Wednesday, October 22, 2008

என் கவிதைகள்

மனிதனா?
வாழ்க்கை என்பது
வாழ்வதற்காகத்தானே?
வாழத் தெரியதவன் முட்டாள்
வாழ அஞ்சுவன் கோழை
வாழ்க்கையை வாழத் தெரிந்தும்
வாழாமல் இரு்ப்பவன் மனிதனா?


ஆதரிக்கிறேன்
நான் சிரிப்பை விட
அழுகையை ஆதரிக்கிறேன்
ஏனெனில் இருள்தான் பகலை
அடையாளம் காட்ட முடியும்
இல்லாததுதான் இருப்பதை நினையவுறுத்தும்.


காதலர் தினம்
ரோஜா பூக்களுக்கு
ரொஜா தரும் நாள்
இதயத்தில் இனம் புரியாத
மகிழ்ச்சி நாள்,
இரு இதயங்கள்
ஒன்றாகும் நாள்
பகிர்ந்து கொள்வதோ, இரு
இதயங்களின் மனதய்,
அதய் சொல்லத்தான்
வருவதோ காதலர் தினம்!!!


தேடுகிறேன்
பாசத்துக்காகவும், அன்புக்காகவும்,
நேசத்துக்காகவும்
என் மனம் அன்பை தேடுகிறது.
கரைந்து போன இதயத்துக்கு நல்ல
துணையைப் பகிர்ந்து கொள்ள
உறவை தேடுகிறது.


தீபாவளி
அன்பு நிறைந்தது தீபாவளி
இன்பமானது தீபாவளி
அமைதியானது தீபாவளி
ஆன்மீகமானது தீபாவளி
தீபத்தின் ஒளியைப் போல்
இறைவனின் அருள் ஒளி
இல்லத்தில் மட்டுமல்ல
நம் இதயத்திலும் ஏற்ற...
இதயம் தூய்மையானால்
இல்லம் தூய்மையாகும்.
இல்லத் தூய்மையே ஒரு
மனிதனை மனிதனாக
வாழவைக்கும் நம்மையெல்லாம்
மனிதனாக வாழவைப்தற்கே
ஆண்டில் ஒரு முறை
வருகிறது தீபாவளி.


பார்த்ததில்லை!
உயிரோடு உயிராக
நான் உன்னை விரும்பினேன்
நீ என்னை நேசித்தாய்
பார்க்காத போது....
ஆனால் இப்பொழுது பார்த்தபோது
நீ என்னை வெறுத்தாய்...
நான் உன்னை நேசிக்கிறேன்
இந்தக் கடல் அலைகளின்
வரையை விட அதிகமாக.....

Tuesday, October 21, 2008

மலேசியாவில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்..!


கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது தமிழ்ப் பழமொழி. ஆனால் தமிழருக்குச் சென்ற இடமெல்லாம் அடி என்பது புதுமொழி போலும். தமிழன் வாழாத நாடில்லை. அங்கெல்லாம் அவன் அடி வாங்காத நாளில்லை. அந்த அளவிற்கு அடி வாங்கி வாங்கி மரத்துப் போன இனமாய் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சொந்த நாட்டில் ஒகேனக்கல் பிரச்சனையில் கன்னடர்களிடமும், முல்லைப் பெரியாற்றுச் சிக்கலில் மலையாளிகளிடமும், இலங்கையில் சிங்களர்களிடமும், மலேசியாவில் அங்குள்ள முதலாளிகளிடமும் தாக்குதலுக்கு ஆளாகி கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்கிறது தமிழினம்.

மிக அண்மையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வரும் மக்பூல் உணவு விடுதியில் பணியாற்றிய 37 தமிழகத் தொழிலாளர்களை, அவ்விடுதியின் முதலாளி அடைத்து வைத்து வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்காது, உண்ணும் உணவைக் கூட தருவதற்கு மனமின்றி அனைவரும் சுரண்டப்பட்டிருக்கின்றனர். தேனி, இராமநாதபுரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தொழிலாளர்கள் அங்கு பணி புரிகின்றனர்.

இதில் சுரேஷ் இராமச்சந்திரன் என்ற தொழிலாளியின் பிறப்புறுப்பில் மின்சாரம் பாய்ச்சி அவர் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

இதே மாதிரியான கொடுமைகளை பிற தொழிலாளர்கள் மீதும் புரிந்த காரணத்தால், ஆறுமுகம் என்பவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இந்த நிலையில் அந்த ஊழியர்கள் அனைவரும் உயிர் பிழைத்தால் போதும் என அஞ்சி இரவோடு இரவாக தப்பித்து ஓடி, கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சில மனித உரிமை ஆர்வலர்களின் உதவியால் செய்தியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு ஊழியர்களின் பிரச்சனைகள் உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டன.

காவல்துறைப் பாதுகாப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்ட தொழிலாளர்களோடு, உணவு விடுதி முதலாளியின் ஆட்கள் பேச்சு நடத்தப்போவதாகக் கூறிக்கொண்டு, தொழிலாளர்களில் ஆறு பேர் மீது திருட்டுப் பழியைச் சுமத்தி சிறையிலடைத்தனர். இதற்கு மலேசியக் காவல்துறையும் உடந்தை. மலேசியாவில் தற்போதுள்ள தமிழகத் தமிழர்களில் பெரும்பான்மையோர் இங்குள்ள உணவு விடுதிகளில்தான் பணியாற்றுகின்றனர்.

ஆயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் ஒவ்வொருவரும் அங்குள்ள முதலாளிகளால் கடுமையான இன்னலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். 'கொடுமைப்படுத்திய முதலாளிகளிடமே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சமரசம் என்ற பெயரில் மலேசிய காவல் துறை ஒப்படைத்தது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். தொழிலாளர்களின் விருப்பப்படி தமிழகம் திரும்புவதற்கான உரிய ஏற்பாடுகளை பொறுப்பிற்குரியவர்கள் மேற் கொள்ள வேண்டும். இதில் உடனடியாகத் தலையிட்டு தமிழக அரசு ஆவன செய்வது இன்றியமையாததாகும். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்திய நடுவணரசை வற்புறுத்துவதன் மூலமே மலேசிய அரசுக்கு நெருக்குதல் தர முடியும்' என்று மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் கூறியுள்ளார்.

தொழிலாளர்களுள் ஒருவரான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் இராமச்சந்திரன் 'எங்களை வெளிச்சமே தெரியாத இருட்டறையில் அடைத்து வைத்திருந்தனர். தீடிரென்று ஒருநாள் முதலாளியின் கையாட்கள் சிலர் வந்து, எனது உயிர்க்குறியில் மின்சார வயரைப் பொருத்தி அதிர்வு ஏற்படுத்தினர். நான் வலி தாங்க முடியாமல் கதறியழுதேன்' என்றார்.


'மனைவி, குழந்தைகளை கடந்த நான்காண்டுகளாகக் காண முடியாமல் நாங்கள் துடித்துக் கொண்டிருந்தோம். ஊருக்குச் செல்வதற்கு விடுமுறை கேட்டால் கூட, எங்களை அடித்துத் துவைத்துவிடுவார்கள். ஏன், எதற்கு என்று எந்தக் கேள்வியும் அவர்களிடம் கேட்டுவிடக் கூடாது. அந்த அளவிற்கு நாங்கள் அனைவரும் மிரட்டி வைக்கப்பட்டோம்' என்று இராமானுஜம் என்ற இளைஞர் கூறினார்.

தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து நள்ளிரவு 1.30 மணியளவில் தப்பித்த அந்தத் தொழிலாளர்கள் அனைவரும், கடந்த சில நாட்களாக உணவின்றியும், நடப்பதற்குக் கூட திராணியின்றியும் இருந்த நிலையிலும் கூட ஏறக்குறைய 18 கி.மீ. தூரம் நடந்தே சென்றுள்ளனர். செல்லும் வழியில் பலர் மயக்கமுற்று விழுந்துள்ளனர்.
சக தொழிலாளர்கள் அவர்களை தூக்கிக் கொண்டு நடந்துள்ளதை அவர்கள் விவரிக்கும்போதே நமக்குப் புல்லரித்தது. சொந்த மண்ணை விட்டு, உடன் பிறந்த உறவுகளைப் பிரிந்து பல ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி பணி நிமித்தம் சென்ற இந்தத் தொழிலாளர்களின் நிலை தற்போது மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது. நகைகளை விற்று, கடன் வாங்கி பிழைக்கச் சென்ற இடத்தில் உண்பதற்குக் கூட வழியில்லாது திகைத்து நிற்கின்ற தமிழகத் தொழிலாளர்களைக் காப்பாற்ற நடுவண், மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன? 'பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக இரண்டு தமிழகத் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து வருகிறது. பல மாதங்கள் வேலை செய்ய வைத்து ஊதியம் கொடுக்காமல் இருப்பது, குண்டர்களைக் கொண்டு மிரட்டுவது, அடிப்பது, உதைப்பது என பல்வேறு கொடுமையான இன்னல்களுக்கு இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் ஆளாக்கப்படுகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகள் இனியும் தொடரா வண்ணம் உணவகக் கடைகளை நடத்தும் முதலாளிகளுக்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்' என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் கூறினார்.

இந்தக் கட்டுரையை நாம் எழுதிக் கொண்டிருக்கும் தருவாயில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்த அறிக்கையின் காரணமாக தமிழக மற்றும் இந்திய அரசுகள் விரைந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களோடு கலந்துரையாடல் நடத்தி அவர்களுக்கு உரிய தீர்வினைத் தரும் நடவடிக்கைகள் மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரத்தால் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்று அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

இருந்தபோதும், தமிழகத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையில் சிறிதளவே தற்போது வெளித் தெரிந்துள்ளது.
இன்னும் பல்வேறு சித்திரவதைகள் அங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களின் உயிரிழப்புகளும் மிகச் சாதாரணமாய் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் தமிழகத்தின் சிற்றூர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களே மலேசியா போன்ற நாடுகளுக்கு பணி செய்ய அழைத்துச் செல்லப்படுகின்றனர். அம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற் கொள்ள வேண்டும்.

அது மட்டுமன்றி தற்போது அங்கு வாழும் தமிழகத் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டுமாயின், இந்தியத் தூதரகத்தில் தமிழர் ஒருவர் பணியமர்த்தப்படுதல் மிகவும் அவசியம்.

இது எதிர்காலத்தில் நிகழும் எந்த ஒரு பிரச்சனையிலும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பாக அமையும்.

-இரா.சிவக்குமார்

Thursday, October 16, 2008

வறுமையின் உச்சம்

உணவுப் பற்றாக்குறையினால் களிமண் பிஸ்கட் சாப்பிடும் ஹைட்டி மக்கள்.

படத்தைப் பார்த்தவுடன் என்ன பலகாரம் இது என்று எண்ணத் தோன்றும். நீங்கள் நினைப்பது போன்று பலகாரம்தான். ஆனால் பலகாரத்தைச் செய்ய பயன்படுத்தும் பொருள்தான் சற்று வித்தியாசமானது.

வறுமை வறுத்தெடுகடகும் ஹைட்டியில் மக்கள் இப்பொழுது பரவலாகச் சாப்பிடுவது களிமண்ணால் செய்யப்பட்ட இந்த பலகாரத்தைத்தான்.
அந்த அளவுக்கு ஹைட்டியில் வறுமை உச்சக்கட்டத்தில் இருக்கிறது. களிமண்ணி்ல் நீர், மார்ஜரின், உப்பு கலந்து பிசைந்து தட்டில் வெய்யிலில் நன்றாகக் காய வைத்து சாப்பிடுகிறார்கள்.

உலக அளவில் பெட்ரோலின் விலை ஏற்றத்தினால் ஹைட்டிக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளின் திடுமென உயர்ந்துவிட்டன. இதனால் ஹைட்டியின் ஏழை மக்களுக்கு வழக்கமாக அவர்கள் சாப்பிடும் உணவு எட்டாக்கனியாகி விட்டது.

களிமண் பிஸ்கட்டை கர்ப்பிணிப் பெண்கள் பாரம்பரியமாக கால்சியம் சத்துக்காக உண்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால் இப்பொழுதோ உணவின்மை காரணமாக ஹைட்டி மக்கள் இதனையே அன்றாட உணவாக உட்கொண்டு வருகிறார்கள். 2007 ஏற்பட்ட சூறாவளி காரணமாக உணவு விலைகள் 40% உயர்வு கண்டன.

ஹைட்டி சந்தையில் 2 கப் அரிசியின் விலை அமெரிக்க சென் 60க்கு விற்கப்படுகிறது. சோளம், கோதுமை போன்றவற்றின் விலைகளும் மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து வி்ட்டன.

வேடிக்கை என்னவென்றால் களிமண் பிஸ்கட்டுக்கான தேவை அதிகமாக இருக்கின்ற காரணத்ததால் இதன் விலையும் கூட ஏறத் தொடங்கிவிட்டது. களிமண் சாப்பிடுவதற்கு நன்றாகவே இருந்தாலும், சாப்பிட்டு முடிந்த பின் வாயிலும் நாக்கிழும் உள்ள ஈரப்பசையை வழித்தெடுத்துவிடுகிறது.

களிமணடணில் ஒட்டுண்ணி மற்றும் அபாயகரமான நச்சுக்கிருமிகள் இருக்கலாம். ஆனால் பிறக்காத குழந்தைகளுக்கு அது குறிப்பிட்ட நோய்களை எதிர்க்கும் சக்தியையும் தருவதாக இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் கொலேரோடா பல்கலைக்கழகத்தின் கெரால்ட கல்லாஹான் கூறுகிறார்.

ஹைட்டி அளவுக்கு அதிகமாக வறுமையில் வாடும் நாடுகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. ஹைட்டியில் உள்ள 75 விழுக்காடு மக்கள் உரு நாளைக்கு அமெரிக்க டாலர் 2 வருமானம் ம்டும்தான் பெறுகின்றனர். ஆகையால் இங்கு பசியும் பட்டியும் சகஜம்.

5 வயது கீழ்ப்பட்ட குழந்தைகளில் 5ல் ஒருவர் வயிற்றுப்போக்கினால் ஹைட்டியில் இறந்துபோகிறார். களிமண் பிஸ்கட் மட்டுமே சாப்பிட்டு வளரும் குழந்தைகள் சத்துப்பற்றாக்குறையினால் அவதிப்படுக்கின்றனர்.
97% ஹைட்டி மக்களின் வீட்டில் மின்சார வசதி கிடையாது. பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை.

4 பேரில் ஒருவருக்கு மட்டும்தான் படிக்கத் தெரியும். 70% ஹைட்டி மக்களுக்கு வேலையில்லை. 25% ஹைட்டி மக்கள் 40 வயது ஆவதற்கு முன்பே இறந்து விடுகின்றனர்.

உலக அளவில வறுமையை ஒழிப்பது தன்னுடைய நோக்கம் என்று சூளுரைத்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் இதுகாறும் அமெரிக்காவுக்கு மிக அருகில் இருக்கும் ஹைட்டி விஷயத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

Friday, October 10, 2008

தூக்குக்கு தூக்கு வேண்டுமா?


உலகில் 76 நாடுகளில் முற்றாக மரணத் தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது.

உயிர் தாமாகவே உடலை வி்ட்டுப் பிரிய வேண்டும் என்பதுதான்,
இறைவன் இட்டச் சட்டம்.

ஆனால் மனிதனால் இயற்றப்பட்ட மரணததண்டனை இயற்கை நியதிக்கு மாறாகவே இருந்து வருகின்றது.

மனிதனின் சூழ்ச்சியினாலும் பணத்தின் ஆதிக்கத்தாலும், மரணததண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்கிறான்.

பாவம் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத அப்பாவி மனிதன் பாதிக்கப்படுகிறான்.

கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரி்மை இல்லை.

உயிரைப் பறிக்கும் உரிமை அரசாங்கத்திற்கும் இல்லை, இது மகாத்மா காந்தியின் சொல்வாக்கு.

இவ்வளவு காலமாகியும் மரணததண்டனை இருக்கத்தான் செய்கிறது.

இருந்தாலும் பயங்கரவாதம் ஏன் இன்னும்தழை வி்ட்டு வளர்ந்து கொண்டிருக்கின்றது?

ஒருவனின் மரணத்தில்தான் , இன்னொருவனின் சந்தோஷம் இருக்கிறது என்பதற்கு சடாம் உசேனின் மரணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

அவரின் மரணத்தை, அவரின் கொடுங்கோல் ஆட்சியால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்கள் சந்தோஷத்தில் மூழ்கிப்போனார்கள்.

இப்படி தனியொரு மனிதனின் மரணத்த அந்த சமூகத்தினர் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், அவர்கள் எவ்வகையான மனித உரிமை மீறலுக்குக்குள்ளாயிருப்பார்கள் என்பதை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்.

திருந்துவது மனிதத்தன்மை.வால்மீகி கொள்ளைக்காரனாகவும் அடுக்கடுக்காய் கொலைக்காரனாகவும் திரிந்துக்கொண்டிருந்தவர்.

ஏன் இப்படி செய்கிறாய்? என்று முனிவர்கள் கேட்ட போது வால்மீகி விடையளித்தார்." என் குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் அதற்குக் கொள்ளையடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கொள்ளையடிக்கும் போது கொலை செய்ய நேரிட்டால் செய்கிறேன்". முனிவர்கள் சொன்னார்கள், " கூடாது , மந்திரத்தைச் சொல்லி நல்லவனாகி விடு", அவர் ராம் ராம் ராம் என்று சொல்லிக்கொண்டடே போனார்.

பிற்காலத்தில் உலகின் மாபெரும் இதிகாசப் புலவர் ஆனார். இந்த வால்மீகிதான் இராமாயணத்தை எழுதியவர்.

ஒரு காலத்தில் கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி உலகின் மாபெரும் இதிகாசப் புலவர் ஆக முடியும் என்றால், எந்த ஒரு குற்றத்துக்காகவும் ஒரு மனிதனின் உயிரைப் பறிப்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும்.

காடுகள் பற்றி எரியும் பொழுது, பறவைகள் கூடுகளும் சேர்ந்து எரிந்துபோகும். அது தவிர்க்க முடியாத தர்மமாகும். அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்களது சூழ்ச்சியால பலரின் வாழ்க்கைகள் பாதிக்கப்படுகின்றன.

மரணத்தண்டனைத் தேவையா இல்லையா என்ற விவாதம் ஒரு முடிவை கொண்டு வரும் என்று சொல்லிவி்ட முடியாது. அது அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் மனித நேயத்தை பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மறுவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.