Friday, October 10, 2008

தூக்குக்கு தூக்கு வேண்டுமா?


உலகில் 76 நாடுகளில் முற்றாக மரணத் தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது.

உயிர் தாமாகவே உடலை வி்ட்டுப் பிரிய வேண்டும் என்பதுதான்,
இறைவன் இட்டச் சட்டம்.

ஆனால் மனிதனால் இயற்றப்பட்ட மரணததண்டனை இயற்கை நியதிக்கு மாறாகவே இருந்து வருகின்றது.

மனிதனின் சூழ்ச்சியினாலும் பணத்தின் ஆதிக்கத்தாலும், மரணததண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்கிறான்.

பாவம் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத அப்பாவி மனிதன் பாதிக்கப்படுகிறான்.

கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரி்மை இல்லை.

உயிரைப் பறிக்கும் உரிமை அரசாங்கத்திற்கும் இல்லை, இது மகாத்மா காந்தியின் சொல்வாக்கு.

இவ்வளவு காலமாகியும் மரணததண்டனை இருக்கத்தான் செய்கிறது.

இருந்தாலும் பயங்கரவாதம் ஏன் இன்னும்தழை வி்ட்டு வளர்ந்து கொண்டிருக்கின்றது?

ஒருவனின் மரணத்தில்தான் , இன்னொருவனின் சந்தோஷம் இருக்கிறது என்பதற்கு சடாம் உசேனின் மரணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

அவரின் மரணத்தை, அவரின் கொடுங்கோல் ஆட்சியால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்கள் சந்தோஷத்தில் மூழ்கிப்போனார்கள்.

இப்படி தனியொரு மனிதனின் மரணத்த அந்த சமூகத்தினர் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், அவர்கள் எவ்வகையான மனித உரிமை மீறலுக்குக்குள்ளாயிருப்பார்கள் என்பதை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்.

திருந்துவது மனிதத்தன்மை.வால்மீகி கொள்ளைக்காரனாகவும் அடுக்கடுக்காய் கொலைக்காரனாகவும் திரிந்துக்கொண்டிருந்தவர்.

ஏன் இப்படி செய்கிறாய்? என்று முனிவர்கள் கேட்ட போது வால்மீகி விடையளித்தார்." என் குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் அதற்குக் கொள்ளையடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கொள்ளையடிக்கும் போது கொலை செய்ய நேரிட்டால் செய்கிறேன்". முனிவர்கள் சொன்னார்கள், " கூடாது , மந்திரத்தைச் சொல்லி நல்லவனாகி விடு", அவர் ராம் ராம் ராம் என்று சொல்லிக்கொண்டடே போனார்.

பிற்காலத்தில் உலகின் மாபெரும் இதிகாசப் புலவர் ஆனார். இந்த வால்மீகிதான் இராமாயணத்தை எழுதியவர்.

ஒரு காலத்தில் கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி உலகின் மாபெரும் இதிகாசப் புலவர் ஆக முடியும் என்றால், எந்த ஒரு குற்றத்துக்காகவும் ஒரு மனிதனின் உயிரைப் பறிப்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும்.

காடுகள் பற்றி எரியும் பொழுது, பறவைகள் கூடுகளும் சேர்ந்து எரிந்துபோகும். அது தவிர்க்க முடியாத தர்மமாகும். அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்களது சூழ்ச்சியால பலரின் வாழ்க்கைகள் பாதிக்கப்படுகின்றன.

மரணத்தண்டனைத் தேவையா இல்லையா என்ற விவாதம் ஒரு முடிவை கொண்டு வரும் என்று சொல்லிவி்ட முடியாது. அது அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் மனித நேயத்தை பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மறுவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

1 comment:

  1. நல்லதொரு பதிவு. மேலும் ஆக்ககரமானப் பதிவுகள் வெளியிட எனது வாழ்த்துகள்.

    மரண தண்டனை குறித்து மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தில் உரையாடுகிறோம். உங்களுடைய கருத்துகளை நீங்கள் அங்கும் பதியலாம்.

    http://groups.google.com/group/MalaysianTamilBloggers

    நன்றி.

    ReplyDelete