Monday, December 22, 2008
பள்ளிக்கூடங்களில் போலிகார்பனேட் தண்ணீர் பாட்டில்களைத் தடைச்செய்ய வேண்டும்
போலிகார்பனேட்டில் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களைப் பள்ளிக்கூட மாணவர்கள் உபயோகிப்பது தடை செய்யப்பட வேண்டும். இந்த போலிகார்பனட் பாட்டில்கள் எதிர்கால சந்ததயினருக்கு சொல்லொணா கேடுகளை உண்டாக்கும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.
போலிகார்பனேட் தண்ணீர் பாட்டில்கள் தக்கென்று, நீண்ட நாட்களுக்கு உழைக்கும் வண்ணம் பல வித வண்ணங்களில் அழகாக இருக்கும். இவை பேரங்காடிகளிலும், புத்தகக் கடைகளிலும் பரவலாக விற்கப்படுகின்றன. இந்த போலிகார்பனேட் உறுதியாக இருக்கும். இதனுள் முக்கோண வடிவத்தில் பிசி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் இவை போலிகார்பனேட் பாட்டில்கள் என்று அடையாளம் காணலாம்.
இன்னும் ஓரிரு வாரங்களில் பள்ளிக்கூடம் திறக்கப்படவிருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்தத் தண்ணீர் பாட்டில்களை வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் இந்த போலிகார்பனேட் தண்ண£ர் பாட்டில்களை வாங்கிக்கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். போலிகார்பனேட் பாட்டில்கள், உடலில் ஹார்மோன்களின் இயக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் பிஸ்பெனோல் ஏ என்ற இரசாயனத்தை போலிகார்பனேட் பாட்டில்கள் வெளியாக்குகின்றன. இவை பல்வேறுவிதமான ஆரோக்கியக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இன உற்பத்தி உறுப்புக்களில் சேதம், புற்றுநோய் திசுக்கள் உருவாகுதல், பெண்களுக்குப் பரவலாக ஏற்படும் மார்பகப் புற்றுநோய், ஆண்களுக்கு விரைப் புற்றுநோய் மற்றும் விந்துக்களின் அளவு குறைதல் போன்ற பாதிப்புக்களுக்கும் போலிகார்பனேட் பாட்டில் உபயோகத்திற்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மனிதர்களின் சீரான உடல் இயக்கத்திற்கு உடலில் பல்வேறுவிதமான ஹோர்மோன்கள் சுரக்கின்றன. ப¢ஸ்பெனோல் ஏ இந்த சுரப்பிகளின் சீரான இயக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அவற்றின் வேலையைக் கெடுக்கிறது. இதனால் உடல் இயக்கம் பாதிக்கப்படுகிறது.
போலிகார்பனேட் பாட்டில்களை தொடர்ந்து பயன்படுத்தும்பொழுது, அவற்றை வெப்பமான இடங்களில் வைக்கும்பொழுதும், சூடான திரவத்தை அவற்றில் ஊற்றும்பொழுதும் அவற்றின் உள்ள பிஸ்பெனோல் ஏ வெளியாகி அந்தத் திரவத்தோடு கலக்கிறது என்றார் இத்ரிஸ்.
மிசோரி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் சாதாரண வெப்ப நிலையில் கூட பிஸ்பெனோல் வளியாவதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 18லிருந்து 74 வயதுக்கு உட்பட்ட 1,455 பேரின் சிறுநீர் மற்றும் இரத்தத்தைப் பரிசோதனை செய்தபொழுது, 25 விழுக்காட்டினருக்கு உடலில் பிஸ்பெனோல் ஏ அளவுக்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றார் இத்ரிஸ்.
கனடாவின் சுகாதார அமைச்சு பிஸ்பெனோல் ஏ வை ஒரு ஆபத்தான பொருளாக வரையறுத்துள்ளது. போலிகார்பனேட் பொருட்களை உபயோகிக்கும்பொழுது ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்து அதனைக் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வருவதற்கான முதல் நடவடிக்கையை எடுத்த நாடாக கனடா விளங்குகிறது என்றார் இத்ரிஸ்.
நம் நாட்டிலும் பெற்றோர்கள் இந்த போலிகார்பனேட் பாட்டில்களை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக்கெ¡டுக்காமல் இருப்பது நன்மை பயக்கும்.
பிஸ்பினோல் ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு, போலிகார்பனேட்டால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் ப¡ட்டில்களை பள்ளிக்கூடங்களில் உபயோகிப்பதைக் கல்வி அமைச்சு தடை செய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.
எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment