"கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானுமதுவாகப் பாவித்து தானுந்தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கல்வி"
- மூதுரை 14
என்றொரு செய்யுள் உள்ளது. புகழ்பெற்ற இந்தச் செய்யுளில் கூறப்படும் கானமயில் (The Great Indian Bastard), பறக்கும் பறவைகளிலேயே அதிக எடை கொண்ட பறவையாகும். வறண்ட புல்வெளி பகுதிகளில் வாழும் கானமயில் பொதுவாக ஒரே ஒரு முட்டை மட்டுமே இடும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காணப்பட்ட இந்த கானமயில் இப்போது மிக மிக அருகிவிட்டது. அதிக வேட்டையாடப்பட்டதன் விளைவு இந்தப் பறவைகள் தற்பொழுது எண்ணிக்கையில் வெறும் 250 மட்டுமே மிஞ்சியுள்ளன. மேலும் வருடத்திற்கு ஒரு முட்டை மட்டுமே இடுவதால் இவற்றைக் காப்பாற்றுவது கடினமாக இருக்கலாம்.
-தமிழ் மருதம்
No comments:
Post a Comment