நாம் அனைவரும் பொதுவாக தமிழில் தட்டச்ச எ-கலப்பை, முரசு அஞ்சல், ரைட்டர் போன்ற பல மென்பொருட்களை உபயோகித்துதான் தட்டச்சுகிறோம் அல்லவா..? சில நண்பர்களுக்கு அவர்களது பணி செய்யும் இடத்தில் இத்தகைய மென்பொருட்களை நிறுவுவதற்கு அனுமதி இல்லாமல் இருக்கக்கூடும்.
புதிய மென்பொருட்கள் எதையும் நிறுவாமலேயே விண்டோஸிலேயே ஒருங்குறி(unicode)-த் தமிழில் தட்டச்ச வழி இருக்கிறது என்பதை ஒரு சிலர் அறியாமல் இருக்கக்கூடும். அவர்களுக்காகவும் புதிய யுனிகோட் ஒருங்குறி முறையில் தமிழைத் தட்டச்சி மன்ற உறவுகள் பழக வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவுமே இப்பதிவு.
1. ஸ்டார்ட் (Start) பொத்தானை அழுத்துங்கள்.
2. கண்ட்ரோல் பேனலுக்கு (Control Panel) செல்லுங்கள்.
3. "ரீஜனல் அண்ட் லாங்குவேஜ் ஆப்ஷன்ஸ்" (Regional and Languages Options) ஐகானை சொடுக்குங்கள்.
4. அதில் "லாங்குவேஜஸ்"(Languages)- ஐ தேர்ந்தெடுங்கள்.
5. "சப்ளிமெண்டல் லாங்குவேஜ் சப்போர்ட்" (Supplemental Language support) பகுதியில் "இன்ஸ்டால் காம்ப்ளெக்ஸ் ஸ்கிரிப்ட் அண்ட் ரைட்-டூ-லெஃப்ட் லாங்குவேஜஸ் (இன்க்ளூடிங் தாய்)" - (Install files for comples script and right-to-left-languages (including Thai) என்பதை தேர்வு செய்யவும்.
6. "அப்ளை" (Apply) பொத்தானை அழுத்துங்கள்.
7. தேவையான எழுத்துருக்கள் தானாக நிறுவப்படும் (சில கணினிகளுக்கு விண்டோஸ் இன்ஸ்டாலேசன் சி.டி.(Windows Installation CD) தேவைப்படலாம். ஆகவே அருகில் வைத்திருங்கள்).
8. எழுத்துருக்கள் நிறுவப்பட்ட பின்னர் "கணினியை நிறுத்தி, இயக்கவா" என்ற அறிவிப்பு புதிய பெட்டிச்செய்தியில் வரும். அதில் "நோ" (NO) என்ற பொத்தானை அழுத்துங்கள்.
9. இப்போது டெக்ஸ்ட் செர்வீசஸ் அண்ட் இன்புட் லாங்குவேஜில் (Text Services and input languages) இருக்கும் "டீடெய்ல்ஸ்" (Details) பொத்தானை அழுத்துங்கள்.
10. "இன்ஸ்டால்டு டிவைசஸ்" (Installed devices) பகுதியில் "ஆட்" (Add) பொத்தானை அழுத்துங்கள்.
11. "இன்புட் லாங்குவேஜ்" (Input language) என்பதில் "தமிழ்" (Tamil) என்பதை தேர்ந்தெடுங்கள்.
12. "கீ போர்ட் லே அவுட் / ஐ.எம்.ஈ" (Keyboard layout/IME) என்பதை தேர்வு செய்து அதிலும் "தமிழ்" (Tamil) என்பதை தேர்வு செய்யுங்கள்.
13. "ஓக்கே" (OK) பொத்தானை அழுத்துங்கள்.
14. இப்போது புதிய தமிழ் விசைப்பலகை நிறுவப்பட்டிருப்பதை உங்களால் காண இயலும்.
15. "ஓக்கே" (OK) பொத்தானை அழுத்துங்கள்.
16. "அப்ளை" (Apply) மற்றும் "ஓக்கே" (OK) பொத்தான்களை அழுத்துங்கள்.
17. கணினியின் இயக்கத்தை நிறுத்தி (Restart Computer) மீண்டும் இயக்குங்கள்.
18. டாஸ்க் பாரில் (Task bar) "EN" என்ற எழுத்து இருப்பதைக் காணுங்கள்.
19. லெஃப்ட் ஆல்ட்+ லெஃப்ட் ஷிஃப்ட் (Left Alt + Left Shift) என்ற விசைகளை அழுத்துவதன் மூலம் தமிழ் விசைப்பலகைக்கு மாற முடியும். தமிழ் விசைப்பலகைக்கு மாறியுள்ளது எனில் டாஸ்க் பாரில் (Task bar) "TA" என்று எழுத்துக்கள் மாறி இருப்பதைக் காணலாம். மீண்டும் ஆங்கில விசைப்பலகைக்கு மாற வேண்டுமெனில் மீண்டும் லெஃப்ட் ஆல்ட்+ லெஃப்ட் ஷிஃப்ட் (Left Alt + Left Shift) என்ற விசைகளை அழுத்துங்கள்.
19. தற்போது நம்மால் ஒருங்குறி தமிழில் (Unicode Tamil) தட்டச்ச இயலும். (இந்த வகை தமிழ் ஒருங்குறி ஃபோனடிக் தட்டச்சு முறையில் இல்லை என்பதை கவனிக்கவும்)
20. எந்த விசைக்கு என்ன எழுத்து என்பதை காண வேண்டுமெனில் ஸ்டார்ட் ( Start ) - ரன் (Run)-க்கு செல்லுங்கள்.
21. பெட்டியில் ஓஎஸ்கே (osk)-என்பதை அடைப்புக்குறிகள் இல்லாமல் தட்டச்சி, "ஓக்கே" (OK) பொத்தானை அழுத்துங்கள். (On Screen Keyboard என்பதின் சுருக்கம்தான் osk).
22. இப்போது திரையில் விசைப்பலகையை காண இயலும். நாம் தேர்வு செய்திருக்கும் விசைப்பலகைக்கேற்ப இந்த திரை விசைப்பலகையில் எழுத்துருக்கள் காணப்படும்.
23. திரை விசைப்பலகையில் தமிழ் எழுத்துருக்களையும் அவ்விதம் காண இயலும். ஷிஃப்ட் விசையை அழுத்தினால் தமிழ் எழுத்துருக்கள் மாறுவதையும் காண முடியும்.
24. முதலில் இவ்விதம் புதிய முறையில் தட்டச்சி பழகுவது சிரமமான காரியம் என்றாலும் நாளடைவில் இது மிகவும் எளிதானது என்பதைக் கண்டு கொள்ள முடியும்.
இவ்வகையில் தட்டச்சுவதில் பல நன்மைகளும் இருக்கின்றன.
எவ்விதம் தமிழ் ஒருங்குறிக்கு மாற்றுவது என்பதை இங்கே தட்டச்சி விளக்கி இருப்பதை யூடியூப்-(YouTube)பில் அசை படமாக (Flash video) நேரே காணலாம்.
இந்த வீடியோவை சொடுக்கவும் :
இங்கு தரப்பட்டிருக்கும் விடயங்களில் மேலும் சேர்க்க வேண்டும் என விரும்பும் நண்பர்கள் தங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.
நன்றி : தமிழ் மன்றம்
No comments:
Post a Comment