அவரும் நானும்....
இந்தப் பச்சை மனிதருடன் பயணித்த பேறு இன்றளவும் பசுமையாய் உள்ளது. நம்மாழ்வார் அவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு முதன் முறையாக வருகை புரிந்த போது அவரைக் கண்டு நெகிழ்ந்த தருணங்களின் ஈரம் நித்தியமானவை. இங்கு அவர் வழங்கிய பயிற்சி பட்டறைகளின் வழி பெற்ற அனுபவமும் அறிவும் ஈடு அற்றவை.
மேலும், 2012-ல் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழகப் பயணத்தின் போது இயற்கை நாயகனுடன் மீண்டும் ஒரு பொன்னான நாள். அவருடன் கழிந்த பொழுதுகள் எங்களின் வேளாண்மைக்கான தேடலுக்குப் பதில்களாய் அமைந்தன. ஆனால், அதுவே எங்களின் இறுதி சந்திப்பாக அமைந்தது. 8 ஆண்டுகள் கழிந்திருந்தாலும் அவரின் வழிகாட்டலும் அவரது குழந்தைச் சிரிப்பும் அழகு பேச்சும் என்றும் மனம் விட்டு நீங்காதவை.
இயற்கையை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நாம்மாழ்வார் வாழ்கிறார். இயற்கைக்கு இயற்கையே உரம். அவரது எளிய புன்னகையின் புள்ளி மண்ணின் நலத்திலும் வளத்திலும் காண்போம்.
தீபன் குணசேகரன்
Theeban Gunasekaran
No comments:
Post a Comment