இயக்குநர் சீமான் நேற்று இரவு பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் நடத்திய இலங்கை தமிழர் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.இரவு 7.30க்கு கூட்ட மேடைக்கு அவர் வந்தார். 9.15க்கு பேசத்தொடங்கிய அவர் 11.05க்கு தனது பேச்சை முடித்தார்.
இரண்டு மணிநேரமும் அவர் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தே பேசினார்.
நான் பிரபாகரனின் தம்பி. நான் தலைமறைவாகி ஓட மாட்டேன். நான்ஜெயிலுக்குப்போக வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள். நான் சிறைக்குப்போக அஞ்ச மாட்டேன். பதுங்கி இருந்தது நெல்லை சீமையில் பாயத்தான்! நான் எப்படியும் சாகப்போகிறேன். அது என் இனத்துக்காக என்றால் எனக்கு பெருமை தான்.
திருச்செந்தூர் வந்த மத்திய மந்திரி லல்லு பிரசாத்துக்கு ஒரு ஆட்டுக்குட்டி பரிசாக வழங்கினார்கள். அந்த ஆட்டுக்குட்டி தாயை பிரிந்து பால் குடிக்காமல் தவிப்பதை பார்த்து அதிகாரிகள் ஓடோடி வந்து ஆட்டுக்குட்டியின் தாயை பீகாருக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.என்ன கரிசனம்..ஆட்டுக்குட்டி மீதுள்ள பாசம் கூட தமிழர்கள் மீது இல்லையே? அங்கே என் உறவுகள் சாவுகிறார்கள். தாயையும் தந்தையையும் பிரிந்து அனாதையாக அழுகிறார்கள். ஆட்டுக்குட்டியை ஒன்று சேர்த்தவர்கள் தமிழர்களை ஒன்று சேர்க்க முயற்சி எடுக்கவில்லையே.
அங்கே இருக்கும் உறவுகள் நம்மை நம்பி இருக்கிறார்கள். பிரபாகரன் நம் உயிரை கேட்கவில்லை. உணர்வை கேட்கிறார்.நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறேனாம். எங்கே இருக்கிறது இறையாண்மை? பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையை தாக்கியபோது, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க தயாரானார்கள். நமது கடல் எல்லையில் மீன்பிடித்த மீனவர்களை சிங்களர்கள் சுட்டுக்கொன்றார்கள். அப்போது யாருமே தட்டிக்கேட்க வில்லையே. பாகிஸ்தானுடன் என்றால் கிரிக்கெட் விளையாடமாட்டார்கள். இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். எங்கே இருக்கிறது இறையாண்மை.
ஜப்பான், ஒக்கனேக்கல் குடிநீர் திட்டத்துக்கு கடன் கொடுக்கிறது.அதை கொடுக்காதே என்று கர்நாடகாக்காரன் ஜப்பானுக்கு கடிதம் எழுதுகிறான். முல்லை பெரியாறு' காவிரியில் தண்ணீர் விட மறுக்கிறார்கள். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை.தடை செய்யப்பட்ட அமைப்பைப் பற்றி பேசக்கூடாது என்றால் பிரபாகரனை எதிர்த்தும் பேசக்கூடாது. எதிர்த்து பேசுகிறவர்களை விட்டு விடுகிறார்கள். பிரபாகரன் பேட்டி கொடுத்தால் இந்தியா முழுவதும் செய்தி வருகிறது. அவரைப் பற்றி பேசினால் தடையா? இந்த தடையை உடைக்க வேண்டும்.
சினிமா படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகனின் உறவுகளை எதிரிகள் கொலை செய்வார்கள். கதாநாயகன் அதை கண்டு பிடித்து பழி வாங்கும் போது நாம் பாராட்டுகிறோம். ஒரு கற்பனை கதாபாத்திரம் செய்தால் பாராட்டும் நாம் அதை நிஜத்தில் செயல்படுத்துபவர்கள் தீவிரவாதிகளா?
இந்திரா காந்தியின் கனவு, எம்.ஜி.ஆரின் கனவு, தமிழ் ஈழம். அங்கே தமிழ் தாய்மார்களின் கருவை கலைக்கிறார்கள். உலகத்திற்கு உண்மைகளை கொண்டு செல்ல நான் பேசுகிறேன்.நீங்கள் உணர்வை வாக்கு பதிவில் காட்டுங்கள். 40 தொகுதியில் வெற்றியை கொடுத்தோம். இனி 40 தொகுதியிலும் வீழ்த்துவோம். எந்த நாட்டிலும் சொந்த மக்களே அகதிகளாக இருந்ததில்லை. இலங்கையில் மட்டும் தான் இந்த அவலம். அங்கு தஞ்சம் புகுந்தவர்களை சிங்கள ராணுவம் மின்சாரம் பாய்ச்சப்பட்ட முள் கம்பி சிறைக்குள் அடைத்து பட்டினி போடுகிறது.ஒரு இனம் செத்து மடிகிறது. எல்லாரும் அழுகிறார்கள். நான் கதறி அழுகிறேன். இதில் பிழை இல்லை. போரை நிறுத்தச் சொல்வது மனித உரிமை. போப் ஆண்டவர் போரை நிறுத்தச் சொல்கிறார்.
ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் என்று பேசுபவர்கள், ராஜீவ்காந்தியின் பின் மண்டையை தாக்கிய சிங்கள ராணுவ வீரனை என்றாவது கண்டித்து பேசியது உண்டா?
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வக்கீல்கள், மாணவர்கள், மக்கள், திருநங்கைகள் என்று அனைத்துதரப்பினரும் போராட்டம் நடத்தி விட்டார்கள். இந்த மக்களை மதித்து ராணுவ உதவிகளை நிறுத்துங்கள். நமது ராணுவ வீரர்களை திருப்பி அழையுங்கள். மூன்று நாளில் பிரபாகரன் ஒட்டு மொத்த இலங்கையையே கைப்பற்றி விடுவார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் வேறு, விடுதலை புலிகள் வேறு அல்ல.எல்லா நாட்டிலும் விடுதலையை அங்கீகரிக்கிறது ஐ.நா. சபை. -ஆனால் ஈழத்தமிழ் நாட்டை அங்கீகரிக்க மறுப்பது ஏன்? பிரபாகரன் சாவதற்கு முன் தமிழ் ஈழ நாடு உருவாகும். அது மொத்த இலங்கையாக கூட இருக்கலாம்.
இந்த எழுச்சி மோதல் களம் வரை இருக்கட்டும். வாக்கு கேட்க வருகிறவர்களிடம் உங்கள் உணர்ச்சியை காட்டுங்கள். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க உதவுங்கள் என்று சீமான் ஆவேசமாக பேசினார்.
Wednesday, February 18, 2009
Tuesday, February 17, 2009
மதுரையில் வழக்கறிஞர்கள் கண்டனப் பேரணி
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரையில் வழக்கறிஞர்கள் நேற்று திங்கட்கிழமை கண்டனப் பேரணி நடத்தினர். இப்பேரணியின் போது காங்கிரஸ் கொடி எரிக்கப்பட்டதுடன் அப்பகுதியில் உள்ள தந்தி அலுவலகத்தின் மீதும் கல் வீசப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
ஈழத் தமிழரை அந்நாட்டு இராணுவம் தொடர்ந்து தாக்கி வருவதைக் கண்டித்தும், மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்தத்துக்கு வழி ஏற்படுத்தக் கோரியும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன்றலில் இருந்து பேரணி புறப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன், மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கத்தினர் இதில் கலந்து கொண்டனர். தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற பதாகைகள் மற்றும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தையும் ஏந்தி வந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
சிறிலங்கா, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டன. தல்லாகுளம் பெருமாள் கோயில் பகுதிக்கு பேரணி வந்தபோது அங்கிருந்த காங்கிரஸ் கொடிக் கம்பத்தை சாய்த்து அதிலிருந்த கொடியை சிலர் எரித்தனர்.
தமுக்கம் அருகே உள்ள தந்தி அலுவலகத்தை பேரணி அடைந்தபோது, அந்த அலுவலகத்தை நோக்கி சிலர் கற்களை வீசினர். தடியால் அலுவலக பெயர்ப் பலகையை தாக்கினர். தந்தி அலுவலகம் முன் உள்ள சாலையில் வழக்கறிஞர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மறுலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

காவல்துறையினரை வெளியே போக சொல்லிவிட்டு நீதிமன்றத்திற்குள் வைத்து சுப்பிரமணியசுவாமி மீது கடும் தாக்குதல்
சென்னை உயர்நீதி்மன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியை வழக்கறிஞர்கள் சிலர் அடித்து உதைத்தனர். மேலும் அவர் மீது அழுகிய முட்டைகளையும் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் பிடியிலிருந்து மீட்கும் வகையில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது.தீட்சிதர்களால் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட முடியாத நிலையும் இருந்து வந்தது.

இது தொடர்பாக சிவனடியார் ஆறுமுகச்சாமி தலைமையில் நீண்ட காலமாக போராட்டமும் நடைபெற்று வந்தன.இந் நிலையில், சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு அரசு கொண்டு வந்தது.
இதை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது.இந்த நிலையில் அரசின் முடிவை எதிர்த்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இன்று மனு தாக்கல் செய்வதற்காக உயர் நீதிமன்றத்திற்கு வந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பி.கே. மிஸ்ரா, நீதிபதி கே.சந்துரு ஆகியோர் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களது விசாரணை அறைக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் அங்கிருந்த காவல்துறையினரை வெளியே போக சொல்லிவிட்டு கதவை உள்பக்கமாகப் பூட்டினர்.
பின்னர் நீதிபதிகளின் கண் முன்பாகவே சுப்பிரமணியம் சுவாமியை வழக்கறிஞர்கள் சரமாரியாக அடித்து உதைக்க ஆரமிபித்தனர். அடி வாங்கிய வெளியே போக முடியாத நிலையில் உள்ளேயே சுற்றி வந்தார். ஆனாலும் விடாமல் அவரை அறைந்தும், குத்தியும் வழக்கறிஞர்கள் தாக்கினர்.
சுவாமியின் பாதுகாப்புக்கு வந்த சிஆர்பிஎப் படையினரையும் உள்ளே வழக்கறிஞர்கள் அனுமதிக்கவில்லை. அழுகிய முட்டைகளை எடுத்து சுவாமியின் முகத்தில் வீசியடித்தனர். அழுகிய தக்காளிகளையும் வீசினர்.
இதனால் உயர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேறு சில வக்கீல்கள் விரைந்து வந்து சுவாமியை மீட்டு அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவாமி இவ்வாறு நீதிமன்றத்தி்ல் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானபோது அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகளைத் தொடர்ந்த சுவாமியை அதிமுகவினர் எல்லா இடங்களிலும் தாக்க முயன்றனர்.
உயர் நீதிமன்றத்தில் வைத்துக் கூட தாக்கும் முயற்சி நடந்தது. அப்போது அவரை வட சென்னை திமுகவினர் தான் காப்பாற்றினர்

Monday, February 16, 2009
மின்தூக்கிகளில் மாட்டிக்கொள்வது மலேசியாவில் அன்றாட நிகழ்வாகி வருகிறது
நம்முடைய பிரதமர் கடந்த 12.2.2009ல் உரையாற்றச் செல்லும் ஒரு நாளில் சுமார் 30 நிமிடங்களுக்கு மின்தூக்கியில் மாட்டிக்கொண்டதாக செய்திகள் வெளியாயின. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் அவர் மாட்டிக்கொண்டது புத்ராஜாயாவின் அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில்.
அடுக்கு மாடிக் கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு இது அன்றாட நிகழ்வாகி வருகிறது. சில இடங்களில் மின்தூக்கி வேலை செய்யாமல் போவது அடிக்கடி ஏற்படும் நிகழ்வாகி வருகிறது. இந்நிலையை மாற்றி அமைக்க ஏதும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல்தான் இருக்கின்றன என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்பவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இப்படி மின்தூக்கி இயங்காமல் போகும் பிரச்னை மிகவும் அதிகமாகவே இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆய்வு செய்யப்பட்ட 25 மின்தூக்கிகளில் 7 ஆய்வுக்கு உட்பட்ட சமயத்தில் முறையாக வேலை செய்யவில்லை. நிறைய மின்தூக்கிகளில் விளக்கு ஒழுங்காக எரியவில்லை. பாதுகாப்பு அம்சங்களும் இருக்கவில்லை என்றார் இத்ரிஸ்.
15 மாடிகளைக் கொண்ட 180 யூனிட்டுக்கள் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வெறும் இரண்டே மின்தூக்கிகள்தான் இருந்தன. ஒரு மின்தூக்கி ஆறு மாதங்களாக இயங்கவில்லை. இன்னொன்று முதல் நாள்தான் வேலை செய்யாமல் போனது. மின்தூக்கி வேலை செய்யாமல் இருப்பதை அடுக்குமாடிக் குடியிருப்பின் நிர்வாகத்தினரிடம் புகார் செய்து செய்து அலுத்துப்போய்விட்டதாக அங்குள்ள குடியிருப்புவாசிகள் கூறினர். பல முறை புகார் செய்த பிறகுதான் நிர்வாகம் மின்தூக்கியைப் பழுது பார்க்கும். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மின்தூக்கி மறுபடியும் வேலை செய்யாமல் போகும். யாராவது உள்ளே மாட்டிக்கொள்வர். ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள மின்தூக்கிகளிலும் இதே நிலைதான் என்றார் இத்ரிஸ்.
கடந்த 20.3.2006ல் பழுதான மின்தூக்கி கதவியால் ஓர் ஆடவர் இறந்துபோனபொழுதுஇ மின்தூக்கி பாதுகாப்பு தொடர்பாக பிரத்தியேக நடவடிக்கைக் குழு ஒன்றை நிர்மாணிக்கவிருப்பதாக தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா (னுழுளுர்)இ அறிவித்திருந்தது. அப்படி இதுவரைக்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான் என்ன என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிய விரும்புவதாக இத்ரிஸ் கூறினார்.
அடுக்குமாடி கட்டிட நிர்வாகிகளும், அடுக்குமாடி பராமரிப்பு கம்பெனிகளும் தங்களுடைய வேலையை முறையாகச் செய்கிறார்களா என்பதனைத் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா உறுதி செய்ய வேண்டும். கட்டிடங்களை 15 மாதங்களுக்கு ஒரு முறை சோதனையிடுவதை விட்டு விட்டு 10 மாதங்களுக்கு ஒரு முறையாவது சோதனையிட வேண்டும் என்றார் இத்ரிஸ்.
மின்தூக்கி கோளாறுகள் தொடர்பாக வந்த புகார்கள், எத்தனை முறை மின்தூக்கி பழுதாயிருக்கிறது என்பதை தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா ஆராய வேண்டும். மின்தூக்கி அடிக்கடி முறையாக இயங்காத இடங்களில் மின்தூக்கியை முழுமையாக மாற்றியமைக்கவோ அல்லது முழுப் சீரமைப்புப் பணியை மேற்கொள்ளவோ வேண்டும் என்றார் இத்ரிஸ்.
தூரத்திலிருந்தே மின்தூக்கிகளைக் கண்காணிக்கும் ஒரு முறையை தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா கொண்டு வர வேண்டும். இம்முறை மூலம் எந்த இடத்தில் மின்தூக்கி வேலை செய்யவில்லை என்பதை இனங்காண முடியும். இம்முறை நிறைய நாடுகளில் அமல்படுத்தப்படுகிறது என்றார் இத்ரிஸ்.
அடுக்குமாடி குடியிருப்புக்களில் மின்தூக்கிகளின் தரத்தை உறுதி செய்யவும்இ அவை முறையாக இயங்குகின்றனவா என்பதனைக் கண்காணிக்கும் பொருட்டும் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மின்தூக்கிகளை முறையாக இயக்குவதிலும் அவற்றைச் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

Sunday, February 15, 2009
சிறிலங்காவின் இனப்படுகொலையின் சாட்சிகள் இவை
தமிழீழம் - [வன்னியன்]
கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தப் பதிவுகள் சில சாட்சிகள்.
முக்கிய குறிப்பு :- "மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை திறந்து பாருங்கள்"
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
..jpg)

.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Thursday, February 12, 2009
பினாங்கில் காற்று தூய்மைக்கேடு! சுமாத்திரா காடு எரிவதை சோதனை செய்யுங்கள்!
பினாங்கில் இப்பொழுது தலைகாட்டியிருக்கும் காற்று தூய்மைக்கேடு பிரச்னைக்கு, மலேசிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்கள் சுமத்திராவில் எரிக்கப்படுவது காரணமா என்பதை அரசாங்கம் உடனடியாக சோதனை செய்து கண்டறிய வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டு கொண்டார்.
23.1.2009 அன்று வெளியான ஜாகார்த்தா போஸ்ட் பத்திரிகையில் சுமாத்திராவில் உள்ள ரியாவ் பகுதி தூய்மைக்கேட்டு பகுதியாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சுமத்திரா காடுகள் மற்றும் தோட்டங்கள் எரியும் போது இந்நிலை அங்கு தலைதூக்கும். இப்பொழுது இங்கு ஏற்பட்டிருக்கும் காற்று தூய்மைக்கேடு சுமத்திராவிலிருந்து காற்று வீசும் திரைசயால் இங்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்தத் தோட்டங்களை எரிக்கும் நிறுவனங்களின் பெயர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மலேசியா மற்றும் இந்தோனிசியா அரசாங்கத்தை இத்ரிஸ் கேட்டு கொண்டார். பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் இந்நிறுவனங்கள் அதற்குரிய நஷ்ஈட்டையும் வழங்க வேண்டும்.
பினாங்கில் ஏற்பட்டிருக்கும் தூய்மைகேட்டுக்கு உள்ளூர் சம்பவங்களும் காரணமாக இருக்கலாம். நம்முடைய பழைய அனுபவங்களை வைத்து பார்க்கும் போதுஇ காற்று தூய்மைக்கேட்டுக்கு காரணமாக இருப்பவர்கள் மீது போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது புலப்படுகிறது. காற்று தூய்மைக்கேட்டுக்கு பொறுப்பாக இருக்கும் உள்ளூர்வாசிகள் மீதி ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக இத்ரிஸ் கூறினார்.
தூய்மைக்கேட்டு பிரச்னையைச் சமாளிப்பதற்தகாக அரசாங்கத்தால் வரையப்பட்டிருக்கும் காற்று தூய்மைக்கேடு நடவடிக்கை திட்டம் அமுலாக்காம் தற்போதைய தூய்மைக்கேட்டு பிரச்னையை சமாளிக்க உதவும். இது தவிர தூய்மைக்கேடு மற்றும் காற்று மாசுபாடு பிரச்னைகளைக் களைவதற்குரிய ஏனைய நடவடிக்கைகளும் அரசாங்கம் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என இத்ரிஸ் அரசாங்கத்தை கேட்டு கொண்டார்.

புகைப்பதற்கு எதிரான விளம்பரங்கள்! பி.ப.சங்கம் வேண்டுகோள்!
மலேசியாவில் பிரசுரமாகும் அனைத்து மொழி தினசரி பத்திரிகைகளில், சுகாதார அமைச்சின் புகைப்பதால் ஏற்படும் நோய்களைப் பற்றிய விளம்பரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சுகாதார அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
புகைப்பதால் ஏற்படும் அபாயங்களை வர்ண புகைப்படம் வழி பொதுமக்களுக்கு அறிவுரைகளை கூறி வரும் இந்த விளம்பரங்கள் பாராட்டுக்குரியது என அதன் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார்.
சிகரெட் புகைப்பதால், இரத்தக்கட்டு,புற்றுநோய், குறைப்பிரசவம், நுரையீரல் புற்றுநோய் மற்றும் கழுத்துப் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும் என கூறியுள்ள சுகாதார அமைச்சு, அது தொடர்பான வர்ண படங்களை வெளியிட்டு கூடவே புகைப்பதினால் பயனேதுமில்லை, புகையிலை நிறுவனங்களினால் ஏமாந்து விடாதீர்கள் எனவும் அறிவுரை கூறியிருக்கின்றது. இந்த எச்சரிக்கை மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று என இத்ரிஸ் கூறினார்.

ஆனால் புகையிலை நிறுவனங்களுக்கு இந்த விளம்பரங்கள் பெரும் தலைவலியைக் கொடுத்திருப்பதால், இந்த விளம்பரங்கள் தொடரப்படக்கூடாது என அவை எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகைப்பது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதையும், அதனை அரசாங்கம் எந்த அளவுக்கு கடுமையானதாக கருதுகிறது என்பதையும் இந்த விளம்பரங்கள் புலப்படுத்துவாத இருக்கிறது என இத்ரிஸ் கூறினார்.
தினசரி பத்திரிகைகளில் இந்த விளம்பரங்கள் தொடர்ந்து வெளிவருவதோடு தொலைக்காட்சியிலும் அவை காட்டப்படுவதற்கு அரசாங்கம் ஆவன வழங்க வேண்டும்.

சிகிச்சையளிக்க முடியாத நோய்களுக்கும், மரணங்களுக்கும் புகையிலையே மூல காரணமாக திகழ்கின்றது. புகைக்கப்படும் ஒரு சிகரெட்டில் 4000 இரசாயனங்கள்தான் ஒளிந்துள்ளன. இவை புற்றோநோயை ஏற்படுத்தக்கூடியவையாகும்.

புற்றுநோய் ஏற்படுவதற்கு புகைப்பதுதான் மூலக்காரணம் என உலக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவமனைகளின் புள்ளிவிவரப்படி, நுரையீரல் புற்றுநோய் ஆண்களிடையே அதிகமாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நுரையீரல் புற்றுநோய்க்கு மூல காரணமே புகையிலைதான் என்றார் இத்ரிஸ்.
நாட்டில் புகைக்கும் பழக்கம் அபாய கட்டத்தை நெறுங்கிவிட்டது என்றும் அவர் கூறினார். மலேசியாவில் உள்ள மொத்த இளம் வயது கொண்ட ஆண்களில் பாதிப்பேர் புகைப்பவர்களாக இருக்கின்றனர. 1999-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வென்றில் ஐந்து மலேசிய இளைஞர்களின் ஒருவர் புகைப்பவராக இருக்கின்றார். ஒவ்வொரு நாளும் 50 இளைஞர்கள் புகைக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், புகைபிடிக்கும் பழக்கத்தால் 10,000 மரணங்கள் மலேசியாவில் நிகழுகின்றன. புகையிலை தொடர்பான நோய்களை குணப்படுத்த செலவிடப்படும் தொகை பில்லியன் கணக்கிலான வெள்ளி என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே, அரசாங்கம் எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த விளம்பர பிரசாரத்தலிருந்து பின்வாங்கி விடலாகாது. இந்த விளம்பரங்கள் புகைக்கும் பழக்கம் ஏற்படுத்தும் படுமோசமான நிலைகளை மிகத் தெளிவாக படம் பிடித்து காட்டுவதால், இந்த வர்ணப்படங்கள் தொடர்ந்து நமது பத்திரிகைகளில் பிரசுரம் செய்யப்பட வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டு கொள்வதாக எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டு கொண்டார்.

Subscribe to:
Posts (Atom)