Thursday, October 16, 2008

வறுமையின் உச்சம்

உணவுப் பற்றாக்குறையினால் களிமண் பிஸ்கட் சாப்பிடும் ஹைட்டி மக்கள்.

படத்தைப் பார்த்தவுடன் என்ன பலகாரம் இது என்று எண்ணத் தோன்றும். நீங்கள் நினைப்பது போன்று பலகாரம்தான். ஆனால் பலகாரத்தைச் செய்ய பயன்படுத்தும் பொருள்தான் சற்று வித்தியாசமானது.

வறுமை வறுத்தெடுகடகும் ஹைட்டியில் மக்கள் இப்பொழுது பரவலாகச் சாப்பிடுவது களிமண்ணால் செய்யப்பட்ட இந்த பலகாரத்தைத்தான்.
அந்த அளவுக்கு ஹைட்டியில் வறுமை உச்சக்கட்டத்தில் இருக்கிறது. களிமண்ணி்ல் நீர், மார்ஜரின், உப்பு கலந்து பிசைந்து தட்டில் வெய்யிலில் நன்றாகக் காய வைத்து சாப்பிடுகிறார்கள்.

உலக அளவில் பெட்ரோலின் விலை ஏற்றத்தினால் ஹைட்டிக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளின் திடுமென உயர்ந்துவிட்டன. இதனால் ஹைட்டியின் ஏழை மக்களுக்கு வழக்கமாக அவர்கள் சாப்பிடும் உணவு எட்டாக்கனியாகி விட்டது.

களிமண் பிஸ்கட்டை கர்ப்பிணிப் பெண்கள் பாரம்பரியமாக கால்சியம் சத்துக்காக உண்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால் இப்பொழுதோ உணவின்மை காரணமாக ஹைட்டி மக்கள் இதனையே அன்றாட உணவாக உட்கொண்டு வருகிறார்கள். 2007 ஏற்பட்ட சூறாவளி காரணமாக உணவு விலைகள் 40% உயர்வு கண்டன.

ஹைட்டி சந்தையில் 2 கப் அரிசியின் விலை அமெரிக்க சென் 60க்கு விற்கப்படுகிறது. சோளம், கோதுமை போன்றவற்றின் விலைகளும் மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து வி்ட்டன.

வேடிக்கை என்னவென்றால் களிமண் பிஸ்கட்டுக்கான தேவை அதிகமாக இருக்கின்ற காரணத்ததால் இதன் விலையும் கூட ஏறத் தொடங்கிவிட்டது. களிமண் சாப்பிடுவதற்கு நன்றாகவே இருந்தாலும், சாப்பிட்டு முடிந்த பின் வாயிலும் நாக்கிழும் உள்ள ஈரப்பசையை வழித்தெடுத்துவிடுகிறது.

களிமணடணில் ஒட்டுண்ணி மற்றும் அபாயகரமான நச்சுக்கிருமிகள் இருக்கலாம். ஆனால் பிறக்காத குழந்தைகளுக்கு அது குறிப்பிட்ட நோய்களை எதிர்க்கும் சக்தியையும் தருவதாக இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் கொலேரோடா பல்கலைக்கழகத்தின் கெரால்ட கல்லாஹான் கூறுகிறார்.

ஹைட்டி அளவுக்கு அதிகமாக வறுமையில் வாடும் நாடுகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. ஹைட்டியில் உள்ள 75 விழுக்காடு மக்கள் உரு நாளைக்கு அமெரிக்க டாலர் 2 வருமானம் ம்டும்தான் பெறுகின்றனர். ஆகையால் இங்கு பசியும் பட்டியும் சகஜம்.

5 வயது கீழ்ப்பட்ட குழந்தைகளில் 5ல் ஒருவர் வயிற்றுப்போக்கினால் ஹைட்டியில் இறந்துபோகிறார். களிமண் பிஸ்கட் மட்டுமே சாப்பிட்டு வளரும் குழந்தைகள் சத்துப்பற்றாக்குறையினால் அவதிப்படுக்கின்றனர்.
97% ஹைட்டி மக்களின் வீட்டில் மின்சார வசதி கிடையாது. பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை.

4 பேரில் ஒருவருக்கு மட்டும்தான் படிக்கத் தெரியும். 70% ஹைட்டி மக்களுக்கு வேலையில்லை. 25% ஹைட்டி மக்கள் 40 வயது ஆவதற்கு முன்பே இறந்து விடுகின்றனர்.

உலக அளவில வறுமையை ஒழிப்பது தன்னுடைய நோக்கம் என்று சூளுரைத்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் இதுகாறும் அமெரிக்காவுக்கு மிக அருகில் இருக்கும் ஹைட்டி விஷயத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

1 comment:

  1. இக்கட்டுரையைப் படிக்கும்பொழுது மனம் துயரத்தில் ஆழ்கிறது. இங்கு எத்தனையோ பேர் உண்ணும் உணவை குப்பைத் தொட்டியில் வீசுகின்றனர். ஆனால் அங்கே ஒரு பருக்கை அரிசி கூட இல்லையே.. :(

    விழிப்புணர்வு தரும் கட்டுரையிது, தொடர்ந்து இதுபோன்ற அவலங்களை தங்கள் வலைப்பதிவுகளில் எழுதுங்கள் நண்பரே..

    ReplyDelete