Tuesday, September 29, 2009
கூகிளின் தமிழ் தட்டச்சு வசதி
இ-கலப்பை, என்.ஹெச்.எம் ரைட்டர் போன்ற மென்பொருட்களை நிறுவி தமிழில் தட்டச்சுவது குறித்து மன்றத்தில் சில திரிகள் இருக்கின்றன.
நமது மன்றத்திலேயே நேரடியாக தமிழை தட்டச்ச வசதி உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது வேறு மென்பொருள் எதையும் நிறுவாமலேயே தமிழில் நேரடியாக தட்டச்சலாம்.
1. கூகிளின் தமிழ் தட்டச்சு வசதி - Google Transliteration Box: இதில் ஃபோனடிக் முறையில் தமிழில் தட்டச்ச முடியும். தட்டச்சியதை நகல் எடுத்து பதிவிட முடியும்.
2. ஒருங்குறி மாற்றி - Unicode convertor : இதில் திஸ்கி, அஞ்சல், மயிலை, பாமினி, டேப், டேம் ஆகிய தட்டச்சு முறைமைகளில் தட்டச்சு செய்தவற்றை ஒருங்குறியாக மாற்றவும், ரோமனைஸ்டு முறையில் தட்டச்சு செய்து ஒருங்குறியாக மாற்றவும் முடியும். அவ்விதம் மாற்றியதை நகல் எடுத்து மன்றத்தில் எளிதாக பதிக்க முடியும்.
இந்த இரண்டு வசதிகளும் மன்றத்தின் பக்கங்களில் கீழ்ப்பகுதியில் இருக்கின்றன.
இப்போது கூகிள் இணையத்தளங்கள் எல்லாவற்றிலும் நேரடியாக ஃபோனடிக் முறையில் தமிழில் ஒருங்குறியைத் தட்டச்ச வசதி செய்திருக்கிறது.
அதன்படி மிகச்சிறிய அளவுள்ள ஜாவா நிரலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கருவிப்பட்டையை நமது உலாவியில் நிறுவிக்கொள்ள வேண்டும். நிறுவிக்கொண்ட பின்னர் நேரடியாக தமிழில் தட்டச்சலாம்.
இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் அரபி மொழிகளுக்கான கருவிப்பட்டை கிடைக்கிறது.
இண்டர்நெட் எக்ஸ்புளோரர், ஃபயர் ஃபாக்ஸ், குரோம், சஃபாரி ஆகிய உலாவிகளில் நாம் அதைப் பொருத்திக்கொள்ள முடியும். கூகிளின் உதவித்தளங்களில், ஒவ்வொரு உலாவியிலும் நாம் எவ்விதம் இந்தக்கருவிப்பட்டையை இணைப்பது என்பதையும், எவ்விதம் பயன்படுத்தலாம் என்பதையும் படங்களுடன் தெளிவாக கொடுத்திருக்கிறார்கள்.
எப்படி கருவிப்பட்டையை நிறுவுவது என்பதை அறிய : (How to install transliteration bookmarklet)
http://t13n.googlecode.com/svn/trunk...s/help_ta.html
எப்படி பயன்படுத்துவது என்பதை அறிய : (Using the transliteration bookmarklet)
http://t13n.googlecode.com/svn/trunk...lp_ta.html#Use
கூகிளின் இந்த வசதியின் மூலம் பெரும்பாலான வலைத்தளங்களில் நாம் நேரடியாக தமிழில் தட்டச்ச முடியும். ஒரு சில இடங்களில் இது வேலை செய்வதில்லை என்ற குறை இருந்தாலும், உடனடியாக நேரடியாக தமிழில் தட்டச்ச வசதியைத் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
நான் அதை நிறுவி நமது மன்றத்தில் சோதித்ததில், புதிய திரி தொடங்கும் போது தலைப்புப் பகுதி (தலைப்பு கருவிப்பட்டையைக்கொண்டே தட்டச்சு செய்யப்பட்டது), கூகிள் தமிழ் தட்டச்சும் வசதி, ஒருங்குறி மாற்றி ஆகியவற்றில் நேரடியாக தமிழில் தட்டச்ச முடிகிறது. ஆனால் பதிவுகளை தட்டச்சும் பகுதியில் கூகிள் கருவிப்பட்டை வேலை செய்யவில்லை.
வழங்கி, இயங்குதளம் மற்றும் மென்பொருள் ஒத்துழைக்குமெனில் இந்த இடத்திலும் தட்டச்சும் வசதியை மன்ற நிர்வாகம் ஏற்படுத்தலாம் என்ற ஆலோசனையை முன் வைக்கிறேன்.
இப்பதிவு யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்வேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment