Tuesday, December 2, 2008
கடைசி உபதேசம்
அன்னை சாரதா தேவி, இராமகிருஷ்ணரின் மனைவி. இருவரும் துறவறம் பூண்டு நல்லறம் நடத்தினர்.இராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின், விதவைக் கோலம் ஏற்க அன்னை முற்ப்பட்டார். அப்போது காட்சி தந்த இராமகிருஷ்ணர், "ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குத்தான் சென்றுள்ளேன்" என்று கூறினார். சாரதாதேவி மன ஆறுதல் அடைந்தார். தவிர, கடைசிவரை விதவைக் கோலத்தைத் தவிர்த்தார். அன்னையின் இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்ருந்த வேளை, காய்ச்சல் வந்து உடல்நிலை மோசமானது. அப்போதும்கூட தன்னைப் பார்க்க வந்த ஒரு பக்தைக்கு, " உனக்கு அமைதி வேண்டுமென்றால், மற்றவர்களின் குறைகளைப் பார்க்காதே. அதற்கு பதிலாக, உன்னிடம் இருக்கும் குற்றங்களைப் பார். இந்த உலகம் முழுவதும் உன்னுடைய சொத்தாக ஆக்கிக்கொள்ளக் கற்றுக்கொள். மகளே, இந்த உலகில் யாரும் அந்நியர் இல்லை. உலகம் முழுவதும் உன் சொத்துக்ள்!", என்று கூறி ஆசி வழங்கினார். இதுதான் அன்னை சொன்ன கடைசி உபதேசம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment