Wednesday, November 5, 2008

தலையணை இன்றி தூங்கினால் அனைத்து நோய்களும் பறந்து விடும்.

கோயம்புத்தூர் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள கமலா ஸ்டோர் உரிமையாளரும் யோகாசன ஆசிரியருமான யோகராஜ் பா.அய்யாத்துரை கோயம்புத்தூர் ' பிரஸ் கிளப்' பில் நேற்று முன்தினம் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :
இன்றைய விஞ்ஞான உலகில் புதுப்புது நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. சிறுவர்களுக்கு எந்தெந்த நோய்கள் வராது என்று கூறினோமோ அந்த நோய்கள் எல்லாம் தற்போது சிறுவர்களைத் தாக்கத் தொடங்கி உள்ளன. ஏன், பிறந்த குழந்தைகளைக் கூட நோய் தாக்கும் நிலைமை உள்ளது. எனவே, நோய்களை விரட்டி அடிக்க வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தினமும் தூங்கும் போது தலையணை இல்லாமல் தூங்க வேண்டும். தலையணை அகற்றப்பட்டால் தரணியில் தலை நிமிர்ந்து நடக்கலாம் என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் செய்து வருகிறேன். தலையணை வைத்துப்படுப்பதால் தலைக்கு இரத்தமும், இருதயத்துக்குப் பிராண வாயுவும் செல்வது தடுக்கப்படுகிறது.

அதன் விவரம் வருமாறு :
கூன் விழாது, இளமையில் முடி நரைக்காது, கண் பார்வை கெடாது. பற்கள் உறுதியாகும், தலை வலிக்காது, கண் எரிச்சல் வராது. அலர்ஜி வராது, குறட்டை வராது, காச நோய் வராது, மாரடைப்பு வராது, இரத்தக்குழாய் அடைப்பு வராது, கண் புருவத்தின் கீழ் கருவளையம் தோன்றாது : குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மொத்தத்தில் எல்லா விதமான நோயகளும் பறந்தோடி விடும். நான் எனது 20 ஆண்டு கால ஆராய்ச்சியில், பல வயதானவர்களுக்கு இளமை திரும்ப வைத்துள்ளேன். ஆஸ்துமா நோயைக் குணமாக்கி இருக்கிறேன். அறிவில் சிறந்த மாணவர்களை உருவாக்கி இருக்கிறேன். பல ஆயிரக்கணக்கான மக்கள் சமுதாயத்தைச் சுறுசுறு்ப்பாக இயங்க வைத்திருக்கிறேன்.

நான் என்றுமே தலையணை வைத்துத் தூங்குவதில்லை. எனக்கு 81 வயது ஆகிறது. நான், இந்த வயதிலும் கண்ணாடிப் போட்டு பத்திரிக்கைப் படிப்பது இல்லை. எனது பற்கள் உறுதியாக இருக்கின்றன. எனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களும், எனது குடும்ப உறுப்பினர்களும், பேரன், பேத்திகளும் தலையணை வைத்துத் தூங்குவது இல்லை. மேற்கண்ட நபர்களை எந்த நோயும் தாக்கியது இல்லை. எனது பிரச்சாரத்துக்கு இவர்கள் அனைவருமே சாட்சி. எனவே நோயற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால் அனைவரும் தலையணை வைத்துப்படுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. நல்லதொரு தகவல்.. இனி நானும் தலையணை பயன்படுத்தப் போவதில்லை... :)

    ReplyDelete