
பெரும்பாலான புராணங்களில் அசுரர்களின் அட்டகாசத்தால் தேவர்கள் இன்னலுறுவதும் இறை அவதாரங்களால் அசுரர்கள் அழிக்கப்படுவதுமாக இருக்கும். தேவர்கள் இறைவனின் திருவடி பரவி, தோத்திரங்களால் அர்ச்சித்து வழிபடுவர். அவ்வாறு தேவர்கள் வழிபட்ட தலம் யாவும் கோயில்களாக மலர்ந்திருக்கும். இதற்கு மாறாக கந்தனிடம் போரிட்ட ஒரு அசுரனுக்கும் கோயில் உள்ளது. ஆம், அந்த ஆலயம் இருப்பது பழநியில்தான். எப்படி உருவாயிற்று இந்த ஆலயம்?


இன்றும் ஒரு மலையில் இடும்பன் தங்கி இருக்க, மற்றொரு மலையில் முருகன் அருள்புரிகிறார். பழநி மலைப்படி பாதையில் இடும்பனின் சந்நிதானம் உள்ளது. பழநி மலைக்கு அருகில் உள்ள மலை இடும்பன்மலை என்று அழைக்கப்படுகிறது. ஏதோ தியானத்தில் இருக்கும் யோகி போல தோற்றமளிக்கிறது இடும்பன் மலை. திடப்பட்ட பக்தியை மலைபோல் இருந்து உணர்த்துவது போல் உள்ளது. இந்த மலையின் 13 அடி உயரத்தில் இடும்பனுக்கு சிலை உள்ளது. இரு மலைகளையும் காவடிபோல் தூக்கிக் கொண்டிருக்கும் சிலை அற்புதம். அதிலும் அபிஷேகத்தின் போது பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இறைவனுக்கு தேவர்கள், அசுரர்கள் என்ற பாரபட்சம் எப்போதும் இல்லை. அதர்மம் தர்மத்தை உரசும்போது அழியும். அசுரர்கள் தர்மம் என தெளிந்தால் இறைவனோடு கலப்பர். அப்படி ஞானக்குழந்தை தன்னுடனே வைத்துக் கொண்ட அசுரக் குழந்தையில் இடும்பனும் ஒருவன்.
பழநி முருகன் மலைக்கு இணையாக உள்ள இடும்பன் மலைக்குச் செல்ல 570 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இடும்பன் மலைக்கு கிழக்குப்பகுதியில் மிக அழகான இடும்பன் குளம் பக்தர்கள் நீராட வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்காலங்களில் இக்குளத்தில் பக்தர்கள் நீராடி இடும்பனை வழிபடுகின்றனர். இதுதவிர இடும்பனை வழிபடவென்றே பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து பழநிக்கு வருகின்றனர். அசுரர் கோலத்தில் பக்தர்கள் வேடமிட்டு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். கடவுளுக்கு இணையாக அசுரனுக்கு கோயில் அமைந்திருப்பது பழநியில் மட்டும்தான் என்றே சொல்லலாம்.
இடும்பன் கோயிலுக்கு செல்ல பழநி பஸ் நிலையத்தில் இருந்து மினி பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படுகின்ற