விவசாயத்தில் சேர்க்கப்படும் பூச்சி மருந்துகளே பல நோய்களுக்கு மூலகாரணமாகத் திகழ்கின்றது என்றார் பி.ப.சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்.

“இயற்கை வேளாண்மையே பசுமை உலகின் வித்து” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இயற்கை விவசாய பயிலரங்கை தொடக்கி வைத்து உரையாற்றியபோது இத்ரிஸ் இவ்வாறு கூறினார். சுமார் 50 விவசாயிகள் கலந்துகொண்ட இப்பயிலரங்கு பி.ப.சங்க பணிமனையில் உள்ள விவசாயப் பகுதியில் நடைபெற்றது. இந்தப் பயிலரங்கு பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சுகாதாரமான உணவையும் உட்கொள்வதற்கு இப்பொழுதுள்ள விவசாய முறை தொடராமல் இருக்க நமது பாரம்பரிய விவசாய முறைக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். ஆராக்கியமான உணவும், சுகாதாரமான சுற்றுச்சூழலும் அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

அனைத்து இன விவசாயிகளும் கலந்துக்கொண்ட இந்த இலவச விவசாய பயிலரங்கில் 6 விதமான இயற்கை முறையிலான வழிகள் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு சொல்லித் தரப்பட்டன.
முதல் இரண்டு முறைகளை பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் செய்து காண்பித்தார்.

அடுத்தது வாழை மட்டையை உபயோகித்து மண்புழு உரம் தயாரிக்கும் மிக எளிமையான முறையையும் சுப்பாராவ் சொல்லிக்கொடுத்தார்.
அடுத்து ஜோகூர், கூலாயில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வரும் த. கண்ணியப்பன் இயற்கை வேளாண்மயில் அனைத்து விவசாயிகளாலும் மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய மேலும் இரண்டு விதமான முறைகளைச் செய்துகாட்டி விவசாயிகளின் பாராட்டுதலைப் பெற்றார்.

இறுதியாக, கெடா, லுனாசில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் க.சன்மார்க்கம் பழங்கள் மூலமாக தயாரிக்கப்படும் நுண்ணுயிர் ஊக்கியை தயார் செய்து காட்டினார். இதனைப் பயன்படுத்துவதால் மண்ணை வளப்படுத்துவதோடு, பூஞ்சை மற்றும் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களையும் கட்டுப்படுத்துகின்றன. அடுத்ததாக சன்ம¡ர்க்கம், சாணம், கோமியம் மற்றும் கருப்புச்சீனி ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் அமிர்தக் கரைசலையும் செய்து காட்டினார்.


எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்
sxdgby,ml.ie4wslkuireswwwwrtfkdkliwokli5ekimn kid5rkmnnlklirkmn
ReplyDelete