Thursday, November 26, 2009

உணவு விரயம் செய்வோருக்கு தண்டனை வழங்க வேண்டும்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

மலேசியர்கள் எவ்வளவு கழிவுகளை உற்பத்தி செய்கின்றார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? 42 பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களை நிரப்பும் அளவுக்கு நாம் கழிவுகளை உற்பத்தி செய்கின்றோம்!

2005ல் மலேசியர்கள் 7.34 மில்லியன் டன் திட கழிவுகளை உற்பத்தி செய்திருக்கின்றார்கள். இந்த திடக் கழிவு 2020ல் நாள் ஒன்றுக்கு 30,000 டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திடப்பொருள் கழிவுகளில்இ 45% உணவு கழிவுகளாகும். (ஆதாரம்: வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சு)


இந்த புள்ளி விவரம் ஒன்றும் நம்மை ஆச்சிரியப்படுத்தும் விஷயம் இல்லை. உணவுக் கடைகளிலும்,ரெஸ்டாரண்டுகளிலும், காப்பி கடைகளிலும், வீடுகளிலும் கூட சாப்பிடாமல் மீந்து போகும் உணவுகளைக் சர்வ சாதாரணமாக குப்பை தொட்டிகளில் கொட்டுவதை நாம் கண்கூடாக காணலாம். பிறந்தநாள், திருமண வைபவங்களிலும் சாப்பிட்டு முடிக்கப்படாத உணவுகள் குப்பை தொட்டிகளில்தான் தஞ்சம் புகுகின்றன.

சமூகம் வசதியாகி கொண்டு வரும் போது கூடவே உணவு விரய கலாச்சாரமும் சேர்ந்தே வருகிறது. சிங்கப்பூரில் 2008ல் 558,900 டன் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2002ல் இருந்த அளவைவிட 6.2 மடங்கு அதிகமாகும். ஜப்பானியர்கள் தங்கள் உணவுகளில் நான்கில் ஒரு பங்கை வீசி எறிகின்றனர். பிரிட்டிஷ்காரர்கள் 4.1 மில்லியன் உணவுகளை வீசுகின்றார்கள். அமெரிக்காவில் வருடத்தில் 30 விழுக்காடு உணவு அதாவது 38.3 பில்லியன் உணவுகளை வீசுகின்றார்கள். ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொரு வருடமும் 6 பில்லியன் வெள்ளிக்கு சமமான உணவுகளை வீசுகின்றனர். இது ஆஸ்திரேலிய முழுவதிலும் உள்ள மக்களுக்கு 3 வாரங்களுக்கு உணவு கொடுப்பதற்கு போதுமானதாக இருக்கும்.

நாம் ஏன் உணவுகளை விரயம் செய்யக்கூடாது:

உணவுகளை விரயம் செய்வது அதர்மமான ஒரு செயலாகும். உலகில் பலர் உணவு இல்லாத காரணத்தினாலும், பசியினாலும், பட்டினியாலும் செத்து மடிகின்றார்கள். ஐக்கிய நாட்டு உணவு நிறுவனத்தின் கூற்றுப்படி உலகெங்கிலும் 920 மில்லியன் மக்கள் பசியினால் மரிக்கின்றார்கள்.

அமெரிக்காவில் சாப்பிடாமல் வீணாக்கப்படும் உணவுகள் ஒரு நாளைக்கு 4 மில்லியன் மக்களுக்கு உணவாக கொடுக்கப்படலாம்.

நீங்கள் சாப்பிடாத உணவுக்கு காசு கொடுப்பாது அநியாயமான ஒரு செயலாகும்.

நீங்கள் சாப்பிடாத உணவுகளை வாங்குவதுஇ உணவுக்கு போலியான ஒரு தேவையை ஏற்படுத்தி விடும். வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிடாமல் வீசப்படும் உணவினால் அந்த உணவு தேவை அதிகரிப்பதோடு அதன் விலையும் ஏற்றமடைகிறது. இதனால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அல்லலுறுகின்றன.

உணவு உற்பத்திக்காக நிறைய தண்ணீரும், எரிசக்தியும் பயன்படுத்தப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கும் கேடாக அமைகிறது.

குப்பை கொட்டும் இடத்தில் கொட்டப்படும் மக்கும் குப்பைகள் உற்பத்தி செய்யும் மெத்தீன் வாயு சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வாயுவாகும்.

உணவு விரயத்துக்கு எதிராக நாம் ஒரு பிரச்சாரம் நடத்தியாக வேண்டும். (பிரிட்டன் உணவை விரும்பு, விரயத்தை வெறு என்ற பிரச்சாரத்தை 2007ல் நடத்தியது) இந்த இயக்கம் உணவுகளை முறையாக திட்டமிடுதல், மீந்த உணவுகளை மிச்சப்படுத்துதல், தேவையான உணவுகளுக்கு மட்டுமே ஆர்டர் செய்வது, கையுடன் ஒரு பையைக் கொண்டு சென்று மிச்ச உணவுகளை வீட்டு நாய்களுக்கு கொண்டு வருவது போன்றவற்றை செய்யலாம். விழக்காலங்கள், பிறந்தநாள், திருமணங்களின் போது விரயத்தைத் தடுப்பதற்கு பயனீட்டாளர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் உணவு விரயத்தைத் தடுக்கும் எளிமையான நடவடிக்கைகளாகும்.

கழிவுகளை மக்க வைத்து உரமாக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளவேண்டும். இல்லை என்றால் இந்த வீட்டுக் கழிவுகளும் கூட குப்பை தொட்டியில் போய் சேரும்.

அரசாங்கங்களும், நிறுவனங்களும் தங்கள் நிகழ்ச்சிகளில் கண்மூடித்தனமாக உணவுகளை பரிமாறக்கூடாது. உணவு விடுதிகள் தட்டுக்களில் மீதம் வைக்கும் உணவுகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். உணவு விடுதிகள், ரொட்டி கடைகள், பேராங்காடிகள் விற்கமுடியாது ஆனால் சாப்பிடும் நிலையில் உள்ள உணவுகளை அனாதை இல்லாங்கள் போன்ற இடங்களுக்கு அனுப்பலாம். பெரிய அளவில் உணவு விரயம் செய்யும் ஓட்டல்கள், சொகுசு உணவு விடுதிகள், தொழிற்சாலை சிற்றுண்டிச்சாலைகளைத் தண்டிக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் 5 நட்சத்திர ஓட்டல்களாக இருந்தாலும் கூட அடுத்தவர்களுக்கு பாடமாக அமையும் வகையில் அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்.

மற்றவர்கள் பசித்திருக்கும் போது உணவுகளைக் கீழே கொட்டுவது ஒரு இழிவான செயல், பணத்திற்குக் கேடு, சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துகிறது. நாம் வீசி எறியும் உணவுகள் இன்னொருவரின் பசியை ஆற்றும். ஒருவரின் தட்டுக்கு செல்ல வேண்டிய உணவை வீசி எறிவதற்கு நமக்கு உரிமை கிடையாது. உணவுக்கு மரியாதை கொடுக்கும் கலாச்சாரத்திற்கு உரியவர்கள் நாம். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த நாம் உணவு விரயத்தை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.

உணவு விரயத்துக்கு எதிரான போரை இப்பொழுதே தொடங்குவோம்.

எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்இ ஜேபி.
தலைவர்

Monday, November 23, 2009

மலேசிய இந்திய இளைஞர்களின் அவல நிலை!

இந்த வீடியோவை பாருங்கள். நமது இந்திய இளைஞர்களின் திறமைகள் இப்படிப்பட்ட செயல்களில்தான் சிறந்து விளங்குகின்றன.


Find more videos like this on My Journeys Videos

Thursday, November 5, 2009

பாட்டில் நீர் உபயோகத்தைத் தடை செய்யுங்கள் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரிய கேடு!

நம் நாட்டில் பாட்டில் நீர் உபயோகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளில் எல்லா விதமான நிகழ்வுகளிலும் வைபவங்களிலும் பாட்டில் நீரின் உபயோகம் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதற்கு முன்பு எல்லா வித நிகழ்வுகளிலும் கூஜாவில் தண்ணீர் வைக்கப்பட்டு குவளையில் பரிமாறப்பட்டது. அது ஒரு காலம்

குழாயைத் திறந்தால் எளிதில் கொட்டும் நீரை உதாசீனம் செய்துவிட்டு மலேசியர்கள் வெறும் தண்ணீருக்காக பெரிய தொகையைக் கொடுக்க முன் வருவது ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது. மலேசியர்கள் ஒவ்வொரு வருடமும் 100 மில்லியன் பாட்டில் நீர் அருந்துகிறார்கள். பேரங்காடிகளில் பெரிய எண்ணிக்கையில் வாங்கும்பொழுது 40 சென்னிலிருந்து அதே நீரை விடுதிகளால் வாங்கிக் குடிக்கும்பொழுது மவெ. 5.00 வரைக்கும் ஒரு பாட்டில் நீரின் விலை வேறுபடுகிறது.

பாட்டிலின் மூடி வர்ணத்தில் இருந்தால் அது இயற்கையான நீருக்கும்இ வெள்ளை மூடி என்றால் அது கிருமி நாசினி செய்யப்பட்ட நீர் என்று பெரும்பாலான பயனீட்டாளர்களுக்குத் தெரியாது என்றார் இத்ரிஸ்.

குழாய் நீரில் குளோரின் சேர்த்திருப்பதற்கான வாடை இருக்கும். ஆனால் பாட்டில் நீரில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குழாய் நீருக்கும் பாட்டில் நீருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

பாட்டில் நீர் குடிப்பவர்கள் நவீனமாகவும்இ கவர்ச்சியாகவும்இ வசதி படைத்தவர்களாகவும்இ ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருப்பவர்களாகவும் விளம்பரங்கள் பறை சாற்றுவதால் பயனீட்டாளர்கள் பாட்டில் நீரை வாங்கிக் குடிக்கிறார்கள். பாட்டில் நீர் குடிப்பதால் உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் கிடைப்பதாக இன்னும் சில பயனீட்டாளர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உடலுக்குத் தேவையான மெக்னீஸியம்இ பொட்டேஸியம்இ துத்தநாகம் போன்றவை தண்ணீரில் மிக மிக சொற்ப அளவில் இருக்கிறது. இவை உணவில் பன்மடங்கு அதிகமாக இருப்பதால் உணவின் மூலமே இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார் இத்ரிஸ்.

பாட்டில் நீர் தயாரிப்பு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேட்டைக் கொண்டு வருவதாக இருக்கிறது. பெரும்பாலான பாட்டில்கள் இறுதியில் குப்பை கொட்டும் இடங்களில் தஞ்சமடைகின்றன. உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் கொள்கலன் கச்சா எண்ணெய்இ பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பெரிய தொகையில் நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது.

கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பை விட பிளாஸ்டிக் தயாரிப்புக்கள் 100 மடங்கு அதிகமான நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடம் 2.7 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள்இ பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பாட்டில் நீரை வாங்கிக் குடித்த பிறகு பாட்டிலைத் தூக்கி எறிகிறோம். இவை குப்பை மேடுகளை நிறைக்கின்றன. இவற்றை எரிக்கும்பொழுது மிகவும் மோசமான நச்சு வாயுக்கள் வெளிப்படுகின்றன. இவை மனித மற்றும் பிராணிகள் இனத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிய அச்சுறுத்தலாகும். இதே பாட்டில்கள் மண்ணில் புதையுறும் பட்சத்தில் மக்கிப்போவதற்கு குறைந்தது 1000 வருடங்களாவது பிடிக்கும் என்றார் இத்ரிஸ்.

பெரும்பாலான நீர் பாட்டில்கள் எண் 1இ Pநுவுஇ Pநுவுநு ரகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த குறியீடுகள் பாட்டிலின் அடிப்பாகத்தில் அச்சிடப்பட்டிருக்கும். இந்தப் பாட்டில் சூடாகும்பொழுது இந்த இரசாயனங்கள் தண்ணீருக்குள் கரைகின்றன. நம் நாட்டில் பாட்டில் நீர்கள் லாரிகளின் மூலம்தான் விநியோகிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இப்படி ஏற்றிச் செல்லப்படும் பாட்டில்கள் 30ழுஊ சூட்டுக்கு உள்ளாகின்றன. பிறகு கிடங்குகளில் வைக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகுதான் விற்பனைக்காகக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

வெப்ப நாடுகளில் பாட்டில் நீர்களை கார்களில் விட்டுச் செல்லும்பொழுது அவை சூடாகிப் பாட்டிலின் பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனம் நீரில் கரைகிறது என்று அமெரிக்க இரசாயனக் கழகப் பிரிவின் டாக்டர் கென் ஸ்மித் கூறுகிறார். ஆனால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் நீரில் இந்த இரசாயனங்கள் கரையத்தான் செய்யும் என்றார் இத்ரிஸ்.

Pநுவு உபயோகத்தில் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்கள் தண்ணீரில் உடனடியாகக் கரையக்கூடியவை என்று 2006ல் ஜெர்மனி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. பாட்டில் நீர் எவ்வளவு காலத்திற்கு கிடத்தி வைக்கப்படுகிறதோ அவ்வளவு நாட்களுக்கு அது நச்சுத்தன்மை உடையதாக ஆகிறது.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எவ்வளவு காலத்திற்கு உபயோகிக்கிறோமோ அந்த அளவுக்கு நீரில் கலக்கும் நச்சு இரசாயனங்களின் அளவும் அதிகமாகும்.

பாட்டில் நீர் பயனீட்டாளர்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கப்போவதில்லை. மாறாக ஆரோக்கியக் கோளாறுகளையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் உண்டாக்கும். பாட்டில் நீர் அருந்துவதை படிப்படியாகக் குறைத்துக்கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல. அது கடந்த 20 வருடங்களாகத்தான் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. ஆகையால் பாட்டில் நீர் தடை செய்யப்பட வேண்டும். மாறாக எல்லா நிகழ்வுகளிலும் குவளைகளில் தண்ணீர் பரிமாறப்பட வேண்டும். சாதாரண குடிநீரில் சில சிறிது எலுமிச்ச்சையைக் கலந்து குடித்தாலே புத்துணர்வு கிட்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Saturday, October 31, 2009

சிங்கப்பூர் வரலாறு - சிங்கபுரம்

எப்போதும் வரலாறுகள் தேவையற்றவை என்பது புதிய தலைமுறையின் வாதமாக இருந்து வந்துள்ளது. ஆனால் முன்னேற்றப் பாதையில் இருந்து பின் நலிந்திவிட்ட ஒரு சமுதாயத்துக்கு வரலாறுகளே மீண்டும் அடியெடுத்துக் கொடுத்து புதிய வரலாறு படைக்க உதவுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏதோ தேவையற்று பின் நோக்கி சென்று நமதி சிந்தைகளை நிலை குத்த வைப்பது போல் இந்த வரலாறு தோன்றினாலும் பின் நோக்கி உங்களை - உங்கள் வரலாற்றை புரிந்துக் கொள்ள அறிவு கிடைக்கிறது.


சிங்கப்பூரின் பண்டைக் காலம் பற்றி எழுத்து வடிவப்பதிவுகள் கோர்வையாக இல்லை,அங்கொன்றும் இங்கு கொன்றுமாகச் சில தகவல்கள் கிடைத்துள்ளன.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் சிங்கபுரம் என்ற ஒரு நகரைக் குறிப்பிடுகிறது.



இவ்வாட்டாரத்தில் முதல் வரலாற்று ஆவணமாக விளங்கும் நகரகிரேத்தாகமா எனும் ஜாவானிய நூல் 1365-ம் ஆண்டில் எழுதபட்டது. இது தெமாசெக் எனும் குடியேற்றப் பகுதியைப் பற்றி குறிப்பிடுகிறது. சி.எம். டர்ன்புல் என்பார் தமது நூலில் (சிங்கப்பூர் வரலாறு 1819-1975). பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட செஜாரா மலாயு எனும் மலாட் மரபு வரலாற்று நூல் மட்டுமே தெமாசெக் சிங்கப்பூராவின் முழுமையான வரலாற்றைத் தருவதாகத் தெரிகிறது என்கிறார்.

இவ்வரலாற்று நூலின்படி இராஜ ராஜ சோழன் என்னும் இந்திய மன்னர் பதினோராம் நூற்றாண்டில் தமது படையெடுப்புகளில் ஒன்றின் போது தெமாசெக்கில் தங்கியிருந்தாகத் தெரிகிறது. இச் சோழ ராஜனின் மகன், சாங் நீல உத்தமன். ஸ்ரீ விஜய எனும் பேரரசின் மையமாக விளங்கிய பலம்பாங் எனும் நாட்டின் அரசன் ஆனான் என்றும், ஸ்ரீ திரிபுவன எனும் பெயரை அவன் சூட்டிகொண்டான் என்றும் இந்த மரபு வரலாறு தெரிவிக்கிறது. இவ்வட்டாரத்தில் உத்தமன் மேற்கொண்ட பயணங்களின் போது தெமாசெக்கில் தரை இறங்கியதாகக் கூறப்படுகிறது. அவரின் ஆட்சியின்போதும், அவரைத் தொடர்ந்த நான்கு அரசர்களின் ஆட்சியின் போது சிங்கப்பூரா செழித்தோங்கியது. அதனால் பொறாமையுற்ற மஜபாகிட் எனும் ஜாவா பேரரசு இத்தீவைச் சூறையாடியது. தப்பியோடிய அரசர் மலாக்காவில் புதிய ஆட்சியை நிறுவினார்.

சற்றேறக்குறைய 1390-ம் ஆண்டில் பரமேஸ்வரா என்னும் இளவரசர் பலம்பாங் நாட்டின் சிங்காசனம் ஏறினான். பலம்பாங்கை மீண்டும் பேரரசாக விளங்கச் செய்யவேண்டும் என்பது அவரின் பேராவல்.தன் எண்ணம் நிறைவேறுவதற்கு முன்னரே அங்கிருந்து துரத்தப்பட்ட அவர், சிங்கப்பூரில் தன் பரிவாரம் புடை சூழத் தங்கினான். ஆனால்,மஜபாகிட் பேரரசு அவரை விடவில்லை.சிங்கப்பூரிலிருந்தும் அவரைத் துரத்தியது. பரமேஸ்வரனுக்கும் பின் சிங்கப்பூர் ஆள் அரவற்ற இடமாக மாறவில்லை.

சிங்கப்பூர் சயாமிய பேரரசுக்குக் கப்பம் கட்டும் நாடாக விளங்கியது.ஆனால் பரமேஸ்வரா தோற்றுவித்த மலாக்கா அரசு விரைவில் சிங்கப்பூர் வரை தனது அதிகாரத்தைத் செலுத்தத் தொடங்கியது. இருப்பினும் போர்த்துகீசியர்கள் மலாக்கா நகரை 1511 கைப்பற்றியபோது அவ்வரசின் கடற்படைத் தளபதி லட்சுமணா சிங்கப்பூருக்கு ஓடிவந்தார். சுல்தான் ஜோகூர் லாமாவின் (பழைய ஜோகூர்) தம் புதிய தலை நகரத்தை அமைத்துக் கொண்டதோடு, சிங்கப்பூரில் துறைமுக அலுவலகம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

போர்த்துகீசியர்கள் 1587-ம் ஆண்டில் ஜோகூர் லாமாவை அழித்துவிட்டனர். ஜோகூர் அரசின் தலைமையகம் .ரியாவ்-லிங்காத் தீவுக் கூட்டத்தில் மீண்டும் அமைக்கப்பட்டது. சுல்தானின் மூத்த அமைச்சரான தெமொகோங்கின் அதிகாரத்தில் சிங்கப்பூர் இருந்தது. கடலை நம்பி வாழ்பவர்களும், சிறிய கூட்டமாகச் சில உள்நாட்டு மக்களும் வாழ்ந்து வந்தனர்.

1819 -ஆம் ஆண்டில் பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக அதிகாரியாக சர் ஸ்டாம் போர்டு ராபிள்ஸ் என்பார் சிங்கப்பூருக்கு வந்தார். ஆறு கடலோடு கலக்கும் இடமாகவும், மீன் பிடித் தீவாக இருந்த இத்தீவு கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிழக்காசியாவில் நடுநாயகமாக விளங்கச் சிங்கப்பூர் சிறந்த இடம் என அவர் எண்ணினார், அப்போதைய சிங்கப்பூரின் உரிமையாளராக விளங்கிய ஜோகூர் சுல்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகத்தளமாகச் சிங்கப்பூரை மாற்றினார் ராபிஸ்.அப்போது சிங்கப்பூர் காடு மண்டிய ஒரு தீவாக இருந்தது. காட்டை அழித்து வணிக நிலையமாக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார் ராபிள்ஸ்.

1959-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் சிங்கப்பூரைத் தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்தார்.140 ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த சிங்கை 1959 இல் தன்னாட்சி உரிமை பெற்ற தனிநாடாகியது.

முதல் தேர்தல் 1959 -ஆம் நடைப்பெற்றது. அதில் மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று திரு. லீ குவான் இயூ பிரதமராகி சிங்கப்பூரை வழி நடத்தினார்.

1963 -இல் சிங்கப்பூர் அன்றைய "மலாயா" வுடன் இணைந்தது.சிங்கப்பூர்,மலாயா இணைந்த நாட்டை "மலேசியா" என அழைத்தார்கள்.ஆனால் இவ்விணைப்பு சுமார் ஒன்றரை ஆண்டுகளே நீடித்தது.கருத்து வேற்றுமையாலும், கொள்கை வேற்றுமையாலும் 9-8-1965 ஆம் நாள் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாகியது. சிங்கப்பூர் தனிக் குடியரசு ஆகியது. அரசியல் தலைவர்களின் முன்னோக்குப் பார்வையால் சிங்கப்பூர் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இயற்கைக் கனிவளங்கள் ஒன்றுமில்லா சின்னஞ்சிறு தீவு மக்கள் வளத்தை மட்டுமே நம்பியது. மலாயாவிலிருந்து பிரிந்த பின் பல்வேறு சமூக,அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரால் தனித்து ஒரு நாடாக இயங்கமுடியுமா என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் தோன்றின. அந்த ஐயப்பாட்டைக் களைய, சிங்கப்பூர் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றியது.

சிங்கப்பூர் தனிக் குடியரசு ஆகியது. அரசியல் தலைவர்களின் முன்னோக்குப் பார்வையால் சிங்கப்பூர் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இயற்கைக் கனிவளங்கள் ஒன்றுமில்லா சின்னஞ்சிறு தீவு மக்கள் வளத்தை மட்டுமே நம்பியது. மலாயாவிலிருந்து பிரிந்த பின் பல்வேறு சமூக,அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரால் தனித்து ஒரு நாடாக இயங்கமுடியுமா என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் தோன்றின. அந்த ஐயப்பாட்டைக் களைய, சிங்கப்பூர் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், 1971- ஆம் ஆண்டு தூரகிழக்கில் தான் வைத்திருந்த இராணுவத்தை குறைக்கவே சுமார் 10,000 பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சிங்கப்பூர் பாதுகாப்பிற்குத் தன்னை நம்பவேண்டிய கட்டாய நிலையில், கட்டாய இராணுவ சேவையை ஆரம்பித்தது.

மேலும் குடியிருப்பு,சமூகப் பிரச்சனைகளில் நாடு உடனே சமாளிக்க வேண்டியதாயிற்று. இதனால் பொருளாதார துறையில் நன்கு வளர்ச்சிக் கண்டது. இந்த வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து ஓர் உன்னத நிலையை அடைந்துள்ளது.

1819 ஆம் ஆண்டு முதல் இந்தியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த குடியேறிய மக்களின் அரிய உழைப்பால் சிங்கை, சிறுகச் சிறுக மாநகரமாக மாறத் தொடங்கியது. தாம் குடியேறி இடத்தில் தங்களுடைய பண்பாடு,மொழி போன்றவற்றின் பாரம்பரியங்களைப் பல்வகை மக்களூம் பேணிக் காத்தனர். இதில் தமிழருடைய பங்கு சிறப்புகுரியது.

சிங்கப்பூரில் தமிழர்


1880 - களிலிருந்து தமிழும், தமிழ் இலக்கியமும் தோன்றி வளரலாயிற்று. நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ச்சியைச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பெற்றுள்ளது.1993-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி 2,873,000 மில்லியன் மக்கள் சிங்கப்பூரில் வாழ்கின்றனர். இதில் 77.5 விழுக்காட்டினர் சீனர்; 14.2 விழுக்காட்டினர் மலாய்க்காரர்; 7.1 விழுக்காட்டினர் இந்தியர்கள்; 1.2 விழுக்காட்டினர் பிற இனத்தவர்கள். இந்தியர்களுள் சுமார் 1 1/2 இலட்சம் தமிழர்களும் அடங்குவர்.

தமிழ்ப் பள்ளிகள்

தமிழகத்திலிருந்து வந்து குடியேறிய தமிழர்கள் தமிழின்பால் கொண்ட ஆர்வத்தால் பல தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கத் தொடங்கினர்.தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் வளர்ப்பதற்குப் பெரும் முயற்சிகளைச் செய்துள்ளனர். "திருவள்ளுவர்", "வாசுகி", "அரவிந்தர்", "நாகம்மையார்", "சாரதா தேவி","கலைமகள்", "உமறுப் புலவர்" போன்ற பெயர்களில் இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளை உருவாக்கினர்.


ஆலயங்கள்

வழிபாட்டின் திருவிடங்களாகத் திருக்கோயில்கள் திகழ்கின்றன். திரைகடலோடி திரவியம் தேடச் சென்ற தமிழர்கள், தங்கள் நாகரீகச் சின்னமாக விளங்கும் திருக்கோயில்களையும் சென்ற இடங்களில் எல்லாம் உருவாக்க மறந்தார்கள் இல்லை. தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தாங்கள் சீரும் சிறப்பாக வாழ்கிறார்களோ இல்லையே, திருக்கோயில்கள் சீரும் சிறப்பும் பெற்று திகழ்ந்தன். இருக்க இடம் உண்ண உணவு இல்லை என்றாலும் இறைவனுக்கு ஆலயம் எழுப்பி இன்பம் கண்டான்.

அழியும் உடலுக்குள் இருக்கும் அழியா ஒன்றுக்கு, ஆன்மா என்று கண்டான். அந்த ஆன்மா போகுமிடங்களில் மதிப்பளிக்கப் படவேண்டும் என்று இறைவழி பாட்டைத் துவங்கினர். இந்து சமயம் ஒரு ஆழ்கடல் போன்றது.
அதில் சேர்ந்துள்ள மொழிகளும், பண்பாடுகளும் புத்தம் புதிய கருத்துகளைக் கொண்டு சேர்த்தவை. அவற்றை எல்லாம் இயன்ற வரை ஆங்காங்கே புகுத்திய நிலையில் தான் கோயில்கள் தோன்றம் அளிக்கிறன்றன.

ஆலய முகவரி
Sri Krishnan Temple,
152 Waterloo St.,
Singapore 187961
Tel 6337 7957 F, 6334 2712
67695784 F. 67699003
srikrisnatemple@hotmail.com

- கிருஷ்ணன், சிங்கை

தனுஷ்கோடி புயல், 1964

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. இதன்போது சென்னையில் இருந்து இராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த தொடருந்து அடித்துச் செல்லப்பட்டதில் அதில் சென்று பயணித்த 123 பேரும் கொல்லப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது.

தனுஷ்கோடியில் அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம்
புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே. தனுஷ்கோடியைப் புதுப்பிக்க அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது. தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது.

அதன் தொடர்பான கட்டுரையை கீழே படிக்கவும்.

தனுஷ்கோடி - டிசம்பர் 23,1964 தமிழக மக்களால் மறக்க முடியாத தினங்கள் பல. அதில் ஒன்று தனுஷ்கோடியை கடல் தின்ற தினம்.

தமிழக கடலோரப் பகுதிகளை 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப் பேரலை புரட்டிப் போட்டு விட்டுப் போனதற்கு முன்பே, தனுஷ்கோடியை அந்த சுனாமி முத்தமிட்டு, விகாரமாக்கி விட்டுச் சென்ற தினம்தான் டிசம்பர் 23,1964.

1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று தனுஷ்கோடியைத் தாக்கிய சுனாமி, அழகிய தனுஷ்கோடியை சின்னாபின்னமாக்கி, அலங்கோலப்படுத்தி விட்டுப் போனது.

மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர்.

அன்றெல்லாம் சுனாமி என்றால் என்ன என்றே அக்காலத்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நமது காலத்தில் நம்மைத் தாக்கிய சுனாமியைப் போன்ற ஆழிப் பேரலைதான் அன்றைய தனுஷ்கோடியையும் அலைக்கழித்துள்ளது.

இந்த அலை 20 அடி உயரத்துக்கு ராட்சத அளவில் எழும்பி வந்தது. ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் தனுஷ்கோடி நகரம் இருந்தது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட அழகிய மீனவ நகரம்.

அப்போது அதிகாலை 3 மணி இருக்கும். மீனவ மக்களும், பிறரும் நிம்மதியாக கண்ணயர்ந்திருந்த நேரம் அது. ஆனால் கடல் மட்டும் காட்டுத்தனமாக விழித்துக் கொண்டிருந்தது.

பொங்கி வந்த கடல் வெள்ளமும், திரண்டு வந்த ஆழிப் பேரலைகளும், தனுஷ்கோடிக்குள் புகுந்து, புரட்டிப் போட்டது. நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது.
நகரிலிருந்த முக்கால்வாசிப் பேர் முகவரி தெரியாமல் கடல் அன்னையின் கோரப் பிடியில் சிக்கி உயிரிழந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு ஒரு ரயில் போய்க் கொண்டிருந்தது. அதற்கு அப்போது போட் மெயில் என்று பெயர். தனுஷ்கோடி வரை செல்லும் இந்த ரயிலில் தமிழ்நாட்டில் பிறபகுதிகளில் இருந்து பயணிகள் தனுஷ்கோடி சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கை செல்வார்களாம். அப்போதெல்லாம் இலங்கைக்கும், நமக்கும் நல்லுறவும், பயணப் போக்குவரத்தும் இருந்து வந்தது.

(தனுஷ்கோடியில் அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம்)

எனவே இலங்கை செல்ல ஏராளமான பயணிகள் அதில் இருந்தனர். தனுஷ்கோடியைத் தாக்கிய புயலுக்கும், ஆழிப் பேரலைக்கும் இந்த ரயிலும் தப்பவில்லை. அப்படியே கடலுக்குள் இழுத்துப் போட்டு விட்டது போட் மெயிலை, கடலில் எழுந்து வந்த ஆழிப் பேரலை.
அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் 2000 பேர் உயிரிழந்தனர்.

அழகிய தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே.

தனுஷ்கோடியைப் புதுப்பிக்க நமது அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது.

தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது - கடந்த காலத்தில் தாங்கள் 'தடம் புரண்ட' கதையை சொல்லியபடி.

ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், ஒரு எட்டு தனுஷ்கோடிக்கும் சென்று வருவது வழக்கம். இப்படி வந்து செல்பவர்களால்தான் இன்னும் தனுஷ்கோடி நமது மன 'டைரி'யிலிருந்து அழியாத காவியமாக உள்ளது.

Friday, October 30, 2009

புகைப்பதற்கு எதிரான நடவடிக்கைகள் உண்மையிலே ஆக்கப்பூர்வமானதாக இருப்பதை உறுதி செய்யுங்கள்!


வருகின்ற 2010லிருந்து 20 சிகரெட்டுக்கள் கொண்ட ஒரு சிகரெட் பேக்கட்டின் ஆகக் குறைந்த விலை மவெ. 6.20 என்று நிர்ணயிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ லியோ தியோங் லாய் அறிவித்துள்ளதை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்பதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

ஆனாலும் இந்த விலை அப்படி ஒன்றும் குறைவு என்றும் கூறிவிட முடியாது. உண்மையிலேயே புகைப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றால், புகைப்பதால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இந்த விலை நிர்ணயம் ஒன்றும் நினைத்த அளவுக்கு பயனைத் தராது என்று இத்ரிஸ் கூறினார்.

“தர மதிப்பு” கொண்ட சிகரெட்டின் விலை அதிகரித்துள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வு காட்டுகிறது. லங்காவியிலிருந்து வரி விலக்கு பெற்ற சில பிரண்டு சிகரெட்டுக்கள் பயனீட்டாளர்களுக்கு மிகவும் எளிதாகக் கிடைக்கின்றன. இன்னும் சில பிரண்டு வகைகள் வியட்னாம், வங்காளதேசம் மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. சிலவற்றில் புகைப்பதால் விளையும் கேடுகள் தொடர்பான எச்சரிக்கை படங்களும் இல்லை என்றார் இத்ரஸ்.

முதன்மை பிரண்டு சிகரெட்டுக்களின் இப்போதைய வாங்கும் விலை மவெ. 9லிருந்து மவெ. 30 வரைக்கும் ஆகும். “தர மதிப்பு” கொண்ட சிகரெட்டுக்கள் (20 சிகரெட்டுக்கள்) மவெ.2.20லிருந்து மவெ. 2.50 வரைக்கும் விற்கப்படுகின்றன. இவை 73மூ விலை குறைவாகும்.

முதன்மை பிரண்டு சிகரெட்டுக்கள் இங்கிலாந்தில் மவெ.36 - மவெ.60இ அயர்லாந்து மவெ. 37 - மவெ. 98இ சிங்கப்பூர் மவெ. 27 - மவெ. 80இ நியூசிலாந்து மவெ. 27 - மவெ. 20, ஜப்பான் மவெ. 10 - மவெ. 60இ ஸ்ரீலங்கா மவெ. 10 - மவெ. 90 என்ற விலைகளில் விற்கப்படுகின்றன.

மலேசியாவில் புகைக்கும் பழக்கம் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. 50 விழுக்காட்டுக்கும் அதிகமான மலேசிய ஆண்கள் புகைக்கிறார்கள். 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட சுமார் 50 மலேசிய பதின்மர்கள் ஒவ்வொரு நாளும் புகைக்கத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு வருடமும் 10,000 பேர் புகைப்பது சம்பந்தப்பட்ட நோய்களால் இறக்கிறார்கள். மலேசிய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் தோராயமாக மவெ. 4.8 பில்லியனை புகையிலை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க செலவழிக்கிறது.

பிரிவு 16(1)ன் படி “20 சிகரெட்டுக்கும் குறையாத எண்ணிக்கையில் உற்பத்தியாளர் சிகரெட்டுக்களை பேக் செய்ய வேண்டும்” என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் 14 சிகரெட்டுக்கள் கொண்ட பேக்கட்டுக்கள் இன்னும் விற்பனையில் உள்ளன. 14 சிகரெட்டுக்கள் கொண்ட பேக்கட் விற்பனைக்கான தடை 2010 வரை தள்ளிப்போடப்பட்டுள்ளது. 14 சிகரெட்டுக்கள் கொண்ட பேக்கட்டுக்கள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும் என்று இத்ரிஸ் கூறினார்.

சிகரெட்டின் உதிரி விற்பனையையும் மலேசிய அரசாங்கம் தடை செய்துள்ளது. ஆனால் பி.ப.சங்கம் பினாங்கில் 15 கடைகளில் மேற்கொண்ட சோதனையில் 8 கடைகளில் இன்னும் சிகரெட் உதிரியாகத்தான் விற்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சிகரெட்டும் 60 காசுக்கு விற்கப்படுகிறது. இப்படி விற்கும்பொழுது 20 சிகரெட்டுக்கள் கொண்ட ஒவ்வொரு பேக்கட்டையும் விற்று முடிக்கும்பொழுது விற்பனையாளருக்கு மவெ. 3.80 இலாபம் கிடைக்கிறது. இவ்வாறு உதிரி சிகரெட் விற்கும் சில கடைகள் பள்ளிக்கூடத்திற்கு பக்கத்திலேயே இருப்பதால் மாணவர்கள் வாங்கிப் புகைக்கவும் வழி வகுத்துவிடுகிறது என்றார் இத்ரிஸ்.

சிகரெட் விற்பனை செய்யும் ஒவ்வொரு கடையும் அதனுடைய லைசென்ஸை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்குமாறு விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும். சிகரெட் விற்பனைக்கான விதிமுறைகளை மீறும் பட்சத்தில் இந்த லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும்.

சிகரெட்டுக்கான வரியும் அதிகரிக்கப்பட வேண்டும். இதனால் இயற்கையாகவே சிகரெட் விலை ஏற்றம் காணும். இந்த விலை ஏற்றம் சிறார்கள் புகைக்க ஆரம்பிப்பதற்கு ஓரளவு தடையாக இருக்கும் என்றார் இத்ரிஸ்.

சிகரெட் வாங்குவதற்கான குறைந்த பட்ச வயதான 18 வயதை 21 வயதாக அரசாங்கம் உயர்த்த வேண்டும். ஓட்டு போடுவதற்கும் 21 வயதுதாயே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஓர் இளைஞர் எவ்வளவு காலத்திற்கு புகைக்கும் பழக்கத்தை தொடங்காமல் இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் புகைக்காமலே இருப்பதற்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கின்றன.

விமான நிலையங்களில் வரி இல்லா சிகரெட் விற்பனைக்குத் தடை செய்யப்பட வேண்டும். லங்காவித் தீவில் சிகரெட் விற்பனைக்கு அறவே வரி இல்லை. இது முற்றிலுமாகத் துடைத்தொழிக்கப்பட வேண்டும். பொருட்கள் வாங்கிவிட்டு காசு செலுத்தும் கவுண்டரில் பயனீட்டாளர்களைத் தூண்டும் வகையில் சிகரெட்டுக்களை அடுக்கி வைப்பதும் துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

புகையிலையை முற்றிலும் துடைத்தொழித்து வருகின்ற இளம் சமுதாயத்தினர் ஆரோக்கியமாக வழி வகுக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Wednesday, October 28, 2009

எயிம்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் இயற்கை விவசாயத்தைப் பற்றி தகவல் பெறுவதற்காக பி.ப.சங்கத்திற்கு வருகை

சுங்கைப்பட்டாணியில் அமைந்துள்ள எயிம்ஸ் பல்கலைக்கழகத்தின் 85 உயிரியல் தொழில்நுட்ப மாணவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பணி மனைக்குஇ கல்வி தொடர்பாக வருகை மேற்கொண்டார்கள்.


(பி்.ப.சங்கத்தின் இயற்கை வேளாண்மை பட்டறை பயிற்ச்சிக்கு கலந்து கொண்ட எயிம்ஸ் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பகுதியினர்)

டாக்டர் ஹஷாமுடின் ரஹ்மாட் தலைமையில் வந்த இம்மாணவர்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பணிமனையில் உள்ள இயற்கை வேளாண்மை தொடர்பான பல விளக்கவுரைகள் இம்மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டன.

சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த செயல் விளக்க முறை நடவடிக்கையில் எலுமிச்சை முட்டை கரைசல்இ நுண்ணுயிர் ஊக்கிஇ குணப்பசலம்இ மூலிகை பூச்சி விரட்டிஇ மண்புழு குளியல் நீர்இ மண்புழு இயற்கை உரம் தொடர்பான தெளிவான விளக்கங்கள் தரப்பட்டதாக இச்சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.


பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் அவர்கள், மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க
இம்மாணவர்களின் கல்விக்குத் தொடர்பான இந்த செயல்விளக்க முறைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக டாக்டர் ஹிஷாமுடின் அமாட் தெரிவித்ததாகவும் சுப்பாராவ் கூறினார்.


என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்