Friday, July 3, 2009

பிரபாகரன் தலைமையில் தமிழீழம் மலர்வது உறுதி களம் புகுவோம்! கடமையாற்றுவோம்! பழ.நெடுமாறன்


30 ஆண்டு காலம் அறவழியிலும் 30 ஆண்டு காலம் மறவழியிலும் ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற நடத்திய போராட்டத்தை முற்றிலுமாக முறியடித்து விட்டதாக சிங்களப் பேரினவாத அரசு வெற்றிமுரசு கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமும் ஒருபோதும் ஓய்ந்து விடுவதில்லை. விழவிழ எழுவோம் என்பதுதான் விடுதலைப் போராளிகளின் இலட்சிய முழக்கமாகும்.

இராசபக்சேயைவிட மிகக்கொடிய இனவெறியர்களான இட்லரும், முசோலினியும் அய்ரோப்பாவில் பல்வேறு தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கச் செய்த முயற்சிகள் இறுதியில் என்ன ஆயின என்பதை உலக வரலாறு நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. வரலாறு கூறும் இந்த உண்மைகளை அறியாதவர்கள்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழ முடியாத வகையில் ஒடுக்கப்பட்டு விட்டது என வாய்வீச்சு வீசி வருகின்றனர்.

தமிழீழத்தில் ஏற்பட்டிருக்கிற மனிதப் பேரவலம் இதுவரை உலகம் சந்தித்திராத ஒன்றாகும். ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 3 இலட்சத் திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு இராணுவ முகாம்களுக்குள் பூட்டப்பட்டு ள்ளனர். போதுமான உணவோ மருந்தோ சுகாதார வசதிகளோ இல்லாமல் உயிர் வாழப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சொல்லொணாத சித்ரவதை களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். இளம் பெண்கள் பிரித்தெடுக்கப்பட்டு சிங்கள இராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.


சிங்களப் படையினர் நோயாளிகளை தனியாகப் பிரித்தெடுத்து அவர்களை வேறிடத்திற்கு கொண்டுச் சென்று அடைத்து வைத்துள்ளனர். உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அந்த நோயாளிகளின் கண்கள், சிறு நீரகங்கள், ஈரல், எலும்பின் உட்சத்து, இருதயம் ஆகியவற்றை மயக்க மருந்து தராமலேயே வெட்டி எடுத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின் றனர்.

குறைந்தது இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு அவர்கள் தங்கள் ஊர்களுக்கோ வீடுகளுக்கோ திரும்பு வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என சிங்கள அரசு வெளிப்படையாகக் கூறுகிறது. அவர்கள் வாழ்ந்த இடங்களில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப் பட்டிருப்பதாகவும் ஆகவே அவற்றை யெல்லாம் அப்புறப்படுத்திய பிறகே மக்களை குடியேற அனுமதிக்க முடியும் என்று சிங்கள அரசு கூறுகிறது. உண்மை அது அல்ல. இராணுவம் ஆக்கிரமித்த ஊர்களில் உள்ள வீடுகள் எல்லாம் விமான குண்டு வீச்சு களினாலும் பீரங்கித் தாக்குதல்களினாலும் அனேகமாக இடிந்து தகர்ந்துவிட்டன. இடியாமல் இருந்த வீடுகளை சிங்கள இராணுவம் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டது. விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. தமிழர்களை மீண்டும் தங்கள் ஊர்களில் வாழ்வதற்கு சிங்கள அரசு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்பது திண்ணம். அவர்களை எல்லாம் உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக செயலற்றுப்போக வைக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. தாங்கள் வாழ்ந்த வீடுகளைப் பற்றியோ ஊர்களைப் பற்றியோ மக்கள் நினைத்துப் பார்க்கக் கூடாத அளவில் மறந்துவிட வேண்டும். இராணுவ காவலோடு உள்ள முகாம்களில் காலமெல்லாம் வாழ்ந்து மடியவேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கு மொழி உணர்வோ இன உணர்வோ கொஞ்சம்கூட இல்லாமல் மழுங்கிப்போன மக்களாக விளங்குவார்கள் என சிங்கள அரசு கருதுகிறது.

இந்த மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து வெளியேறியவர்கள். இறுதி வரை அவர்களுடன் உறுதியாக நின்றவர்கள் என்ற காரணத்திற்காக அவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் சிங்கள அரசு நடந்து கொள்கிறது.

சிங்கள அரசின் திட்டம் குறித்து பல செய்திகள் கிடைத்துள்ளன. ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களை ஒழித்துவிட்டு அவர்கள் வாழ்ந்த இடங்களில் ஜெர்மானிய மக்களை குடியேற்றினர். ஜெர்மன் மக்களுக்கு வாழ்வதற்கு இடம் தேவை ஆகவேதான் யூதர்களை ஒழித்துக்கட்டியதாக இட்லர் கூறினர். அதே திட்டத்தைத்தான் இராசபக்சே இன்றைக்குச் செயல் படுத்துகிறார். தமிழர்களைப் படுகொலை செய்துவிட்டு எஞ்சிய தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்துவிட்டு அவர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களர்களைக் குடியேற்றத் திட்டமிட்டு இருக்கிறார். இராணுவம் கைப்பற்றிய இடங்களில் புத்த விகாரைகள் அவசர அவசரமாகக் கட்டப்படுகின்றன. விகாரைகளைச் சுற்றி சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.


"எதிர்காலத்தில் இலங்கையில் இரண்டு இனங்கள் தான் இருக்கும். ஒன்று சிங்கள இனம், மற்றொன்று சிங்கள கலப்பினம்"

என இராசபக்சே வெளிப்படை யாகவே கூறுகிறார். அதாவது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கி சிங்களக் கலப்பினத்தை தோற்றுவிப்பது அவரின் திட்டமாகும். தமிழ் இளைஞர்களை எல்லாம் தனிமைப்படுத்தி இராணுவம் கொன்று குவித்துவருகிறது.

தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்க் குழந்தைகள் சிங்களம் கற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். அரசு அலுவலகங்களில் இனி சிங்கள மொழி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி வேகவேகமாக தமிழர் பகுதிகளைச் சிங்கள மயமாக்கும் முயற்சி நடைபெறுகிறது. எதிர்காலத்தில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதே கேள்விக்குறியாக மாறிவிடும்.


சிங்கள அரசின் சதி

திடீரென இந்த நிலை ஏற்பட்டு விடவில்லை. புலிகளுடனான இறுதிப் போருக்கான ஆயத்தங்களை சிங்கள அரசு முன் கூட்டியே செய்தது.

1. இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் ஏராளமான ஆயுதங் களை வாங்கிக் குவித்தது.

2. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சிங்கள இராணுவ வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அதி நவீன பயிற்சிகள் அளித்தன. நவீன ஆயுதங்களை எப்படிக் கையாள்வது என்பதை கற்றுக் கொடுத்தன. சிங்கள இராணுவ வீரர்களில் 63 சதவீதம் பேர் இவ்வாறு பயிற்சி பெற்றவர்களே யாவார்கள்.

3. இந்தியக் கடற்படையும் சிங்களக் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளித்தது. பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகள் சிங்கள விமானிகளுக்குப் பயிற்சி அளித்தார்கள்.

4. இந்திய உளவு விமானங்கள் இந்துமாக்கடல் பகுதியில் புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டுவந்த கப்பல்களைக் கண்டறிந்து அவற்றை மூழ்கடிப்பதற்கு உதவின.

5. செய்மதிகள் மூலம் புலிகளின் நடமாட்டத்தையும் இருப்பிடத்தையும் கண்டறிந்து சிங்கள இராணுவத்திற்குத் தெரிவித்தன.

6. ஈவு இரக்கம் இல்லாமல் அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் கொலைவெறி இராணுவமாக சிங்கள இராணுவத்தை மாற்றினார்கள்.

7. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி களில் வாழ்ந்த புலிகளின் ஆதரவாளர் களையும் குடும்பத்தினரையும் வெள்ளை வாகனங்களில் கடத்திப் படுகொலை செய்தார்கள்.

8. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். எஞ்சிய உறுப்பி னர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உலக நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.

9. சிங்கள அரசைக் கண்டித்த நடுநிலையான சிங்களவர்களையும் ஊடகங்களைச் சேர்ந்தவர்களையும் புலி ஆதரவாளர்கள் எனக்கூறி படுகொலைச் செய்தார்கள்.

10. கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் கூலிப்படை தமிழர் களுக்கு எதிராக அட்டுழியங்களைச் செய்தது.

11. சர்வதேச ஊடகவியலாளரை நாட்டைவிட்டு வெளியேற்றினர்.

12. தொண்டு நிறுவனங்கள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், அய்.நா. அகதிகள் ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் திட்டமிட்டு வெளியேற்றப் பட்டனர்.

சாட்சி சொல்ல யாரும் இல்லாத நிலைமையை உருவாக்கிக்கொண்டு தமிழின அழிப்பு நடவடிக்கையை சிங்கள இராணுவம் தொடர்ந்தது.

ஐந்து ஆண்டுகாலத்திற்கு மேலாக சிங்கள அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமரசத் தூதராக செயல்பட்ட நார்வே பிரதிநிதிகளை அவமதிப்பான வகையில் சிங்கள அரசு வெளியேற்றியது. இதற்கு இந்தியாவும் உடந்தையாக இருந்தது. இலங்கை இனப்பிரச்சினையில் இருந்து நீங்கள் வெளியேறிவிடுவது நல்லது என நார்வே பிரதிநிதியான எரிக் சொல்கைம்மிடம் இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக அவரே கூறினார். அதாவது இலங்கைப் போரை இந்தியாதான் நடத்துகிறது. எனவே வேறு யாரும் அங்கிருக்கத் தேவையில்லை என்பதுதான் இந்திய அரசு சொன்ன செய்தியாகும்.

ஜே.வி.பி. நோக்கம்

சிங்கள தீவிரவாத இயக்கமான ஜேவிபி இயக்கம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இயக்கம் மட்டுமல்ல. இந்தியாவுக்கும் எதிரான இயக்கமாகும். அந்த இயக்கத்தின் தலைவர் சோமவன்ச அமரசிங்க என்பவர் போர் முடிவுற்ற பிறகு நடத்திய சிறப்புச் செய்தியாளர் மாநாட்டில் பின்வருமாறு அறிவித்தார்.

"விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவை விட அதிகமான உதவி செய்த நாடு உண்டென்றால் அது பாகிஸ்தான் ஆகும். எனவே இலங்கைப் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக அழுத்தம் கொடுக்க ஏனைய நாடுகளைவிட பாகிஸ்தானுக்கே முழு உரிமையும் தகுதியும் உண்டு. நமது நாட்டின் தேசியப் பிரச்சினைகளில் சர்வதேச அழுத்தங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் தீர்வுகாணப்போவதாக அதிபர் இராசபக்சே தெரிவித்திருக்கிறார். அப்படி யானால் 13-ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு தீர்வை முன்வைக்க முடியாது. 13-ஆவது திருத்த சட்டம் என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் தேவைகளுக்கான தீர்வுத்திட்டம் ஆகும். 1987-ஆம் ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்த இந்தியா எடுத்த முயற்சிகள் சிங்கள மக்களின் எதிர்ப்புகளால் தோல்விகண்டது.

இந்த உள்நாட்டுப் போரில் சிங்கள இராணுவம் வெற்றியடைவதற்கு கனரக ஆயுதங்கள் பாகிஸ்தான் வழங்கி உதவியது. அடுத்து சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் பெரும் உதவி அளித்தன. ஆனால் மேற் கண்ட 3 நாடுகளும் இலங்கையின் உள் விவகாரங்களில் அநாகரிகமான முறையில் தலையிடவில்லை. எவ்வித உள் நோக்கமும் இன்றி இலங்கைக்கு உதவி செய்தவர்களை புறக்கணித்துவிட்டு இலங்கையின் மீது எப்போதும் ஒரு கண் வைத்து கபடத்தனமாகவும் குள்ளநரி போலவும் காய்களை நகர்த்தும் இந்தியாவுக்கு இடமளிப்பது எந்த வகையிலும் நல்லதல்ல"

இதே சோமவன்ச அனுராதபுரத்தில் பேசியபோது யார் நமது எதிரிகள் என்ற கேள்வியை எழுப்பி அவரே அதற்குப் பதிலும் கூறினார். "முதலில் நார்வே, பிறகு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை நமது நிரந்தர எதிரிகள் ஆனால் இன்னொரு பகை மறைந்தி ருக்கிறது அதுதான் இந்தியா."

13ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஈழத் தமிழர் களுக்கு உரிமைகளை வழங்க இலங்கை அரசு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்திய உயர் அதிகாரி களும் அடிக்கடி கூறி வருகிறார்கள். ஆனால் இராசபக்சேயை வழி நடத்தும் ஜேவிபி இயக்கம் இதற்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. அந்த இயக்கத்தைப் பகைத்துக் கொண்டு இராசபக்சே ஒரு போதும் செயல்பட மாட்டார். எனவே இந்தியாவின் இந்த நம்பிக்கை வீணான நம்பிக்கை என்பது மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.


இந்திய நிலை - பின்னணி

இலங்கை இனப்பிரச்சினையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாகவும் இந்திய அரசு எடுத்துள்ள நிலைக்கு எவை காரணங்கள் என்பதை நாம் ஆராய வேண்டும். இந்திய அரசின் சார்பில் கீழ்க்கண்ட காரணங்களைக் கூறுகிறார்கள்.

1. இலங்கையில் நடைபெறுவது தமிழர்களுக்கு எதிரான போர் அல்ல. பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெறும் போராகும்.

2. புலிகளைத் தோற்கடிப்பது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.

3. இலங்கையில் சீனாவின் கை மேலோங்காமல் இருப்பதற்கு சிங்கள அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

4. ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரிப்பது தமிழ்நாட்டில் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும்.

5. இந்தியாவின் நட்பு நாடாக இலங்கையை வைத்திருக்க வேண்டும்.

மேலே கண்ட காரணங்கள் எந்த வகையிலும் சரியானவை அல்ல. பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்று சொன் னால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது ஏன்? தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரையே சிங்கள அரசு நடத்தி வருகிறது என்ற உண்மையை இந்திய அரசு மறைக்கிறது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு புலிகள் ஒருபோதும் எதிரான நிலை எடுத்ததில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எவற்றிடமும் விடுதலைப்புலிகள் எந்த உதவியையும் நாடியது மில்லை. பெற்றதுமில்லை. அவர்கள் நினைத்திருந்தால் சுலபமாக பெற்றி ருக்க முடியும். தமிழர் தாயகப் பகுதியில் அந்நிய வல்லரசுகளின் இராணுவத் தளங்கள் அமைவதற்கு எதிராகவும் புலிகள் போராடி வந்திருக் கிறார்கள். இன்னொரு வகையில் அத்தகைய தளங்கள் அமைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை புலிகள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள். எனவே அவற்றை எதிர்த்துப் போராடினார்கள். இந்தியாவின் பாதுகாப்புக்காக போராடிய புலிகளுக்கு உதவ வேண்டிய இந்தியா அதற்கு நேர்மாறாக அவர்களுக்கு எதிரான சிங்களருக்கு உதவியிருப்பது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதற்கு சமமாகும்.

இலங்கையில் சீனாவின் கை மேலோங்காமல் இருப்பதற்காகவே சிங்கள அரசுக்கு ஆதரவு அளிப்பதாக இந்தியா கூறுவது அப்பட்டமான ஏமாளித்தன மானது. இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றிவிட்டது.

ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கும் என்று கூறுவது எதிர்மறையான அணுகுமுறை யாகும். வங்க விடுதலைப் போராட்டத்திற்கு இந்தியா உதவ முன்வந்தபோது, இந்தியாவிலும் ஒரு வங்கம் இருக்கிறது. இரண்டு வங்கங்களும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒன்றாக இருந்தவை. எனவே கிழக்கு வங்கம் சுதந்திரம் பெற உதவினால் இந்தியாவில் உள்ள மேற்கு வங்கமும் பிரிந்து போய்விடும் என்ற கருத்து அப்போது யாருக்கும் எழவில்லை. வங்காளி மீது வராத சந்தேகம். எதற்காக தமிழர்கள் மீது வருகிறது?

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு தமிழீழமும் தமிழகமும் வெவ்வேறு நாடுகளாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. இரண்டும் இணைந்து ஒரே நாடாக ஒருபோதும் இருந்ததில்லை. ஈழத் தமிழர்கள் விடுதலைபெற உதவினால் தமிழ்நாடு அதற்கு நன்றி பாராட்டும். ஆனால் அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இந்தியா துணை நிற்கிறது என்ற செய்தியே தமிழக மக்கள் மத்தியில் ஆறாத கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள அரசுகள் பல கட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் கை கோர்த்திருக்கின்றன. இந்தியாவின் மீது சீனா படையெடுத்தபோதும், வங்காளதேசப் போராட்டம் நடைபெற்றபோதும். இந்தியா வுக்கு எதிராகவே இலங்கை செயல் பட்டது. இப்போதும் இந்தியாவுக்கு எதிரான நாடுகளான சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இலங்கையில் தளங்கள் அமைக்க உதவி யுள்ளது. இலங்கை ஒருபோதும் இந்தியா வுக்கு உண்மையான நட்பு நாடாக இருந்ததில்லை.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது இப்படியொரு தவறான தளத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது. ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி போன்ற பெரும் தலைவர்கள் வகுத்து வழிநடத்திய வெளியுறவுக் கொள்கை என்பது இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரி களால் வழிநடத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அரசின் வெளியுறவுத் துறையில் மலையாளிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக சிவசங்கரமேனன், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன், ஜெனீவாவில் மனித உரிமை ஆணையத்தில் இந்தியப் பிரதிநிதியாக கோபிநாத் அச்சம் குளங்கரே, அய்.நா. பொதுச்செயலாளரின் அலுவலக தலைமை அதிகாரியாக விஜய்நம்பியார், இந்திய அமைச்சரவையின் செயலாளராக பி.கே.நாயர் ஆகிய மலையாளிகள் அமர்ந் திருக்கிறார்கள். இவர்கள்தான் இலங்கை பற்றிய இந்திய அரசின் தவறான கொள்கை வகுப்பாளர்கள். அதுமட்டுமல்ல. அய். நாவில் உயரதிகாரியாக இருக்கும் விஜய் நம்பியாரின் சொந்த சகோதரர். லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா என்பவர் இந்திய இராணுவத்தில் உயரதிகாரியாக பதவி வகித்தவர். பிறகு அய்.நா அமைதிப் படையில் பதவி வகித்தவர். 2002-ஆம் ஆண்டிலிருந்து சிங்கள இராணுவத்திற்கு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி குறித்த அத்தனை உண்மை களையும் விஜய நம்பியார் அறிவார். ஆனால் அய்.நா. பொதுச்செயலாளருக்கோ மற்ற நாடுகளுக்கோ தெரியாமல் அவற்றை அவர் மறைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.

மேற்கண்ட அதிகாரிகள் அனை வரும் தமிழர்களுக்கு எதிராகவே செயல் பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருக்கு உலக பிரச்சினைகள் குறித்து எதுவும் தெரியாத நிலையில் இந்த அதிகாரிகள் கூறும் ஆலோசனையின்படி அவர்கள் நடந்துகொள்கிறார்கள். சில வேளைகளில் இந்த அதிகாரிகள் பிரதமர் கருத்துக்கு எதிராகவும் பகிரங்கமாகவே செயல்படுகிறார்கள்.

10-06-09 அன்று வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கரமேனன் "இலங்கை இனப்பிரச்சினையில் இனி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லமாட்டோம், அப்படி சொல்வது இந்தியாவின் வேலை அல்ல. இது தொடர்பாக அதிபர் இராசபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நான் நடத்தினேன் என்று இலங்கை அதிபர் இராசபக்சே சொன்னது ஒருவகையில் சரிதான். இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்பு டன் பின்னிப் பிணைந்திருக்கிறது. இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறு த்தல் ஏற்படும் போது இந்தியா பாதுகாப்பாக இருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு முன் தினம் இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் "இலங்கையில் சிங்களவர் களுக்குச் சமமான உரிமைகளை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளவேண்டும்" என வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் அதைக் கொஞ்சமும் மதிக்காத வகையில் ஒரு அதிகாரியான சிவசங்கரமேனன் நடந்துகொள்கிறார்.

இலங்கை இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரசியா, மேற்குநாடுகள், ஈரான், பாகிஸ்தான் ஆகியவை சிங்கள அரசுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவிகளை வழங்கி வந்திருக்கின்றன. இந்நாடுகளுக்கிடையே பகைமை இருந்தாலும் சிங்கள அரசுக்கு உதவுவதில் ஒன்றாக உள்ளன. நார்வே நாட்டின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் அங்கு நிரந்தரமான அமைதி நிலவவேண்டு மானால் சிங்கள அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே படை வலு சம நிலையில் பேணப்பட்டிருக்க வேண்டும். போஸ்னியா போன்ற பிரச்சினைகளில் உலக நாடுகள் இந்த அணுகுமுறையைத் தான் கையாண்டன. ஆனால் இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் போர்நிறுத்த காலத்தில் சிங்கள இராணுவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு மேற்கண்ட நாடுகள் அனைத்தும் உதவின.

தமிழர் பகுதிகள் மீது சிங்கள அரசு பொருளாதாரத் தடை விதித்தபோது உலக நாடுகள் அதைக் கண்டிக்கவில்லை. இந்திய - இலங்கை உடன்பாட்டின்படி இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாநிலங்களை சிங்கள அரசு மீண்டும் பிரித்தபோது இந்திய அரசும் ஏன் என்று கேட்கவில்லை. உலக நாடுகளும் ஒதுங்கிக் கொண்டன.

விடுதலைப்புலிகளின் வினியோகக் கப்பல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல் கள், புலிகளின் நகர்வு தொடர்பான செய் மதித் தகவல்கள் கடற்புலிகளின் நடவடிக் கைகள் தொடர்பான தகவல்கள் சிங்கள அரசுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்டு வந்தன. தமிழ்நாட்டுக் கரையோரங்களில் வான்பாதுகாப்பு ராடர்களை நிறுவியதன் மூலம் வான்புலிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்கும் முயற்சி களிலும் இந்தியா ஈடுபட்டிருந்தது.

சமரச முயற்சியிலிருந்து நார்வே அகற்றப்பட்டபோது இந்தியா மகிழ்ந்தது. இலங்கையின் ஆட்சியாளர்கள் இனி இந்தியாவை நம்பியிருப்பதைத் தவிர வேறுவழியில்லை என கருதியது. ஆனால் இந்தியாவுக்கு பிராந்திய எதிரிகளாக உள்ள சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை நோக்கியே இலங்கை நகர்ந்ததே தவிர இந்தியாவை நாடி வரவில்லை.


இந்தியாவின் துரோகம்

குதிரை கீழே தள்ளியதல்லாமல் குழியையும் பறித்த கதையாக ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள இராணுவத்திற்கு எல்லாவகையிலும் உதவி செய்த இந்தியா அந்நாட்டின் போர்க் குற்றங்களை மறைக்கவும் உதவியுள்ளது.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் சீர்குலைவு பற்றி ஆராய 2009 அன்று மே இறுதியில் 20 நாடுகளின் ஆதரவுடன் சுவிட்சர்லாந்து நாடு ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தது. சுவிட்சர்லாந்து விண்ணப்பத்தை மறுத்து இலங்கைத் தூதர் ஒரு தீர்மானத்தை அனுப்பினார். இலங்கயின் தீர்மானத்தில் ஒரு நாட்டின் உள்நாட்டு நடவடிக்கை களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடது என வற்புறுத்தப்பட்டது. ஆனால் சுவிட்சர் லாந்து நாட்டின் தீர்மானத்திற்கு பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு இல்லை என்பதால் இலங்கை அரசின் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. 27-5-09 அன்று நடைபெற்ற அய்.நா மனித உரிமை அமைப்பின் கூட்டத்தில் இலங்கை தீர்மானத்திற்கு 29 நாடுகளின் ஆதரவும் 12 நாடுகளின் எதிர்ப்பும் இருந்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

சுவிட்சர்லாந்து நாட்டின் தீர் மானத்தை முதலில் மனித உரிமை அமைப்பு எடுத்துக்கொண்டபோது. இந்தியா அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தது. இலங்கை தீர்மானம் குறித்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் இணைந்து திரட்டிய ஆதரவின் பேரில் 29 நாடுகள் வாக்களித்தன.


இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவரமும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாத முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ர வதை செய்யப்படுவதும். அண்டை நாடான இந்தியாவிற்கு தெரியாமல் இல்லை. அப்படியிருந்தும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகச் செயல் பட்டிருப்பது மன்னிக்க முடியாத ஒன்றாகும்.

அதுமட்டுமல்ல 2008ஆம் ஆண்டு மே மாதத்தில் இதே மனித உரிமை அமைப்புக்கு 4 நாடுகளை தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இலங்கையும் போட்டி யிட்டது. உலகிலேயே மனித உரிமைகளை மிகவும் சீரழிக்கும் நாடான இலங்கைக்கு உலக நாடுகள் எதுவும் ஆதரவு தரக் கூடாது என உலக அளவில் இயங்கிய முக்கியமான மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தேர்தலில் இந்தியா இலங்கையையே ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இலங்கை படுதோல்வியடைந்தது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அய்.நா. மனிதஉரிமை விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளை 6-6-09 அன்று வலியுறுத்தி இருந்தார். அவரின் இந்த கருத்துக்கு அய்.நா மனித உரிமைக் குழுவின் இந்தியப் பிரதிநிதி கோபிநாத் அச்சம் குளங்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஈழத்தமிழர் பிரச்சினை தனக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத இன்னொரு நாட்டு பிரச்சினைபோல இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அமைக்கப்பட்டி ருப்பதுதான் இதற்குக் காரணமாகும். அதிலும் குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி எல்லா வகையிலும் இராசபக்சேயின் அரசை வருடிக் கொடுப்பதையும், குளிர்விப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தார். சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் நடுவில் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பேசும்போது இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் போரை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஆனால் இதை அடுத்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பிரணாப் முகர்ஜி மக்களவையில் அளித்த அறிக்கையில் "இலங்கை இனப் பிரச்சினை அண்டை நாட்டின் பிரச்சினை, இதில் தலையிடவோ அல்லது போரை நிறுத்துங்கள் என கட்டளையிடவோ இந்தியாவுக்கு அதிகாரமில்லை" எனக் குறிப்பிட்டார். இதனால் இராசபக்சே அரசு மேலும் துணிவுபெற்றது. ஆகவேதான் அவர் ஒருமுறை அல்ல பலமுறை கீழ்க்கண்ட இரண்டு கருத்துக்களை திரும்பத் திரும்பக் கூறினார்.

1. போர் நிறுத்தம் செய்யும்படி இந்திய அரசு ஒருபோதும் இலங்கையிடம் கூறவில்லை.

2. விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்தியா நடத்தவேண்டிய போரை, இலங்கை நடத்துகிறது.

இராசபக்சே யாரோ எவரோ அல்ல. ஒரு நாட்டின் அதிபர். அவர் மேற்கண்டவாறு பலமுறை கூறியதை இந்திய அரசு ஒருபோதும் மறுக்கவில்லை. ஏன்? அப்படியானால் அதன் பொருள் என்ன?

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்று வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்தி இருப்பதாக பலமுறை கூறினார்.

9-4-09 அன்று இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அண்ணா சமாதியில் சாகும் வரை உண்ணா நோன்பை மேற்கொண்டார். 5 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக இந்திய அரசிடமிருந்து செய்தி வந்திருப்பதாகக் கூறி உண்ணாநோன்பை முடித்துக் கொண்டார். ஆனால் அன்றைய தினமே சிங்கள இராணுவமானது அப்பாவி தமிழர்கள் மீது விமானகுண்டு வீசி தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக் கானவர்களை கொன்று குவித்தது என்பதுதான் உண்மை. ஆக திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக இது போன்ற நாடகங் களை இந்திய அரசும் தமிழக முதல்வரும் நடத்தினார்களே தவிர, அங்கு உண்மை யில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் எதையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதை இராச பக்சேயின் கூற்றும் அம்பலப்படுத்தியது.


தமிழகத்தின் கடமை

தமிழீழப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதற்கான முழுப் பொறுப்பும் தமிழ்நாட்டு மக்களிடம்தான் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 6 மாத காலமாக நடைபெற்றுவந்த போராட்டங்களும் அவற்றின் விளைவாக உருவான எழுச்சியும்தான் உலகத்தமிழர்களின் எழுச்சிமிக்க போராட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே தான் தமிழகத்தின் எழுச்சியை திசை திருப்புவதற்காகவும் மழுங்கடிப்பதற் காகவும் இந்திய அரசின் கொள்கை வகுப் பாளர்களும், இந்திய உளவுத் துறையான "ரா" அமைப்பும் மிகக்கடுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற் கொண்டனர்.

தமிழகத்திலிருந்து ஆயுதங் களையும் வெடிப் பொருட்களையும் புலிகள் கைப்பற்றியதாகவும் தமிழக மீனவர்களைப் புலிகள் கடத்தியதாகவும் "ரா" உளவுத்துறை திட்டமிட்டு பொய்யான செய்திகளைப் பரப்பியது. இதற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முழுமை யான ஒத்துழைப்புக் கொடுத்தார். ஆனாலும் தமிழகத்தின் எழுச்சி கொஞ்சமும் குறையவில்லை. நாளுக்கு நாள் வளர்ந்தோங்கியது. இதன் உச்சக்கட்டமாக தி.மு.க., அ.தி.மு.க. அணி களிலிருந்த பல கட்சிகளும் இந்த இரு அணிகளைச் சாராத கட்சிகளும் ஒன்றி ணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி அதன் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள், மனிதச் சங்கிலிகள், பேரணிகள், கருப்புக் கொடி ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தின. இதன் விளைவாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி உச்சக்கட்டத்தை அடைந்தது. இதன் விளைவாக தமிழக ஆளும் கட்சிக்கு ஈழப்பிரச்சினையில் ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

14-10-08 அன்று முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றிணைக் கூட்டினார். அந்தக் கூட்ட த்தில் இருவாரக் காலத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட உரிய நடவடிக்கை களை இந்திய அரசு மேற்கொள்ளா விட்டால் தமிழகம் - புதுச்சேரியைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானம் ஒரே மனதாக நிறைவேற்றப் பட்டது. இந்தத் தீர்மானம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திற்று. அதே வேளையில் உலகெங்கும் இருந்த தமிழர்கள் உற்சாகமும் புதிய நம்பிக்கை யையும் பெற்றார்கள்.


இதன் விளைவாக பிரதமர் மன் மோகன்சிங் உடனடியாக இலங்கை அதிபர் இராசபக்சேவுடன் தொலைப்பேசியின் மூலம் பேசி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாயின. இதன் பிறகு வெளியுறவுத்துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு தனக்கு மனநிறைவை அளித்திருப்பதாகவும் இந்திய அரசு சரியான வகையில் செயல்படுவதாகவும் அறிவித்த முதலமைச்சர் கருணாநிதி நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை என அறிவித்தார். 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முடிவு செய்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தன்னிச்சையாகக் கைவிடும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை. மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அக்கூட்டத்தில் பிரணாப்முகர்ஜி தெரிவித்த கருத்துக்களை கூறி அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலைப் பெற்று அதற்குப் பின்னர் இவர் அறிவித்திருந்தால் சரியானதாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு முதலமைச்சர் தவறிவிட்டார். அனைத்துத் தலைவர்களின் நிர்ப்பந்தத் திற்கு பணிந்து நாடாளுமன்ற உறுப்பினர் கள் பதவி விலகவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் மத்திய ஆட்சிக்குப் பணிந்து அக் கருத்தை கைவிட்டுவிட்டார்.


உளவியல் சமர்

உலகம் முழுவதிலும் ஏறத்தாழ 9 கோடி தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இதில் மிக மிக அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறார்கள். இந்த ஆறரைக்கோடி தமிழர்கள் ஈழத்தமிழ் மக்களுக்காக அணி திரளும்போது அதற்கான வலிமை என்பது மிக மிக அதிகமானதாகும். அனைத்து லகத்திலும் அதனால் ஏற்படும் தாக்கம் மிக அதிகமானதாகும். ஒட்டுமொத்த தமிழகமும் அணி திரண்டு ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுக் கரத்தை நீட்டும்போது இந்திய அரசு மட்டுமல்ல உலகநாடுகளும் சிந்திக்க முற்படும்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட மாபெரும் எழுச்சி இந்திய அரசின் இரட்டை வேடத்தை உலகத் தமிழர் களுக்கு இனங்காட்டியது. ஈழத்தமிழரை அழித்தொழிக்க சிங்கள பேரின வாதத்திற்குத் துணைபோகும் இந்திய அரசுக்கு எதிராக உலகத் தமிழர்கள் நடுவில் கொதிப்புணர்வு உருவாகியுள்ளது. இதை சிதைக்க வேண்டும் என்று இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இலங்கையில் புலிகளின் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் மீண்டும் அந்தப் போராட்டம் சிலிர்த்தெழுந்துவிடக்கூடாது என இந்திய அரசு நினைக்கிறது. மீண்டும் விடுதலைப் புலிகளின் எழுச்சி உருவாகி விடக்கூடாது என கருதும் இந்தியா அதற்கான சூழ்நிலைகள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து வரக்கூடும் என கருதுகிறது.

எனவேதான் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீது உளவியல் ரீதியான சமர் ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டு ள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்பதைப் பற்றி பல செய்திகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு அதனடிப் படையில் எழும் விவாதங்கள் விரிவடைந்து நீண்டு செல்ல வேண்டும் என இந்தியா விரும்பு கிறது.

இந்திய அரசின் இந்த சதித் திட்டத்தை முறியடிக்கவேண்டிய கடமை தமிழகத் தமிழர்களுக்கு உண்டு. அவர்கள் அதை சரிவரச் செய்வார்களானால் புலம் பெயர்ந்த தமிழர்களும் புத்துணர்வோடும் புதிய நம்பிக்கையோடும் செயல்படுவார்கள். தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.


புலிகளின் போர் நமது போர்

நான்காம் ஈழப்போரில் சிங்கள இராணுவம் வெற்றிப் பெற்று விட்டதாகத் தம்பட்டம் அடிக்கலாம். ஆனால் உலக அளவில் ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.


உலகின் முக்கிய நாடுகள் பலவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பயங்கரவாதப் பட்டத்தைச் சுமத்தி அதற்குத் தடை விதித்திருக்கும் சூழலில் அந்த நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் எங்கள் சுதந்தி ரத்தை வென்றெடுக்கப் போராடும் போராளிகள் என உரத்தக் குரலில் முழக்கமிட்டனர். புலிகளுக்கு எதிரான போர் தமிழர்களுக்கு எதிரான போர் என்றும் அவர்கள் உலகிற்குப் பறையறைந்து தெரிவித்தனர்.

புலிகளுக்குத் தடை விதித்திருக்கும் நாடுகளில் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் புலிக் கொடிகளைத் தாங்கி பிரபாகரனின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை பிடித்த வண்ணம் உணர்ச்சி மயமான ஊர்வலங்களை நடத்திய போது அந்த நாடுகளின் காவல்துறையும் சட்டங்களும் திகைத்துத் திணறி நின்றன.


நீண்ட காலமாக தமிழர்களின் போராட்டங்களுக்கு செவி சாய்க்காத உலகம் இன்று புலிக் கொடிகளோடு தமிழர்கள் தெருக்களில் இறங்கிய பிறகுதான் தமிழர் பிரச்னைகளில் கவனத்தைத் திருப்புகிறது.


உலக நாடுகளில் மட்டுமல்ல. ஆறரைக் கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலும் மக்கள் மாபெரும் எழுச்சிப் பெற்றுள்ளனர். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவதே குற்றம் என அடக்கு முறைச் சட்டங்கள் சீறிப் பாயும் காலக்கட்டத்தில் தமிழகத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவம் பொறித்த பதாகைகளை தூக்கிப் பிடித்த வண்ணம் பல்லாயிரக் கணக்கான மக்கள் தமிழக வீதிகளில் திரண்ட போது ஆளும் வர்க்கம் அதிர்ந்தது. இந்தப் போராட்டங் களைத் தடுக்க அது துணியவில்லை. மக்களும் அடக்குமுறைகளுக்கோ கொடிய ஆள் தூக்கிச் சட்டங் களுக்கோ அஞ்சி ஒடுங்கும் நிலையிலும் இல்லை.

தமிழ்நாட்டு மக்களின் இந்த மகத்தான எழுச்சிதான் உலகத் தமிழர்களின் பேரெழுச்சிக்கு வழிகாட்டியது.

பெரும் பொறுப்பும் கடமையும் தமிழ்நாட்டுத் தமிழர்களை எதிர்நோக்கி நிற்கின்றன. சாவின் விளிம்பில் நிறுத்தப் பட்டிருக்கும் ஈழத் தமிழினம் நம்மைத்தான் பெருநம்பிக்கையோடு எதிர்நோக்கி நிற்கிறது.


2000 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட தமிழர் வரலாற்றில் நெருக்கடி யான காலக்கட்டம் இது. இதிலிருந்து ஈழத் தமிழினம் மட்டுமல்ல நாமும் மீண்டாக வேண்டும். நம்மை எதிர்நோக்கி நிற்கும் அறைகூவல்களை துணிவோடு சந்தித்தாக வேண்டிய கட்டம் இது. இந்த காலக் கட்டத்தில் எவ்வித கலக்க மில்லாமலும் சோர்வில்லாமலும் நமது கடமையை நாம் செய்தாக வேண்டும்.

இந்திய, சீனா, பாகிஸ்தான் போன்ற அணு ஆயுத வல்லரசுகளின் துணை யோடு போராடும் சிங்கள வல்லரக்கர்களை எதிர்த்து தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் புலிகளும் ஈழத் தமிழர்களும் களத்தில் போராடி வருகின்றனர். எவ்வளவோ இழப்புகளுக்கு நடுவே உறுதியாக அவர்கள் நிற்கின்றனர். அவர்களுக்குத் தோள் கொடுத்து துணை நிற்க நம்மைத் தவிர வேறு யாரும் இல்லை. இதைத் தவிர நமக்கு வேறு முக்கிய கடமையும் இல்லை.


நம்மை குழப்பவும் சோர் வடையச் செய்யவும் பிரபாகரன் குறித்த பொய்யானச் செய்திகளை இந்திய ரா உளவுத் துறையும் ஊடகங்களும் பரப்புகின்றன. நெடி துயர்ந்து நிற்கும் தமிழ்ப் பொதிகை மலை போல அந்தத் தலைவன் களத்தில் காலூன்றி நிற்கிறான். முழுமதியை சில நேரங்களில் மேகங்கள் மறைக்கலாம். ஆனால் நிரந்தரமாக மறைத்து விட முடியாது. முகிலை கிழித்து முழு மதி முன்னிலும் ஒளிவிட்டு மின்னும். தலைவர் பிரபாகரனும் முன்னிலும் அதிகமான துடிப்புடன் நம்மை வழிநடத்துவார்.

தமிழர் வரலாற்றில் பிரபாகரனைப் போன்ற ஒரு வீரன் பிறந்ததில்லை என மறைந்த முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதன் அவர்கள் ஒரு முறை மன நெகிழ்ச்சியுடன் கூறினார். கல்லின் மேல் எழுத்துப் போன்ற அந்த சொற்களை மனதில் பதிய வையுங்கள். வாராது போல் வந்த மாமணியாக அந்த தலைவன் வாழும் காலத்திலேயே தமிழீழம் மலரும். அதன் மூலம் உலகத் தமிழர்களுக்கும் விடிவுப் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்குவோம். கடமையாற்றுவோம்.

தமிழக வரலாற்றில் ஈழத் தமிழர் களுக்கு ஆதரவாகத் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்ட தியாக சீலர்கள் நம் காலத்தில் வாழ்ந்தார்கள். நம் கண் முன்னாலேயே மறைந்தார்கள். முத்துக் குமார் தொடக்கி வைத்த இந்த தியாக காவியத்தில் தமிழகத்தில் 13 தோழர்களும் வெளிநாடுகளிலும் 3 தோழர்களும் என்றும் அழியாத இடம் பெற்றுள்ளனர். அவர்கள் எதற்காக தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டார்கள்? வாழ வேண்டிய வயதில் தங்கள் குடும்பங்களை குறித்தோ, வேறு எதைப் பற்றியுமோ சிந்திக்காமல் ஈழத் தமிழ்ச் சகோதரர்களுக்காக தியாகத் தீப்பிழம்புகளாக மாறி எரிந்து சாம்பலான இவர்களின் உன்னதமான தியாகம் ஒரு போதும் வீணாகக் கூடாது. அந்த தியாக தீபங்களின் சுடரொளியில் தமிழகத்தில் பரவியிருக்கும் இருளை அகற்றுவோம். அந்த வழிகாட்டும் ஒளியில் இலட்சியப் பாதையில் முன்னேறுவோம்.

Friday, June 26, 2009

கண்ணீரைத் துடையுங்கள்! களத்திற்கு வாருங்கள்!! பெ.மணியரசன்

காத்திருந்து தமிழினத்தைக் காவுகொண்டுவிட்டது இந்தியா. நயவஞ்சகத்தை மறைத்திட, நளினப்பேச்சு; கூட்டங் கூட்டமாகக் கொல்வதை மறைத்திட, “பொதுமக்களுக்குப் பாதிப்பில்லாமல் போர் நடத்துக” என்னும் போலிக்கூற்று; விடுதலை இயக்கத்தைக் குருதி வௌ;ளத்தில் மூழ்கடிக்கும் வெறியை மறைத்திட, ‘அரசியல் தீர்வு’ என்னும் ஆசை மொழி. ஈழத் தமிழினத்தை ஒழித்துக்கட்ட இந்தியா கையாளும் உத்திகள் இவை!

ஆறுகோடித் தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் அருகில் நம் இனம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆயிரக்கணக்கில் காக்கை, குருவிகளைச் சுட்டுக்கொன்றால் கூட, உலக நாடுகள் தலையிட்டு, உயிர்வதை கூடாது என்றும், உயிரிச் சமன்பாட்டில் ஊனம் ஏற்படும் என்றும் கூறித் தடுத்திருக்கும். ஆனால் தமிழ் இனம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த ஒரு நாடில்லை. பத்துக்கோடித் தமிழர்கள் நிலக்கோளமெங்கும் பரவிக்கிடந்தாலும், நமக்கென்று ஒரு நாடில்லை, ஓர் அரசு இல்லை. அரசியல் அநாதைகளாய்க் கிடந்து அழிகிறோம்.

சிங்களப்படையின் குண்டு வீச்சிலிருந்து உயிர்தப்ப, பதுங்கு குழிகளுக்குள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பலநாள் படுத்திருந்த சிறுவர்கள் பட்டினியால் துடித்துத்துடித்துச் செத்துப்போனார்கள். உயிர் பிழைக்க வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் அவர்களின் மரணக் குழிகள் ஆயின. அடுக்கப்பட்டது போல் கிடந்த அச்சிறுவர்களின் பிணங்களை அப்படியே மண் போட்டு மூடினார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் இப்படித்தான் பதுங்கு குழிகளுக்குள் படுத்து மரணத்தைத் தழுவினர்.

பன்னாட்டுச் சட்டங்களும், ஐ.நா. மன்றமும் தடை செய்துள்ள பாஸ்பரஸ் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் வீசி இலட்சக்கணக்கான தமிழர்களைக் கடந்த சில மாதங்களில் மட்டும் கொன்றது சிங்களப்படை. உறுப்புகளை இழந்தும் தசைகள் அறுந்தும் உயிருக்குப் போராடியோர்க்கு மருத்துவ வசதி கிடையாது. அவர்களுக்குச் சிகிச்சையளித்த தமிழின மருத்துவர்களான சண்முகராசா, சத்தியமூர்த்தி, வரதராசா ஆகியோரைச் சிறையிலடைத்தார் இராசபட்சே. அம்மக்களுக்கு ஆதரவு காட்டியதற்காக மாவட்ட ஆட்சியர் பார்த்திபனைச் சிறையிலடைத்தார்.

விடுதலைப்போரில் உலகம் வியக்க வீரமும், போர் உத்திகளும் காட்டிய தளபதிகள் சொர்ணம், தீபன், ரமேசு, பெண் தளபதிகள் விதிஷா, துர்க்கா எனப் பலர் வீரச்சாவெய்தினர். மேலை நாடுகள் சிலவற்றின் முயற்சியில் கடைசி நேரத்தில் போர் நிறுத்தப்பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்களப்படை அழைத்ததின் போரில், வௌ;ளைக்கொடியுடன் பேச்சு நடத்தப்போன அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன், அமைதிப்பேச்சுச் செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்டோரை சிங்களப்படை சுட்டுக்கொன்றது.

வெற்றிவாகை சூடிக்கொண்டதாக இராசபட்சே அறிவித்த அந்தக்கடைசி இருநாட்களில் (!6, 17.05.209), உயிர்காக்க அங்குமிங்கும் அலமந்து ஓடிய மக்களை எறிகணைகளாலும் எந்திரத் துப்பாக்கிகளாலும் குறி இலக்கு எதுவுமின்றி கைபோன போக்கில், கண்போன போக்கில் சுட்டுப் பல்லாயிரக்கணக்கானோரைப் பிணமாக்கினர். படுகாயமுற்று மருந்தின்றி துடித்துத் துடித்துச் செத்தோர் பல ஆயிரம் பேர். கடைசி நாட்களில் இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டதாக டைம்ஸ் ஏடு குறிப்பிடுகிறது.

போரில் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆன குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாய் இருந்து பிரபாகரன் காப்பாற்றினார். அந்த ஆயிரத்து ஐநூறு குழந்தைகள் என்ன ஆனார்கள்? எப்படி மரித்தார்கள் ? யார் அறிவார்? சாட்சியில்லாத, சாவுக் களமாயிற்றே அது! ஐ.நா.மனித உரிமைகள் அமைப்போ அல்லது செஞ்சிலுவைச் சங்கமோ எதையுமே அங்கு அனுமதிக்கவில்லை. உலக நாடுகளின் ஊடகத்துறையினரை போர்க்களப்பகுதியில் அனுமதிக்கவில்லை.

ஆரிய ரத்னாவான ஸ்ரீலங்கா ரத்னா என். ராமின் ‘இந்து’ ஏட்டின் செய்தியாளர் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டார். தமிழ் இன எதிர்ப்பில் சிங்கள வெறியர்களையும் விஞ்சிய ஏடான ‘இந்து’ உண்மைச் செய்திகளைத் தராது. சிங்களப்படை உருவாக்கிய செய்தியை அந்நோக்கில் மேலும் மெருகேற்றித் தந்து கொண்டிருக்கிறது.

மூன்றரை லட்சம் தமிழர்களை “இடைத்தங்கல் கூடாரம்”, “நல் வாழ்வுச் சிற்றூர்’ என்ற பெயர்களில் உள்ள இட்லர் கால வதை முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிடாதபடி, மின்கம்பி வேலி எடுத்துக் காவல் புரிகின்றனர் சிங்களப் படையாட்கள். இந்த வதை முகாம்களில் படுகாயமுற்றுத் துடிக்கும் தமிழர்களின் சிறுநீரகம், கண்கள் போன்ற பல உறுப்புகளை அறுத்து எடுத்து சிங்களர்களுக்குப் பயன்படுத்த கொழும்புக்கு அனுப்புகிறார்களாம். அதுவும் மயக்கமருந்து கூட கொடுக்காமல் அறுக்கிறார்களாம். இந்தக் கொடுமைக்கு முடிவே இல்லையா?

எவ்வளவு காலத்திற்கு, இந்த மந்தை அடைப்புகள் நீடிக்கும்? இராசபட்சே சொல்கிறார் “குறைந்தது மூன்றாண்டுகளுக்காவது இவர்கள் இங்கே தங்கியிருக்க வேண்டும் ; அவர்களின் சொந்த ஊர்களில் அவர்களின் வீடுகள் போரில் நாசமடைந்துவிட்டன. புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். அந்த ஊர்களில் புலிப்படை கண்ணி வெடிகளைப் புதைத்துள்ளது. அவற்றை அகற்ற வேண்டும். இதையெல்லாம் செய்ய மூன்றாண்டுகள் தேவை” என்கிறார். ஆனால் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் சொந்த வீடுகளில் சிங்களரைக் குடியேற்றிக் கொண்டுள்ளார் இராசபட்சே. தமிழர்களின் ஊர்களைச் சிங்கள மயமாக்கிக் கொண்டுள்ளார். தமிழர்களுக்கெனத் தாயகப்பகுதியாக, வரலாற்றுக் காலம் தொட்டு இருக்கும் மண்ணை சிங்களர் குடியேற்றங்களாக மாற்றுகிறார். தமிழர் தாயகத்தை அழிப்பதே அவர் நோக்கம்.

எதிர்காலத்தில் எஞ்சியுள்ள, தமிழர்களிடையே, உதவித்தொகைகள் மூலம், போதைப்பழக்கத்தையும், பாலியல் சிதைவுகளையும் ஏற்படுத்தி, ஒரு தேசிய இன உணர்வற்று, சிங்களரை அண்டிப்பிழைக்கும் மக்களாகத் தமிழர்களை ஆக்கவேண்டும் என்பது இலங்கை அரசின் திட்டம்.

அமெரிக்காவில் புதிதாகக் குடியேறிய ஆங்கிலேயர்களும் மற்ற ஐரோப்பிய இனத்தவரும், வரலாற்றுக் காலம் தொட்டு அங்கு வாழ்ந்துவந்த மண்ணின் மைந்தர்களாகிய செவ்விந்தியர்களைப் போரிட்டுத் தோற்கடித்தனர். அதன்பின் உதவித்தொகைகள் மூலம் அவர்களிடம் இடைவிடாத போதைப் பழக்கத்தையும், வரம்பற்ற பாலியல் நாட்டத்தையும் உருவாக்கினர். இன்று செவ்விந்தியர்கள், வந்தேறிகளான வௌ;ளையரை எதிர்க்கவில்லை. அவர்களை அண்டிப் பிழைக்கின்றனர். அந்த அடிமை நிலைக்குத் தமிழர்களைக் கீழே தள்ளுவது தான் சிங்கள அரசின் திட்டம்.

இவ்வளவு பெரிய இனப் பேரழிவு இந்திக்காரர்களுக்கோ, வங்காளிகளுக்கோ, மலையாளி களுக்கோ அல்லது வேறு இனத்தவர்க்கோ எங்காவது அடுத்த நாட்டில் நடந்திருந்தால் இந்தியா இப்போது இருப்பதைப் போல் அமைதி காத்திருக்குமா? இந்தியாவில் வட மாநிலங்களில் உள்ள தலித் தலைவர்களும், பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களும் அமைதி காத்திருப்பார்களா? திராவிட மாநிலங்கள் என்று சொல்லப்படுகின்ற ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்கள் அமைதி காத்திருக்குமா?

கடந்த ஓராண்டுக்குள் இலட்சக் கணக்கில் ஈழத்தமிழர்கள் சிங்கள அரசால் கொல்லப்படுவதை ஒரே ஒரு தடவையாவது மன்மோகன் கண்டித்ததுண்டா? சோனியாகாந்தி கண்டித்ததுண்டா? வடநாட்டுத்தலைவர்கள் கண்டித்த துண்டா? இல்லை. ஏன்? தமிழர்கள் அவர்கள் இனமில்லை. அது மட்டுமா? ஆயுதங்களால் தமிழர்களைக் கொன்றது இலங்கை. அதற்கு ஆயுதங்களை வழங்கியது இந்தியா. ஆயுதங்களை மட்டுமா வழங்கியது? அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்று சிங்களப் படையினர்க்குப் பயிற்சி கொடுத்தது இந்தியா. விடுதலைப் புலிகளுக்கு எதிராக உளவு வேலை பார்த்தது. ரேடார்கள் கொடுத்தது. செயற்கைக் கோள்கள் வழியாக, விடுதலைப் புலிகளின், பாசறைகள், நடமாட்டம் அனைத்தையும் அறிந்து இலங்கைப் படைக்கு அன்றாடம் துப்புச் சொன்னது.

உயிர்காக்கக் கடல் வழியே தப்பி ஈழத்தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு வந்துவிடாமல் இலங்கை எல்லை நெடுகத் தனது கப்பல் படையை நிறுத்தி அவர்களைத் தடுத்தது இந்தியா. இதனால், சுற்றி வளைக்கப்பட்டு இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோதும் கடந்த ஓராண்டாக, ஈழத்தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்திற்கு வர முடியவில்லை. ஈழத்தமிழர்கள், கேரளக் கடலில் கரையேற முயல்வார்கள் என்று கருதி அங்கும் காவலை வலுப்படுத்தியது இந்தியா.

இவற்றை அறிந்த ஈழத்தமிழர் 22 பேர், ஆந்திரக்கடலில் கரையேறப் பயணம் செய்தனர். ஆனால் திசை தடுமாறி, பல நாட்கள் கடலில் சுற்றித் திரிந்து இறுதியில் காக்கி நாடாவில் கரை சேர்ந்தனர். அப்போது அப்படகில் 12 பேர் பிணமாகக் கிடந்தனர். உணவு தீர்ந்து, தண்ணீரும் தீர்ந்து, தாகம் தாங்காமல், கடல் நீரைக்குடித்து, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு - இப்படிப் பட்டினியாலும் வயிற்றுப் போக்காலும் 12 பேர் செத்துப்போயினர். இவ்வளவு கொடுமைகளையும் இந்தியா தமிழர்களுக்கு இழைப்பதேன்?

இந்தியா தமிழர்களுக்கான தாயகம் அல்ல. தமிழர்களின் தாயகமான தமிழ்நாடு இந்தியாவில் ஒரு காலனியாக இருக்கிறது. “இராசீவ் காந்தி தமிழ்நாட்டில் கொல்லப்பட்டார் ; அது விடுதலைப் புலிகளால் நடந்தது ; அதனால் இப்படி இந்தியா பகையாகிப் போனது “ என்று நடுநிலையாளர் சிலர் வாதிடக்கூடும். இந்தியாவின் இனச்சார்பு மற்றும் இனப்பகை அரசியலை அறியாதவர்களும், தமிழ்நாட்டுக்கு இந்தியா இழைத்து வரும் இரண்டகங்களை அறியாதாரும் இராசீவ் கொலையைக் காரணமாகக் கருதிக்கொள்வர்.

தமிழர்கள் மீது வரலாற்றுக் காலந்தொட்டு ஆரியர் கொண்டுள்ள பகைமை உணர்ச்சியை பழிவாங்கும் திட்டத்தை மறைக்க விரும்புவோரும் இராசீவ்காந்தி கொலையை நயவஞ்சகமாகக் காரணம் காட்டுகின்றனர். இராசீவ்காந்தி இந்திய அமைதிப்படை என்ற பெயரில் ஓர் ஆக்கிரமிப்புப் படையை அனுப்பி ஆறாயிரம் தமிழர்களை - ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொன்றொழித்தார். இந்தியப்படையினர் ஈழத்தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவு கொண்டு சீரழித்தனர். இவற்றின் எதிர்வினைதான் இராசீவ் கொலை.

நல்ல பாம்பு யாரையும் தேடிப் போய் கடிக்காது; “விதித்தால் கடிக்கும் அல்லது மிதித்தால் கடிக்கும்” என்பர். இங்கு மிதித்ததால் கடிபட்டார் இராசீவ்! இதேபோல், சீக்கிய மக்களை மிதித்ததால், இந்திராகாந்தி கொல்லப்பட்டார். அந்த சீக்கிய இனத்தோடு கூடிக் குலாவுகிறது இந்தியா. அவர்களுக்குப் பிரதமர் பதவியே கொடுக்கிறது! அது எப்படி?

இந்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பா.ஜ.க. இருந்தாலும் தமிழ் ஈழம் அமைவதை எதிர்ப்பார்கள். இழந்த பகுதிகளை மீட்டு ஆனையிறவையும் மீட்டனர் புலிகள் 2001-இல்! அடுத்து யாழ்ப் பாணத்தை மீட்கப் படையெடுக்கப்போகிறார்கள் என்ற நிலை ஏற்பட்டது. யாழ்ப் பாணத்தில் அப்போது 16 ஆயிரம் சிங்களப் படையினர் இருந்தனர். அந்தப் 16 ஆயிரம்பேரையும் பிணமாகவோ உயிருடனோ புலிகள் பிடித்துவிடுவார்கள் என்ற நிலை. அன்று ஆட்சியிலிருந்த பா.ஜ.க. புலிகள் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்கக் கூடாது என்று நிபந்தனை போட்டது. சிங்கள அரசுக்குப் போர்க்கப்பல் கொடுத்தது. யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்காமல் புலிகளைத் தடுக்கவேண்டும் என்று சி.பி.எம். கட்சி அறிக்கை வெளியிட்டது. அக்கட்சித்தலைவர்களில் ஒருவரான உமாநாத் இலங்கைக்கு இந்தியா இலவசமாக ஆயுதம் கொடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்களர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். இதுதான் இந்தியா!

தில்லி ஏகாதிபத்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பா.ஜ.க. இருந்தாலும், இடதுசாரிகள் தலைமை தாங்கினாலும், ஈழம் பிறப்பதை ஏற்க மாட்டார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தமிழர் சிக்கலுக்குத் தீர்வு காணவேண்டும் என்று கூறியுள்ளது. அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைமையின் நிலை வேறு; அனைத்திந்தியத் தலைமையின் நிலை வேறு.

இராசீவ்காந்தியின் மனைவி என்பதால் சோனியா, ஈழத்தமிழர் அழிப்பில் மிகை முனைப்புக் காட்டுகிறார். மற்றபடி, காங்கிரசில் வேறு யாருமோ அல்லது பா.ஜ.க.வோ அல்லது இடதுசாரிகளோ இந்திய ஆட்சிக்கு, யார் தலைமை தாங்கினாலும், ஈழம் பிறப்பதைத் தடுத்திட அவர்கள் படையினரைப் பயன்படுத்துவார்கள். இந்தியா, தமிழ் இனத்தோடு, தமிழ்நாட்டிலும் சமரசம் ஆகவில்லை. ஈழத்திலும் சமரசம் காணவில்லை.

காவிரி நீர் உரிமையைக் கன்னடர் பறிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் தீர்ப்புக் கொடுத்தாலும் இந்திய அரசு கன்னடர் பக்கம் சாய்காலாக இருந்து அத்தீர்ப்புகளை செயல்படுத்த மறுத்தது. அதேபோல் முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் தமிழகத்தின் ஞாயத்தை ஏற்றுத் தீர்ப்புக் கொடுத்தாலும், இந்திய அரசு மலையாளிகளுக்குச் சாய்காலாக இருந்து அத்தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்தது. இவற்றைப்பார்த்த தெலுங்கர், ஆந்திராவில் பாலாற்றில் அணைகள் கட்டிக் கசிவு நீரும் தமிழகத்திற்கு வராமல் தடுக்க முற்பட்டுள்ளனர்.

ஒரு சுண்டைக்காய் நாடான சிங்களம், 450-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொல்ல ஊக்க மூட்டியது இந்தியாதான். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடல் இருக்கிறது. இரண்டு நாடுகளும் நான்குமுறை போரிட்டுக் கொண்டன. அடுத்த போர் எப்போது என்ற ஆயத்தத்தில் இருக்கின்றன. ஆனால் எல்லைதாண்டி வந்த மீனவர்களை இருநாடுகளும் சிறைப்பிடித்தார்களே அன்றி சுட்டுக்கொல்லவில்லை. இந்தியாவுக்கும், தமிழர் களுக்குமான அடிப்படை முரண்பாடு இனப்பகைமைதான். இது மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது.

அக்காலத்தில் இந்தியா இல்லை. இக்கால இந்திய ஆளும் வர்க்கத்தின் முதன்மைப்பிரிவினரின் முன்னோர்கள் இருந்தார்கள். அவர்கள் இனத்தின் பெயர் ஆரியர். இந்த இனப்பகைமைக்கு அடுத்த இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை முக்கியத்துவம் கொண்டவைதான், இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கையும் (புவிசார் அரசியலும்) பொருளியல் சுரண்டலும்.

கடந்த பத்து ஆண்டுகளாக, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் இந்தியாவை நோக்கி நட்புக் கை நீட்டினார். மதியுரைஞர் ஆண்டன் பாலசிங்கம் இந்திய அரசு அதிகாரிகளுடன் பேசினார்; ஊடகங்கள் வழியாக விடுதலைப்புலிகளின் இந்திய ஆதரவு நிலைபாட்டை வெளிப் படுத்தினார். (இந்திய அரசு குறித்த புலிகளின் நிலைபாட்டை அப்போதிருந்தே த.தே.பொ.க. ஆதரிக்கவில்லை) தமிழீழ அரசு அமைய இந்தியா உதவி செய்தால், இந்தியப் பெருங்கடலில் அது இந்தியாவின் காவல் அரணாக விளங்கும் என்றார் பிரபாகரன்.சிங்களப்படைக்கு இந்தியா ஆயுதம், நிதி பன்னாட்டு அரசியல் ஆதரவு ஆகிய உதவிகளை அள்ளி அள்ளி வழங்கிய போதும் கூட கடைசிவரை, பிரபாகரன் இந்தியாவைக் கண்டிக்கவில்லை. மாறாக நட்பிற்குத்தான் நாடினார்.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இலங்கை வழிவகுத்துள்ளது. இலங்கையில் உள்ள அம்பன் தோட்டா என்ற துறைமுகத்தை சீனாவுக்குக் கொடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கப் பரவலை எதிர்கொள்ள தமிழீழத்தை ஏற்பதுதானே இந்தியாவின் புவிசார் அரசியலுக்கு உகந்த உத்தியாகும். ஏன் அத்திசையில் இந்தியா திரும்பவில்லை?

தமிழர்களை நம்பத் தயாராக இல்லை இந்தியா. தமிழீழத் தமிழர்களையும் நம்ப முடியாது. தமிழ்நாட்டுத் தமிழர்களையும் நம்ப முடியாது என்பது அதன் கணக்கு. ஆரியர்கள் வரலாற்று பகைமையைக் கணக்கில் எடுக்கத் தவறமாட்டார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி ஏமாறும் குணமுடையோர் தமிழர்கள். வங்காள தேசத்தைப் பிரித்துத் தந்தது போல், ஈழத்தைப் பிரித்தால் என்ன என்று சிலர் கேட்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் உள்ள வங்காளிகளை இந்தியா நம்புகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களை நம்பவில்லை. தமிழைத்தவிர, இந்தியாவில் உள்ள பெரிய மொழிகள் அனைத்தும் வடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. தமிழிலிருந்து பிரிந்த “திராவிட” மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை வடமொழிக் கலப்பால் உருவானவை. வடமொழிச்சார்பின்றித் தனித்து நிற்கக் கூடிய ஒரே மொழி தமிழ் மட்டுமே!. தமிழ் இனம் மட்டுமே இன்னும் மரபினக் கூறுகளைக் கூடுதலாகக் கொண்டு பார்ப்பனியத்தையும் வடநாட்டு அரசியல், பண்பியல் ஆதிக்கத்தையும் கூடுதலாக எதிர்த்து வருகிறது. நமக்கு இணையாக, இந்தியத்தையும், ஆரியத்தையும் எதிர்ப்பவர்கள், வடகிழக்கு மாநிலங்களில் மங்கோலிய மரபினத்திலிருந்து பிறந்த தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அம்மாநிலங்களில் வங்காளிகள் குடியேற்றத்தை மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறது இந்தியா. வங்காளிகளை வெளியேற்றக் கோரி அசாமில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது அதில் உள்ள ஞாயத்தைப் பார்க்காமல் படையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது இந்தியா. அப்போது மக்கள் எழுச்சியை அடக்கமுடியாமல, அசாம் மாணவர் அமைப்புடன் ஓர் உடன்பாடு கண்டார் இராசீவ்காந்தி. அந்த உடன்பாட்டை செயல்படுத்தாமல் இந்தியா முடக்கிவிட்டது. அப்போதைய மாணவர்களில் ஒரு பிரிவினர் தேர்தல் கட்சி அமைத்துச் சீரழிந்தனர். இன்னொரு பிரிவினர் (உல்பா) அசாம் விடுதலைப் போராட்டம் நடத்துகின்றனர்.

காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டம் அடிப்படையில் தேசிய இனம் சார்ந்ததே. அப்போராட்டத்திற்கு வெறும் மதச்சாயம் பூசுவது இந்தியாவின் பார்ப்பனிய உத்தியாகும். அயல் இனப் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தி லிருந்து விடுதலை பெறப்போராடும் சிறுபான்மை இனம், மக்களைத் திரட்ட ஓரளவு மதத்தையும் பயன்படுத்தத்தான் செய்யும். அதைக் குற்றமாகக் கருத வேண்டியதில்லை.

தமிழ்நாட்டில் முதல் விடுதலைக் குரல் 1938- இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எழுந்தது. அப்போது, “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தந்தை பெரியார் குரல் கொடுத்தார். மறைமலை அடிகளார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற தமிழறிஞர்கள் அப்போது பெரியாருடன் கூட்டாக இருந்து அம்முழக்கத்தைத் திரும்பக் கூறினர்.

பெரியார் இறுதிவரை தனித்தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்தார். 1949-இல் உருவான தி.மு.க தனித் திராவிட நாடு இலட்சியத்தை முன்வைத்தது. திராவிடநாடு கிடைக்காவிட்டாலும் தமிழ்நாடு கிடைக்கும் என்ற உறுதியில் தமிழ் மக்கள், தி.மு.க.வின் தனி நாட்டுக்கோரிக்கையை ஆதரித்தனர். தனி நாட்டுக்கோரிக்கைக்குப் பெருந்திரளாக, தேர்தல் வழி ஒப்புதல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடாகத்தான் இருக்கும். தனிநாட்டுக் கோரிக்கையை முன்னிறுத்தி தி.மு.க, இரண்டு பொதுத் தேர்தல்களைச் சந்தித்தது. 1957-ல் 15 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. 1962-இல் 50 சட்டமன்றத்தொகுதிகளைக் கைப்பற்றியது.

ஆனால், அக்கழகம் பிரிவினைத் தடைச்சட்டம் பின்னர் வரப்போகிறது என்று தெரிந்ததும் 1963-இல் தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டது. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துதான் இந்தியா, தமிழர்களைச் சந்தேகப்பட்டியலில் வைத்திருக்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களோ, தங்களின் சொந்த இனத்தின் வரலாற்றையும், அதன் தனித்தன்மையையும், அதன் பெருமிதத்தையும் உணராமலும், வரலாற்று வழிப்பட்ட இனப்பகையின் வஞ்சகத்தை முழு அளவில் அறியாமலும், தங்களை ‘இந்தியன்’ என்று சொல்லி ஏமாறுகின்றனர்.

இந்தியா, தமிழினத்தைக் காக்கும் என்று நம்பித் தோற்கின்றனர். தனது அடிமை நிலையைத் தமிழினம் அடையாளம் கண்டுகொள்ளாமல் மயக்குவதற்காகத் தமிழ்நாட்டில் கங்காணிகளை அரவணைத்தது இந்தியா. தனிநாடு கேட்ட தி,மு.க தில்லியின் தலைமைக் கங்காணியாக மாறியது. தி.மு.க. விலிருந்து பிரிந்த அ.இ.அ.தி.மு.க., தாயை விஞ்சிய குட்டியாக இந்திய ஆதிக்கத்தைத் தீவிரமாக ஆதரிக்கிறது. பார்ப்பனியத்தில் காலூன்றி நிற்கும் பார்ப்பன அம்மையாரின் தலைமையையும் அக்கழகம் ஆராதிக்கிறது. தமிழ், தமிழன், தலித்தியம் என்று பேசிக் கொண்டிருக்கும் மற்ற சிறு சிறு தேர்தல் கட்சிகளும் சாரத்தில் கங்காணி வேலை பார்ப்பவையே.

கங்காணி வேலை பார்க்காத கட்சிக்கு தேர்தல் அரசியலில் வாய்ப்பு ஏதும் இல்லை. இந்திய ஒருமைப்பாட்டையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் ஏற்றால்தான் தேர்தலில் நிற்க முடியும் என்பது முதற்காரணம். பெரிய கங்காணிக்கட்சிகளில் ஒன்றுடனோ அல்லது இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஒன்றுடனோ கூட்டணி சேர்ந்தால் தான் சில இடங்களாவது இச்சிறு கட்சிகளுக்குக் கிடைக்கும் என்பது இரண்டாவது காரணம்.

இவ்வளவு பெரிய இனப்பேரழிவு ஈழத்தில் ஒருநாளில் நடத்துவிடவில்லை. ஓராண்டாகப் போர் நடந்தாலும் கடந்த செப்டம்பர் மாதம் தீவிரம் அடைந்தது. அக்டோபர் இரண்டில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்முயற்சியில், போர் நிறுத்தம் கோரித் தமிழ் நாடெங்கும் அனைத்துக்கட்சி உண்ணாப்போராட்டம் நடந்தது. அதன்பிறகு கூட்டாகவும், தனியாகவும் பல்வேறு கட்சிகள், தமிழ் அமைப்புகள் போராட்டங்களைத் தொடர்ந்தன. ஆனால் தேர்தல் கட்சிகள் தலைமைதாங்கிய போராட்டம் எதுவும் இந்திய அரசை எதிர்த்து நடைபெறவில்லை.

இலங்கை அரசு போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்துமாறு இந்திய அரசைக் கோரினார்களே அன்றி, இந்திய அரசு அலுவலகங்களை, நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் முடக்கும் போராட்டம் எதையும் நடத்தவில்லை. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் தி.க., தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஆகிய மூன்றும் அமைத்த கூட்டமைப்பான ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ தஞ்சையில் இந்திய விமானப்படைத்தள முற்றுகை, இந்திய அரசின் வரிவசூல் அலுவலங்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் ஆகியவற்றை நடத்தியது. த.தே.பொ.க.வும், த.தே.வி.இ.யும் கூட்டாக இந்திய, சிங்கள அரசுகளின் கொடி எரிப்புப் போராட்டம் நடத்தின.

இந்தியாதான் ஆயுதம், நிதி, அரசியல் உதவிகள் செய்து ஈழத்தமிழர் அழிப்புப் போரை இயக்குகிறது என்கிற செய்தி தேர்தல் கட்சிகளின் தலைவர்கள் அனைவர்க்கும் தெரியும். திருட்டுப்பொருளை மீட்டுத்தருமாறு, திருடியவனிடமே புகார் கொடுத்தது போல், இந்திய அரசிடமே இத்தலைவர்கள் முறையிட்டார்கள். இக்கட்சிகள் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. தலைமையில் என்றைக்கும் கூட்டணி சேர்பவை. அக்கட்சிகளின் கீழ், பதவி பெறுபவை. எனவே இக்கட்சிகள் என்ன எக்காளமிட்டாலும், எதிர்த்துப்பேசினாலும் இவற்றின் கட்டுத்தறி தில்லியில் உள்ளது. அதில் கட்டப்பட்டுள்ள கயிற்றின் நீளத்திற்கு இக்கட்சிகளின் தலைவர்கள் கண்டிப்பார்கள், எச்சரிப்பார்கள். இவற்றையெல்லாம் ஏளனப் புன்னகையோடு தில்லி எசமானர்கள் ரசிப்பார்கள். இந்திய அரசு நிறுவனங்களை முடக்கும் அளவிற்கு இக்கட்சிகள் போகமாட்டா.

தமிழ்நாட்டு உரிமைகள் பறிபோகும் போதும் மேற்படி சிறு சிறு தேர்தல் கட்சிகள், இந்திய அரசு நிறுவனங்களை முடக்கும் அளவிற்குப் போராட்டங்களை நடத்தமாட்டா. ஈழத்தில் இன அழிப்புப்போர் நடைபெறும்போது தமிழ்நாட்டில் கொந்தளிப்பு வராமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை, இந்திய அரசு ஏற்றது. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளை நம்பித்தான் காங்கிரஸ் அரசு இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதனடிப்படையில் இலங்கை அரசுக்கு உறுதியும் கொடுத்தது.

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் செயலலிதா, இயல்பிலேயே தமிழின எதிர்ப்பாளர். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகக் கருதுபவர். தனித்தமிழ் ஈழத்தை எதிர்ப்பவர். இந்திய அரசு இராணுவத்தை அனுப்பிப் பிரபாகரனைப் பிடித்துவந்து இந்தியாவில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டுமென்று தமிழக சட்டப்பேரவையில் (16.04.2002) தீர்மானம் நிறைவேற்றியவர். "போர் நடக்கும் போது பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று இரண்டு மாதங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டார். ஷஈழத்தமிழர’ என்று சொல்வது தவறு, ஷஇலங்கைத் தமிழர்’ என்றே கூறவேண்டும் எனச் செய்தியாளர்களைத் திருத்தினார். அவர் தேர்தல் ஆதாயத்திற்காக திடீரென்று ஒரு நாள் (09.04.2009) ஈழத்தமிழர்களுக்காக உண்ணாப்போராட்டம் நடத்தினார். 15- வது மக்களவைத்தேர்தல் நெருங்க, நெருங்க, ஈழத்தமிழர் சிக்கல் தேர்தல் சிக்கல் ஆகிவிட்டதை அறிந்து கொண்ட செயலலிதா “இராணுவத்தை அனுப்பித் தனி ஈழம் அமைத்துத் தருவேன்” என்று தேர்தல் கூட்டங்களில உறுதியாகப் பேசினார். அப்பேச்சு நம்பகத்தன்மை குறைந்த நபரிடமிருந்து வந்ததால் அதை உண்மை என்று கருத முடியவில்லை. மேற்கண்ட கடைசி நேரம் தவிர மற்ற காலங்களில் ஈழத்தமிழர் அழிப்புப் போரை ஆதரித்து வந்தவர்தாம் செயலலிதா.

இப்போது தேர்தல் முடிவுகள் வந்து, ஈழத்திலும் பேரழிவு நிகழ்ந்து, விடுதலைப்புலிகளுக்கு தற்காலிகத் தோல்வி ஏற்பட்டுள்ள நிலையில், தனி ஈழம் குறித்தும், புலிகள் குறித்தும் எதுவும் கருத்து தெரிவிக்காமல், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயர்துடைப்புப் பணிகள் ஐ.நா.மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்பதோடு நிறுத்திக்கொண்டுள்ளார் செயலலிதா. இனி எப்படி இச்சிக்கலை அணுகுகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டக் கூடிய வல்லவர். சாரத்தில் அவரின் நிலைபாடுகள் இராசபட்சே - சோனியா கும்பல் நடத்தும் தமிழ் இன அழிப்பைத் தாங்கிக்கொள்ளும் மனநிலையைத் தமிழர்களிடம் உண்டாக்கும் நோக்கங்கொண்டவை. தமிழினத்தை ஆயுதத்தால் அழித்தார் இராசபட்சே; அதற்கு ஆயுதம் கொடுத்தார் சோனியர் அந்த அழிவு கண்டு தமிழ்நாடு கொந்தளிக்காமல் இருக்க உளவியல் போர் நடத்தினார் கருணாநிதி.

ஐ.நா. மனித உரிமை அமைப்பும், ஐரோப்பிய நாடுகளும், போரில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள், அது கூடாது என்று கண்டித்த போது இராசபட்சே சொன்னார்: "பயங்கரவாதிகளுக்கு எதிராகத்தான் போர் நடக்கிறது. மக்களுக்கு எதிராக அல்ல”. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றார் இராசபட்சே.

இதை உறுதிப்படுத்தும் நோக்கில் சுற்றிவளைத்து மென்மையான சொற்களில் சொன்னார் கருணாநிதி: "ஈழ விடுதலைக்கு என்று இயக்கம் ஆரம்பித்து, சகோதரச் சண்டையில் ஈடுபட்டு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு இன்று கேள்விக்குறியாக நிற்க்கிறது. ஆனால் பிரபாகரன் என் நண்பர்” விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள்தாம் என்ற மனநிலையைத் தமிழர்களிடையே உருவாக்கும் உளவியல் பணியைக் கருணாநிதி மேற்கொண்டார். பிறகு, “இன்னும் சில நாட்களில் பிரபாகரனைப் பிணமாகவோ அல்லது உயிருடனோ பிடித்து விடுவோம்’ என்று இராசபட்சே கொக்கரித்தார். அவ்வாறு பிரபாகரன் பிடிபட்டால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்படும் என்று கருதினார்கள். எனவே, பிணமாகவோ, உயிருடனோ பிடிபவடுவது உறுதி என்பதைத் தமிழ் நாட்டு மக்களிடம் முன்கூட்டியே தெரிவித்து, திடீர் அதிர்ச்சி வராமல் தடுத்து, அந்நிகழ்வை இயல்பான ஒன்றாக ஆக்கிட கருணாநிதி முயன்றார். அதற்காக அவர் சொன்னார்,

“பிரபாகரனைக் கைது செய்தால் அலெக்சாந்தர், போரஸ் மன்னனை நடத்தியதைப்போல் கவுரமாக நடத்த வேண்டும்.” பிரபாகரன் கைது உறுதி என்பதைத் தெரிவிக்கும் அதே வேளை அவர் மீது அக்கறைப்படுவதுபோல் காட்டிக்கொள்ளும் உளவியல் உத்தி இது. பிறகு ஆங்கிலத் தொலைக் காட்சி (என்.டி.டி.வி) செவ்வியில் “பிரபாகரன் கொல்லப்பட்டால் என்ன கருதுவீர்கள்” என்று கேட்டதற்கு “மிகவும் வருத்தப்படுவேன”; என்றார். பிரபாகரன் கொல்லப்படுவது நடக்கக்கூடிய ஒன்றுதான் என்று முன்கூட்டியே கூறித் தமிழர்களின் மனநிலையை இயல்புப்படுத்தும் - அதாவது உணர்வுகளைச் சமன்படுத்தும் உளவியல் உத்திதான் இந்த வினாவும்,

அதற்கான விடையும். “பிரபாகரனை ஏன் கைது செய்ய வேண்டும்? கைது செய்யக்கூடாது. அவரை ஏன் கொல்ல வேண்டும்? கொல்லக்கூடாது, போரை நிறுத்தி அவருடன் அமைதிப்பேச்சு நடத்த வேண்டும் என்பது தி.மு.க. நிலைபாடு; அதுவே தமிழக அரசின் நிலைபாடும;’, என்றல்லவா கருணாநிதி விடையளித்திருக்க வேண்டும.; போர் நிறுத்தம் வேண்டும் என்று தானே கருணாநிதி மனிதச் சங்கிலி நடத்தினார். சட்டப்பேரவையில் “இறுதித்” தீர்மானம் போட்டார் ; பேரணி நடத்தினார். அந்த நிலைபாட்டுக்கு நேர் முரணாக, “பிரபாகரன் கைது செய்யப்பட்டால், பிரபாகரன் கொல்லப்பட்டால”; என்ற நிலைபாடுகளை அவர் ஏன் எடுக்க வேண்டும்? திடீர் குட்டிக்கரணம் அடித்து செயலலிதா தனி ஈழத்தை ஆதரித்துப் பேசியபின், அதை முறியடிக்கக் காலை உணவுக்கும் பகல் உணவுக்கும் இடையில் “சாகும்வரை பட்டினிப்போராட்டம்” நடத்தி ‘உலகச் சாதனை’ படைத்தார் கருணாநிதி. போர்நிறுத்தம் செய்ய உறுதி அளித்து விட்டது இலங்கை அரசு என்று கூறி உண்ணாமையை நண்பகல் முடித்துக்கொண்டார். அன்று மட்டும் 272 பொதுமக்களை சிங்களப்படை கொன்றது. மறுநாள் 172 பேரைக் கொன்றது. அடுத்த நாள் ஆயிரம் பேரைக் கொன்றது. இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார்.

இவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டது வெறும் தூவானம் போன்றது தான் அவருக்கு! பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக 18.05.2009 அன்று இலங்கைப் படை அறிவித்தது. 19.05.2009 அன்று பிரபாகரன் உடல் கிடைத்ததாக, ஒட்டு வேலை செய்து ஓர் உடலைக்காட்டியது சிங்களப்படை. 20.05.2009 நாளேடுகளில் அப்படம் வெளிவந்த தினத்தந்தியில் கருணாநிதியின் வசன கவிதை ஒன்று வந்தது. புறநானூற்றில் உள்ள புலவர் பக்குடுக்கை நன்கணியார் பாடல் அது. அதற்கு விளக்கம் எழுதியிருந்தார் கருணாநிதி. அதன் பொருள் இதுதான். “ஒரு வீட்டில் திருமணப் பறையொலி கேட்கிறது; இன்னொரு வீட்டில் சாவுப்பறையொலி கேட்கிறது. ஒரு வீட்டில் இளங்காதலர்கள் தழுவிக் கொள்கின்றனர். இன்னொரு வீட்டில் கணவனைப்பிரிந்தோர், கண்ணீர் விடுகின்றனர். இவ்வாறு மகிழ்வும் துயரமும் ஒருசேரப் படைத்து விட்டான் பண்பில்லாத படைப்பவன். உலகின் இவ்வியல்பு உணர்ந்த யாவரும் துன்பந்தருவனவற்றைச் சிந்தை செய்யாது, இனியனவற்றை மட்டும் கண்டு மகிழ்வாராக”.

தேர்தல் முடிவுகள் வந்த வெற்றிக் களிப்பில், இந்திய அரசின் அமைச்சர்களாகப் போகிறார்கள் பிள்ளைகளும் பேரனும் என்ற இன்பப் பெருக்கில் திளைத்திருக்கிறது கருணாநிதி குடும்பம். இன்னொரு பக்கம் பல்லாயிரக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டு பிணங்களாகக் கிடக்கிறார்கள். பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மை தானா என்ற தவிப்பு. இதனால் தமிழர்கள் இல்லமெல்லாம் துயரம் கவிந்து கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையை இயல்பான ஒன்றாக்கிக் காட்டி கொந்தளிப்பு வராமல் தடுக்க, கருணாநிதி கண்டெடுத்த புறப்பாடல்தான் மேலே கூறப்பட்டது.

தமிழின அழிப்பில் ஆயுதப் போரை நடத்தியவர்கள் இராசபட்சேயும், சோனியாவும்; அவர்களுக்குத் துணையாக உளவியல் போரை நடத்தியவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் தில்லி ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக நிலவும் கங்காணி அரசியலை நன்கு பயன்படுத்திக் கொண்டது இந்தியா. ஈழத்தமிழின அழிப்பில் சிங்கள- இந்தியக் கூட்டுப்படைகள் ஈடுபட்டதை எதிர்த்துத் தமிழ்நாட்டில் கிளம்பிய எழுச்சி கட்டுமீறிப் போகாமல், ஒரு வரம்புக்குள் இருக்கும்படி கங்காணி அரசியல் கட்சிகள் பார்த்துக்கொண்டன. அதேவேளை பன்னாட்டு அரசியலில் இந்தியா தீவிரமாகத் தலையிட்டு, ஈழத்தில் நடைபெறும் மனித குல அழிப்புக்கு எதிராக எந்தநாடும் உறுதியாகத் தலையிடாதவாறு தடுத்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும், ஐ.நா.மன்றமும் இலங்கை அரசு நடத்தும் மனிதப் பேரழிவுப்போரைத் தடுத்து நிறுத்த உருப்படியாகத் தலையிடவில்லை. அரை குறையாகவே தலையிட்டன.

இந்த நாடுகளின் வணிக நலன்களுக்குத் தீனிபோடும் அளவிற்கு ஈழம் பெரிய மக்கள்தொகையையும் நிலப்பரப்பையும் கொண்டிருக்கவில்லை. இலங்கையே கூட பெரிய சந்தை இல்லை. நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா மாபெரும் சந்தை. அதை இழந்துவிடக்கூடாது; அத்துடன், சீன ஆதிக்கத்தை மட்டுப்படுத்த, இந்தியாவைப் பயன்படுத்தவேண்டும் என்பன போன்ற காரணங்களுக்காக, இந்தியாவை எதிர்த்துக்கொண்டு, ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காதரவாக முழு அளவில் உலகநாடுகள் இறங்க முன்வரவில்லை.

பாட்டாளிவர்க்க சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட்டு நாடுகள் தங்கள் சொந்த தேசிய நலன்களுக்காக மற்ற நாடுகளின் நலன்களைப் பலியிட்டு வருகின்றன. லெனினுக்குப் பிந்தைய சோவியத் ஒன்றியம் இதைத்தான் செய்தது. மாவோ தலைமையில் இருந்த சீனமும் இதையே செய்தது. இதுபற்றி விரிவாகப் பின்னொரு வாய்ப்பில் விவாதிக்கலாம். இப்பொழுது நடந்த அநீதியை மட்டும் பார்க்கலாம். இன்னும் கம்யூனிஸ்ட் கட்சியைக் கலைக்காமல், அதன் பெயரிலேயே சீனா, முதலாளியச் சுரண்டல் ஆட்சி முறையைக் கொண்டுவந்துவிட்டது. அத்துடன் ஏகாதிபத்தியக் கனவுகளோடு விரிவாதிக்கக் கொள்கையைக் கடைபிடிக்கிறது.

தெற்காசிய மண்டலத்தில் தனது ஆதிக்கப் போட்டியில் குறுக்கிடும் வட அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியவற்றிற்கு எதிராக இலங்கையைப் பயன்படுத்திக்கொள்வது சீனாவின் திட்டம். அத்திட்டத்தை நிறைவேற்றிட, இலங்கை அரசுக்கு, ஈழத்தமிழர் அழிப்புப் போருக்காக, ஏராளமான ஆயுதங்களையும்,நிதியையும் வாரி வாரி வழங்குகிறது. இலங்கை அரசு தன்னிடம் ஆயுதம் வாங்கி ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்வது, மனித குல அழிப்புப் போரை நடத்துவது ஆகியவற்றைப் பற்றி சீனாவுக்குச் சிறிதளவும் கவலை இல்லை. திபெத் தேசத்தை ஆக்கிரமித்து, திபெத்தியர்களின் விடுதலைப் போராட்டத்தைக் குருதி வௌ;ளத்தில் மூழ்கடிக்கும் சீனாவுக்கு, ஈழத்தமிழர் தேசிய உரிமையும், இலட்சக்கணக்கான மனித உயிரும் ஒரு பொருட்டே இல்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இராசபட்சே, படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைப் போர்க் குற்றவாளிகளாக விசாரிப்பது குறித்து விவாதிக்கக்கூட எதிர்ப்புத் தெரிவிக்கிறது சீனா. ஐ.நா. பாதுகாப்புக்குழுவில் இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று மெக்சிகோ, உருகுவே போன்ற நாடுகள் முன்மொழிந்த போதெல்லாம் சீனாவும், ரசியாவும் ரத்து வாக்களித்து ( வீட்டோ) அதைத் தடுத்து விட்டன. கியூபா, பொலிவியா, நிகரகுவா ஆகிய நாடுகளின் குடியரசுத் தலைவர்கள் மார்க்சியர்கள். இந்நாடுகள் மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

இலங்கை இனப்படுகொலை செய்யவில்லை, மனித உரிமைகளை மீறவில்லை என்று வாக்களித்துள்ளன. ஈழத்தமிழர் இனப்படுகொலை செய்யப்படுவதை, அங்கு மனித உரிமைகள் அழிக்கப்படுவதை வெனிசுவேலா குடியரசுத்தலைவர் சாவேஸ் ஒருமுறை கூட கண்டிக்கவில்லை. இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஓர் இரங்கல்கூட அவர் தெரிவிக்கவில்லை. கியூபாவையும், பிடல் காஸ்ட்ரோவையும் உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் நேசிக்கின்றனர்.

தமிழர்கள் பிடலை நெஞ்சில் வைத்துப் போற்றுகின்றனர். ஆனால் அங்கிருந்து, ஈழத்தமிழ் மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரு சொல்கூட வரவில்லை. மாறாக இலங்கை அரசின் தமிழ் இன அழிப்புப் போருக்கு ஆதரவாக அதன் குரல் உலக அரங்கில் ஒலிக்கிறது. சீனா, இந்தியா ஆகிய இருநாடுகளின் நட்பும் கியுபாவுக்குத் தேவை. இந்திய, சீன நாடுகளின் உதவியுடன் உலகின் ஒரு பகுதியில் மனித இனம் அழிக்கப்பட்டால்கூட கியுபா அதற்காக வருத்தப்படாது. அக்கொடுமையைக் கண்டிக்காது. இந்திய, சீன நட்புக்காக, மனித குல அழிப்பையும் பொருட்படுத்தாது. அந்த இன அழிப்புப் போரை ஆதரிக்கும். இதுதான் கியூபா பாணி நிகரமையா? இதுதான் காஸ்ட்ரோவின் மார்க்சியமா? இதைத்தான் கியூபாவிடமிருந்து ஒடுக்கப்பட்ட தமிழர்கள் எதிர்பார்த்தார்களா? “வியட்ந்நாம் யுத்த்தம் எங்க்கள் யுத்தம், வியட்நாம் ரத்தம் எங்கள் ரத்த்தம்”; என்று தமிழ்நாட்டு வீதிகளில் முழக்கமிட்டோம். அது நடத்திய விடுதலைப் போரை ஆதரித்தோம்! அந்த வியட்நாம், இனவெறி இலங்கை அரசை ஆதரிக்கிறது. இன அழிப்புக்கு உள்ளான ஈழத் தமிழர்க்கு ஆறுதலாக வாய்திறக்கவில்லை.

இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனா என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. மிகக்கொடிய சிங்கள இனவெறிக்கட்சி அது. இராசபட்சே நடத்தும் தமிழின அழிப்புப் போரின் வேகம் போதாது என்று குற்றம் சாட்டுகிறது அது. எல்லாவகை ஒடுக்குமுறைகளையும் முறியடித்து மனித சமத்துவத்துவத்தை நிலை நாட்டுவது தான் மார்க்சியம். அந்த மார்க்சியத்தைத் தனது தத்துவமாகக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட்டுகள் பலர் சொந்த தேசிய வாதத்துடனும், தேசிய வெறியுடனும் செயல்படுவது சகிக்க முடியாத முரண்பாடாக உள்ளது. புத்த மதத்தைப் பின்பற்றிக்கொண்டு இனக்கொலை செய்யும் சிங்கள புத்த பிட்சுக்களுக்கும், இந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?

பாட்டாளிவர்க்க சர்வதேசியப் பதாகையை உயர்த்திப் பிடிக்க கம்யூனிஸ்ட் நாடு எதுவுமே இல்லையா? அவை, சொந்த தேசிய நலனுக்கான தூதரக உறவாகத்தான் பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கோட்பாட்டைக் கொச்சைப்படுத்தி விட்டனவா? பிாிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கை அரசைத் கண்டித்தன. மனித உாிமைகளுக்காகக் குரல் கொடுத்தன. அதே வேளை, விடுதலைப்போர் நடத்திய விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பென்று அவை தடை செய்து வைத்துள்ளன. அத்தடையை அவை நீக்கவில்லை. (இந்நாடுகள் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்யப் போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவும், சீனாவும் பாடுபட்டன.) போர் நிறுத்தம் கோரிய ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஒவ்வொரு தடவையும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று வலியுறுத்தின.

“பொதுமக்கள் வெளியேற பாதை உண்டாக்கித்தரவேண்டும்” என்று விடுதலைப்புலிகள் அமைப்பைக் கோரின. இவ்வாறு இந்நாடுகள், அரைகுறையாகப் போர் நிறுத்தம் கோரின.. ஐ.நா. மன்றப் பொதுச்செயலாளர் பான் கி மூனும் இதே அரைகுறை முயற்சியில் ஈடுபட்டார். அவருடைய செயலாளர் விஜய் நம்பியார் ஒரு மலையாளி. அவர்தாம் அடிக்கடி, மனித உரிமை தொடர்பாக இலங்கை சென்று வந்தார். விஜய் நம்பியார் தம்பி இந்தியப் படையில் பணிபுரிகிறார். அவரை இந்தியா, இலங்கைப் படைக்கு உதவி செய்ய அனுப்பி இருக்கிறதாம்.

ஐ.நா. மன்றத்தின் தலையீடு எந்த அலங்கோலத்தில் இருந்திருக்கும் என்று இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். பிரதமரின் பாதுகாப்பு மதியுரைஞராக உள்ள மலையாளி எம்.கே. நாராயணன், இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலராக உள்ள மலையாளி சிவசங்கரமேனன் இருவரும் அடிக்கடி, இலங்கை சென்று ஏன் இன்னும் விடுதலைப்புலிகளை அழிக்கவில்லை என்று நச்சரித்தது நாடறியும். ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டதை அறிந்து அக மகிழ்ந்தவர்கள் அவர்கள். ஐ.நா. மன்றத்திலும் மலையாளி ஆதிக்கம்! அந்தப் பதவிகளில் மலையாளிகள் இருக்கக்கூடாது என்பது நமது கருத்தல்ல. பெரும்பான்மை மலையாளிகள் தமிழினத்தைப் பகையினமாகக் கருதுகிறார்களே என்பதுதான் நமது குற்றச்சாட்டு.

இலங்கையில் போர் நிறுத்தம் நடைபெற, விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடையவேண்டும் என்று நிபந்தனை போட்ட ஐரோப்பிய நாடுகள், ஐ.நா. மன்றம் ஆகியவை இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யப் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று நிபந்தனை போடவில்லையே ஏன்? இஸ்ரேலிய யூத வெறியர் களால் நாடு பறிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் நம் அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் உாியவர்கள். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை ஹமாஸ் என்ற மதத் தீவிரவாத அமைப்புதான் இப்பொழுது முன்னெடுக்கிறது. யாசர் அராபத் மறைவிற்குப் பின் பி.எல்.ஓ. அமைப்பின் தலைமை அமெரிக்க அடிவருடி ஆகிவிட்டது. மதத் தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் இப்பொழுது நாம் ஹமாசைத்தான் ஆதரிக்கவேண்டும். அந்த ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன நிர்வாக எல்லைக்குள் இருந்துகொண்டு இஸ்ரேலுக்குள் எறிகணைகள் வீசிப் பொதுமக்களைக் கொல்கிறது என்று குற்றம் சாட்டி கடந்த சனவரி மாதம் பாலஸ்தீனத்தின் மீது படையெடுத்து விமானக்குண்டு வீச்சு நடத்தியது இஸ்ரேல். காசாப் பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களைக் கொன்றது. இந்த ஆக்கிரமிப்பை அமெரிக்கா ஆதரித்தது. இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில், தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா அத்தீர்மானத்தை எதிர்த்தது. அதையும் மீறி 142 நாடுகள் ஆதரித்துப் போர் நிறுத்தத் தீர்மானம் வெற்றி பெற்றது. அத்தீர்மானத்தை ஆதரித்து இந்தியாவும் வாக்களித்தது. அத்தீர்மானம், இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்து, பாலஸ்தீனத்திலிருந்து தனது படையணிகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று கோாியதே அன்றி, ஹமாஸ் இயக்கம் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று கோரவில்லை.

இந்தியா கூட, அப்படி ஒரு கோாிக்கையை எழுப்பவில்லை. போர் தொடங்கி 19-ஆம் நாள் போர் நிறுத்தம் செயலுக்கு வந்தது. பாலஸ்தீன மக்கள் காப்பாற்றப்பட்டனர். தமிழர்கள் மட்டும் காப்பாற்றப்படவில்லையே, ஏன்? “கர்த்தரே? கர்த்தரே, ஏன் எம்மைக் கைவிட்டீர்?” என்று சிலுவையில் அறையப்படும் போது ஏசுபிரான் எழுப்பிய குரலைப்போல் உலகத்தைப் பார்த்துத் தமிழினம் எழுப்புகிறது, தமிழினம் என்ன பாவம் செய்தது?” தனது தாயகத்தை மீட்க பாலஸ்தீனர்கள் போராடுவது ஞாயம்! தாயக விடுதலைக்காக ஈழத் தமிழர்கள் போராடுவது குற்றமா? ஹமாசுக்கு ஒரு நீதி, விடுதலைப்புலிகளுக்கு வேறொரு நீதியா?

தமிழர்களே, தமிழ்நாட்டுத் தமிழர்களே,

உலகத்i;தைப் பார்த்து;து வினா எழுப்புவதோடு நிற்காதீர்கள்! உங்களுக்குள் வினா எழுப்புங்கள். உலகத்தோடு உரையாடும் முன் உங்கள் மனச் சான்றோடு உரையாடுங்கள்! பாலஸ்தீனர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள்! ஆனால் அவர்களின் அரபு இனத்திற்குப் பலநாடுகள் இருக்கின்றன. அவர்கள் சார்ந்துள்ள இஸ்லாம் மதத்திற்குப் பல அரசுகள் இருக்கின்றன. எகிப்தைப் போன்ற எட்டப்ப நாடுகள் விதிவிலக்கு. ஆனால் பல அரபுநாடுகளும், இஸ்லாமியர்களும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டின. அந்த நாடுகளோடு எண்ணெய் வணிகம் உள்ளிட்ட பல வணிகம் செய்யும் நாடுகள், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவுக் கை உயர்த்தின. அவற்றுள் இந்தியாவும் ஒன்று. இப்பொழுதாவது புாிகிறதா, தமிழ் இனத்தின் அடிப்படை ஊனம் என்ன என்று? அதற்கொரு நாடு இல்லாததுதான் அந்த ஊனம்;. இந்த உண்மை இப்பொழுதாவது புாிகிறதா?

உலகில் பத்துக்கோடித் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கொரு நாடில்லை. ஒன்றரைக்கோடி மக்கள் தொகை மட்டுமேகொண்டுள்ள சிங்களர்களுக்கு ஒரு நாடு இருக்கிறது. அவர்களின் இறையாண்மையை மற்ற நாடுகள் ஏற்கின்றன. அவர்களால் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை வளைத்துப்போட முடிகிறது. தமிழ் இன அழிப்புப் போரை தங்குதடையில்லாமல் நடத்த முடிகிறது. ஆனால் நமக்கொரு நாடில்லை.

பத்தாண்டுகள், தனியரசு நடத்தினர் விடுதலைப்புலிகள். உலக நாடுகளின் ஏற்பிசைவு இல்லாததைத் தவிர அந்த ஈழ அரசில் என்ன குறை இருந்தது? தனிப்படை, தனிக்காவல்துறை, நீதித்துறை, பொருண்மியக்கழகம், கலை பண்பாட்டுத்துறை, ஆட்சியில் முழுமையாகத் தமிழ், வரிவசூல் முறை, நலத்திட்டங்கள் செயலாக்கம், தொழில்துறை உற்பத்தி, வேளாண் உற்பத்தி, பன்னாட்டு உறவு, மேம்பட்ட தகவல் தொடர்புத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, வணிகம் என அரசுக்குாிய அனைத்தும் இருந்தன. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனைத் தங்க்களின் குடியரசுத் தலைவராகவே ஈழ மக்க்கள் ஏற்ற்றனர்.

பிரபாகரன் நிர்வாகத்தில், மக்களிடையே இருந்த சாதிக்கொடுமை ஒழிக்கப்பட்டது. வரதட்சிணைக் கொடுமை ஒழிக்கப்பட்டது. களவு, கொலை, பாலியல், வன்முறை அறவே இல்லை. “நள்ளிரவில் ஓர் இளம்பெண் கழுத்து நிறையத் தங்க நகை அணிந்து தன்னந்தனியாக வெளியே போய்விட்டு வீட்டுக்குப் பத்திரமாகத் திரும்பினாள் என்ற நிலை நாட்டில் வரவேண்டும். அதுவே நான் விரும்பும் சுயராச்சியம்” என்றார் காந்தி. இந்தப் பாதுகாப்பு இந்தியாவில் இல்லை. பிரபாகரனின் ஈழத்தில் இருந்தது. உலக நாடுகள் உச்சிமோந்து அந்த ஈழத்தை அங்கீகரித்திருக்க வேண்டும். அதைச் சிங்களர்கள் அழிக்கத் துணைபோயின ஏன்? உலக அரங்கில் குரல் கொடுக்க, இதர நாடுகளின் ஆதரவைத் திரட்ட தமிழ் இனத்திற்கென்று ஒரு நாடில்லை.

ஈழ விடுதலைப்போரில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதுதான். எாிந்து போன சாம்பலிலிருந்தே உயிர்பெற்று மீண்டும் தாவிப் பறக்கும் பீனிக்ஸ் பறவை போல் விடுதலைப்புலிகள் மீண்டும் எழுவர். விடுதலைப்போர் தோற்காது. நம்பிக்கை ஊட்டுவதற்காக நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் ஆறுதல் மொழிகளல்ல இவை. உலக நடப்பு இது தான்.

ஆப்கனிஸ்தானத்தில் அரசு நடத்திய தாலிபான்களை அடியோடு அழித்தது அமெரிக்கா. இதோ அவர்கள் எழுந்து வந்து விட்டார்கள். அந்நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றி இப்பொழுது அரசு நடத்துகிறார்கள். அத்துடன் பாகிஸ்தான் பகுதிகள் சிலவற்றையும் கைபற்றி இருக்கிறார்கள். இலங்கையின் சொந்த அனுபவம் ஒன்று இருக்கிறது.

சேகுவேரா வழியில் புரட்சி நடத்திய ஜனதா விமுக்தி பெரமுனாவை தலைமை உட்பட அடியோடு அழித்தது இலங்கை அரசு. 50,000 இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். அதே ஜே.வி.பி. இப்பொழுது மீண்டும் எழுந்து இலங்கையில் முக்கிய அரசியல்கட்சியாக உள்ளது. அக்கட்சி தமிழினத்திற்கு எதிராக உள்ளது என்பது வேறு செய்தி. விடுதலைப்புலிகள் ஈழம் முழுதும் பரவி நிற்கிறார்கள் கிழக்கு மாநிலம், மன்னார் பகுதி யாழ்ப்பாணம் போன்றவற்றில் ஆற்றல்மிகு தளபதிகள் தலைமையில் இன்றும் அவர்கள் செயல்படுகிறார்கள். ஏற்பட்ட இழப்பு பெரிது. ஆனால் வற்றாத ஊற்றிலிருந்து தண்ணீர் பீறிட்டு வருவதுபோல் விடுதலைப்பு;புலிகள் மேலும் மேலும் வருவார்க்கள்.. போர் தொடரும்.. ஈழம் மலரும்!

தமிழ்நாட்டுத் தமிழர்களே, ஈழத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் அழிக்கப் பட்டார்கள். ஆற்றல் மிகு தளபதிகள் கொல்லப்பட்டார்கள் என்று செய்தி வந்ததும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல் ஆகிக் குடும்பத்தோடு குந்தி அழுகின்ற தமிழர்களே, தலைவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்ற வினாவை எாியும் நெருப்பாக நெஞ்சில் சுமந்து வெந்து கொண்டிருக்கும் தமிழர்களே, தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற நல்ல செய்தி கிடைத்துள்ளது. தலைவரின் இயக்கம் உயிர்த்துடிப்போடு இருக்கிறது. உலகெங்கும் பரந்து கிடக்கும் தமிழர்கள் ஈழ விடுதலைப் போரை எடுத்து நிறுத்த ஆயத்தமாய் உள்ளார்கள். இவ்வளவு பேரழிவிலும் இன்னொரு நன்மை விளைந்திருக்கிறது.

ஈழத் தமிழர் விடுதலைப்போர் உலக நாடுகளின் கவனத்திற்கு அழுத்தமாக வந்துவிட்டது. “அப்படி ஒரு சிக்கல் இருக்கிறதா” என்று நிலக்கோளத்தின் கடைக்கோடியில் உள்ள சின்னஞ்சிறு தேசம் கூட இனி கேட்காது. எல்லோருடைய கவனத்திற்கும் அது வந்துவிட்டது. உலக ஆதிக்க நாடுகளுக் கிடையே உள்ள முரண்பாடு, ஈழத்திற்கு ஆதரவாக பெரிய நாடுகள் சிலவற்றை இனித் திருப்பிவிடும். இந்தியப் பெருங்கடலில், சீனாவும், இந்தியாவும் ஆதிக்கப்போட்டியில் இறங்கி முரண்பட்டு நிற்கப் போகின்றன. மேற்கத்திய நாடுகள் சீனாவைத் தட்டி வைக்க விரும்புகின்றன.

ஈழத்தில் இலங்கை நடத்திய மனித அழிப்பை, வாழ்வுரிமைப் பறிப்பை, இரசாயனப்போரை விசாாிக்க முனைந்துள்ளன உலக நாடுகள். போர்க்குற்றவாளிகளாக, இராசபட்சே, இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராசபட்சே, படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைக் கூண்டில் நிறுத்தவேண்டும் என்ற கோாிக்கை உலக மனித உாிமை அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உாிமை அமைப்பு, ஐ.நா.பாதுகாப்புக்குழு ஆகியவை அவற்றை விசாாிக்கும் நிலை உருவாகி உள்ளது.

சூடானில் டார்ஃபர் பகுதியில் வாழும் ஃபர், மசாலித், ஜாகுவா இனங்களைச் சேர்ந்த மக்களை இனப்படுகொலை செய்தார் அந்நாட்டுக் குடியரசுத் தலைவர் உமர் ஹாசன் அல் பசீர். தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தினார். அம்மக்களுக்கு உணவும், மருந்தும் கிடைக்காமல் தடுத்தார். மூன்று லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் 2009 மார்ச்சு 4- ஆம் நாள் சூடான் அதிபர் அல்பசீருக்கு எதிராகப் பிடி ஆணை பிறப்பித்தது. இன்னும் பிடிபடாமல் உள்ளார். ஒருநாள் கூண்டிலேற்றப்படுவார். ஏற்கெனவே, குரோசிய, கொசாவா மக்களை இனப்படுகொலை செய்ததற்காக, செர்பிய அதிபர் மிலோசோவிச், போர்க் குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அதற்கு முன், சிலியில் தொழிலாளர்களையும், மக்களையும் கொன்று குவித்த சர்வாதிகாாி பினோசே பன்னாட்டு நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டார்.

1. இந்த வரிசையில் இராசபட்சே கும்பல் கைது செய்யப்படவேண்டும். இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாாிக்க அமெரிக்கா முன்மொழிந்து ஐ.நா.வின் மனித உாிமைக்குழு விவாதித்தது. நாற்பத்தேழு உறுப்பு நாடுகளைக்கொண்ட மனித உாிமை ஆணையத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாாிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து தீர்மானம் முன்மொழிந்தது. அதை எதிர்த்து இலங்கை அரசுக்கு ஆதரவாக மேற்படி விசாரணை தேவையில்லை என்ற தீர்மானமும் முன்மொழியப்பட்டது. 28.5.2009 அன்று நடந்த வாக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து முன்மொழிந்த தீர்மானம் பதினேழு வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது. இலங்கை முன்மொழிந்த தீர்மானம் 22 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தது. இந்தியா, சீனா, கியூபா, பொலிவியா, நிகரகுவா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்தன. இருப்பினும் நாம் மேற்கண்ட கோாிக்கையை உலகு தழுவியஅளவில் வலியுறுத்திப் போராடவேண்டும். தமிழ்நாட்டிலும்அதற்கான பரப்புரையும், போராட்டமும் நடத்த வேண்டும்.

2. போாில் படுகாய முற்று, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களைக் காப்பாற்ற, மன அதிர்ச்சிக் குள்ளானோரைக் குணப்படுத்த மருத்துவர் குழுக்கள் சென்று உடனடியாக சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

3. ஈழத் தமிழர்களுக்கான அனைத்துத் துயர் துடைப்புப் பணிகளும் ஐ.நா. மன்றம் அல்லது பன்னாட்டுக் குழுவினரின் மேற்பார்வையில் நடைபெறவேண்டும். சிங்கள அரசின் கண்காணிப்பில் நடைபெறக்கூடாது.

4. வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் மூன்றரை இலட்சம் தமிழர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பவேண்டும். அவர்களின் சொந்த வீடுகள் தகர்க்கப்பட்டிருந்தால், அவ்விடங் களில் உடனடியாகத் தற்காலிக வீடுகள் கட்டித்தரவேண்டும்.

5. இப்பொழுது ஏற்பட்டுள்ள பேரழிவைப் பயன்படுத்தி தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடைபெறாமல் ஐ.நா. மன்றமும் உலக நாடுகளும் தடுக்கவேண்டும்.

6. தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் உலக அளவில் ஏற்புடைய புகழ்பெற்ற நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்தி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் தொடர்பான கணக்குப் பொறுப்பைத் தீர்வு (யுஉஉழரவெயடிடைவைல) செய்வதற்கு ஐ.நா.மன்றம் ஆவன செய்ய வேண்டும்.

7. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்து, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்.

உலக நாடுகளை நோக்கி நாம் உடனடியாக எழுப்பவேண்டிய கோாிக்கைகள் இவை. இக்கோாிக்கைகளை முன் வைத்துப் போராட்டங்கள் நடத்தவேண்டும். விடுதலைப்புலிகள் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும் உலக அரசியல் அரங்கில் முன்னேறியுள்ளனர். சிங்கள அரசு போர்க்களத்தில் தற்காலிக வெற்றி பெற்ற போதிலும் உலக அரசியல் அரங்கில் தோல்வி அடைந்து வருகிறது.

அறிவாற்றல், போராற்றல் அர்ப்பணிப்பு, விடுதலை வேட்கை ஆகியவற்றின் உருவமாகத் திகழும் ஈழத் தமிழ்த் தேசிய இனம் தனது புரட்சியை முன்னிலும் பல மடங்கு வேகமாக முன்னெடுக்கும். தற்காலிகத் தோல்விக்கான காரணங்களைத் தன் திறனாய்வுடன் ஆராய்ந்து தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். தமிழ்நாட்டுத் தமிழர்கள், ஈழத்தமிழர்க்கு ஏற்பட்ட பேரழிவிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்ன? அவர்களின் எதிர்கால இலக்கு என்ன? உடனடிக் கடமைகள் என்ன? இவையே நம்முன் உள்ள வினாக்கள்.

இவற்றிற்கான விடைகள் :

தமிழ்நாட்டை, இந்தியா தனது காலனியாகத்தான் நடத்துகிறது. போர் நிறுத்தம் கோாி நாம் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும், இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, படையினரை அனுப்பி ஈழத்தமிழர்களைக் கொன்றழிக்கும் போரை இயக்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ளவில்லை.

மாவீரன் முத்துக்குமார் தொடங்கி 14 தமிழகத் தமிழர்கள் தீக்குளித்து சாவைத் தழுவியும் இந்தியா மனமிரங்கவில்லை. தமிழ் இனத்தின் மீது இந்தியாவுக்கு உள்ள பகை, வரலாற்று வழி வந்த தமிழர் - ஆாியர் பகையின் தொடர்ச்சியே.

நாம் “இந்தியர்” அல்லர்;, தமிழர்களே! நாம் “திராவிடர்கள்” அல்லர், தமிழர்களே!

தமிழ்நாடு தனி நாடாக இருந்திருந்தால் ஈழத் தமிழர்களை இன அழிவிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். தமிழ்நாட்டில் ஆறரைக்கோடி மக்கள் இருக்கிறோம். இறையாண்மை யுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதே நமது இலக்காக இருக்கவேண்டும்.

ஈழம் தனி நாடாகட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம், என்ற கருத்து, சமூக அறிவியலுக்கும், இயங்கியல் விதிகளுக்கும் புறம்பான நிலைபாடு. ஒன்றின் ஊடாக இன்னொன்று செயல்புாியுமே அன்றி ஒன்றுக்குப்பின் இன்னொன்று செயல்படும் என்பது பிழையான கோட்பாடு. ஏனெனில் இரண்டு போராட்டங்களுக்குமே பகை அரசாக இந்திய அரசு இருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தைத் தமிழகத் தமிழர்கள் ஆதரிக்கவேண்டும். தமிழகத்தின் தமிழ்த் தேசத் தாயகப் போராட்டத்தை ஈழத்தமிழர்கள் ஆதரிக்கவேண்டும். ஒரே நேரத்தில் ஒன்றின் தாக்கம் இன்னொன்றை ஊக்கப்படுத்தும். ஈழ விடுதலைப் போர் முன்னேறிச் சென்றால் களிப்படைவது, அதில் பின்னடைவு நேர்ந்தால் துயரப்படுவது என்பது மட்டும் போதாது. ஈழ விடுதலைப்போர் கிாிக்கெட் விளையாட்டல்ல. நாம் காலரியில் உட்கார்ந்து கையொலி எழுப்புவோரும் அல்லர். அது இன விடுதலைப்போர். விடுதலைப் புலிகள், தங்கள் தாயகத்திற்குப் போராடுகிறார்கள்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்கள் தாயகத்திற்குப் போராட வேண்டாமா? தமிழ்மொழி உணர்ச்சி மட்டும் போதாது, தமிழ் இன உணர்ச்சியும் வேண்டும். தமிழ்த் தேசத் தாயகத்திற்கான போராட்டத்தைத் தேர்தல் கட்சிகளால் நடத்த முடியாது. தமிழர்களிடையே இன உணர்ச்சி எழுச்சி கொள்வதற்கேற்ப, அதற்கு ஈடு கொடுத்துத் தங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, போலியாக இன முழக்கங்களை எழுப்பி, உணர்வாளர்களைத் திசைதிருப்பிவிடும் அக்கட்சிகள்.

தேர்தலுக்கு வெளியேதான் தமிழ்த் தேசத் தாயகத்திற்கான போராட்டக்களம் இருக்கிறது. அப்போராட்டம் தமிழ்நாட்டில் மக்கள் திரள் போராட்டமாக எழுந்தால்தான் இங்கு வெற்றி பெற முடியும். ஆயுதக் குழுப்போராட்டம் இங்கு மக்களை ஈர்க்காது. பணம் - பதவி - விளம்பரம் மூன்றிற்கும் ஆசைப்படாத இளைஞர்கள் இந்தப் போராட்டத்திற்கு முன்வரவேண்டும்.

தேனீக்கு அஞ்சினால் தேனெடுக்க முடியாது. தியாகத்திற்கு அஞ்சினால் தேசம் அமைக்க முடியாது. அன்னையின் மடியில் அனாதையாய், சொந்த மண்ணில் ஏதிலியாய் இழிவடையக் கூடாது. தமிழ்த் தேசத் தாயகப் போராட்டத்திற்குப் பல தரப்பினரும் தேவை. நேரடியாகப் போராட்டங்களில் பங்கு பெறுவோர், சிறைக்கஞ்சாதவர், முழுநேரச் செயல்வீரர்கள், பகுதி நேரச் செயல்வீரர்கள்;, ஓய்வு நேரத்தில் பணிபுாிவோர், ஒதுங்கி நின்று உதவி புாிவோர், கருத்துரை வழங்குவோர், கலை இலக்கியப் படைப்பாளிகள், இவர்கள் அனைவரையும் ஏந்திக்கொள்ளும் மக்கள்; இவ்வாறான தேசியச் சமூக ஒருங்கிணைப்பு தேவை.

தமிழ்த் தேசத் தாயகப் போராட்டத்தில் இவர்கள் அனைவரையும் வழிநடத்திச் செல்லும் புரட்சிகரத் தமிழ்த் தேசிய அமைப்பு இதற்கு முதன்மைத் தேவை. யார் யாருக்கு எந்த அளவில் செயல்ப்பட முடியுமோஅந்த்த அளவில் செயல்ப்பட வாருங்க்கள்! கடந்த காலச் சாதனைகளிலிருந்து வீரியம் பெறுவோம்! கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் பெறுவோம்!

எல்லாமே முடிந்துவிட்டது என்று நம் எதிரிகள் கருதுகிறார்கள். எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் தொடங்குகிறது என்று அவர்களுக்கு அறிவிப்போம்!

எங்கிருந்து தொடங்குவது? இங்கிருந்து தொடங்குவோம்!

தமிழ்நாட்டிலிருந்து தொடங்குவோம்! கண்ண்ணீரைத் துடையுங்கள்! களத்திற்கு வாருங்கள்!

Monday, June 15, 2009

சிகரெட் பேக்கட்டுகளை அடைத்து வைக்கக்கூடிய புது வகையான பெட்டிகளுக்குத் தடை விதியுங்கள்! சுகாதார அமைச்சுக்கு சுப்பாராவ் வேண்டுகோள்!

ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து சிகரெட் பேக்கட்டுக்களின் முகப்பில்இ சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் நோய்களை விவரிக்கும் ஆறு விதமான படங்கள் பிரசுரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் இந்த சிகரெட் பேக்கட்டுக்களில் உள்ள அபாய அறிவிப்புக்கள் புகைப்பவருக்குப் போய்ச்சேராமல் இருக்க சில தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் தற்பொழுது விற்பனையாகிக் கொண்டிருக்கும் புதிய பெட்டிகளுக்கு உடனடித் தடையை ஏற்படுத்தும்படி பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.



சிகரெட் பேக்கட்டில் உள்ள அபாய அறிவிப்புப் படங்களை புகைப்பவர்கள் பார்க்காமல் இருக்கும் பொருட்டு உற்பத்தி செய்யப்படும் இந்த பெட்டிகள் மவெ. 3.50லிருந்து மவெ. 13 வரை சந்தையில் விற்கப்படுவதாக பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் அம்பலப்படுத்தினார்.

இந்தப் பெட்டிகள் பெரும்பாலும் பெட்ரோல் நிரப்பும் எண்ணெய் நிலையங்களில் விற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இப்பொழுது நமது நாட்டில் விற்கப்படும் எல்லா சிகரெட் பேக்கட்களிலும் 6 விதமான நோய்களைக் குறிக்கும் படங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. சிகரெட் புகைப்பவர்களுக்கு ஏற்படும் மோசமான ஆரோக்கியக் கோளாறுகளைப் படம் பிடித்துக் காண்பிக்கும் இந்த எச்சரிக்கைப் படங்கள் புகைப்பவர்கள் சிகரெட் வாங்காமல் இருக்கவும் அல்லது புகைப்பதை குறைக்கவும் வழி கோளும் நோக்கில் தயாரிக்கப்பட்டவை. இந்த நோக்கம் நிறைவேறினால் சிகரெட் நிறுவனங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.

இந்த எச்சரிக்கைப் படங்களின் வழியாக புகைப்பவர்கள் எண்ணிக்கை குறையக்கூடும் என்பதற்காக சில நிறுவனங்கள் சுகாதார அமைச்சின் இந்த நோக்கத்தை முறியடிக்கும் பொருட்டு புதிய மாதிரியான சிகரெட் பெட்டிகளை தயாரித்து விற்கத் தொடங்கியிருக்கின்றனர். புகைப்பவர் தான் வாங்கும் சிகரெட்டை இந்தப் புதிய பெட்டியினுள் வைத்துவிட்டால் அதில் உள்ள எச்சரிக்கைப் படம் கண்ணுக்குத் தெரியாது. பிறகு சிகரெட் பற்ற வைப்பதற்காகப் பெட்டியைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றார் சுப்பாராவ்.

இந்த யுக்தி அரசாங்கத்தின் புகைப்பதற்கு எதிரான பிரச்சாரத்திற்கு எதிராக அமைகின்றது. ஏற்கெனவே நமது நாட்டில் 30 இலட்சம் பேர் புகை பிடித்து வருகிறார்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் புகை பிடிப்பதற்காக செய்யும் செலவு மவெ. 150 இலட்சம்.

புகைக்கும் பழக்கத்திலிருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் என சுகாதார அமைச்சு பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில் சிகரெட் நிறுவனங்கள் அதற்கு எதிராக மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடுவது வருத்தத்தைத் தருகின்றது என்று சுப்பாராவ் கூறினார்.


சுகாதார அமைச்சு கொண்டு வந்திருக்கின்ற இந்த புதிய எச்சரிக்கை படங்கள் திட்டத்தினால் புகை பிடிப்பவர்களில் பலர் தங்களின் புகைக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கும் குறைத்து வருவதற்கும் வாய்ப்புக்கள் இருக்கும் இந்த வேளையில் சிகரெட் நிறுவனங்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு அதற்கு எதிர்மாறாக இருப்பதால்இ சுகாதார அமைச்சு விரைவு நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமாகும் என்று என்.வி.சுப்பாராவ் கூறினார்.

Tuesday, June 2, 2009

இளைஞர்களைச் சீரழிக்கின்றது சம்சு



புரையோடிய புண் போன்று இந்திய சமூகத்தை மெல்ல மெல்ல கொன்று வரும் சம்சு என்ற கொடிய வகை மதுவுக்கு சாவு மணி அடிக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

மிக வேகமாக மூலைமுடுக்கெல்லாம் விற்கப்பட்டு வரும் இந்த பொல்லாத சம்சுஇ பலரது குடும்பங்களைச் சீரழித்து பலதரப்பட்ட சமுதாய சீர்கேடுகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

சம்சு மிகவும் மலிவான மது வகையாகும். இளையோர் முதியோர் என்று பாரபட்சம் இல்லாமல் எல்லோரைம் அடிமையாக்கும் மதுவாக இது இருக்கின்றது. ஒரு காலத்தில் தோட்டப்புறங்களில் உள்ளவர்கள்தான் பெரும்பான்மையாகச் சம்சு குடித்தார்கள். ஆனால் இப்பொழுது நகர்ப்புறங்களில் உள்ளவர்களும் சம்சுவுக்கு அடிமையாகிச் சீரழிகிறார்கள். அதுவும் இளைஞர்களிடையே இந்த சம்சு மிகவும் பிரபலமாக இருக்கின்றது.

இப்போதைய இளைஞர்கள்இ இந்த மலிவான போதை தரும் சம்சுவில் கோலா போன்ற கேஸ் குளிர்பானங்களைச் சேர்த்து குடிக்கின்றனர். பள்ளிச் செல்லும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே இந்த முறை பிரபலம் அடைந்து வருகின்றது.

சம்சுவில் குடிப்பவரின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் வகையில் 17மூலிருந்து 48மூ மது உள்ளது. புற்றுநோய்இ ஈரல் கோளாறுஇ ஈரல் சிதைவுஇ இருதய நோய் எல்லாம் சம்சு அருந்துபவர்களுக்கு ஒரு காலத்தில் ஏற்பட்டு அவதியுறுகிறார்கள். குடிகாரர்களைக் கவரும் பொருட்டு சம்சு உற்பத்தியாளர்கள் பொய்யான கோரிக்கைகளை சம்சு லேபலில் பொறித்து விற்பனை செய்கிறார்கள். ஒரு பிரண்டு சம்சுவில் இரத்த சோகைஇ பசியின்மைஇ ஜீரணக்கோளாறு போன்றவற்றையெல்லாம் சம்சு போக்கிவிடும் என்று பொய்யான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்கள் சம்சுவுக்கு அடிமையாகிக் கிடப்பது வேதனையான விஷயம். பள்ளிக்கூட படிப்பைக் பாதியிலேயே நிறுத்திய மாணவர்கள் சிலர் சம்சு குடிக்க ஆரம்பித்துவிடுவது இவர்களுடைய எதிர்காலம் நாசமாவதற்கான அறிகுறி.

சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட சம்சு வகைகள் விற்பனையில் இருக்கின்றன. சம்சுவுக்கு வைக்கப்பட்டிருக்கின்ற பெயர்கள் எல்லாமே சம்சு ஆரோக்கியத்திற்கு உகந்ததுஇ ஒருவருடைய அந்தஸ்தை உயர்த்தும் என்ற தோரணையைக் கொண்டிருக்கின்றன. சம்சு வாங்குவது ஒன்றும் பெரிய சிரமமல்ல. விலையோ மலிவு. மிட்டாய் வாங்குவது போல் சிறார்களுக்கும் எளிதில் கிட்டிவிடுகிறது. 150 மிலி பாட்டில் சம்சு மவெ. 3.00லிருந்து மவெ. 5.00 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. காசு இல்லாவிட்டாலும் கடன் சொல்லியாவது வாங்கி அருந்துகிறார்கள் சம்சுவுக்கு அடிமையானவர்கள்.

சுங்க வரி சட்டம் 1976 பிரிவு 31(1) மற்றும் 33(1)ன்படி ஒருவர் லைசென்ஸ் இல்லாமல் சம்சு விற்கக்கூடாது. லைசென்ஸில் எந்த இடத்தில் சம்சு விற்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிறைய கடைகள் சம்சு விற்க லைசென்ஸ் பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை.

இந்தப் பிரச்னை தொடர்பாக பல ஆண்டு காலமாக சுங்க இலாகாவுக்குக் கடிதம் எழுதி சட்ட விரோத சம்சு விற்பனையைத் தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று வரைக்கும் சட்ட விரோத சம்சு விற்பனை ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. லைசென்ஸ் இல்லாதவர்கள் மிகவும் எளிதாக சம்சு விற்றுக் கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகிறார்கள்.

சம்சு குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் கொண்டு வந்துள்ள கேடுகள் வேதனைக் கதைகள் எண்ணிலடங்கா. குடிப்பவர்கள் சீரழிந்து போவதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பமும் உருக்குலைகிறது. ஒரு தகப்பன் தன்னுடைய பணத்தையெல்லாம் குடிப்பதற்கே அழித்துவிடும்பொழுது குழந்தைகளை முறையாக பராமரிக்க வழி ஏது. குழந்தைகளும் மனைவியும் குடிகாரனின் வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை இன்னும் கொடூரமானது. இது பல குடும்பங்களில் அன்றாட நிகழ்வுகளாகும்.

குடும்ப வருமானத்தின் ஒரு பகுதியை சம்சு சூறையாடிச் சென்றுவிடுகிறது. சம்சு குடிக்க ஆரம்பிக்கும் ஒருவர் ஒரு மாதத்திற்கு சுமார் மவெ. 90 செலவு செய்கிறார். பின்பு சம்சுவுக்கு அடிமைப்பட்டுப்போகும்பொழுது குடிக்கும் பாட்டில்களின் எண்ணிக்கை கூடும் பட்சத்தில் மவெ. 300 வரைக்கும் செலவு செய்கிறார்கள்.

ஒருவருடைய மாத வருமானம் மவெ. 600 மட்டும்தான் என்றால் பாதி வருமானம் தொண்டைக்குழிக்குள் சம்சு என்ற விஷத்தை இறக்குவதற்காகவே செலவழிந்து விடுகிறது. விளைவுஇ குடும்பத்தாரின் உணவு மற்றும் ஆடை போன்ற அடிப்படைத் தேவைகள் அடிபட்டுப் போகின்றன. குடும்பத்தார் ஏழ்மைக் சகதிக்குள் தள்ளப்பட்டு தத்தளிக்கின்றனர்.

தன்னுடைய கணவர் சம்சு வாங்குவதற்காக தன்னுடைய பணத்தையெல்லாம் திருடுவதாக பெண்மணி ஒருவர் வேதனையுடன் கூறினார். ஒரு முறை தான் வளர்க்கும் இரண்டு கோழிகளைச் சம்சு வாங்குவதற்காக திருடி விற்றார் என்று அவர் குமுறினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை வைத்துப் பார்க்கும்பொழுது சம்சுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று மேலும் பற்பல அவதிகளுக்கு ஆளாகப்போகிறார்கள். குடும்பத்தில் வன்முறைஇ சிறார் கொடுமைஇ சாலை விபத்துக்கள்இ தற்கொலை எல்லாம் சம்சுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் சகஜமான நிகழ்வுகளாகி வருகின்றன.

சம்சு எதிர்கால சந்ததியினரையே பாதிக்கும் ஒரு விஷயம். சமுதாய நலன் கருதி சம்சு என்ற சாக்கடை துப்புறவு செய்யப்பட வேண்டும். தற்போதைய இளைஞர்கள் சம்சுவுக்கு அடிமையாகாமல் இருக்கஇ ஆரோக்கியமான இளைஞர்களாக உருவெடுக்க சம்சுவுக்கு சாவு மணி அடிக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு ஒட்டு மொத்த சமுதாயமும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.

சம்சு உற்பத்தியாளர்கள் விடுக்கும் பொய்யான ஆரோக்கிய கோரிக்கைகளைச் சுகாதார அமைச்சு ஆராய்ந்து மேல்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்ட விரோத சம்சு விற்பனையைத் தடை செய்ய சுங்க வரி சட்டம் 1976ஐ முறையாக அமல்படுத்த வேண்டும். லைசென்ஸ் இல்லாமல் சம்சு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சும்சு போத்தல்களில் குறிப்பிட்டுள்ள மதுவின் அளவை வைத்து அதன் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். மதுவின் அளவு அதிகமாக இருந்தால் விலையும் அதிகரிக்கப்பட வேண்டும். இது குடிப்பவர்களுக்குச் சுமை ஏற்படுத்தக்கூடும்.