுப்பாராவ்.
ஜாதகத்திற்கு முதலிடமும் முக்கியத்துவமும் கொடுத்து விட்டு கணிதம் தொடர்பான விபரங்களுக்கு நேரத்தைக் கேட்பது சரியான செயல் அல்ல. பல ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு அவரை அழைக்க முயன்றதாகவும் அதற்கு நேரம் கிடைக்கவில்லை என்ற பதில்தான் வருகிறது எனவும் குறைபட்டுக் கொண்டனர்.
அதிகமான பள்ளிகளும், மாணவர்களும் சகுச்தலாதேவியைச் சந்திக்க வேண்டும், கணிதம் தொடர்பான பிரச்சனைகளை கேட்டறிந்து விளக்கம் பெற வேண்டும் என ஆவலோடு இருக்கின்றார்கள். ஆனால் இப்பொழுது திடீரென்று கட்டணம் விதித்து ஜாதகம் பார்க்க அவர் புறப்பட்டிருப்பது பலருக்கு கவலையைத் தந்துள்ளது என என்.வி.சுப்பாராவ் கூறினார்.
நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
மலேசியத் தமிழர்கள் சகுதலாதேவியைப் போன்ற பணப்பேர்வழிகளின் வலையில் சிக்காமலிருப்பது நல்லது..
ReplyDelete