பி.ப.சங்க தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கைகளில் இருக்கும் சுரைக்காய் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பணிமனையில், தொடங்கப்பட்டுள்ள இயற்கை விவசாய தோட்டத்தில் வளர்ந்து சுரைக்காயாகும்.
இதன் எடை 4 கிலோ. உயரம் 11/2 அடி. மக்கவைக்கப்பட்ட இலைதழை எரு, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பயிர் ஊக்கிகள் தெளிக்கப்பட்ட, வேலியில் வளர்ந்த சுரைக்காய் இது என பினாங்கு பயனீட்டாளர் சங்க இயற்கை விவசாய திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் என்.வி.சுப்பாராவ் கூறினார்.
பெரிய அளவில் பராமரிப்பு தேவைப்படாமல் இயற்கை எருக்களை மட்டுமே போடப்பட்டு வளர்க்கப்பட்ட இந்தச் சுரைக்காய் பார்ப்பவர்களின் மனதை கவரும் வகையில் இருக்கிறது.
காய்காறிகளின் விலை அதிகரித்து விட்டது
என புலம்பிக் கொண்டிருக்காமல், வீட்டிலேயே மிளகாய். வெண்டக்காய், கத்தரிக்காய் என பலதரப்பட்ட காய்கறிகளை நட்டு பணத்தை சேமிக்கலாம் என ஆலோசனை கூறினார் என்.வி.சுப்பராவ்
நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம்