
இலங்கையில் தமிழ் ஈழம் மலர வேண்டும் என கோரி, தீக்குளித்து இறந்த வாலிபரை பார்க்க வந்த வக்கீல்களில் சிலர், இலங்கை வங்கி மீது தாக்குதலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.சம்பவ இடத்தை, கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன் பார்வையிட்டார்.வங்கியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், "வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்த சிலர் ஒரு பஸ்சில் வந்தனர். பஸ்சை நிறுத்தி கீழே இறங்கினர். வங்கியில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். ஓரிரு நிமிடத்தில், வந்த பஸ்சில் ஏறிச் சென்றுவிட்டனர்' எனக் கூறினர். தாக்கியவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கமிஷனர் ராதாகிருஷ்ணன் பணியிலிருந்த ஒரு எஸ்.ஐ., மற்றும் நான்கு போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.