Thursday, December 11, 2008

கைத்தொலைபேசியின் குரல் பதிவு கட்டணங்கள்! நிறுவனங்கள் பணத்தைக் கொள்ளயடிக்கின்றன பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அம்பலம்

கைத்தொலைபேசியில், தொடர்பு கொள்ளும் நபர் கிடைக்காத நேரத்தில் பதிவு செய்யப்படும் குரல் பதிவுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமற்ற ஒன்று என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பல புகார்களைப் பி.ப.சங்கம் பெற்றுள்ளதாக அதன் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூற¢னார்.

குரல் பதிவை மேற்கொள்ளுங்கள் என சேவையாளர்களின் அனுமதியில்லாமலேயே அந்நிறுவனங்கள் இந்தப் பதிலைத் தங்களின் விருப்பப்படியே தொடங்கிவிடுகின்றன என்றார் அவர்.

ஒவ்வொரு முறையும் அழைப்பாளர் தொடர்பு கொள்ளும் போது, அந்த அழைப்பு நேரிடையாக குரல் பதிவுக்கு சென்று விடுகின்றது. தொடர்பு கொள்ளும் எண் பயன்பாட்டில் இருக்கின்றது என்று கூட நமக்கு தெரியாமல் இருந்து வருகிறது என்றார் இத்ரிஸ். இப்படி தொடர்பு கொள்ளாத அல்லது பேசாத தொலைத் தொடர்புக்கு அழைப்பாளர்களிடமிருந்து நிமிடத்திற்கு 33 காசு கட்டணம் விதிக்கப்படுகின்றது. அதிலும் பதிவு பெட்டியில் தகவல் ஏதும் தெரிவிக்கப்படாத சூழ்நிலையில் கூட இந்த மோசடி நடக்கிறது என இத்ரிஸ் அம்பலப்படுத்தினார்.

தொடர்புக்கொள்ளும் நபர் தனது கைதொலைப்பேசியை அடைத்து வைத்திருந்தாலோ அல்லது தொடர்பு காள்ளாத எல்லைக்கு அப்பாற்பட்டு இருந்தாலோ எல்லா அழைப்புக்களும் தன்னிசையாக பெட்டிக்கு அனுப்பப்பட்டு, கட்டணம் விதிக்கப்படும் என மெக்சிஸ் நிறுவனம் கூறியிருக்கின்றது. இது நியாயமற்ற ஒரு செயல். எதுதான் காரணம் என்று தெரியாமல் குரல் பதிவு பெட்டிக்குச் சென்று கட்டணம் வசூல் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது என இத்ரிஸ் கூறினார்.

அழைப்பாளர் ஒருவரைத் தொடர்புகொள்ள முடியாத போது, அவரே பிறகு அழைப்பாளரைத் தொடர்புக்கெ¡ள்ள வேண்டும். அதைவிடுத்து அழைப்பாளரின் அழைப்பு குரல் பதிவு பெட்டிக்கு சென்று, அதற்கு நிமிடத்திற்கு கட்டணம் விதிப்பதை நிறுத்த வேண்டும் அழைப்பாளர் பேசக்கூடா இல்லை, பேசாத அழைப்புக்கு கட்டணமா? என்று இத்ரிஸ் கேள்வி எழுப்பினார்.

குரல் பதிவை ஏற்றுக்கொள்ளுபவர்களிடமிருந்துதான் கட்டணம் வசூலிக்க வேண்டும். எந்தவொரு தகவலையும் தெரிவிக்க விரும்பாதவர்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்யக்கூடாது. அது மட்டுமல்ல கைதொலைப்பேசியை பயன்படுத்தும் எத்தனைபேர் தங்களது குரல் பதிவு பெட்டியை சோதித்து பார்க்கின்றனர்?

பயன்படுத்துகின்றார்களோ அல்லது பயன்படுத்தவில்லையோ குரல் பதிவுக்கான நிமிடத்திற்கு 33 காசு என்பது மிக மிக அதிகம் என பி.ப.சங்கம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யதா சேவைகளுக்கு நிறுவனங்கள் செவையை வழக்கி அதற்காக அதிக கட்டணத்தை விதிப்பது என்பது ஒரு வழக்கமாகிவிடக்கூடாது.

இது பற்றி வாடிக்கையாளர் அறிந்திருக்கவில்லை என்றால், மாத இறுதியில் மிகப்பெரிய கட்டணம் அவருக்காக காத்திருக்கும். இந்த வசூல் வேட்டையினால் மலேசியா முழுவதும் கைதொலைப்பேசி பயன்படுத்தும் ஒவ்வொருவரின் சேவையிலிருந்து கைத்தொலைப்பேசி நிறுவனங்கள் பெருத்த லாபத்தைப் பெற்று வருகின்றன.

எல்லா பயனீட்டாளர்களும் நன்மையடைய இம்மாதிரியான நியாயமற்ற வர்த்தக சேவைகளுப் எழுப்பட்டுள்ள நியாயமற்ற பிரச்னைகளையும் களைவதற்கு உருப்படியான ஒரு தீர்வை மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்முனை தொழில்நுட்ப வாரியம் ஆராய வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டுக் கொள்வதாக எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டுக் கொண்டார்.

2 comments:

  1. இனி யாருக்கு அழைப்பு செய்தாலும் 5 முறை அழைப்பு மணி கேட்டதும், யாரும் அழைப்பை ஏற்காவிட்டால் நிறுத்திவிட வேண்டியதுதான்..

    ReplyDelete
  2. நான் ஒரு வெளிநாட்டு ஊழியர்.சமீபத்தில் மெக்சிஸ் நிறுவனத்தின் இணையத்தொடர்பு வழங்கும் மோடம் ஒன்றை புதிதாக வாங்கி பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றேன். வாங்கும்பொழுது அவர்கள் அளித்த தள்ளுபடியின் படி முதல் இரண்டு மாதங்களுக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது என கூறியிருந்தனர். முதல் இரண்டு மாதங்களில் அதன் செயல்பாட்டில் திருப்தி இல்லையெனில் அறவிடப்பட்ட பணம் மீள கொடுக்கப்படும் எனவும் கூறியிருந்தனர்.அந்த இரண்டு மாதங்களுக்குள் அந்த சாதனம் எந்த சிக்கலும் கொடுக்காமல் சிறப்பாக செயல் பட்டது.இரண்டு மாதங்களின் பின்னர் அதன் செயல்பாட்டில் நம்பிக்கையும் திருப்தியும் வந்த பின்னர் அதன் மாத கட்டணத்தை செலுத்திய பின்னர் சில கோளாறுகளை எதிர்கொள்ள நேர்ந்தது. அதாவது நான் இணையதொடர்புகளில் அதிகம் இணையத்தில் கட்டணம் குறைந்த அல்லது இலவச வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளையும் ,வீடியோ அழைப்புகளை அதிகம் பயன்படுத்துவதுண்டு. முதல் இரண்டு மாதங்களில் எந்த பிரச்சனையும் கொடுக்காத மெக்சிஸ் இணைய அலைவரிசைகள் பின்னர் தெளிவில்லாமலும் இரைச்சலாகவும் வேகம் குறைவாகவும் ஆகிவிட்டன. அதன் பிறகு இன்டர்நெட் தொலைபேசி அழைப்புகளை எங்குமே மேற்கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக மெக்சிஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டால் சரிசெய்து விடுவதாக கூறுகின்றனர்.இன்னும் சரியாக வில்லை. நாங்கள் செலவு குறைந்த இணைய தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டால் அவர்களது வருமானம் குறைந்து விடுமே என பார்க்கின்றார்களா? நாம் அவர்கள் மேல் நம்பிக்கை வைத்து அவர்கள் சேவையை பெற்றுக்கொண்டால் அவர்களோ எம்மை மோசடி செய்கிறார்களே.

    ReplyDelete